Saturday, February 25, 2006

1,2,3 எப்படி வந்தது தெரியுமா?

௧௨௩௪௫௬௭௮௯௧௰ இவை தமிழ் எண்கள் பொதுவாக ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,2,3 என்ற எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். இப்படிப் பயன் படுத்தப்படும் எண்களின் மூலமே தமிழ்தான் என்பதை நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் நமக்கு அச்செய்தி நன்றாக விளங்கும். 1-௧, 2-௨, 3-௩, 4-௪, 5-௫, 6-௬, 7-௭, 8-௮, 9-௯, 10- ௧௰ அதாவது, 1 என்ற எழுத்தில் ௧ உள்ளடங்கியுள்ளதையும் உ என்ற தமிழ் எண்ணில் தற்போது பயன்பாட்டிலுள்ள 2 என்ற எண் அடங்கியுள்ளது என்பதையும் அப்படியே 3-௩, 4-௪ என் 1, 2, 3 என எல்லா எண்களையும் நன்றாக அவதானிதீர்கள் என்றால் இந்த எழுத்துக்கள் அனைத்தும் தமிழிலிருந்து தான் உருவாகின என்பதும் நமக்கு விளங்கும். அது என்ன தமிழிலிருந்து தான் அவை தோன்றியதா? என்றால் ஆம் என்றே கூறமுடியும் எனெனில், டாக்டர் அம்போத்கார் அவர் நூல் ஒன்றில் இந்தியா முழுவதும் தமிழ் தான் பேசும் மொழியாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தொன்மையான மொழியிலிருந்து பல மொழியினர் வார்த்தைகளை தமதாக்கிக் கொண்டு தம்மொழிதான் உயர் மொழி என்று பேசுகின்றனர். பூச்சியத்தை மட்டும் தான் இந்தியர்கள் கண்டுபிடித்தார்கள் என்று கூற கேட்டிருக்கிறேன்.

தமிழ் வார்த்தையான “காசு“ என்பது ஆங்கில மொழியில் எப்படி“கேஷ்“ ஆனதோ, “கட்டுமரம்“ எப்படி “catamaran“ ஆனதோ, மலை என்பது பெருங்கல் - குன்று என அழைக்கக்கப்பட்டு “கல்“ – “hill“ என்று மாறியதாக மொழியியல் அறிஞர்களின் கூறுகின்றனர். ஆங்கிலத்தின் உச்சரிப்பு வழக்கத்தினால் S சேர்க்கப்பட்டு பல தமிழ் சொற்கள் அவர்களால் உள்வாங்கப்பட்டுள்ளன. “பொட்டு“ என்றால் புள்ளி எனலாம் அதையே ஆங்கிலத்தில் pot என்று எழுதி அதில் முன் S சேர்க்கப்பட்டு “spot“ என்று மாறியதைப்போல, “நாகம்“ என்பது ஆங்கிலத்தில் nake என்று எழுதி முன்பு S சேர்க்கப்பட்டு snake என்று மாறியதைப் போல, வாசம் = மல்லிகை => S + mell, பிள = பிளப்பு=> S + pili => split என மாறியதைப்போல தமிழிலிருந்து தான் தற்போது பயன்பாட்டிலுள்ள எண்முறையும் வந்ததுள்ளது.

Saturday, February 18, 2006

புதுவைப் பல்கலைக்கழகம் தமிழ் விரோதப் பல்கலைக்கழகமா?

பெரும்பான்மை தமிழ்மக்களின் விருப்பத்திற்கு மாறாக புதுவைப் பல்கலைக்கழகம் இந்திப் பல்கலைக் கழகமாக மாற்றும் வேலையில் இறங்கிவிட்டது. பல்கலைக் கழகத்திலுள்ள அனைத்து பெயர் பலகைகளையும் இந்திமயமாக்கியுள்ளது. அங்கிருந்த அனைத்து தமிழ் பெயர்பலகைகளையும் பெயர்த்து எறிந்துள்ளது.

புதுவைப் பல்கலைக் கழகத்தின் முன் இருந்த பல்கலைக்கழக பெயர் பலகை தமிழ் எழுத்துக்கள் சிறியதாக ஆக்கப்பட்டு பிற மொழி எழுத்துக்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த ரெங்கப்பிள்ளை நூலகத்தின் பெயர் பலகை தமிழ் அகற்றப்பட்டு இந்தி மயமாக்கியுள்ளது.
பல்கலைக்கழகத்திலுள்ள பெரும்பான்மையான பெயர் பலகைகளிலுள்ள தமிழ் அகற்றப்பட்டு அதில் இந்தி புகுந்துள்ளது.


இதையொட்டி மீண்டும் தமிழ் பெயர்பலகைகளை வைக்ககோரி புதுவையிலுள்ள தமிழ் அமைப்புகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. புதுவைப்பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பட்டம் நடத்தினர் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் பல்கலைக்கழகம் எடுத்ததாகத் தெரியவில்லை.

Wednesday, February 15, 2006

தமிழில் படிக்கக் கிடைக்கும் தளங்கள்

தினமலர் செய்தி ஏட்டில் 13-02- 2006 அன்று தமிழில் படிக்கக் கிடைக்கும் தளங்கள் என்ற பகுதியில் இந்த தளம் வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, February 09, 2006

சூடேறிக் கொண்டிருப்பது வானிலை மட்டுமல்ல,

தமிழகத்தில் பணிக்காலம் முடியக் காத்திருப்பதோடு வெயில் காலமும் வந்து மெல்ல சூடேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத் தேர்தல் களமும் சூடேறிக் கொண்டிருக்கிறது. வரும் மே மாதம் மூன்றாவது வாரத்திற்குள் தேர்தல் நடத்திவிட வேண்டும். தேர்தல் என்றாலே அது கோடையில் தான் வரும் என்றாகிவிட்டது. கடந்த இரண்டு மூன்று முறை கோடையில் தான் தேர்தல் வந்தது.

மூன்றாவது அணி அமைக்க திரு. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ச. இராமதாசு அவர்கள் அழைத்துள்ளார். வைகோ எந்த கூட்டணியில் இருப்பார் என்றும் தெரியவில்லை. எந்த கூட்டணி எங்கு அமைந்தாலும் மக்கள் தேர்தல் நேரத்திலாவது அக்கறையுடன் இருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான விவாதங்கள் மக்களிடையே அதிகரித்துள்ள இந்த நேரத்தில் மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை

புதுவை அரசியலைப் பொருத்தவரை புதுவை முன்னேற்ற காங்கிரசை சேர்ந்த ப. கண்ணன் ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் தனியாகப்பிரிந்து புதுவை மக்கள் காங்கிரசு, தமிழ் மாநில காங்கிரசு, என ஒவ்வொரு முறையும் தனியாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவார். தனது வாழ்க்கையின் ஒரே இலட்சியமான புதுவை முதல்வராகும் கனவை கலைத்துக்கொள்ளும் ஒரேத்தலைவர் அவர்தான். ஆனால் இவர் காங்கிரசு கட்சியில் இருந்திந்தால் அவர் நிச்சயமாக முதல்வர் ஆகியிருக்க கூடிய வாய்ப்பு அதிகம். ஆனால் அவரின் கனவு நனவாகும் என்பது ஏதேனும் அதிசயம் நடந்தால் தான் என்ற நிலை இப்போது உள்ளது. ஆனால் அந்த அதிசயம் எப்போதாவது நடக்கும் என்றே அவர் நம்புகிறார். இந்த தேர்தலில் அந்த அதிசயம் இந்த தேர்தலில் நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
அரசியல் ஆர்வலர்களின் கருத்துப்படி புதுவை அரசியலில் கீழ்க்கண்டவாறு தேர்தல் முடிவு இருக்கும் என கணிக்கிறார்கள்.
மொத்தமாக 30 தொகுதியில்

1. காங்கிரசு-14,
2. தி.மு.க-6,
3. அ.தி.மு.க-3,
4. பு.மு.க - 4,
5. பா.ம.க. -2,
6. சிபிஐ/சிபிஎம் -1
இடங்களைப் பெருவார்கள் என்றவாறு கருத்துக் கணிக்கிறார்கள். எப்படியோ அரசியல்வாதிகளின் இப்போதைய போட்டியால் மக்களை விழுந்து விழ்ந்து கவனிக்கிறார்கள். அரசியல் வாதிகள் மக்களை ஐந்தாண்டுகள் “வழக்கமாய் மறந்தது போல“. மக்களும் “வழக்கம் போல“ அவர்களின் கடந்த கால செயல்களை மறந்து போய் ஏதேனும் ஒரு அணியில் தம்மை இணைத்துக்கொள்கிறார்கள்.