Thursday, February 09, 2006

சூடேறிக் கொண்டிருப்பது வானிலை மட்டுமல்ல,

தமிழகத்தில் பணிக்காலம் முடியக் காத்திருப்பதோடு வெயில் காலமும் வந்து மெல்ல சூடேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத் தேர்தல் களமும் சூடேறிக் கொண்டிருக்கிறது. வரும் மே மாதம் மூன்றாவது வாரத்திற்குள் தேர்தல் நடத்திவிட வேண்டும். தேர்தல் என்றாலே அது கோடையில் தான் வரும் என்றாகிவிட்டது. கடந்த இரண்டு மூன்று முறை கோடையில் தான் தேர்தல் வந்தது.

மூன்றாவது அணி அமைக்க திரு. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ச. இராமதாசு அவர்கள் அழைத்துள்ளார். வைகோ எந்த கூட்டணியில் இருப்பார் என்றும் தெரியவில்லை. எந்த கூட்டணி எங்கு அமைந்தாலும் மக்கள் தேர்தல் நேரத்திலாவது அக்கறையுடன் இருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான விவாதங்கள் மக்களிடையே அதிகரித்துள்ள இந்த நேரத்தில் மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை

புதுவை அரசியலைப் பொருத்தவரை புதுவை முன்னேற்ற காங்கிரசை சேர்ந்த ப. கண்ணன் ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் தனியாகப்பிரிந்து புதுவை மக்கள் காங்கிரசு, தமிழ் மாநில காங்கிரசு, என ஒவ்வொரு முறையும் தனியாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவார். தனது வாழ்க்கையின் ஒரே இலட்சியமான புதுவை முதல்வராகும் கனவை கலைத்துக்கொள்ளும் ஒரேத்தலைவர் அவர்தான். ஆனால் இவர் காங்கிரசு கட்சியில் இருந்திந்தால் அவர் நிச்சயமாக முதல்வர் ஆகியிருக்க கூடிய வாய்ப்பு அதிகம். ஆனால் அவரின் கனவு நனவாகும் என்பது ஏதேனும் அதிசயம் நடந்தால் தான் என்ற நிலை இப்போது உள்ளது. ஆனால் அந்த அதிசயம் எப்போதாவது நடக்கும் என்றே அவர் நம்புகிறார். இந்த தேர்தலில் அந்த அதிசயம் இந்த தேர்தலில் நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
அரசியல் ஆர்வலர்களின் கருத்துப்படி புதுவை அரசியலில் கீழ்க்கண்டவாறு தேர்தல் முடிவு இருக்கும் என கணிக்கிறார்கள்.
மொத்தமாக 30 தொகுதியில்

1. காங்கிரசு-14,
2. தி.மு.க-6,
3. அ.தி.மு.க-3,
4. பு.மு.க - 4,
5. பா.ம.க. -2,
6. சிபிஐ/சிபிஎம் -1
இடங்களைப் பெருவார்கள் என்றவாறு கருத்துக் கணிக்கிறார்கள். எப்படியோ அரசியல்வாதிகளின் இப்போதைய போட்டியால் மக்களை விழுந்து விழ்ந்து கவனிக்கிறார்கள். அரசியல் வாதிகள் மக்களை ஐந்தாண்டுகள் “வழக்கமாய் மறந்தது போல“. மக்களும் “வழக்கம் போல“ அவர்களின் கடந்த கால செயல்களை மறந்து போய் ஏதேனும் ஒரு அணியில் தம்மை இணைத்துக்கொள்கிறார்கள்.

No comments: