Wednesday, December 27, 2006

தூக்கிலேற்ற வேண்டியவன் ஜார்ஜ் புஷ்

“சதாமின் தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது”


1945, ஆகஸ்டு 6, இரோசிமா, 1945 ஆகஸ்டு 9, நாகசாகி என்று ஜப்பானின் இரண்டு நகரகளில் குண்டு வீசி ஒரே நேரத்தில் 4 - இலடசத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்று குவித்த கொடூரமான மனித நேயமற்ற அரசு அமெரிக்கா.

ஈரான் ஈராக் போர் உள்பட அமெரிக்கா இதுவரை அங்கு 6 1/2 இலட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. தற்போது நடந்த தாக்குதலில் மட்டும் அதிகாரப் பூர்வமாக 65 ஆயிரம் போரை கொன்றொழித்துள்ள அமெரிக்க வெறி நாய் அரசு சதாம் 142 பேரை கொன்றதாக கூறி சதாமுக்கு தூக்குத்தண்டனை அளித்துள்ளது.

எண்ணை வெறி பிடித்து அலையும் அமெரிக்கா மனிதகுலத்தின் எதிரியாகவும் வளர்ந்துள்ளது ஏகாதிபத்திய வெறிநாயாக அலைந்து திரியும் அது தன் கட்டுப்பாட்டிற்கு வாராத நாடுகளை கடித்து குதறிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக எண்ணை வளமிக்க நாடுகளை அது குறிவைத்து தாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல், ஈரான் ஈராக் போர் தூண்டல் பாலஸ்தீனத்தில் தம் எடுபிடிகளை வைத்து தொந்தரவு செய்தல் என எத்தனையோ கொடுமைகள் நிகழ்த்தும் அமெரிக்கா ஈராக்கில் அமர்ந்து கொண்டு அங்கு நீதி வழங்குவது மிகவும் கேலிக் கூத்தானது.
உண்மையில் உலகின் கொலை வெறியன் புஷ் தூக்குத்தண்டனை பெற வேண்டியவன். உலக நாடுகளை தன் போர் வெறியால் சூறையாடும் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்போம். ஆயுத வியாபாரி புஷ் கொலை வெறியை எதிர்ப்போம்.