Tuesday, April 03, 2007

பந்த் - கேள்வியும் பதிலும்


மக்கள் ஆட்சி தான் இங்கு நடக்கிறது, உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்த நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் சட்ட ரீதியாக இயற்றிய சட்டத்தை ஒரு நீதி மன்றம் தடை செய்கிறது.

இது இந்திய நிலைமை நிறுவனமாகிக் கிடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த நிறுவனமயம் என்பது ஒரு அபாயமான நிகழ்வாகும்.

நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இது மக்கள் ஆட்சி என்றும் மக்கள் தான் தீர்மான சக்தி என்பது போல பேசப்படுவது ஒரு மிகப்பெரிய பொய்யுரையாகும்.

இது சனநாயகம் மக்கள் சனநாயகம் இல்லை. இது போலி சனநாயகம் என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த நிகழ்வுகள்.

மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் அதிகாரம் இல்லாத இந்த சனநாயகம் உலகின் மிகப்பெரிய போலி சனநாயகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!.
************

நண்பர் சிந்தாநதி அவர்கள் பதிவில் நான் அளித்த பதிலும் அவரது கேள்வியும் இதில் கொடுத்துள்ளேன்.

சிந்தாநதி அவர்களின் கேள்வி சிவப்பு நிறத்திலும் எனது பதில் தடித்த எழுத்திலும் உள்ளது.
இது குறித்து நண்பர்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

1.இந்த மாதிரி பந்த் களை ஊக்குவிப்பது குறித்து எனக்கு உடன்பாடில்லை.//

உங்களுக்கு உடன்பாடா இல்லையா என்று கேட்டபின் வேலை நிறுத்தம் அறிவிக்க முடியாது.

பெரும்பான்மை மக்கள் மீது அக்கரை இல்லாதவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

//நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு இப்படி போராட்டம் பந்த் என்று செல்வது மிகப்பெரிய மூடத்தனம். //

அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கினால் அரசு என்ன செய்ய இயலும்.

மாநில அரசுகள் இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளிவிவரங்களை வைத்துள்ளன. 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி எல்லா மாநில அரசுகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிற்படுத்தப் பட்டோர் பற்றியை விவரம் சேகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில அரசுகள் புள்ளிவிவரங்களை சேகரித்து வைத்துள்ளன.

ஆனால், சரியான விவரம் இல்லை என்று கூறி தடை அறிவித்திருப்பது தான் உணமையான முட்டாள் தனம். இல்லை இல்லை. பார்ப்பனியத்தனம்.


பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்ட வடிவை இரு நீதிபதிகள் தடை செய்கிறார்கள் என்றால் அரசு அதற்கு கண்டனம் தெரிவிக்கிறது. எனவே அது சரி!..


அதற்கு உங்களைப்போன்றோரின் உடன்பாடு தேவையில்லை.
மக்களாட்சி என்று சொல்லப்படும் இந்த நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் முடிவுகளை மாற்றும் இந்த தீர்ப்புதான் பெரும்பான்மை மக்களுக்கு உடன்பாடில்லாதது.



உங்களைப் போன்றோர் இப்படி எழுதுவதும் தான் பலருக்கு உடன்பாடில்லாதது.


//இப்படி ரோட்டுக்கு வந்து போராட்டம் செய்வது அதனினும் மூடத்தனம்.//

இப்படி அமைதியாக போராட்டம் நடத்த்க்கூடாது தான்.
காலம் காலமாக இப்படி பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு எதிராக அமைதிப் போராட்டத்தை நானும் கண்டிக்கிறேன்.


இந்த போராட்டத்தால் அவர்கள் திருந்தபோவதில்லை. அவர்கள் திருந்துகிற மாதிரியான போராட்டம் நடத்தப் படவேண்டும்.
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


2. அதுக்காக ஒரு அரசாங்கமே அடைப்பு நடத்தலாமோ?
அப்ப அரசியல் கட்சிகளும் தங்கத் தலைவ/வி கள் கைதுகளுக்கு பந்தும் மறியலும் நடத்துவதை ஆதரிக்கலாமா? ஒட்டு மொத்தமாக பந்த்/அடைப்பு தவிர்க்கப் பட வேண்டும் கவன ஈர்ப்பு/ சிந்திக்க வைக்க மக்களுக்கு அடையூறு தராத புதிய வழியை கண்டு பிடிக்க வேண்டும்...
இல்லா விட்டால் அவர்கள் பஸ்ஸை கொளுத்து என்று யாராவது கொளுத்துவதில் வந்து முடியும்...
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


3. //உங்களுக்கு உடன்பாடா இல்லையா என்று கேட்டபின் வேலை நிறுத்தம் அறிவிக்க முடியாது.
பெரும்பான்மை மக்கள் மீது அக்கரை இல்லாதவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.//

நிச்சயமாக முடியாது. அது என் கருத்து அவ்வளவுதான். மறுப்புக் கருத்து கூற உங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் பெரும்பான்மை மக்கள் என்று கூறி பிஜேபித்தனமான பதில் உங்களிடமிருந்து வந்திருப்பதுதான் எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


4. நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக வழங்க முடியாது. அவர்கள் நீதிமன்ற விவாதங்களின் வழியில்தான் தீர்ப்பு வழங்க முடியும்.
//பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்ட வடிவை இரு நீதிபதிகள் தடை செய்கிறார்கள் //


அப்படி ஒரு முட்டாள் தனத்தை எந்த நீதிபதியும் செய்யமுடியாது. இதில் இந்திய அரசியல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு பிறரால் தொடுக்கப் பட்ட வழக்கின் விசாரணையில்தான் இந்த தீர்ப்பே தவிர அவர்களின் சொந்த விருப்பப்படி கொடுத்த தீர்ப்பு அல்ல.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


5. //அதுக்காக ஒரு அரசாங்கமே அடைப்பு நடத்தலாமோ?//
அரசு தன் கொள்கைகளுக்கு எதிராக உள்ள செயலை கண்டித்து பெரும்பான்மை மக்கள் நலனுக்கு ஆதரவாக பந்து நடதுவதில் தவறில்லை.

//அப்ப அரசியல் கட்சிகளும் தங்கத் தலைவ/வி கள் கைதுகளுக்கு பந்தும் மறியலும் நடத்துவதை ஆதரிக்கலாமா? ஒட்டு மொத்தமாக பந்த்/அடைப்பு தவிர்க்கப் பட வேண்டும் கவன ஈர்ப்பு/ சிந்திக்க வைக்க மக்களுக்கு அடையூறு தராத புதிய வழியை கண்டு பிடிக்க வேண்டும்...
இல்லா விட்டால் அவர்கள் பஸ்ஸை கொளுத்து என்று யாராவது கொளுத்துவதில் வந்து முடியும்...//

தங்கத்தலைவி கொள்ளை அடித்ததற்கான தீர்ப்பில் செயலலிதான் போன்றத் தனிநபரை காப்பாற்றுவதற்காக இப்படி போராட்டம் நடத்தினால் தவறு. இது செயலலிதா போன்றோரின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை இது. மக்களின் பிரச்சனையாக இருப்பதால் இப்படி போராட்டம் நடத்துவது சரியான நடவடிக்கைதான்.

பந்த் என்ற பெயரில் பேருந்தை கொளுத்துவது தவறு. அப்படி ஏதும் இந்த போராட்டத்தில் நடக்கப் போவதில்லை. செயல்லிதா கட்சியினர் வேண்டுமானால் அப்படி எதாவது செய்துவிட்டு சிலநாட்கள் வேலையற்றத்தனமாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்க்லாம்
தர்மபுரி போருந்து எரிப்பு என்பது தங்கத்தலைவியிடம் நல்ல பெயர் வாங்க இப்படி அப்பாவி மாணவிகளை எரித்தார்கள் இத்தகைய போராட்டம் கண்டிக்கத்தக்கது தான்.



போராட்டம் என்றால் எல்லாம் ஒன்று தான் என்று பார்க்கும் உங்கள் பார்வை தவறானது.


கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007



6. மன்னிக்கவும் நண்பர் சுகுமாரன்
ஜெயல்லிதா விவகாரத்தில் பஸ்கொளுத்தப் பட்டதில் மாணவிகளை உயிரோடு எரிந்தார்கள். ஆனால் அதற்கு முன்பும் பின்பும் பஸ்கள் எரிக்கப் பட்டுள்ளன. உயிர்ப்பலி இல்லை என்பதற்காகவே அவை சரியென்று சொல்ல முடியுமா?


மேலும் இது மாணவர்கள் தொடர்புடைய விஷயம். இதில் வன்முறை நிகழாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு போராட்டம் அறிவித்து பரத்த பாதுகாப்பையும் உறுதி செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டலாம். அதன் பலன் என்ன?


வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒரு முட்டாள்தனமான போராட்டங்களை வழிகாட்டியாக விட்டுச் செல்லாமல் இருப்பது சிறந்தது.
மற்றபடி இட ஒதுக்கீடு சட்டமாகி அது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கும் தீவிர விருப்பம் உண்டு.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007



7. +11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 ;-)
கூறுவது: பெனாத்தல் சுரேஷ் Saturday, 31 March 2007

8. //நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக வழங்க முடியாது. அவர்கள் நீதிமன்ற விவாதங்களின் வழியில்தான் தீர்ப்பு வழங்க முடியும். //

அய்யா,
சமீபத்தில் சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ஒன்று வந்தது.

ஒருவர் சொன்னார் மறு தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று சொன்னார்.


மற்றொருவர் மறு தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று சொன்னார்.


அப்படியானால் இரு நீதிபதிகளில் யார் தீர்ப்பு சரியானது?.


இட ஒதுக்கீடு தொடர்பாக 9 நீதிபதிகள் அடங்கியத்தீர்ப்பு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது சரி என்று தீர்ப்பளித்தார்கள்.


ஆனால்,
இரண்டு நீதிபதிகள் அதனை தடை செய்தார்கள்
அப்படியானால் எது சரி?


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிமன்றத் தீர்ப்புகளில் ஊழல்கள் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். எனவே,
தீர்ப்புகள் நியாயமாக வழங்கப்படுவதில்லை என்பதே நீதிமன்றத்தலைமை நீதிபதியின் கூற்று என்பதை மறக்க வேண்டாம்.


சமீபத்தில் வழக்குறைஞர் பா. வே. பக்தவச்சலம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். நீதியைத் தேடி தயவு செய்து நீதிமன்றத்திற்கு வாராதீர்கள் என்று சொன்னார். இது எதைக்குறிக்கிறது?.
நீதிமன்றங்கள் அநீதிமன்றங்கள் அநீதி மன்றங்களாக உள்ளன என்பதைத்தான் மேலே உள்ள தகவல்கள் நமக்குச் சொல்லும் தகவல்களாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளே பல நேரங்களில் கோளாரான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

////பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஒப்புதல் பெறப்பட்ட ஒரு சட்ட வடிவை இரு நீதிபதிகள் தடை செய்கிறார்கள். // //

//அப்படி ஒரு முட்டாள் தனத்தை எந்த நீதிபதியும் செய்யமுடியாது. இதில் இந்திய அரசியல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு பிறரால் தொடுக்கப் பட்ட வழக்கின் விசாரணையில்தான் இந்த தீர்ப்பே தவிர அவர்களின் சொந்த விருப்பப்படி கொடுத்த தீர்ப்பு அல்ல.//

எந்த நீதிபதி என்ன நினனக்கிறோ அது தான் தீர்ப்பாக் பெரும்பாலும் இருக்கிறது.

அப்படி இல்லை எனில் கீழ் நீதிமன்ற வழங்கிய அதே வழக்கில் மேல் நீதிமன்ற மற்று மொரு தீர்ப்பு வழங்க வேண்டியதில்லையே!

மேலே சொனத்தீர்ப்பு தொடுக்கப் பட்ட வழக்கில் வழங்கப் பட்ட கோளாரான தீர்ப்பு. எந்த தீர்ப்பு சரி! என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


9. நீதித்துறையிலும் ஊழல் இருப்பதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் இம்மாதிரி வழக்குகளில் லஞ்சம் என்று கூற முடியுமா?

இரு நீதிபதிகளும் வெவ்வேறாக தீர்ப்பளித்தது என்பதும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. சில நுட்பமான சட்டவிதிகளில் உள்ள வழக்கமான ஓட்டைகள் குறித்த வியாக்கினங்களை இரு நீதிபதிகளும் வேறுவேறாக அறிந்து வைத்திருந்தது கூட காரணமாகியிருக்கலாம்.
கீழ்நீதிமன்றங்களில் ஏற்படும் இதுபோன்ற தவறுகளை சீர் செய்ய வேண்டியே அப்பீல் போன்றவை...



அதேசமயம் இப்படி போராட்டம் நடத்துவதால் அவர்கள் தங்கள் தீர்ப்பை திருத்திவிடப் போகிறார்களா?


கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


10. //நீதித்துறையிலும் ஊழல் இருப்பதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் இம்மாதிரி வழக்குகளில் லஞ்சம் என்று கூற முடியுமா?//

இந்த் மாதிரித் தீர்ப்புகளில் பார்பனியம் தான் மேலோங்கியுள்ளது.
இதில் ஏதும் நுட்பம் இல்லை.


உயிரோடு இருப்பவனை கொண்றதாக கூறி தண்டனை பெற்றப் பின் நீதிமன்றத்தில் கொலையானவர் நேரில் வந்ததெல்லாம் வரலாறு.
இதில் என்ன நுட்பம் உள்ளது. ஒழுங்காக விசாரிக்க வில்லை என்பதைத் தவிர!.



காசு கொடுப்பவனுக்கு ஆதரவாக எவனையாவது பிடித்துப் போட்டு குற்றவளியாக தீர்ப்பு எழுத வேண்டியது தான்.
அது போகட்டும்!

இந்த நீதி மன்ற ஒழுக்க கேடானது என்பதை நிரூபிக்கவே இலஞ்சம் கொடுத்து இந்திய குடியரசு தலைவரையே கைது செய்ய நீதிமன்றத்தில் ஆணை பெற்றேன் என்றார் ஒரு வட இந்தியர்.


இந்தகையத் தீர்ப்பில் என்ன சட்ட நுணுக்கம் உள்ளது என்று சொல்ல முடியுமா? .


இந்த் தீர்ப்பு வழங்கப்பட்டது முழுக்க முழுக்க இலஞ்சம் தான்.
அய்யா நீதிமன்றமே பிராடு அதற்கு சட்டம் நுணுக்கம் என்று சொல்லி வக்காலாத்து வாங்க வேண்டாம்.


அதெல்லாம் ஒரு பொடலங்காயும் இல்ல...................!


திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் இப்போது நீதிமன்றத்திலும் நிறைந்து கிடக்கிறது.


கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


11. //திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் இப்போது நீதிமன்றத்திலும் நிறைந்து கிடக்கிறது.//

நீதிபதியாக நியமனம் பெற அரசியல்வாதிகளின் சிபாரிசு இன்று தேவைப்படுகிறது. நடுநிலையான வழக்கறிஞர்களுக்கு பதிலாக கட்சிகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தவர்களுக்கே நீதிபதி பதவி கிடைக்கிறது. இவையெல்லாம் நீங்கள் கூறும் குறைபாடுகளுக்கு காரணம் தான்.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007


12. //அதேசமயம் இப்படி போராட்டம் நடத்துவதால் அவர்கள் தங்கள் தீர்ப்பை திருத்திவிடப் போகிறார்களா?//

இராசாசி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த போது பெரியார் சொன்னார், ஒரு டின்னுல மண்ணெண்ணையும், தீப்பெட்டியும் தாயாராக வைத்துக் கொள்ளுங்கள் நான் என்றைக்கு சொல்கிறேனே அன்றைக்கு அக்கிரகாரத்தை போட்டு கொளுத்துங்கள் என்று பெரியார் சொன்னாராம்.

அப்படி ஏதேனும் செய்தால் தான் திருந்துவார்களோ தெரியவில்லை.
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007


13. இரா.சுகுமாரன் ஐயா,
ந(க்க)ல்லா 'அடிச்சு' ஆடுறிங்க !
பாராட்டுக்கள் !
கூறுவது: கோவி.கண்ணன் Saturday, 31 March 2007

14. நன்றி கோவிக்கண்ணன் அய்யா!
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007

15. சிந்தாநதி பதில் ஏதும் அளிக்கமையால்
வேலை நிறுத்தம் சரியானதே என்று சொல்லி
இறுதி தீர்ப்பு வழங்குகிறேன்
அனைவருக்கும் நன்றி
இரா. சுகுமாரன்
கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007




16. ஐயா வேலை நிறுத்தம் சரியானது என்ற முடிவு எனக்கு இன்னும் ஏற்புடையதாக தோன்றவே இல்லை. ஆனால் தீர்ப்பு பற்றி நீங்கள் கூறிய சில விஷயங்கள் சிந்திக்க வைப்பதாக இருந்தன.

ஆனாலும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வெறும் சொந்தவிருப்பு அடிப்படையிலோ, பிறரின் நிர்ப்பந்தத்தினாலோ, சார்பு நிலையிலோ வழங்க முடியும் என்று நினைக்க சற்று தயக்கமாகவே உள்ளது. அந்த தீர்ப்பு நகல்கள் சில நாட்களில் வெளியாகி சட்ட நிபுணர்களால் பொது அரங்குகளில் விவாதிக்கப் பட வாய்ப்பு உள்ளது. அப்போதுதான் இதுபற்றி சரியாக சொல்லமுடியும்.
கூறுவது: ☆ சிந்தாநதி Saturday, 31 March 2007

17. வியாபாரத்தை சட்டப்படியான மோசடி, அங்கீகரிக்கப் பட்ட திருட்டு என்று சொன்னார் ஒரு அறிஞர்.

******
அலகாபாத் நீதிமன்றம் காவல் துறை பற்றி ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்கி இருந்தது.


" சட்ட ரீதியாக ஒன்று திரட்டப் பட்ட மிகப் பெரிய சட்ட விரோத, சமூக விரோத ரவுடிக் கும்பல் போலிசு தான் என்று ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது".

அதை எதிர்த்து அந்த மாநில அரசு காவல் துறையினர் மனரீதியாக பாதிக்கின்ற தீர்ப்பு இது, எனவே இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று மேல் முறையீடு செய்தது.

ஆனால், நீதிமன்றமோ இந்த தீர்ப்பு சரியானது தான், நன்றாக ஆய்வு செய்த பின்பே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறி மாநில அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

ஆனால், இந்த நீதிமன்ற அயோக்கியத்தனத்தைப் பற்றி கருத்துக் கூறவேண்டுமானால் நீதிமன்ற அவமதிப்பு அப்படி இப்படி என்று சொல்லி வெள்ளைக்காரன் காலத்து சட்டத்தை வைத்து ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள்.


போலீசு மீது தீர்ப்பு வழங்க இந்த நீதி மன்றத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதனால் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.


ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு நீதிமன்றங்கள் பற்றி கருத்துக்கூற வாய்ப்பில்லை, எனவேதான் அவர்களை இப்படி அமைதியான முறையில் வேலைநிறுத்தம் (பந்த்) என்ற முறையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அரசுக்கும் கூட இது தான் நிலையாக உள்ளது. அரசு கூட நீதிமன்றத்தை எதிர்த்து கருத்துக் கூறமுடிவதில்லை.


நன்றாக சிந்தித்துப் பார்த்தீர்களானால் தான் இது புரியும்.
புரிந்தும் புரியாதது போல் நடித்தால் அதற்கு நான் பொருப்பேற்க முடியாது.



//ஆனாலும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வெறும் சொந்தவிருப்பு அடிப்படையிலோ, பிறரின் நிர்ப்பந்தத்தினாலோ, சார்பு நிலையிலோ வழங்க முடியும் என்று நினைக்க சற்று தயக்கமாகவே உள்ளது. அந்த தீர்ப்பு நகல்கள் சில நாட்களில் வெளியாகி சட்ட நிபுணர்களால் பொது அரங்குகளில் விவாதிக்கப் பட வாய்ப்பு உள்ளது. அப்போதுதான் இதுபற்றி சரியாக சொல்லமுடியும்."//


கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு,
எல்லாம் வெட்ட வெளிச்சம் பின் எதற்கு அறிஞர்கள் அப்படி இப்படி என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

நதி நிந்தினால் தான் அது நதி.
இல்லையானல் அது வரட்சி நிலம்.
சிந்தியுங்கள்
பந்த் என்பது முட்டாள் தனமல்ல.
அரசுக்கும் கூட வேறு வழியில்லாமல் தான் இத்தகைய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.


கூறுவது: இரா. சுகுமாரன் Saturday, 31 March 2007

18. சுகுமாரன் ஐயா,
தங்கள் பின்னூட்டங்களை தொகுத்து தனிப்பதிவாக இடுங்கள்
கூறுவது: கோவி.கண்ணன் Saturday, 31 March 2007
இப்பதிவு திரு கோவிக்கண்ணன் அவர்கள் விருப்பத்திற்கினங்கவே இங்கு பதிவாகியுள்ளது.
நண்பர் கோவிக்கண்ணன் அவர்களுக்கு நன்றி