Friday, August 10, 2007

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு குறை நிறைகள்

குறைகள்

என்பார்வையில் குறைகளை அதிகம் காணப்படவில்லை என்பதால், நான் குறைகளை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.

பதிவர் பட்டறை நிறைவில் மூன்று குறைகள் சுட்டிக்காட்டினார் விக்கி அவர்கள் அவை இல்லாம ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார்.

அவை:
1. இடம் போதவில்லை என்பது.
2. இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்தது.
3. மதிய உணவு இடைவேளை 1.45 மணிக்கு அனுமதிக்கப்பட்ட்து ( 3வதாக சொன்னது இது தானா? என உறுதியாகத் தெரியவில்லை)

1. இடம் போதவில்லை என்பது.

முதலில் சுமார் 100 முதல் 150 பேர் வருவார்கள் என்று திட்ட மிடப்பட்டது. ஆனால் திட்டமிடலுக்கு அதிகமானவர்கள் வந்தமையால் இடம் போதாமல் போனது தவிர்க்க இயலாதது எனவே அந்த குறையை என்னால் ஏற்க இயலவில்லை.. அந்த இடம் இலவசமாக கிடைந்தது அவை இல்லாமல் சென்னைப் பல்கலைக்கழகம் அனைவரும் அறிந்த இடம் பரிச்சையமான இடம் அதிகம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம் ( கொஞ்சம் தான் தேட வேண்டியிருந்தது) என்பதால் இடம் தேர்வு சரியான ஒன்றுதான். இடம் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென 300 பேர் வந்தால் யார் என்ன செய்ய இயலும்.

2. இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்தது.

Sify இணைப்பைத் தான் கேட்க வேண்டும் ஏனெனில் இவ்விணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலைமை களை கணக்கிட்டு இலவச இணைப்பை பெற்றதால் அவர்களை கேள்வி கேட்க இயலாது. எனவே இதுவும் மிகப்பெரிய குறை என்று நான் எடுத்துக் கொள்ளவில்லை.

3. நான் குறிப்பிட விருக்கும் குறை

பதிவர் சந்திப்பு என்பது வழக்கமாக குறைவான எண்ணிக்கையுடன் இருப்பது வழக்கம் மேலும், புதியவர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. ஆனால், இப்பதிவர்கள் சந்திப்பில் புதியவர்கள் அழைக்கப்பட்ட்தால் ஏற்கனவே, பதிவர்களாக இருப்பவர்கள் யாரையும் தெரிந்து கொள்ள இயலவில்லை. என்னைப் போன்றவர்கள் உங்கள் பெயர் என்ன என்று ஒவ்வொருவாராக சென்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருந்த்து.

பங்கேற்பாளர் அட்டையில் திரு. தருமி அவர்கள் பெயர் எழுதியிருத்தமையால் எளிதில் அடையாளம் கண்டேன்.. காலையிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பென்ஸ் அவர்களை மாலையில் அவர் பெயரை கேட்டு அறிந்து கொண்டேன். லுக்கி லுக், செந்தழல் ரவி, பால பாரதி, உள்ளிட்டோர் பெயர்களை தனித்தனியாக கேட்டு அறிந்து கொள்ள நேர்ந்த்து இந்த பதிவர் சந்திப்பு என்பது என்னை போன்றவர்கள் வந்த்து அதிகமான வலைப்பதிவர்களை ஒரே இட்த்தில் சந்திக்கலாம் என்று வந்தோம் ஆனால், ஒரே இட்த்தில் கூடியும் யார் யார் என்று தெரியாமலே திரும்ப வேண்டியிருந்தது.

இதனை தவிர்க்க ஏற்கனவே பதிவாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் தானாக வந்து அல்லது யேரேனும் அறிமுகம் செய்திருக்கலாம். இப்படி செய்யாமல் போனதால் என்னைப் போன்றவர்கள் வந்த்தன் நோக்கம் நிறைவேறவில்லை.

4.ஏதேனும் தீர்மானம் இயற்றி இருக்கலாம்

இவ்வளவு பேரை ஒரே இட்த்தில் கூட்டி பின்னர் கலைந்து சென்றார்கள் புதிதாக சிலருக்கு பதிவர்களாக சொல்லித்தரப் பட்ட்து என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. “Un conferencing” என்று அறிவித்தமையால் எவ்வித பயனும் இல்லை.

எனவே, புதிதாக கீழ்க் கண்ட கோரிக்கைகளை வைத்து இருக்கலாம்.

1. இந்தியாவில் மிக அதிகமாக தமிழில் பிளாகர் உள்ளதால் தமிழில் உடனடியாக பிளாகர் வெளியிட கூகுல் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருக்கலாம்.

2.கூகில் மின்னஞ்சல் முழுமையாக தமிழில் மொழி பொயர்க்கப்பட்டுள்ளதாக கூகில் தெரிவித்துள்ளமையால் உடனடியாக கூகிலில் மின்ன்ஞ்சலை தமிழில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம்.

3.Windows நிறுவப்படும் போது இந்தியா தேர்வு செய்தவுடன் இந்திய மொழிகளுக்கான ஆதரவு கூடவே செயல்படுத்த வேண்டும் என்று திரு பத்ரி அவர்கள் கூறிய கருத்தை கோரிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வைத்திருக்கலாம்.

தமிழகத்திலுள்ள பத்திரிக்கைகள் தங்களது இணையப் பக்கங்களை ஒருங்குறி எழுத்து வடிவத்தில் வெளியிட வேண்டும். என்று அங்கு விவாதித விசயத்தையும் அங்கு கோரிக்கையாக வைத்திருக்கலாம்.

மற்றபடி நன்றாக திட்டமிட்டிருந்தார்கள்.

ஓசை செல்வா தனது குரல் பதிவில் நன்றாக “சொதப்பி விட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.