Friday, June 01, 2007

தேவதாசி முறையை ஆதரித்து


தேவதாசி முறையை ஆதரித்து ஒரு பதிவு வெளிவந்துள்ளது ஆனால், அந்த பதிவுக்கு நான் அளித்த பதிலை அவரால் வெளியிட முடியாது என நான் கருதுகிறேன். அதனால் அந்த தகவலை நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதால் அதனை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்த பதிவில் எழுதப்பட்டுள்ள வாசகம் பின்வருமாறு:

////இதெல்லாம் தெரியாத இராமசாமி நாயக்கன் 'உங்காத்து பெண்களை ஏன் தேவதாசி ஆக்கக்கூடாது?' என்ற குதர்க்கமான கேள்வி கேட்டு வழிவழிவந்த அந்த புனிதமான இறைவன் சேவையை நிறுத்திவிட்டார்.

அதன் விளைவு? சுத்தமில்லாத பெண்களுடன் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வேண்டாத வியாதிகளான கொனேரிய, சிலிபஸ் மற்றும் உயிர்கொல்லி நோயான எஸ்ட்ஸுக்கும் எல்லா சாதியினரும் பலியாக வேண்டி இருக்கிறது. பொதுவில் பார்த்து வந்த நிர்வாண நடனங்களை இப்பொழுது சிடி போட்டு மறைவாக பார்க்கும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.////

முழுமையாகப் படிக்க இங்கே இணைக்கப்பட்டுள்ள இந்த தளத்தை தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது படிக்கவும்.

தேவதாசி முறை மிகவும் புனிதமானது என்றும் அதனை தந்தைப் பெரியார் குதற்கம் பேசி நிறுத்திவிட்டதாக அந்த நண்பர் வருத்தப்படுகிறார். சுத்தமானவர்கள் அந்த தொழிலை தொடர்வதில் நமக்கு ஏதும் மறுப்பில்லை. இங்கே இதுபற்றிய முந்தய சம்பவம் ஒன்றை கீழே தருகிறேன்.

தேவதாசியை அகற்றும் தன்மையில் சென்னை மாகாணச் சட்ட மேலவையில் 02-02-1929 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு மசோதாவை முத்துலட்சுமி அம்மையார் கொண்டு வந்தார் இதனை பல பழமை வாதிகள் எதிர்த்தனர் காங்கிரசு சுயராச்சிய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர் இதனை மிக கடுமையாக எதிர்த்தார்.

தேவதாசி முறை நம்மால் உருவாக்கப் பட்டதல்ல அது நீண்ட காலத்துக்கு முன்னர் நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது இன்றைய சமூகத்துக்கும் அது தேவைப்படுகிறது இவர்கள் கோவில்களில் தொண்டு செய்வதற்காக சாஸ்திரப்படி அமர்த்தப்பட்டவர்கள் தேவதாசி முறையை அகற்றிவிட்டால் அது கடவுளுக்கு எதிரான செயல் எனவே இந்த மசோதா முறைகேடானது என உரக்கப் பேசினார்.

பெண்ணுலகை இழிவு படுத்தும் இந்த கருத்தை எதிர்த்து முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்ற மேலவையில் பின்வருமாறு பேசினார்.
" எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கடவுள்களுக்குத் தேவதாசிகளாகத் தொண்டு செய்வதை நீண்டகாலமாக செய்து விட்டோம். அப்படிப்பட்ட புனிதமானதும் கடவுளுக்கு உரியதுமான தொண்டினை இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் வகுப்பைச் சார்ந்த பெண்கள் செய்யட்டும்" என்று பளீரென்று பேசினார்.'

அதன் பின் இனிமேல் அந்த தொழிலைப் பார்ப்பனர்கள் தொடர்ந்தால் நாங்கள் ஆட்சேபிக்க வில்லை என்று சொன்னவுடன் தான் அவர்களுக்கு புரிந்தது ஆனால், இங்கு பலருக்கு அது புரியவில்லை.

அதனால், நானும் தான் கேட்கிறேன். தேவதாசித் தொழில் செய்வதற்கு  எத்தனைப் பார்ப்பனத்திகள் தயார் என்று?.