Wednesday, August 20, 2008

பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது

தமிழில் பிளாகர்ஸ் தளம் வந்துவிட்டது. இன்று காலை நான் கூகுல் தளம் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil என தெரிந்தது, ஏற்கனவே இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளை மட்டுமே கூகுல் இந்தியாவில் இந்திய மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.

பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.

தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.

முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?

அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,



17 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி

ISR Selvakumar said...

உடனடி தகவலுக்கு நன்றி

கரிகாலன் said...

வணக்கம் தோழர்,
தகவலுக்கு நன்றி

புதுப்பாலம் said...

தகவலுக்கு நன்றி

Anonymous said...

வணக்கம் தோழர்
தகவலுக்கு நன்றி

இரா.சுகுமாரன் said...

வருகைதந்த செல்வக்குமார், கரிகாலன்,புதுப்பாலம், அரியாங்குப்பத்தார் ஆகியோருக்கு நன்றி

Anonymous said...

OK sir, thanks for your immediate news on blog.

புருனோ Bruno said...

//தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தாமல் யார் தமிழை பயன்படுத்துவது?//

தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?

அப்படித்தானே

அது மட்டுமல்ல

பலர் தமிழ் இடைமுகத்தை பயன்படுத்தினால் தான் கூகிள் மேலும் பல சேவைகளை தமிழில் அளிப்பார்கள்

இரா.சுகுமாரன் said...

//தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?

அப்படித்தானே//

ஆம் அய்யா, அவசர அவசரமாக தட்டச்சு செய்து வெளியிட்டு விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

HS said...

nantri
http://kelvi.net/?p=64

இரா.சுகுமாரன் said...

வருகை தந்த புருனோ,
இணைப்பு வழங்கிய HS, (http://kelvi.net/?p=64 )
மற்றும் http://www.tamilish.com/ ஆகியோருக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

நாம் பயன்ப்படுத்தும் 'வலைப்பதிவு', 'இடுகை' போன்றவற்றையே பயன்படுத்தி இருக்கிறார்கள். உண்மையில் தமிழ்பதிவர்களை இவை ஊக்கப்படுத்துக்கின்றன.

Anonymous said...

நன்றி அய்யா,

manjoorraja said...

இவ்வாறு தமிழ் படுத்திய பிறகு புதிய பதிவை எழுதலாம் என சென்றால் புகைப்பட இணைப்புக்கான மெனுவை காணமுடியவில்லை.

புகைப்படம் இணைக்கவும் முடியவில்லை.

உங்களில் யாருக்கேனும் இந்த பிரச்சினை வந்ததா?

அதே சமயம் பழைய முறையில் சென்றால் புகைப்படம் இணைக்க முடிகிறது.

இரா.சுகுமாரன் said...

//மஞ்சூர் ராசா said...

இவ்வாறு தமிழ் படுத்திய பிறகு புதிய பதிவை எழுதலாம் என சென்றால் புகைப்பட இணைப்புக்கான மெனுவை காணமுடியவில்லை.

புகைப்படம் இணைக்கவும் முடியவில்லை.

உங்களில் யாருக்கேனும் இந்த பிரச்சினை வந்ததா?

அதே சமயம் பழைய முறையில் சென்றால் புகைப்படம் இணைக்க முடிகிறது.//

நீங்கள் சொல்வது போன்ற பிரச்சனை ஏதுமில்லை நான் தமிழ் மாற்றியபின்பே படத்தை இணைத்தேன்.

புகைப்படம் இணைக்கும் மெனு தெரிகிறது உங்களுக்கு அதன் படம் தனி மின்னஞ்சலில் அனுப்புகிறேன் பாருங்கள்,

வருகைக்கு நன்றி

சுகுமாரன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

பயன்மிகு தகவலுக்கு நன்றி. இணையத்தின் வழி இனியத் தமிழை இணைந்து வளர்ப்போம்!

இரா.சுகுமாரன் said...

//கோவி.கண்ணன் கூறியது...

நாம் பயன்ப்படுத்தும் 'வலைப்பதிவு', 'இடுகை' போன்றவற்றையே பயன்படுத்தி இருக்கிறார்கள். உண்மையில் தமிழ்பதிவர்களை இவை ஊக்கப்படுத்துக்கின்றன.//

உண்மைதான் கோவிக்கண்ணன் உங்கள் கருத்துக்கு நன்றி