Saturday, January 24, 2009

மக்களுக்கான ராணுவம்-கூலிகள், மக்களே ராணுவம்- புலிகள்- சந்தனக்காடு -சந்தனக்காடு இயக்குநர் வ.கௌதமன் பேச்சு




ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வதை நிறுத்தக்கோரியும் செங்கற்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்
மூன்றாவது நாளாக இன்றும்(24.01.2009) சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.பதினான்கு மாணவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இந்த மாணவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பதால் இவர்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.செங்கற்பட்டு மருத்துவமனையில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் உண்ணாநிலையை முடித்துக்கொண்டு வேறு வகையில் போராடும்படி திரைப்பட நடிகர் சத்தியராசு.சந்தனக்காடு இயக்குரநர் வ.கௌதமன்.இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்காமல் இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தி இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்வரை போராட்டம் நடக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்களைத் தொடர்ந்து சென்னை மருத்துவக்கல்லூரி,கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதம் இன்று மேற்கொண்டுள்ளனர்.
செங்கற்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத மேடைக்கு வந்த சந்தனக்காடு இயக்குரநர் வ.கௌதமன் ஈழப்பிரச்சனை பற்றியும் இந்திய அரசு செய்துவரும் வஞ்சனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.செஞ்சோலை என்ற அமைப்பு ஈழத்தில் உள்ளது.இதில் போரில் பாதிப்புற்ற குடும்பத்தைச் சேரந்த,பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள் இருந்தனர்.இவர்கள்மேல் குண்டு வீச,அந்த பிஞ்சு மழலைகள் இருந்த இடத்தை அடையாளம் காட்டியது இந்திய அரசாங்கத்தின் ரேடார் கருவிகள் ஆகும்.பிஞ்சுக்குழந்தைகளைக் கொல்ல இந்தியா உதவினாலும் தமிழர்கள் இன்றுவரை இந்தியா என் தாய்நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் என்கின்றனர்.
அடுக்கடுக்காக உதவிகளை இந்தியஅரசு இலங்கைக்குச் செய்தாலும் இந்தியப் பிரதமர் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும் பூரணகுணமடைய தமிழர்கள்தான் பிரார்த்தனை செய்கின்றனர்.வாழ்க்கைக்குப் போராடும் ஈழத்தமிழர்கள் கூட இந்திய பிரதமரின் வால்வுக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலைக்கு வேண்டிக்கொண்டுள்ளனர்.
இரக்கம் கொண்ட இந்த இனத்தை அழிக்க இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்யக்கூடாது என்றார்.இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் தமிழ் உயிர்களை இலங்கை இராணுவம் இதுவரை கொன்றுள்ளது.அந்த இராணுவத்துக்கு இந்திய அரசு துணைபோவது தமிழர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.பாகிஸ்தானில் ஒரு சிங் தூக்குத் தண்டனைக்கு நின்ற பொழுது இந்திய நாடே துடித்தது.
ஈழத்தில் தமிழர்கள் மழையிலும் கொத்துக்குண்டுக்கு இடையிலும் காடுகளில் வாழ வேண்டியுள்ளது.காடுகளில் பாம்புக்குப் பலியாவதும் மருந்தின்றி சாவதும் அதனை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது.உலகமே எதிர்த்தாலும் புலிகள் தமிழீழம் அமைப்பது உறுதி.ஏனென்றால் கொரில்லாப் போரில் ஈடுபட்ட எந்த போராளிகளும் இதுவரை தோற்றதில்லை.மக்களுக்கான இராணுவம் கூலிகள்.மக்களே இராணுவம் புலிகள்.தமிழீழம் நாளை மலர்ந்தே தீரும் என்று சந்தனக்காடு இயக்குநர் வ.கௌதமன் பேசினார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த சத்தியராஜ்.ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மாணவர்களின் உடல்நிலை கண்டு வருத்தம் தெரிவித்தனர்.அவர்களும் மாணவர்களுடன் அமர்ந்திருந்தனர்.

2 comments:

Unknown said...

அய்யா ! உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?

அது கீழே உள்ள குழ்ந்தையை போல
அழும் நிலையை கண்டால் என்ன செய்வீர்கள் ?

அதுவும் உங்களை வீட்டுக்கு வெளியே விடாமல் சுற்றிலும்
குண்டுகளும் , ஷெல்களும் விழும் நிலையில் ?





கடவுளே நீ உள்ளாயா ? அப்படியானால் ஏன் என் மக்களும்
குழந்தைகளும் இப்படி அவதிப்படுகிறார்கள் .

Anonymous said...

மிகவும் வேதனையான தகவல்கள் நம்மை வந்து சேர்ந்த வண்ணம் உள்ளன புலிகள் என்ற பெயரில் அப்பாவிகள் பலர் கொல்லப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அதிபர் இராஜபக்‌ஷே பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும் அல்லது வருத்தப்பட அவர் இருக்க மாட்டார்.