Thursday, February 26, 2009

தமிழருவி மணியனுக்கு பாராட்டு சுவரொட்டி ஒட்டிய இளைஞர் பட்டாளம்

புதுச்சேரி பேரூந்து நிலையம் அருகில் இன்று காலை சென்றிருந்தபோது “தமிழ்ருவி மணியன்” காங்கிரசு கட்சியிலிருந்து தனது பொதுச்செயலர் பதவியிலிருந்து விலகியதற்கு பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். அவர்களை பார்த்தால் அதிகம் படித்தவர்கள் போல் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிப் பிழம்பாக தமிழீழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி தங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.



இங்கே சுவரொட்டி ஒட்டினால் எந்த பயனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம், இருந்தும் நாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். அங்கே செத்து மடியும் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற நாங்கள் ஈழம் செல்லவும் தயாராக இருக்கிறோம், அதற்கு ஏதேனும் வழி சொல்லுங்கள் என்று ஒரு இளைஞர் கேட்டார். அது ஏதோ அறியாமையால் கேட்ட கேள்விபோல் எனக்கு தோன்றவில்லை. உண்மையில் வாய்பிருந்தால் செல்வார்கள் போலிருக்கிறது, அந்த அளவுக்கு அவர்களின் குரலில் அழுத்தம் இருந்தது, ஒரு வருத்தம் இருந்தது.




நீங்கள் எந்த கட்சியை சேர்தவர்கள் என்று கேட்டபோது “ இல்லை அண்ணா நாங்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள்” எங்கள் சுவரொட்டிக்கும் கீழே பாருங்கள் அது தெரியும் என்றார் ஒரு இளைஞர்." நெல்லித்தோப்பு உருளையன் பேட்டை இளைஞர்கள் புதுவை" என்று அந்த சுவரொட்டியில் இருந்தது. அதிகம் காசு பணம் வைத்துக்கொண்டு ஏதோ பொழுது போக்குக்காக அவர்கள் இதை செய்யவில்லை, அவர்களின் அடிமனதில் படிந்திருக்கும் சோகத்தின் வெளிப்பாடாக இடையிடையே அங்கே அமர்ந்து விளையாடிக் கொண்டே சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்,

அவர்களுக்கு எமது நன்றியை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

மறக்காமல் அவர்களின் பெயரை கேட்டு வந்தேன், த.இளையராசா, செ.மணிகண்டன், இரா.செயக்குமார், ஏ.அருள், சூசை, சு. ஜான்சன், வே, ஜூலியோ, மு. எழில், கு. அருணாச்சலம், மு.இளையராசா, வினோத், சகாயம், உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றார்கள், உடன் அவர்களின் அலைபேசி எண்ணும் கொடுத்தார்கள்; முடிந்தால் நீங்களும் அவர்களை பாராடுங்கள்: எண் : 98944 08879, 94430 36606

Saturday, February 14, 2009

புதுச்சேரியில் நான்காவது நாளாக பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

புதுச்சேரியில் நான்காவது நாளாக பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயிலும் மாணவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று 4-வது நாளாக நடைபெறுகிறது. இரண்டாவது நாள் போராட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடிய புகைப்படக்காட்சிகள். பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் தந்தைபிரியன், வீரமோகன், விஜயசங்கர், இளங்கோ, சுரேசு, சிவமுருகன், பெருமாள் உட்பட்ட தேழர்கள் உடன் இருந்தனர். பல்வேறு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

  1. திரைப்பட இயக்குனர் சீமான் மாணவர்களை வாழ்த்திப்பேசினார்.
  2. ம.தி.மு.க வை சேர்ந்த திரு வந்தியத்தேவன்,
  3. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலர் திரு வணங்காமுடி,
  4. சமஜ் வாடி கட்சி புதுவைத் தலைவர் தங்க கலைமாறன்,
  5. விடுதலை சிறுத்தைகளின் மாநில அமைப்பாளர் திரு பாவாணன்,
  6. ம.தி.மு.க செல்வராசு,
  7. மக்கள் உரிமைக்கூட்டமைப்பை சேர்ந்த கோ.சுகுமாரன்,
  8. தமிழர் தேசிய இயக்கத்தின் திரு இரா.அழகிரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினர்.
  9. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்.
  10. கடலூர் பெரியார் அரசினர் கலைக்கல்லூரி மாணவர் வாழ்த்தினர்கள்.
  11. புதுச்சேரி அரசுவிரைவு பேருந்து கழகம் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
  12. புதுச்சேரி அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு மேநிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

அந்த மாணவர்களும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.









புதுச்சேரியில் தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளில் நிறைவு

புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து ராஜபக்சே உருவப் படத்தை எரியூட்டினர்.

புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவப்படத்தை எரியூட்டினர்.

இந்தப் போராட்டத்தை வாழ்த்தி பாமக அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், விடுதலை வேங்கைகள் மங்கையர்ச்செல்வன், பெரியார் திராவிடர் கழகம் லோகு.அய்யப்பன் வாழ்த்திப் பேசினர்.

போராட்டத்துக்கு, சட்டக்கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் சக்தி, முதலாம் ஆண்டு மாணவர் அன்பு, முற்போக்கு மாணவரணி செயலாளர் பாஸ்கர், மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

20-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Sunday, February 01, 2009

துரோகமே உருவான காங்கிரசும் தமிழினமும்


இலங்கையில் போரை நடத்துவது யார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு தெளிவாகி இருக்கும், வெள்ளைக்காரனுக்கு பிறந்த கள்ளக் குழந்தையான இந்திய தேசிய காங்கிரசு அரசுதான் அங்கே போரை நடத்தி வருகிறது என்பதை பல்வேறு செய்திகளிலிருந்து உறுதிப்படுத்தி கொள்ள முடிகிறது.

நாம் அறிந்து வகையில் திருட்டுக் கும்பலாக நாடு கடத்தப்பட்ட சிங்களர்களுக்கு இப்போது எப்படி இவ்வளவு வலிமை வந்தது என பார்க்கின்ற போது இப்போதுதான் அதன் முழு வெளிச்சம் உலகிற்கு வெளியே வரத் தொடங்கியுள்ளது, அவன பிடிப்பேன், இவன பிடிப்பேன் என கூறும் தமிழக உளவு பிரிவு கூட இதை தெரிந்து கொள்ளவில்லையா? தெரிந்தே தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்திவருகிறதா? என்றெல்லாம் பார்க்கிற போது இந்த அரசுகள் மக்கள் விரோத அரசாக மக்களை ஏமாற்றுகிற அரசாக மோசடி அரசுகளாக இருப்பதை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசு அவ்வப்போது மெளன காத்தாலும் அடிக்கடி இலங்கை அரசு தான் இந்தியா என்ன எங்களிடம் பேச வருகிறது என்பதை அறிவித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்திய அரசு வாய்திரக்கவில்லை. சிவசங்கர் மேனர் இந்தியாவிலிருந்து கிளம்பிய உடன் இந்திய பத்திர்க்கைகள் போர் நிறுத்தம் கேட்டு சிவசங்கர் மேனர் செல்கிறார் என எழுதின ஆனால், இலங்கை அரசோ அது பற்றி அவர் பேசமாட்டார் என அறிவித்தது.

இந்திய அரசு மக்களுக்கு எந்த வித அறிவிப்பையும் கொடுக்காமல் இலங்கை செல்கிறது அல்லது பொய்யான பரப்புரைகளை தமிழக அரசை விட்டு பரப்பிவிட்டு பின்னர் அங்கு வேறு ஏதோ பேசிவிட்டு வருகிறார்கள். இந்திய காங்கிரசு அரசுக்கு தமிழ்மக்களின் வாக்கு தேவையில்லை என அது உறுதி செய்து கொள்கிறது. அல்லது தமிழக அரசியல் வாதிகளின் மோசடிப் போக்கை காங்கிரசு அரசு புரிந்து கொண்டுள்ளது.

இலங்கைக்கு வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் இராணுவ தளவாடங்களை அனுப்பி இருக்க முடியும் ஆனால் தஞ்சையிலிருந்து அனுப்பி வைப்பது தமிழர்களை கேலி செய்கிற ஏளனம் செய்கிற விசயமாகவெ இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரசின் இந்த கயவாளித்தனத்திற்கு தமிழக பிற கட்சிகளின் கயவாளித்தனமான கொள்கைகளே காரணமாகும் என்பது உறுதி. இலங்கையில் தமிழினம் அழிந்தாலும் தன் நலம் பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் தான் இந்திய தேசிய காங்கிரசின் இந்த ஏளமான நடவடிக்கைக்கு காரணமாகும்.

தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் தாம் அடுத்தமுறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்து தான் இந்த கட்சி இப்படி நடந்து கொள்வதாக தெரிகிறது.


தமிழ் மக்களே சிந்தியுங்கள் !
இந்திய அரசுதான் தமிழினத்தின் முதல் எதிரி!
இந்திய காங்கிரசு கொலைவெறி அரசை தூக்கி எறிவோம்!!!
இந்திய மேலாதிக்கத்தை எதிப்போம்!!!!