Thursday, February 26, 2009

தமிழருவி மணியனுக்கு பாராட்டு சுவரொட்டி ஒட்டிய இளைஞர் பட்டாளம்

புதுச்சேரி பேரூந்து நிலையம் அருகில் இன்று காலை சென்றிருந்தபோது “தமிழ்ருவி மணியன்” காங்கிரசு கட்சியிலிருந்து தனது பொதுச்செயலர் பதவியிலிருந்து விலகியதற்கு பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். அவர்களை பார்த்தால் அதிகம் படித்தவர்கள் போல் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிப் பிழம்பாக தமிழீழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி தங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.



இங்கே சுவரொட்டி ஒட்டினால் எந்த பயனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம், இருந்தும் நாங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். அங்கே செத்து மடியும் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற நாங்கள் ஈழம் செல்லவும் தயாராக இருக்கிறோம், அதற்கு ஏதேனும் வழி சொல்லுங்கள் என்று ஒரு இளைஞர் கேட்டார். அது ஏதோ அறியாமையால் கேட்ட கேள்விபோல் எனக்கு தோன்றவில்லை. உண்மையில் வாய்பிருந்தால் செல்வார்கள் போலிருக்கிறது, அந்த அளவுக்கு அவர்களின் குரலில் அழுத்தம் இருந்தது, ஒரு வருத்தம் இருந்தது.




நீங்கள் எந்த கட்சியை சேர்தவர்கள் என்று கேட்டபோது “ இல்லை அண்ணா நாங்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள்” எங்கள் சுவரொட்டிக்கும் கீழே பாருங்கள் அது தெரியும் என்றார் ஒரு இளைஞர்." நெல்லித்தோப்பு உருளையன் பேட்டை இளைஞர்கள் புதுவை" என்று அந்த சுவரொட்டியில் இருந்தது. அதிகம் காசு பணம் வைத்துக்கொண்டு ஏதோ பொழுது போக்குக்காக அவர்கள் இதை செய்யவில்லை, அவர்களின் அடிமனதில் படிந்திருக்கும் சோகத்தின் வெளிப்பாடாக இடையிடையே அங்கே அமர்ந்து விளையாடிக் கொண்டே சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்,

அவர்களுக்கு எமது நன்றியை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

மறக்காமல் அவர்களின் பெயரை கேட்டு வந்தேன், த.இளையராசா, செ.மணிகண்டன், இரா.செயக்குமார், ஏ.அருள், சூசை, சு. ஜான்சன், வே, ஜூலியோ, மு. எழில், கு. அருணாச்சலம், மு.இளையராசா, வினோத், சகாயம், உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றார்கள், உடன் அவர்களின் அலைபேசி எண்ணும் கொடுத்தார்கள்; முடிந்தால் நீங்களும் அவர்களை பாராடுங்கள்: எண் : 98944 08879, 94430 36606

No comments: