Saturday, May 16, 2009

தமிழகத் தேர்தலில் சீனா, இலங்கை அமோக வெற்றி

பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில்  "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.

திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.

இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.

Saturday, May 09, 2009

புதுச்சேரியில் திரையுலகினரின் பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் திரையுலகினரின் பொதுக்கூட்டம்: சீமான்

புதுச்சேரியில் தமிழ்த்திரைப்படத்துறை சார்ந்த இயக்குநர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இன்று பகல் 2 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சீமான், வ.கௌதமன், திரைப்பா ஆசிரியர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.புதுச்சேரி சிங்காரவேலர் சிலை அருகில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்தப் பேச்சைக் கேட்கின்றனர். இந்த நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பப்பபடுகிறது.

மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க அணிக்கு ஆதரவாகவும் திரப்படத்துறையினர் வாக்கு சேகரிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக சாகடிக்கப்படுவதை கண்டித்து அனைவரும் பேசுகின்றனர். பா.ம.க, அ.தி.மு.க,பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க உள்ளிட்ட அரசியில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tuesday, May 05, 2009

காங்கிரசு மத்திய அமைச்சர் சட்டை கிழிப்பு, மாநில அமைச்சர் ஒரு கி.மீ துரத்தி அடிப்பு.........

புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருக்கிறார், இவர் புதுவையில் 18 ஆண்டுகாலம் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். நீண்ட காலமாக இவர் இப்பொறுப்பில் இருந்தாலும் இவர் மீது மக்கள் மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர்.





எனினும், 18 ஆண்டுகளாக தேர்தலில் நிற்காத இவரை தேர்தலில் நிற்க காங்கிரசு உத்தரவிட்டது. இதுவரை தேர்தலை சந்திக்காத இவர் இப்போது தனது எதிரிகளை எல்லாம் விலைக்கொடுத்து வாங்கினார்.

 புதுச்சேரி மக்கள் காங்கிரசு கண்ணனுக்கு 10 கோடி, இதில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ மூவருக்கு தலா 1.25 கோடி என 3.75 கோடி. மீதியை கண்ணன் கைவசம் என புதுவையில் மக்கள் மத்தியில் பேச்சு உள்ளது. மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சிக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்), மீனவ இனத்தை சேர்ந்த பா.ம.க வேட்பாளரை எதிர்த்து அச்சாதியை சேர்ந்த கட்சி விலை போனதை அடுத்து அந்த கட்சி மீது அந்த சாதிக்காரர்கள் மிக அதிருப்தியில் உள்ளனர். விடுதலை சிறுத்தைகளுக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்) மற்றும் தேனி செயக்குமார் உள்ளிட்ட பலருக்கு கோடிகோடியாக பணம் கை மாறியுள்ள நிலையில் முன்னால் முதல்வர் ரெங்கசாமியை இவரால் ஒன்று செய்ய முடியவில்லை.

நேற்று மத்திய அமைச்சர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது முன்னால் முதல்வர் ரெங்கசாமியை சிலர் விமர்சித்ததாக தெரிகிறது அதன் அடிப்படையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனையில் மத்திய அமைச்சரின் சட்டையை பிடித்து கிழ்த்துவிட்டனர். அதே நேரத்தில் மற்றொரு மாநில அமைச்சரான நமச்சிவாயத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிவந்துள்ளனர். இதனால் வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அமைச்சர் தப்பியோடியுள்ளார்.

இதை புதுவை பத்திரிக்கையாளர்கள் விலை போனதை ஒட்டி இந்த செய்தி பத்திரிக்கைகளின் வெளிவராது என எதிர்பார்க்கபடுகிறது. எதிர்கட்சி என்பதால் தமிழோசை மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நன்றி: தமிழோசை