Tuesday, May 05, 2009

காங்கிரசு மத்திய அமைச்சர் சட்டை கிழிப்பு, மாநில அமைச்சர் ஒரு கி.மீ துரத்தி அடிப்பு.........

புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருக்கிறார், இவர் புதுவையில் 18 ஆண்டுகாலம் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். நீண்ட காலமாக இவர் இப்பொறுப்பில் இருந்தாலும் இவர் மீது மக்கள் மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர்.





எனினும், 18 ஆண்டுகளாக தேர்தலில் நிற்காத இவரை தேர்தலில் நிற்க காங்கிரசு உத்தரவிட்டது. இதுவரை தேர்தலை சந்திக்காத இவர் இப்போது தனது எதிரிகளை எல்லாம் விலைக்கொடுத்து வாங்கினார்.

 புதுச்சேரி மக்கள் காங்கிரசு கண்ணனுக்கு 10 கோடி, இதில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ மூவருக்கு தலா 1.25 கோடி என 3.75 கோடி. மீதியை கண்ணன் கைவசம் என புதுவையில் மக்கள் மத்தியில் பேச்சு உள்ளது. மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சிக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்), மீனவ இனத்தை சேர்ந்த பா.ம.க வேட்பாளரை எதிர்த்து அச்சாதியை சேர்ந்த கட்சி விலை போனதை அடுத்து அந்த கட்சி மீது அந்த சாதிக்காரர்கள் மிக அதிருப்தியில் உள்ளனர். விடுதலை சிறுத்தைகளுக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்) மற்றும் தேனி செயக்குமார் உள்ளிட்ட பலருக்கு கோடிகோடியாக பணம் கை மாறியுள்ள நிலையில் முன்னால் முதல்வர் ரெங்கசாமியை இவரால் ஒன்று செய்ய முடியவில்லை.

நேற்று மத்திய அமைச்சர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது முன்னால் முதல்வர் ரெங்கசாமியை சிலர் விமர்சித்ததாக தெரிகிறது அதன் அடிப்படையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனையில் மத்திய அமைச்சரின் சட்டையை பிடித்து கிழ்த்துவிட்டனர். அதே நேரத்தில் மற்றொரு மாநில அமைச்சரான நமச்சிவாயத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிவந்துள்ளனர். இதனால் வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அமைச்சர் தப்பியோடியுள்ளார்.

இதை புதுவை பத்திரிக்கையாளர்கள் விலை போனதை ஒட்டி இந்த செய்தி பத்திரிக்கைகளின் வெளிவராது என எதிர்பார்க்கபடுகிறது. எதிர்கட்சி என்பதால் தமிழோசை மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நன்றி: தமிழோசை


3 comments:

seeprabagaran said...

அரசியல்வாதிகளிடம் நக்கிப்பிழைக்கும் பத்திரிக்கை நாய்களையும், போலி புரட்சியாளர்களையும் அடையானம் காண்போம்!

தமிழினத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரசு-திமுக கூட்டணியை தோற்கடிப்பபோம்!

Anonymous said...

It is a very good begining,but itshould be continued till congress is removed from thamil soil.Due to fond problem I am writing the comments in Tamil

ரவி said...

:))