Wednesday, September 30, 2009

இந்திய கடற்படையை கலைத்து விடலாம்

கீழே உள்ள செய்தி தினமலர் செய்தி ஏட்டில் வெளிவந்துள்ள செய்தியாகும். இத்தனை முறை தமிழர்கள் தாக்கப்பட்டும் கேட்க இயலாத, பாதுகாக்க இயலாத கையாலாத தமிழகத்தின் அருகிலுள்ள கடலோர காவல்படை இருந்து ஒரு பயனும் இல்லை. எனவே அவற்றை கலைத்துவிடலாம். மக்களின் பணமாவது மிச்சமாகும். இலங்கை கடற்படையையே தட்டிக்கேட்காத இந்திய படை சீனாவையா கேட்கப்போகிறது.

தமிழர்களை எப்படி தாக்கினாலும் கருணாநிதி கடிதம் எழுதுவார். அந்த தமிழின துரோகி ஒரு போதும் எதுவும் செய்யப்போவதில்லை.

தமிழர்களாகிய நாம் தான் ஏதேனும் செய்தால் உண்டு.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
.......................
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்


மனுசங்கடா நாங்க மனுசங்கடா
 .........................
கீழ்வெண்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொளுத்திய போது கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்ட பாடல் இது..........



இப்போது தமிழ் மக்களாகிய நாங்கள் இந்திய கடற்படையை நோக்கி கேட்கிறோம்.

இலங்கைகாரன் தமிழர்களை அடிச்சி கொல்லுறான்!
தமிழ் நாட்டுக்காரன் தினம்தினமும் செத்து மடியிறான்!!

அவன் அடிக்கும் போது! எவன் மசுர புடுங்க போரீங்க!!


என்று தான் எழுத தோன்றுகிறது.




நாகப்பட்டினம் : இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து, தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி, மீனவர்களை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தும் தொடர் செயல், கடலோர மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதிகளில் இருந்து 19 படகுகளில் 114 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில், சேது சமுத்திர அகழாய்வுப் பணிகள் நடக்கும் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, மூன்று கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்தனர். மீனவர்களின் படகுகளில் துப்பாக்கி சகிதமாக இறங்கிய இலங்கை கடற்படையினர், படகுகளில் இருந்த திசை காட்டும் கருவி, மொபைல்களை பறித்துக் கொண்டு, இறால், மீன்கள், மீன்பிடி சாதனங்களை தங்களின் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு, மீனவர்களின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினர். படகில் இருந்த ஐஸ் கட்டிகளை கடலில் வீசி, நிர்வாண கோலத்தில் நின்ற மீனவர்களை, ரப்பர் தடியால் கொடூரமாகக் தாக்கி அனுப்பினர். ஐஸ் கட்டிகள் வைத்திருந்த சாக்குகளால் உடலை மறைத்துக் கொண்டு நேற்று காலை மீனவர்கள் நாகைக்கு வந்தனர்.


காரைக்கால்: காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 150 பேர், கடந்த 25ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். கோடியக்கரை அருகில் சென்ற போது திடீரென்று வந்த இலங்கை கடற்படையினர், ஐந்து விசைப் படகுகளை துப்பாக்கி முனையில் மடக்கி, படகில் அத்து மீறி நுழைந்து வலைகளை அறுத்து கடலில் வீசினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து நேற்று ஒரு நாள், காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த மூன்று மாதங்களாக தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், படகுகளை சேதப்படுத்துவது தொடர்கதையான பின்னரும் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காப்பது, மத்திய அரசின் திரைமறைவு ஆதரவால் தான் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடர்வதாக, மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.