Thursday, December 20, 2012

விண்டோசு 8 இல் தமிழ் வசதி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோசு 8 இல் தமிழுக்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. நன்கு மேம்படுத்தப் பட்டவகையில் வெளிவந்துள்ளது.
தொடுதிரை வசதி அளிக்கப்படுள்ளது.  ஆனால் அதற்கென தனி கணினித்திரை தேவையாக உள்ளதால் அதனை சோதிக்க இயலவில்லை.

"எக்சுபி" யில் லதா என்ற எழுத்துரு சேர்க்கப்பட்டது. இதுவே, பலரால் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், விண்டோசு 7 இல் விசயா என்ற எழுத்துருவும், விண்டோசு 8 செயலிக்கு  நிர்மலா என்ற புதிய எழுத்துருவும் சேர்க்கப்பட்டுள்ளது.


இதிலுள்ள இணைப்புகள் பல இன்னும் தமிழில் தெரியவில்லை. இவை தமிழ் படுத்தப்படும் வசதி இருக்குமா என்பது தெரியவில்லை.

விண்டோசு 8இல் தொடக்கம் Start மெனு என்று இல்லை மாறாக கீழே உள்ள படத்தில் உள்ளது போல இணைய உலவி முதலில் உள்ளது. அடுத்து கணினியின் உள் செல்ல ஒரு கோப்பு உள்ளது. அதன் மூலம் தான் நாம் கணினியின் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. சாதாரணமாக விண்டோசு 7-வரை உபயோகித்தவர்கள் கூட இதனை பயன்படுத்துவது பற்றி என்று நன்றாக படித்தபின் இயக்கினால் சற்று எளிதாக இருக்கும். நுழைவது மற்றும் வெளிவருவது பற்றிய பயிற்சி இருக்கவேண்டும்.

தொடக்கம் பக்கம் வரவேண்டுமெனில் வலது பக்க மேல் பக்கமாக மவுசை வைத்தால் தொடக்கம், உள்ளிட்ட சில கருவிகள் தெரிகிறது. மீண்டும் எடுத்துவிட்டால மறைநிலைக்கு சென்று விடுகிறது.

விண்டோசு8 இல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நிர்மலா எழுத்துறுவுடன் விண்டோசு7 இல் பயன்படும் விசயா எழுத்தின் தோற்றத்தின் படம் கீழே இணைத்துள்ளேன்.


Wednesday, September 05, 2012

வலையோசையில் என் வலைப்பூ

வலையோசையில் எனது வலைப்பூ தேர்தெடுக்கப்பட்டுக் கடந்த மேமாதம் வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியை நான் வெளியிடவில்லை. வலையோசையைப் பார்த்துவிட்டு எனது வலைப்பூவை பார்த்தால் அதே செய்தியை பார்க்க நேரிடும் என்பதால் அப்போது நான் வெளியிடுவதைத் தவிர்த்தேன். கடந்த மேமாதம் 23-05-2012 அன்று வெளிவந்த இந்தச் செய்தி மிகுந்த காலதாமதாமாக இப்போது வெளியிட்டுள்ளேன். 


முதல் பக்கம்

பக்கம் இரண்டு

Tuesday, September 04, 2012

போட்டோசாப் CS6 மென்பொருளிலும் தமிழ் ஒருங்கு குறி எழுத்துருக்களை பயன்படுத்தும் வசதி

போட்டோசாப் CS6 இல் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒருங்கு குறி எழுத்துருக்கப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்டிசைன் CS6 மற்றும் இல்லுசுரேட்டர் CS6 ஆகியவற்றுக்கும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அளிக்கப்படாத இந்த வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
 

படம்-1
நான் போட்டோசாப் CS6 (PHOTOSHOP CS6) ஐ பதிவிறக்கம் செய்தபின்பு அதில் தமிழில் தட்டச்சு செய்த போது அதற்கான ஆதரவு இல்லை. எனவே, தமிழ் பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை என்று கருதிக் கொண்டிருந்தேன்.

ஆனால், தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டதைப் பின்னர் நான் அறிந்தேன்.

போட்டோசாப் மென்பொருளில் தமிழை எழுத்துக்கள் சரியாகத் தெரிய வேண்டுமானால் அதன் அமைப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, தமிழ் எழுத்துக்கள் அதன் சரியான வடிவில் தெரிகிறது. இல்லையெனில் கொக்கி கொக்கி வடிவத்தில் தான் தெரிகிறது

அமைப்பை எப்படி மாற்றுவது
போட்டோசாப்பில் மொழிக்கான அதன் அமைப்பை மாற்ற வேண்டுமானால் அதன் Edit பகுதிக்கு சென்று Preferences பகுதியை தேர்வு செய்யவேண்டும் பின்னர் அங்குள்ள Type என்பதைக் கிளிக் செய்யவும். பார்க்க படம்-2
படம்-2


பின்னர் Type என்பதைக் கிளிக் செய்த பின் Middle Eastern என்பதைத் தேர்வு செய்து போட்டோசாப் மென்பொருளை மீண்டும் தொடக்கவும். படம்-3 அவ்வாறு செய்தால் தமிழ் மொழியை கொக்கிகள் இல்லாமல் சரியான வடிவத்தில் தெரிகிறது. இதில் வழக்கம் போல ஏகலப்பை மென்பொருளைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உள்ளீடு செய்ய இயலுகிறது.

படம் 3
இந்தத் தமிழ் ஒருங்கு குறி பயன்படுத்தும் வசதி பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்பதோடு நமது மொழிக்கு மொன்பொருள் தாயாரிப்பாளர்கள் தொடர்ந்து புறக்கணித்த நிலையில் தற்போது ஆதரவு வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிதாகும்.

அடோப் இன்டிசைன் CS6 இல் தமிழ் ஒருங்குறி பயன்படுத்தும் வசதி

அடோப் இன்டிசைனில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  கோரல்டிரா X6 இல் தமிழ் ஒருங்கு குறி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்திய மொழிகளுக்கான வசதிகளை அடோப் நிறுவனம் அளித்ததாகச் செய்தியை தமிழ் குழுக்களின் வந்திருந்தது.

இருப்பினும் பலர் அது பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, அது தொடர்பாக அனைவரும் அறியும் வகையில் இந்தப் பதிவை எழுத வேண்டும் என்றுவிரும்பினேன்.
இன்டிசைனில் உள்ள Windows ஐ கிளிக் செய்து கடைசியில் உள்ள Utilities ஐ கிளிக் செய்து பின்னர் Script ஐ தேர்வு செய்யவும். அதன் பின்னர் Script இல் உள்ள Indic preferences இருமுறை (Double click). கிளிக் செய்யவும்
நீங்கள் அவ்வாறு செய்தவுடன் தமிழ் மொழிக்கான வசதியை நீங்கள் பெறமுடியும். இவ்வாறு செய்த பின் நீங்கள் வழக்கம் போல ஏகலப்பை மென் பொருள் மூலம் இலகுவாக வழக்கம் போல் மற்றவைகளில் தட்டச்சுச் செய்வது போல தட்டச்சுச் செய்ய முடிகிறது.
கீழே உள்ள படம் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது விளக்கப் பட்டுள்ளது. 

கீழே உள்ளபடம் எந்தெந்த மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகப் படம் இணைக்கப்பட்டுள்ளது.

 எனவே நூல் வெளியீட்டுக்கும் பக்க வடிவமைப்பில் தமிழுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, May 19, 2012

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள்

சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன்  ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று.


இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து பல பத்திரிக்கைகளை படிப்பவர். சற்று விவரமானவர் கூட. இருப்பினும் இது போன்றவர்களுக்குக் கூட பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற கொஞ்சமேனும் சந்தேகம் எழுவதற்கான காரணம் ஏற்கனவே, அவர் இரண்டு முறை கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அந்த செய்தி உண்மையல்லாமல் போனதும் ஒரு காரணமாகும். உண்மையில் அவர் கொல்லப் படவேண்டும் என்று விரும்பிய இந்திய அமைதிப் படை அவர் கொல்லப் பட்டதாக ஒரு முறை தெரிவித்தது.


நக்கீரன் போன்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்தி போன்றவை இந்தகைய கேள்வி எழுவதற்கான ஒரு காரணமாகும். மேலும், இது போன்ற செய்திகளை ஈழ இணைய தளங்கள் தொடர்ந்து வெளியிடு வதும் மற்றொரு காரணமாகும்.


ஈழப்பிரச்சனை உச்சநிலையில் இருந்த  போதும் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், கொல்லப் படவில்லை என பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் இணைய பக்கங்களில் தீவிர விவாதம் நடந்து வந்த காலத்தில் அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் இருந்தது.


மே 23 2009 நேரத்தில் கொல்லப் பட்டதாக சிலப் புகைப் படங்கள் வெளியாயின. அந்தப் புகைப் படத்துடன் பிரபாகரன்  அவர்களின் பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு நான் உறுதி செய்து கொண்டிருந்தேன். நண்பரின் சமீபத்தையை கேள்வியால் அந்த ஒப்பீடு படத்தை வெளியிட முடிவு செய்தேன்.

இந்தப் படத்தில் குறிப்பாக  மூக்கு, காதுப் பகுதி, காதுப் பகுதியின் கீழ் உள்ள மடிப்புகள் மற்றும் அவரது உடலில் உள்ள கரும் புள்ளிகள் ஆகியவற்றை ஒப்பிட்டே பார்த்தால் ஒத்திருப்பது தெரியவந்தது.

மே 18 க்கு பின் ஒருவாரகாலம் இதுபற்றி மிகத் தீவிரமான செய்திகள் இணையத்தில் உலவி வந்தன. அதன் பின்பு இணையத்தில் தீவிரமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு அனுப்பினேன். அதன் பின் இந்த கருத்தை அவர்கள் வலியுறுத்தி எழுதாமல் விட்டு விட்டனர்.

எனினும், இன்றுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த புகைப்படம் சிலருக்கும் முடிவெடுக்க சிலநேரம் உதவலாம். என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக பிரபாகரனின் முழுப்படம் மற்றும் அதன் பின் அந்த படத்துடன் ஒப்பிட்டு மற்றொரு படமும் இணைக்கப் பட்டுள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், இந்த படத்தை பார்ப்பார்களேயானால் இதன் மூலம் ஒரு முடிவை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.

Monday, May 14, 2012

கோரல்டிரா X6 இல் தமிழ் ஒருங்கு குறி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது

அடோப் மற்றும் கோரால் டிரா மென்பொருட்களில் தமிழ் ஒருங்குறி ஆதரவு வழங்கப்படாமல் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நூல் வெளியிடு வரைவு பணி ஆகியவற்றுக்கு இந்தியா போன்ற இடங்களில் போட்டோசாப், மற்றும் கோரல் டிரா மென்பொருட்கள் அதிக பயன்பாட்டில் உள்ள மென்பொருட்களாகும். இது போன்ற மென்பொருளில் தமிழ் ஆதரவு வழங்கப்படாமல் இருந்தது செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணிக்கப்படுவதாக பலர் கருதினர்.

ஆனால், CorelDRAW X5 வரை தமிழ் ஆதரவு வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த CorelDRAW X6 இல் தமிழ் ஒருங்கு குறியில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஏகலப்பை மென்பொருளின் மூலம் தட்டச்சு செய்ய இயலுகிறது என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும்.
 
கீழே கோரல் 16 மற்றும் 15 இல் தமிழ் ஒருங்கு குறியில் தட்டச்சு செய்தால் எப்படி வருகிறது என்பதற்கான மாதிரிப்படம் இணைக்கப் பட்டுள்ளது.

கோரல் X6

CorelDraw X5
அடோப் நிறுவனத்திலும் CS5 வரிசையில் பிளாசு, டிரீம்வியூவர் இரண்டில் மட்டுமே தமிழ் ஒருங்கு குறி ஆதரவு உள்ளது. போட்டோசாப் உள்ளிட்டவைகளில் ஆதரவு அளிக்கப்படவில்லை. ஆனால் புதிதாக வெளியிட்டுள்ள CS6 வரிசையில் தமிழ் ஒருங்கு குறிக்கான ஆதரவு  வழங்கப் பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

 

Friday, April 20, 2012

கூடங்குளம்- கூகுல் நிறுவனத்தின் நகைச்சுவை

 கூகுல் நிறுவனத்தின் தமிழ்ச் செய்திகளின் திரட்டி பகுதியை 20-04-2012 பகல் 12.30 மணியளவில் பார்த்தபோது கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதை பொழுது போக்கு என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளது.

கூகுல் செய்திதிரட்டியின் அடிப்பகுதியில் 

இந்தப் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தேர்வும், இட அமைப்பும் தானாகவே ஒரு கணினி நிரலால் நிர்ணயிக்கப்பட்டது.
காண்பிக்கப்படும் நேரம் அல்லது தேதியானது (செய்திகள் அம்சத்தின் டைம்லைனில் உள்ளவற்றையும் சேர்த்து) கட்டுரைகள் Google செய்திகளில் சேர்க்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட நேரம் அல்லது தேதியைக் காண்பிக்கிறது.
 என்றும் அதன் கீழே குறிப்பிடப்பிட்டிருந்தாலும் இவர்கள் 22 ஆண்டுகளாகக் கட்டி கொண்டிருப்பவர்கள் இரண்டு மாதத்தில் தொடங்கும் என்று கூறியே 4 மாதங்களுக்கும் மேல் ஆனதால் இப்படித் தானியங்கியாகவே இதனைப் பொழுது போக்கு என்று எடுத்துக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.
 
பொழுதுபோக்கு »

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 மாதத்தில் உற்பத்தி ... தினத் தந்தி - ‎8 மணிநேரம் முன்பு‎ `கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜூன் மாதம் கடைசியில் மின்சார உற்பத்தி தொடங்கும்," என்று அணுமின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறினார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் ...