Wednesday, September 05, 2012

வலையோசையில் என் வலைப்பூ

வலையோசையில் எனது வலைப்பூ தேர்தெடுக்கப்பட்டுக் கடந்த மேமாதம் வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியை நான் வெளியிடவில்லை. வலையோசையைப் பார்த்துவிட்டு எனது வலைப்பூவை பார்த்தால் அதே செய்தியை பார்க்க நேரிடும் என்பதால் அப்போது நான் வெளியிடுவதைத் தவிர்த்தேன். கடந்த மேமாதம் 23-05-2012 அன்று வெளிவந்த இந்தச் செய்தி மிகுந்த காலதாமதாமாக இப்போது வெளியிட்டுள்ளேன். 


முதல் பக்கம்

பக்கம் இரண்டு

Tuesday, September 04, 2012

போட்டோசாப் CS6 மென்பொருளிலும் தமிழ் ஒருங்கு குறி எழுத்துருக்களை பயன்படுத்தும் வசதி

போட்டோசாப் CS6 இல் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒருங்கு குறி எழுத்துருக்கப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்டிசைன் CS6 மற்றும் இல்லுசுரேட்டர் CS6 ஆகியவற்றுக்கும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அளிக்கப்படாத இந்த வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
 

படம்-1
நான் போட்டோசாப் CS6 (PHOTOSHOP CS6) ஐ பதிவிறக்கம் செய்தபின்பு அதில் தமிழில் தட்டச்சு செய்த போது அதற்கான ஆதரவு இல்லை. எனவே, தமிழ் பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை என்று கருதிக் கொண்டிருந்தேன்.

ஆனால், தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டதைப் பின்னர் நான் அறிந்தேன்.

போட்டோசாப் மென்பொருளில் தமிழை எழுத்துக்கள் சரியாகத் தெரிய வேண்டுமானால் அதன் அமைப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, தமிழ் எழுத்துக்கள் அதன் சரியான வடிவில் தெரிகிறது. இல்லையெனில் கொக்கி கொக்கி வடிவத்தில் தான் தெரிகிறது

அமைப்பை எப்படி மாற்றுவது
போட்டோசாப்பில் மொழிக்கான அதன் அமைப்பை மாற்ற வேண்டுமானால் அதன் Edit பகுதிக்கு சென்று Preferences பகுதியை தேர்வு செய்யவேண்டும் பின்னர் அங்குள்ள Type என்பதைக் கிளிக் செய்யவும். பார்க்க படம்-2
படம்-2


பின்னர் Type என்பதைக் கிளிக் செய்த பின் Middle Eastern என்பதைத் தேர்வு செய்து போட்டோசாப் மென்பொருளை மீண்டும் தொடக்கவும். படம்-3 அவ்வாறு செய்தால் தமிழ் மொழியை கொக்கிகள் இல்லாமல் சரியான வடிவத்தில் தெரிகிறது. இதில் வழக்கம் போல ஏகலப்பை மென்பொருளைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உள்ளீடு செய்ய இயலுகிறது.

படம் 3
இந்தத் தமிழ் ஒருங்கு குறி பயன்படுத்தும் வசதி பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்பதோடு நமது மொழிக்கு மொன்பொருள் தாயாரிப்பாளர்கள் தொடர்ந்து புறக்கணித்த நிலையில் தற்போது ஆதரவு வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிதாகும்.

அடோப் இன்டிசைன் CS6 இல் தமிழ் ஒருங்குறி பயன்படுத்தும் வசதி

அடோப் இன்டிசைனில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  கோரல்டிரா X6 இல் தமிழ் ஒருங்கு குறி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்திய மொழிகளுக்கான வசதிகளை அடோப் நிறுவனம் அளித்ததாகச் செய்தியை தமிழ் குழுக்களின் வந்திருந்தது.

இருப்பினும் பலர் அது பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, அது தொடர்பாக அனைவரும் அறியும் வகையில் இந்தப் பதிவை எழுத வேண்டும் என்றுவிரும்பினேன்.
இன்டிசைனில் உள்ள Windows ஐ கிளிக் செய்து கடைசியில் உள்ள Utilities ஐ கிளிக் செய்து பின்னர் Script ஐ தேர்வு செய்யவும். அதன் பின்னர் Script இல் உள்ள Indic preferences இருமுறை (Double click). கிளிக் செய்யவும்
நீங்கள் அவ்வாறு செய்தவுடன் தமிழ் மொழிக்கான வசதியை நீங்கள் பெறமுடியும். இவ்வாறு செய்த பின் நீங்கள் வழக்கம் போல ஏகலப்பை மென் பொருள் மூலம் இலகுவாக வழக்கம் போல் மற்றவைகளில் தட்டச்சுச் செய்வது போல தட்டச்சுச் செய்ய முடிகிறது.
கீழே உள்ள படம் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது விளக்கப் பட்டுள்ளது. 

கீழே உள்ளபடம் எந்தெந்த மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகப் படம் இணைக்கப்பட்டுள்ளது.

 எனவே நூல் வெளியீட்டுக்கும் பக்க வடிவமைப்பில் தமிழுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.