Tuesday, September 04, 2012

அடோப் இன்டிசைன் CS6 இல் தமிழ் ஒருங்குறி பயன்படுத்தும் வசதி

அடோப் இன்டிசைனில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  கோரல்டிரா X6 இல் தமிழ் ஒருங்கு குறி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்திய மொழிகளுக்கான வசதிகளை அடோப் நிறுவனம் அளித்ததாகச் செய்தியை தமிழ் குழுக்களின் வந்திருந்தது.

இருப்பினும் பலர் அது பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, அது தொடர்பாக அனைவரும் அறியும் வகையில் இந்தப் பதிவை எழுத வேண்டும் என்றுவிரும்பினேன்.
இன்டிசைனில் உள்ள Windows ஐ கிளிக் செய்து கடைசியில் உள்ள Utilities ஐ கிளிக் செய்து பின்னர் Script ஐ தேர்வு செய்யவும். அதன் பின்னர் Script இல் உள்ள Indic preferences இருமுறை (Double click). கிளிக் செய்யவும்
நீங்கள் அவ்வாறு செய்தவுடன் தமிழ் மொழிக்கான வசதியை நீங்கள் பெறமுடியும். இவ்வாறு செய்த பின் நீங்கள் வழக்கம் போல ஏகலப்பை மென் பொருள் மூலம் இலகுவாக வழக்கம் போல் மற்றவைகளில் தட்டச்சுச் செய்வது போல தட்டச்சுச் செய்ய முடிகிறது.
கீழே உள்ள படம் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது விளக்கப் பட்டுள்ளது. 

கீழே உள்ளபடம் எந்தெந்த மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகப் படம் இணைக்கப்பட்டுள்ளது.

 எனவே நூல் வெளியீட்டுக்கும் பக்க வடிவமைப்பில் தமிழுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4 comments:

வெற்றி said...

நல்ல தகவலுக்கு நன்றி சுகுமாரன்.
அதே நேரத்தில் தமிழில் உள்ள லி என்ற எழுத்து மட்டும் மிஸ்ஸிங் ஆகிறதே இதை சரிப்படுத்த ஏதாவது வசதியிருக்கிறதா என்பதை சொல்லுங்கள்.
நன்றி.
-சரவணப்பெருமாள்

வெற்றி said...

நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே...
அதே நேரத்தில் தமிழில் உள்ள லி என்ற
எழுத்து மட்டும் மிஸ் ஆகிறதே இதை சரிப்படுத்த வசதியிருப்பின் சொல்லுங்கள்.
நன்றி.

Anonymous said...

பேஜ் மேக்கரில் டெக்ஸ்ட் அலைன் செய்யும்போது சரியாக இருக்கும் தமிழ் எழுத்துகள் இன்டிசைனில் அலைன் செய்யும்போது ஒரு எழுதது இரண்டு எழுத்து மட்டூம் உடைவது ஏன்?

இரா.சுகுமாரன் said...

Blogger வெற்றி said...

நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே...
அதே நேரத்தில் தமிழில் உள்ள லி என்ற எழுத்து மட்டும் மிஸ் ஆகிறதே இதை சரிப்படுத்த வசதியிருப்பின் சொல்லுங்கள்.

//நன்றி.லி என்ற எழுத்தில் எவ்வித பிரச்சனையும் எழவில்லையே//