Tuesday, March 28, 2006

மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி ?

நரசிம்மராவ், சந்திராசாமி, சுப்ரமணியசாமி, துக்ளக் சோ, சந்திரசேகர், மன்மோகன்சிங், ஆகியோரை அமெரிக்க உளவாளி என்பார்கள்.

இதில் துக்ளக் சோ, தவிர மற்றவர்களுக்கு இராசீவ் கொலையில் நேரடித்தொடர்பு இருப்பதாகவே அனைவரும் பேசினர்.

எந்த விருந்தினரையும் வரவேற்க பிரதமர் விமான நிலையத்திற்குச் செல்லும் வழக்கம் கிடையாது. ஆனால் அதையெல்லாம் மீறி, புஷ்ஷையும், லாரா புஷ்ஷையும் வரவேற்க விமான நிலையத்திகே வந்து ஆச்சரியப் படுத்தினார் பிரதமர் மன்மோகன்“ (இந்தியா டுடே-தமிழ், பக்கம்-16, மார்ச் 15, 2006).

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. எஜமான விசுவாசம், இந்த எஜமான விசுவாசத்திற்கும், இராசீவ் கொலைக்கும் இவர்களுக்கு கிடைத்த பரிசும் தான் பிரதமர் பதவி, அதிகாரம் எல்லாம்.

இராசீவ் கொலையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ-விற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. கீழ்க்கண்ட செய்திகள் அவற்றை உறுதிப் படுத்துகிறது.

அமெரிக்க சேவகர் சந்திராசாமியின் அடியாளான பப்லு ஸ்ரீவத் சவா என்பவர் ஜெயின் கமிசன் முன் சாட்சியமளித்த போது தில்லி சந்திராசாமியின் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியை அப்படியே விவரித்தார்.

ராசீவ் காந்தி கொலைச் செய்தி கேட்டதும், சந்திராசாமி “மகிழ்ச்சியில் கூத்தாடினார்“ என்றார் ராவைப் பிரதமராக்கப் போகிறேன் என்று கூறிய சந்திராசாமி, மோதிலால் நேரு சாலையில் இருந்த நரசிம்மராவுக்கு தொலைபேசி செய்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார் என்று பப்லு சாட்சியமளித்துள்ளார். (இந்தியா டுடே- 21 பிப் 1997).

இராசீவ் அந்த தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு அதிகமிருந்தது. ஆனால், இராசீவின் பேச்சுக்கள் அவர் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது அவரது அப்போதைய பேச்சுக்களில் தெளிவாக தெரிந்தன. எனவே அமெரிக்கா அவரை கொலை செய்ய முடிவு செய்தது என்பதற்கான சூழ்நிலைகள் இங்கே விளக்கப்படுகிறது.

1. தென்னாசியப்பகுதியில் இந்தியா ஆற்ற வேண்டிய பங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்தியத் தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளுக்கு இலக்குக்கு உள்ளாககூடும். அந்த அந்நிய சக்தி நிச்சயம் சோவியத் நாடு அல்ல என்றார். அமெரிக்காவா? என செய்தியாளர்கள் கேட்டமைக்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார் இராசீவ் காந்தி.(தி. இந்து- 24-05-1991).

2. பாகிஸ்தான் அதிபர் ஜியா- விமானவிபத்தில் இறந்தார். இதுபற்றி இராசீவ் கூறுகையில் , இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை. நானும், ஜியாவும் காசுமீர் பிரச்சனையில் ஒரு முடிவை எட்டும் நிலையில் இருந்தோம். அதுபிடிக்காமல் வெளிநாட்டு சக்திகள் இப்படி செயல்படுகின்றன. (பிரண்ட்லைன் 08-06-1991).

3. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் ராசீவை பிரதிநிதிகள் முலம் சந்தித்து இக்கொலை நடப்பது தொடர்பாக பிப்ரவரி மாதமே எச்சரித்துள்ளார். ஒரு அரசியல் கொலைக்காக சி.ஐ.ஏ, மொசத் (இஸ்ரேல் உளவு நிறுவனம் ) இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக பாலஸ்தீன விடுதலை இயக்க புலனாய்வுப்பிரிவு உயர் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்ற விவரத்தை அராபத் தெரிவித்தார். (புரோப் பத்திரிக்கை 1991- ஜுலை).

4. ஆர்.டி.எக்ஸ் வெடி சாதனம் சர்வதேச தீவிரவாதக் குழுவால் மட்டுமே உருவாக்க முடியும். இந்த குண்டு வகை அமெரிக்க குண்டு வகையை சார்ந்தது என தடைய அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் பி. சந்திரசேகரன் கூறினார். (தினமணி 25-05-1991).

5. சந்திராசாமிக்கு இராசீவ் கொலையில் தொடர்பு இருந்தது என அரியானா மாநில பா.ஜ.க அரசியல்வாதி ரமேஷ்தலால் கமிசன் முன் சாட்சியமளித் துள்ளார். ராசீவ் கொலையில் எனக்குள்ள தொடர்பை வெளியே சொல்லக்கூடாது என என்னை சந்திராசாமி மிரட்டினார். (தி. இந்து- 5-12-95).

6. தேர்தல் வந்ததும், நரசிம்மராவ் பிரதமராவதற்கு, தனக்கு வேண்டிய அரசியல் வாதிகள் வியாபார நண்பர்கள் மூலம் சந்திராசாமி செயல்பட்டார். ( இல்லஸ்டிரேட்டட் வீக்லி 21-06-91).

7. பிரதமாரான நரசிம்மராவ் இராசீவ் கொலையில் குற்றவாளிகள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

8. பிரதமர் அலுவலகத்திலிருந்து பல கோப்புகள் அதற்காக மறைக்கப்பட்டன அவற்றில் சில.
1. WR/JSS/90Vol.III (இராசீவ் பாதுகாப்பான கோப்பு)
2. 12014/5/911- A.S/DIII(வர்மா கமிசனின் அதிகாரம் தொடர்பானது)
3. இராசீவை கொலை எங்கு கொலை செய்யலாம் என்ற பேச்சை உளவுத்துறை இடைமறித்து கேட்ட விவரம் அடங்கிய கோப்பு. உள்ளிட்ட பல கோப்புகள் காணாமல் போயின.

இராசீவை கொலை செய்ய அன்னிய சக்திகள் தொடர்ந்து முயற்சித்தன. இராசீவ் கொலையை அன்னிய சக்திகளுடன் சந்திராசாமி தான் வகுத்தார். (கே.கே. திவாரி முன்னால் மத்திய அமைச்சர்-அவுட் லுக் 1-12-97).

ஆனால் நரசிம்மராவ், சந்திராசாமி, மற்றும் சி.ஐ.ஏ விற்கு தொடர்பே இல்லாதது போல வழக்கை முடித்து இருக்கிறார்கள். ஏன் பல சாட்சியங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏன் என்பதெல்லாம் நரசிம்மராவுக்கும் அன்றைய சி.பி.ஐ.யின் கார்திகேயனுக்குமே விளங்கும்.

வழக்கு முடிந்த போது இராசீவ் கொலைக்கு பழிவாங்கி விட்டோம் என்றார் கார்த்திகேயன். கார்த்திகேயன் அவர்களின் கருத்துப்படி நீதி மன்றம் நீதி வழங்கவில்லை, பழி வாங்கியுள்ளது. என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சந்திராசாமிக்கும், நரசிம்மராவுக்கும் நேரடியாக கொலையில் தொடர்பு இருந்தது. நரசிம்மராவ் அவரின் சீடரான மன்மோகன் சிங்கை அன்றைய நிதியமைச்சராக்கினார். அமெரிக்க விசுவாசத்திற்காக மன்மோகன் அன்றே அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை குறைத்தார். இப்படித் தொடர்ந்த இவரின் அமெரிக்க சேவை இன்றும் தொடர்கிறது.

நரசிம்மராவின் அமெரிக்க சேவையை (உளவு வேலையை) இன்று மன்மோகன் தொடர்கிறார்.

இதுதான் மன்மோகன் தேசப்பற்று...??

(உதவிய நூல் :ராசீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்
க. இராசேந்திரன்)

16 comments:

Muthu said...

சுப்ரமணிய சுவாமி பிரஸ் மீட் பார்க்கிற மாதிரி இருக்கு....

இரா.சுகுமாரன் said...

நன்றி முத்து ( தமிழினி)
சுப்ரமணிய சுவாமி மாதிரி நான் எதும் உளரல.

Muthu said...

இல்லைங்க..ஆனா நீங்கள் சொன்ன மேட்டர் எல்லாம் பகீர் ரகம்..எனக்கு என்னமோ
மன்மோகன்சிங்கை எல்லாம் குற்றம் சாட்டறது ஆச்சரியமா இருக்கு..

Raquel said...

Just dropping by to say hello.

Amar said...

//சுப்ரமணிய சுவாமி பிரஸ் மீட் பார்க்கிற மாதிரி இருக்கு.... //

இதுக்கு அதுவே தெவல!

//சுப்ரமணிய சுவாமி மாதிரி நான் எதும் உளரல. //

நிச்சயமாக!

கருப்பு said...

பாரதீய ஜனதா கட்சிலேருந்து அறிக்கை வந்தது போல இருக்குதே... நான் இதில் சொல்றதுக்கு என்ன இருக்குது? முத்து சொன்னமாதிரிதான் நானும். சுப்ரமணியசமி சொல்றதும் புல்லா தண்ணியடிச்சுட்டு உளறுபவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளும் ஒன்றுதான்.

இரா.சுகுமாரன் said...

“முத்து தமிழினி“க்கு

//இல்லைங்க..ஆனா நீங்கள் சொன்ன மேட்டர் எல்லாம் பகீர் ரகம்..எனக்கு என்னமோ மன்மோகன்சிங்கை எல்லாம் குற்றம் சாட்டறது ஆச்சரியமா இருக்கு..//

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். எல்லா செய்திகளையும் விளக்கமாக எழுத இயலவில்லை. அமெரிக்கா உலகம் முழுதும் தமது கைக்கூலி அரசையே நிறுவிவருகிறது. இந்தியாவும் அப்படித்தான் இப்போது மாறியுள்ளது.

Anonymous said...

//எந்த விருந்தினரையும் வரவேற்க பிரதமர் விமான நிலையத்திற்குச் செல்லும் வழக்கம் கிடையாது. ஆனால் அதையெல்லாம் மீறி, புஷ்ஷையும், லாரா புஷ்ஷையும் வரவேற்க விமான நிலையத்திகே வந்து ஆச்சரியப் படுத்தினார் பிரதமர் மன்மோகன்“ (இந்தியா டுடே-தமிழ், பக்கம்-16, மார்ச் 15, 2006).//

appadiya saudi arabia king abdullaha varuhai thantha poluthu mr.singh aiport ponnarunu paper padichen

இரா.சுகுமாரன் said...

வருகைதந்த
1.முத்து தமிழினி,

2.பாரதி,
//ராஜீவ் கொலைச் சதியை விசாரிக்க இறுதியாக "multi discipilanry monitoring authority" அமைக்கப் பட்டதாக ஜாபகம். அதன் கதி என்னவாயிற்றோ? தெரியவில்லை.//

கதி அவ்வளவுதான் உளவு நிறுவனம் மக்களைத்திசை திருப்ப அந்த விசயத்தை கையில் எடுக்கும் வரை அது அப்படியே இருக்கும்.

3.விடாதுகருப்பு
பாரதீய ஜனதா கட்சிலேருந்து அறிக்கை வந்தது போல இருக்குதே...

//சந்திராசாமிக்கு இராசீவ் கொலையில் தொடர்பு இருந்தது என அரியானா மாநில பா.ஜ.க அரசியல்வாதி ரமேஷ்தலால் கமிசன் முன் சாட்சியமளித் துள்ளார்//.

பாரதீய சனதாவிலுள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளது .எனவே பாரதீய சனதா அதைப்பற்றி பேசது என நினைக்கிறேன்.

4. Raquel அவர்களுக்கும்

5.என்னைத் திட்டிய Samudra

6.Anonymous அவர்களுக்கு,

இந்திய மறபுப்படி அப்படி வரவேற்பதில்லை என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது சவூதி அரபிய மறபுகள் பற்றி பேசவில்லை.

வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...

//அமெரிக்கா உலகம் முழுதும் தமது கைக்கூலி அரசையே நிறுவிவருகிறது. //

100 க்கு 100 சரி.

//இந்தியாவும் அப்படித்தான் இப்போது மாறியுள்ளது.// என்பதை விட (வரும் தலைவர்களால்) மாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது/அமெரிக்காவின் மறைமுக அஜண்டாவிற்கு தன்னை அறியாமலேயே பலியாகிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

Anonymous said...

//மன்மோகன் அன்றே அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை குறைத்தார்.//

Upto my knowledge, its not possible to reduce the rupee value by the finance minister alone.

It involves in lot of factors (includes Gold reserve, inflation etc)

Anonymous said...

ராஜீவ் கொலையைச் செய்தது புலிகள் தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்களை வேறு யாரும் இயக்கியதாகவும் நினைக்கத் தோன்றவில்லை. அது அவர்களே திட்டமிட்டு நடத்திமுடித்த செயல்.
ஆனால் இன்னொரு பக்கத்தில் இன்னொரு கூட்டமும் அதைச்செய்ய முயன்றுகொண்டிருந்தது என்பது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விவாதமே. அதற்குப் போதிய ஆதாரங்களுள்ளதாகவே நினைக்கிறேன்.


கமலின் ஹேராம் போல சுவாரசியமான, அருமையான படமொன்றை அதே அலைவரிசையில் தாயாரிக்கலாம்.
ஆனால் ஹேராமில் கொலைசெய்யத் திட்டமிட்டவன் மனம்மாறுகிறான், வேறுபக்கத்தால் அது நடத்தப்பட்டுவிடுகிறது.
இங்கு புலிகள் முந்திக்கொண்டது மட்டுமே. யாரும் திட்டத்தை மாற்றவில்லை.

Anonymous said...

This is my assumption only. High level assasination, they don't do directly or thru agent. They look reason. So, to kill Rajiv, they found reason from Srilankan Tamil because of Peace force killed, raped lot of Tamils. They got the job done thru LTTE.

Here, LTTE might got some Billions from CIA or MOSAT directly or indirectly and also some Guarantee from CIA for future Tamil Ealam.

Athi said...

Sutha penaathal endru thaan ippozhuthu ennaal solla mudigirathu, neengal kurippittulla seithigalukku aadharamaaga ethuvum links kodukkaathathaal!!

Athu pogattum... Neengal ellaarum US'in natpai yen ippadi saadugireergal endru thaan puriya villai. UK, Israel kooda thaan US'in friends... Enna nadanthu vittathu avargalukku?? Asia'vil China'vin aadhikkathai ozhikka US'kku oru country vendum... Athu yen naamaaga irukka koodaathu?? Yen neengal ellorum US'in darker side'ai paarkkireergal endru thaan puriya villai!!

இரா.சுகுமாரன் said...

//Sutha penaathal endru thaan ippozhuthu ennaal solla mudigirathu,neengal kurippittulla seithigalukku aadharamaaga ethuvum links kodukkaathathaal!!
//

நீங்கள் சொல்வது சுத்தமில்லாத பினாத்தலா?.

ஆதாரமாக இத்தனை இதழ்கள் வெளியிட்டத் தேதி எல்லாம் எழுதியுள்ளேன். பிறகு பினாத்தல் என்று பேசினால் என்ன பொருள் எதையாவது பேசி எழுதுவதா? வேண்டுமனால் அந்த இதழ்களை பாருங்கள் அதில் பொய் என்றால எழுதுங்கள்.

எல்லாத்துக்கும் இணைப்புக் கொடுக்க முடியாது. நாங்கள் பார்த்தது. அச்சிட்ட பிரதியை அதை இந்த இணையத்தில் இணைக்க முடியாது.

பத்திரிக்கை செய்திகளை ஆதாரமாக காட்டிய போதும் சிலபேர் இப்படி பேசுவது எழுதுவது அவர்களின் பொறுப்பற்ற பேச்சின் அடையாளமாக இதனைப் பார்க்கிறேன்.

//Asia'vil China'vin aadhikkathai ozhikka US'kku oru country vendum... Athu yen naamaaga irukka koodaathu??//

உலகம் முழுதுக்குமான ரவுடி வேலையை அமெரிக்க செய்வதால் அதற்கு ஆதரவு அளிக்க முடியாது. ஆண்டுக்கு ஒரு போர் என்று உலக பொருளாதாரத்தை சிதைக்கும் அமெரிக்காவிற்கு உங்களைப்போன்று என்னால் காவடி தூக்க இயலாது.

Anonymous said...

Manmohan Singh has been a huge disappointmnet. India expected a lot from hom.
People of all political leanings believed that manmohan unlike hard core politicians will prove to be a more mature and capable leader.

But unfortunaltely what we have seen so far belies that.
he has displayed as much leadership and bias for action as say a bag of cement will display when kept in a corner.

He some times reminds me of Pannerselvam who was installed as CM of Tamil Nadu.While he may be a good man, he probably has just about enough IQ to open his mouth when he has to eat or say "Amma".

The great Congress has converted Manmohan into a Pannerselvam.