அடோப் மற்றும் கோரால் டிரா மென்பொருட்களில் தமிழ் ஒருங்குறி ஆதரவு வழங்கப்படாமல் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நூல் வெளியிடு வரைவு பணி ஆகியவற்றுக்கு இந்தியா போன்ற இடங்களில் போட்டோசாப், மற்றும் கோரல் டிரா மென்பொருட்கள் அதிக பயன்பாட்டில் உள்ள மென்பொருட்களாகும். இது போன்ற மென்பொருளில் தமிழ் ஆதரவு வழங்கப்படாமல் இருந்தது செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணிக்கப்படுவதாக பலர் கருதினர்.
ஆனால், CorelDRAW X5 வரை தமிழ் ஆதரவு வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த CorelDRAW X6 இல் தமிழ் ஒருங்கு குறியில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஏகலப்பை மென்பொருளின் மூலம் தட்டச்சு செய்ய இயலுகிறது என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும்.
கீழே கோரல் 16 மற்றும் 15 இல் தமிழ் ஒருங்கு குறியில் தட்டச்சு செய்தால் எப்படி வருகிறது என்பதற்கான மாதிரிப்படம் இணைக்கப் பட்டுள்ளது.
![]() |
கோரல் X6 |
![]() |
CorelDraw X5 |
அடோப் நிறுவனத்திலும் CS5 வரிசையில் பிளாசு, டிரீம்வியூவர் இரண்டில் மட்டுமே தமிழ் ஒருங்கு குறி ஆதரவு உள்ளது. போட்டோசாப் உள்ளிட்டவைகளில் ஆதரவு அளிக்கப்படவில்லை. ஆனால் புதிதாக வெளியிட்டுள்ள CS6 வரிசையில் தமிழ் ஒருங்கு குறிக்கான ஆதரவு வழங்கப் பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.
2 comments:
மகிழ்ச்சிக் குரிய செய்தி
இந்த வார , என் விகடனில் தங்கள் வலைப்பூ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மென் மேலும் தொடரவும்
இணையத் தமிழன், விஜய்
http://inaya-tamilan.blogspot.com
Post a Comment