Friday, April 28, 2006

இலங்கை அரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூ விற்கும் கண்டணம்பொறுமையாகவும் உணர்ச்சிவசப்படாமலும் பிரச்சனையை கையாள வேண்டும் என்று ஆலோசனை கூறும் அந்த கட்சி இலங்கை அரசின் தாக்குதலை கண்டிக்க வில்லை.பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசின் கொலை வெறித் தாக்குதலுக்கு பயந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தனது வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி யுள்ளனர் ஆனால் மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்காமல் விடுதலிப்புலிகளை மட்டும் எச்சரிக்கை செய்ய வலியுறுத்தும் மார்க்சிஸ்டு கட்சியின் செயல் மிகவும் கண்டிக்க தக்கது.


இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா...
காட்டு விலங்கை சுட்டாலும், அட கரடி கழுதை சுட்டாலும்
தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம்
தமிழன் உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா
மனித உரிமையை மீறுதல் முறையா?

Thursday, April 27, 2006

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும்


தேர்தல் என்றாலே எல்லோருக்கும் கேலியும் கூத்தும் தான்,
தேர்தலில் நடக்கும் போது அரசியல் கட்சிதலைவர்களை கேலி செய்வது ஒரு அளவே இல்லாமல் போய்க்கொடிருக்கிறது


யாகூ குழுவிலிருந்து வந்த மின்னஞ்சல் தகவல் கீழே:

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் கல்யாணம்,
அந்த ஜாதிக்கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்,
அந்த பார்லிமென்டுல நடக்குதைய்யா திருமணம்,
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்.

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்,


மாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,
மாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,
பெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,
பெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,


அந்த ராமதாசும் திருமாவும் வரவேற்பு தானுங்கோ,
வரவேற்பு தானுங்கோ,

மாப்பிள்ள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,
அந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,
மாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,
அந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,


இந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,
இந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,

இந்த மணமக்கள வாழ்த்துகிற பெரிய மனசு யாருங்கோ,
...
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...
..
...
...
...
...

தலைவரு விஜய காந்து தானுங்கோ!

Wednesday, April 26, 2006

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோவணம் இலவசம்

வாக்களப்பெருங்குடி மக்களே!
வணக்கம்,

பட்டு வேட்டியைப் பற்றி கணாக்கண்டிருந்த போது!
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

இந்திய சுதந்திரம் பற்றி வைரமுத்து அவர்களின் கவிதை இது.

வைரமுத்து அவர்கள் சொல்வதைப்பார்த்தால் நமது கோவணம் சுதந்திரம் பெற்றவுடன் பறிபோனது.

1. ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கோவணம் இலவசமாக வழங்கப்படும்.

நாங்கள் கோவணத்தை இலவசமாகத் தருவோம் என்றவுடன் மகிழ்ந்து போயிருப்பீர்கள். நாங்கள் கோவணத்தை இலவசமாக வழங்கிவிட்டு உப்பு, புளி, மிளகாயில் விலை ஏற்றுவோம். அது உங்களுக்குத் தெரியாது.

’’நீங்கள் ரோஜாவை நேசிக்கத்தெரிந்த நிஜமான கலைஞன்
ஆனால் முட்களை மறந்து விட்ட முட்டாள்.’’

என்று வைரமுத்து சொன்னதைப்போல,

கோவணத்தை நினைத்து மற்றவற்றை கோட்டை விட்டு விடுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆகவே, ஒவ்வொரு ஆண்டின் இலவசத்துக்கெல்லாம் வரிகளை உயர்த்துவோம். விலை ஏற்றம் எங்களால் தவிர்க்க இயலாதது. எனவே,

2. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எல்லா பட்ஜெட்டின் போதும் இலவசமாக மொட்டை அடிக்கும் திட்டமும் அமல் செய்யப்படும்.

3. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவர்க்ளுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம்.

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் . ஏனெனில் இது தேர்தல் பிரசாரம்.

அன்னிய நாடுகளிலிருந்து மூலதனம் இந்தியாவில் குவிகிறது. அன்னிய மூலதனத்தில் தொழில் தொடங்கப்பட்டால், அதற்கான இலாபமும் அன்னிய நாட்டிற்குத்தான் செல்லும், அதனால் இந்தியாவில் தொழில் தொடங்க மூலதனம் இல்லாமல் போகும். மூலதனம் இல்லாமல் போனால் எப்படி தொழில் தொடங்குவது?. ஏகாதிபத்திய நாய்களிடம் பிச்சை கேட்போம். அவர்கள் படிக்காதவர்களுக்கு வேலை தருவார்களா?. தரமாட்டார்கள்.

எனவே,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படிக்காதவர்களுக்கு பன்றி மேய்க்கும் வேலையும், எம். ஏ படித்தவர்களுக்கு எறுமை மாடு மேய்க்கும் வேலையும் அளிப்போம்.

4. குஷ்புவின் நடனம் ஒவ்வொரு மாதம் முதல் வாரமும், சிம்ரனின் ஆட்டம் இரண்டாவது வாரமும் காட்டப்படும்.

5. நீங்கள் அறிவோடு சிந்தித்து வாக்களிக்க கூடாது என்பதற்காக அனைவருக்கும் இத்தனை கெடுபிடிக்கிடையிலும் இலவச சாராயம் அளிப்பது எங்கள் சாதனைகளில் ஒன்று.

6. நாங்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதற்கு அதிகாரம் பெற, ஏலங்களில் நாங்கள் கமிசன் பெற, உங்களுக்கு பிச்சை காசை தூக்கி எறிவோம்.

7. நான்காவது ஆண்டு நாங்கள் கொடுத்த கோவணம் உறுவப்படும், அப்படி உருவினாலும் நீங்கள் கவலைப் படமாட்டீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

ஒருவேளை
“கோவணமும் இல்லை!
கையில் காசும் இல்ல!
பாட்டுவருதே என்னபுள்ள“
என்று பாடிவிட்டு அப்படியே இருந்தாலும் இருப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

8. ஆனால், ஐந்தாவது ஆண்டு தொடக்கத்தில் நாங்கள் உங்களுக்கு புதிய கோவணம் வழங்குவோம். வழங்கிவிட்டு, நாங்கள் தான் உங்களுக்கு கோவணம் வழங்கினோம் என்று சொல்லி வாக்கு கேட்டால் நீங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாக்களிப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

9. பற்களே இல்லாத முதியவர்களுக்கு இலவச பல்பொடி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

10. விவசாயத்தையே நம்பி வாழும் 70 சதவிகித மக்களுக்கு ஏரிக்குளங்களை ஆழப்படுத்தி தண்ணீர் சேமித்து வாழ்வுக்கு வழிகாட்ட திட்டமில்லை.

அப்படி திட்டம் போட்டால் நீங்கள் சுயமாக உழைத்து முன்னேறிவிடுவீர்கள். நீங்கள் எப்போதும் பிச்சைக்காரர்களாகவே இருக்கவேண்டும்.


அப்போது தான் நாங்கள் “வள்ளல்களாக“ இருக்க முடியும்.

11. ஐந்தாவது ஆண்டு கால்களே இல்லாதவர்களுக்கு செறுப்புகளும், 10 விளக்குமாறுகளும் இலவசமாக வழங்கப்படும். இவற்றை பத்திரமாக எடுத்து வையுங்கள்.

அடுத்த தேர்தலுக்கு உதவும்.

Thursday, April 20, 2006

தேவாலயங்களில் இயேசு இல்லை

கிருத்துவமதம் பறப்புரை செய்பவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் வந்து ஒரு துண்டறிக்கை ஒன்றை அளித்தார்கள் அதில் கீழ்க்கண்ட வாசகங்கள் இருந்தன (படம்)..
“உலகத்தையும், அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற படியினால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை.“ எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல மனுசர் கைகளினால் பணிவிடை கொள்கிறதுமில்லை (அப்போஸ்தலர் 17: 24: 25)


மேலும் அந்த துண்டறிக்கை சொல்கிறது, டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஏன் ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்புகிறது. கடலை கடவுள் தான் படைத்தார். நீங்கள் கல்லினாலும், வெள்ளியினாலும் உருவக்கப்பட்ட பொய்யான தெய்வங்களை வணங்காமல் இருப்பதற்கான வாய்ப்பாகும்.
“என்னையன்றி வேறொரு தெய்வம் உருவாகியிருக்க வேண்டாம். ....உன் தேவனாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து.......“(யாத்திராகமம் 20: 3-5

சாரம்சமாக நீங்கள் வேறு தெய்வங்களை வணங்கியதால் தான் சுனாமி வந்து அழிந்து போனீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏசு தேவாலயங்களில் இல்லாமல் எங்கே போனார் என்பது பற்றி அந்த துண்டறிக்கை குறிப்பிடவில்லை


இதனைப்பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. ஏனெனில். ஏசு என்பவரை வைத்து இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கையில் நண்பர் ஒரு நூல் கொடுத்தார் “ஏசு ஒரு நாத்திகர்“ ஆனால் ஏசுவின் பெயரை வைத்து இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

அந்த நூலிலிருந்து சில செய்திகள்

கோள்களின் சுழற்சி பற்றி எழுதியதற்காக கோபர்நிக்கஸ் (கி.பி 1473-1543)என்ற விஞ்ஞானி தண்டிக்கப்பட்டார்.

கோப்பர்நிக்கஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காகவும், விஞ்ஞான நூல்கள் எழுதியதற்காக இத்தாலியைச்சேர்ந்த புர்னே (1548-1600) உயிரோடு எரிக்கப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் பூமியும் ஒரு கோள் அது சூரியனை சுற்றி வருகிறது என அறிவுப்பூர்வமாக சொன்னதற்கு கலிலியோ (1564- 1642)மரண தண்டனைக்கு உரியவராக தீர்க்கப்பட்டார்.

பழைய ஏற்பாட்டிற்கும் இயேசுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.இல்லை. இல்லவே இல்லை.

இயேசு மத போதகரோ, மத காவலரோ அல்ல, “ கிருஸ்துவ மதம்“ இயேசுவின் அங்கீகாரம் பெற்றதுமல்ல.

இயேசு நாத்திகர் என்பது பைபிளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மை.!!

.............. ஆகவே பழைய புதிய ஏற்பாடுகளை முறையே, முதலாம் பழைய ஏற்பாடு என்றும், இரண்டாம் பழைய ஏற்பாடு என்றும் சொல்வதே சரியானது.

பைபிள் முழுவதும் ஆய்வு செய்து பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகளை கவிஞர் நீதி நேசன் கேட்டிருக்கிறார்.

பைபிளில் கூறப்பட்ட பல்வேறு செய்திகளை இவர் கேள்விக்குள்ளாக்குகிறார்.

Thursday, April 13, 2006

வைகோ வாங்கிய 40 கோடி


கறைபாடாத கரம் அப்படி இப்படி என்று பேசப்பட்ட வைகோ இப்போது தொண்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

உண்மையாகப் பார்த்தால் அவருக்கு அதற்கான வாய்ப்பு இல்லாமையே காரணமாகும். இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என நாம் எடுத்துக் கொள்ளலாம் எனக்கருதுகிறேன்.

கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிபாடும் என்பார்கள் , செயாவின் கூட்டணிக் கட்சி அப்படி இருக்கக்கூடாதா என்ன?

வாழ்க சனநாயம்

நன்றி

(www.karuththu.com)

Tuesday, April 04, 2006

வைகோ அவர்களின் கவனத்திற்கு......

நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாட்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்று செயாவுடனான பழைய தொடர்பு பற்றி வைகோ சொன்னார். ( தினமணி 02-04-2006)

வைகோ, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?.

வைகோ நீங்க, அப்படியே செயா அடித்த கொள்ளையையும் அப்படியே மேடையில அப்பப்ப பேசுங்க. அப்படி பேசினா, நீங்க உண்மையையே பேசுவதாக மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு புனிதர் பட்டங்கள் கூட நாங்க தரோம்.

வைகோ அவர்களே உங்களுக்கே தெரியும். புனிதர் பட்டத்துக்கு நீங்க தகுதியில்லன்னு. கோடி கோடியாய் கொள்ளையடித்து தங்கமாய் அலைந்த செயாவிற்கு “தங்க தாரிகை“ பட்டம் கொடுத்தாங்க இல்லியா? அது போல உங்களுக்கு “புளுகுப்புனிதர்“ என்ற புதிய பட்டம் ஒன்னும் தரோம்.

கடந்த 20 நாட்களில் அவரை 3 முறைகள் சந்தித்துள்ளேன் நான் அவரிடம் கண்ட கடல் அளவு மாற்றம் என்னை திகைப்படைய வைத்துள்ளது. அது உண்மை, அவர் படிப்பாளி, விவேகி, அதிபுத்திசாலி என்று வாங்கிய காசுக்கு குறைவில்லாமல் விசுவாசமாக சேவை ஆற்றுகிறீர் வைகோ.


இதோ சென்ற கூட்டணியில் இருந்தவர்கள் என்ன் சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

மூப்பனார் காங்கிரசு, இரண்டு பொது உடைமைக்கட்சிகள், பா.ம.க கட்சிகளை தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிந்தார். காசு விட்டு எறிந்தால் அவர்கள் காலடியில் வீழ்பவர்கள் தான் அவர்கள் என்று செயாவிற்கு தெரியும்.

தூக்கி எறியப்பட்ட போது, அவர்கள் சொன்ன வார்த்தை "செயா மிகவும் மாறிவிட்டார்" என்பதுதான்.

வைகோ அவர்களே! செயா அவர்களிடம் நீங்கள் கண்ட கடல் அளவு மாற்றம் இப்போது உங்களை திகைப்படைய வைத்துள்ளது போல் மீண்டும் நீங்கள் திகைப்படையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்படி இல்லையென்றாலும் செயா உங்கள் முகத்தில் குத்துவார் அப்போது நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.

ஒருவேளை வாங்கிய காசுக்கு நீங்கள் காலை நக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் திகைப்படைய வாய்ப்புண்டு, ஆனால் அவ்வாறு நடக்குமேயானால் வைகோ அவர்களே தயவு செய்து தமிழன், சுயமரியாதை, மானம், வெட்கம், என்று ஒருபோதும் பேசிவிடாதீர்கள்.

அப்படி நீங்கள் பேசினால் தமிழ் அகராதியில் அந்த வார்த்தைகளும் மானமிழந்து விடும். அப்படியும் பேசுவீர்களேயானால் சொரணையுள்ள தமிழர்களாகிய நாங்கள் அந்த வார்த்தைகளுக்கு அகராதியில் கீழ்க்கண்டவாறு பொருள் மாற்றுவதைத்தவிர வேறு எங்களுக்கு வ்ழியில்லை.


தமிழன் – வெக்கங்கெட்டவென்,

சுயமரியாதை - மானங்கெட்டத்தனம்,

வெட்கம் - சொரணையில்லமை,

மானம் - சூடு சொரணையில்லாம் துதி பாடல்,

மக்கள் நலம் - ஏமாற்று வேலை,

என்று மாற்றிவிடுவோம்.

சரி போகட்டும்.


கூட்டணியில் சேர்ந்த போது நீங்கள் என்ன சொன்னீர்கள், எங்கள் கட்சிக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன். நான் என்னைப்பற்றி கவலைப்பட வில்லை என்று தானே!.


கட்சிய வளர்க்க, உங்க தொண்டர்களுக்கு நல்லதுக்கு இந்த முடிவு எடுத்தீங்க இல்லியா?

இப்ப மக்கள் நலம் மக்களுக்காகத்தான் கூட்டணி சேர்ந்தேன்னு இப்ப பேசுறீங்க.


கட்சி நலன் அப்படின்னா என்ன? உங்க தொண்டர்கள் காண்ட்ராக்ட் எடுக்கணும், சொத்து சேர்க்கணும், இவ்வளவு நாள் உழைத்த தொண்டர்களுக்கு கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரனும் நல்ல முடிவு தான். நாலு கல்யாண மண்டபம், சொத்து சொகம் எல்லாம் உங்கள் தொண்டனுக் கும் கிடைக்க வேண்டாமா?.


செயலலிதாக்கிட்ட பயிற்சி எடுத்துக்குங்க. எப்படி கவர்னர வாங்கலாம், நீதிபதி வீட்டில எப்படி கரண்ட் கட்பண்றது. எல்லாமே அத்துபடியாகிவிடும்.

கருணாநிதிக் குடும்பத்துக்கு மட்டும் இத்தனை சொத்து இருக்கலாமா? அது தானே வைகோ உங்க கோபம்.


செயா சென்ற தேர்தலில் திருடத்தெரியாமல் திருடினார், மாட்டிக்கிட்டார். இந்த முறை பாருங்க யாருக்காவது தெரியுமா?


****

தமிழர் நலமே வாழ்வின் லட்சியம் அப்படி இப்படின்னு புளுகிறீங்களே வைகோ இது ஞாயாமா?


மக்கள் நலம் பற்றி கொஞ்சமாவது அக்கரை இருக்கிறதா உங்களுக்கு, இருந்தால் கொள்ளை ராணியிடம் கூட்டு சேர்வீர்களா?.


உங்க கூட்டணியில அதிகமா விமர்சிக்கப்படுவது நீங்களும் திருமாவும் தான், நீங்க தான் கொள்கை அப்படி இப்படின்னு பேசி மக்கள ஏமாத்துறீங்க, ஆனா உங்க புரட்சித்தலைவியோ உங்களுக்கு கொள்கையும் இல்ல ஒரு பொடலங்காயும் இல்ல எல்லாம் என் பொட்டிக்குள் அடக்கம்னு கொள்கைய பத்திமட்டும் பேசுவதேயில்லை.


உங்களைப்போன்றவர்கள் தான் “தாயே உன்னடி சரணம்“ என்று தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறாங்க. செயலலிதா புனிதமானவர், ஈழப்பிரச்சனையில் அக்கறையுடன் இருக்கிறார். அப்படி இப்படின்னு புளுகிறீங்க. சிங்களத்து சிறுக்கி சந்திரிகாவோடு கூட்டு சேர்ந்த போது நீங்க தானே கத்திக்கிட்டிருந்தீங்க.

கடைசியா உங்களுக்கு ஒரு ஐடியா தரேன் கேளுங்க.


பேசாம கட்சிய கலைச்சிட்டு "அம்மாவே சரணம் அப்படின்னு கால்ல விழுந்திடுங்க" ஒரு வேள உங்களுக்கு "சபாநாயகர் வேலக்கூட" கிடைக்கலாம். தேர்தல்ல நிக்க்கமலே சபாநாயகர் பதிவியா?

ஆச்சரியப்பாடாதீங்க வைகோ.

"பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்."