Saturday, February 18, 2006

புதுவைப் பல்கலைக்கழகம் தமிழ் விரோதப் பல்கலைக்கழகமா?

பெரும்பான்மை தமிழ்மக்களின் விருப்பத்திற்கு மாறாக புதுவைப் பல்கலைக்கழகம் இந்திப் பல்கலைக் கழகமாக மாற்றும் வேலையில் இறங்கிவிட்டது. பல்கலைக் கழகத்திலுள்ள அனைத்து பெயர் பலகைகளையும் இந்திமயமாக்கியுள்ளது. அங்கிருந்த அனைத்து தமிழ் பெயர்பலகைகளையும் பெயர்த்து எறிந்துள்ளது.

புதுவைப் பல்கலைக் கழகத்தின் முன் இருந்த பல்கலைக்கழக பெயர் பலகை தமிழ் எழுத்துக்கள் சிறியதாக ஆக்கப்பட்டு பிற மொழி எழுத்துக்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த ரெங்கப்பிள்ளை நூலகத்தின் பெயர் பலகை தமிழ் அகற்றப்பட்டு இந்தி மயமாக்கியுள்ளது.
பல்கலைக்கழகத்திலுள்ள பெரும்பான்மையான பெயர் பலகைகளிலுள்ள தமிழ் அகற்றப்பட்டு அதில் இந்தி புகுந்துள்ளது.


இதையொட்டி மீண்டும் தமிழ் பெயர்பலகைகளை வைக்ககோரி புதுவையிலுள்ள தமிழ் அமைப்புகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. புதுவைப்பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பட்டம் நடத்தினர் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் பல்கலைக்கழகம் எடுத்ததாகத் தெரியவில்லை.