
பொறுமையாகவும் உணர்ச்சிவசப்படாமலும் பிரச்சனையை கையாள வேண்டும் என்று ஆலோசனை கூறும் அந்த கட்சி இலங்கை அரசின் தாக்குதலை கண்டிக்க வில்லை.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசின் கொலை வெறித் தாக்குதலுக்கு பயந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தனது வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி யுள்ளனர் ஆனால் மக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்காமல் விடுதலிப்புலிகளை மட்டும் எச்சரிக்கை செய்ய வலியுறுத்தும் மார்க்சிஸ்டு கட்சியின் செயல் மிகவும் கண்டிக்க தக்கது.

இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா...
காட்டு விலங்கை சுட்டாலும், அட கரடி கழுதை சுட்டாலும்
தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம்
தமிழன் உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா
மனித உரிமையை மீறுதல் முறையா?
4 comments:
பொறுப்பு வாய்ந்த கட்சியின் (?) நம்பகத் தன்மை எப்பவோ சரிந்துவிட்டது. பிற்போக்குப் பேரின வாதிகளான ஜே.வி.பி யினரை அழைத்து கட்சி மநாடு நடாத்தியபோதே இவர்களும் இந்திய அரசியல் சாக்கடையில் ஊறிய மட்டைகள் என்பது முடிவாயிற்று.
இவர்கள் கருத்தை தூக்கிப் பிடிக்கும் அவசியம் எங்களுக்கில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வயிறு வளர்க்கும் அரசியல் வேறு. தமிழ் தேசியப் போராட்டம் என்பது வேறு.
அவர்கள் சிங்கள இனவாதிகளான ஜே.வி.பி யுடன் கைகோர்த்த போதே அவர்களின் முகமூடி கிழிந்துவிட்டது.
இந்திய இடதுசாரிகள் இப்படி 'நடுநிலையாக' அறிக்கை விடுவது... இதுவே முதன் முறை அல்லத்தானே :-(.
மார்க்சிசம், பொதுவடமை[கம்யூ] என்ற சொற்களுக்கே அர்த்தம் தெரியதவர்கள்.
Post a Comment