Tuesday, August 08, 2006

புலிகள் ஆதரவு - அடங்கிப்போக வேண்டுமாம்

புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கு சரியான காரணத்தை இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

அதனால் தான் தமிழக முதல்வர் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை விவாதிக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழம் கிடைத்தால் அது தமிழகத்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியே இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது.

வங்கதேச விடுதலையை எந்த அடிப்படியில் இந்தியா ஆதரித்தது?. முன்பு கூட இலங்கை அரசை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தான் இலங்கை போராளி அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளித்தது. வங்க தேசத்திற்கு ஆதரவு அளித்த அதே அடிப்படையில் ஈழப்போராளிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.

இது அரசியல் சமுகப்பிரச்சனையேத் தவிர தனிப்பட்ட அரசியல் விரோத நடவடிக்கை இல்லை என்பதை உணர வேண்டும்.

  • தேசிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக இழிவு படுத்தாதே!
  • விடுதலைப் புலிகள் மீதான் தடையை நீக்கு!
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி!
  • சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகள் செய்யாதே!
  • சிங்கள இராணுவமே தமிழ் ஈழப்பகுதியிலிருந்து உடனே வெளியேறு!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-2006 அன்று திருவண்ணாமலையிலும், 31-07-2006 அன்று திருப்பத்தூரிலும் புரட்சிகர இளைஞர் முண்ணனி என்ற அமைப்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: சிங்கள இனவெறி அரசை கண்டித்து கடந்த 31ம் தேதி புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேரணி நடத்த
அனுமதி கேட்டுள்ளனர். பேரணி உட்பட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் எந்த பதட்டமும்
இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடப்பது ஏற்கத்தக்கது தான்.

ஜனநாயக்கப்பூர்வமான முறையில் முறியாக காவல்துறையின் அனுமதியின் அடிப்படையில் தான் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளது. அதனால் தான் முதல்வர் கருணாநிதிகூட இது ஏற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி இந்த ஜனநாயக அமைப்பு முறையில் உள்ள முறைகளைப் பயன்படுத்தித்தான் இவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

ஆனால், இத்தகைய சனநாயக உரிமைகளைக்கூட மறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை பிரச்சனையாக்குவது இவர்களின் தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.

தமிழனை அழிக்க தமிழ் மண்ணில் பயிற்சி கொடுக்கும் போது அதை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானசேகரன் சட்ட ஒழுங்கு மீது மிகவும் அக்கரையாக இருப்பதாகவும் இந்திய இரையாண்மை மீது அக்கரை உள்ளவர் போல் பேசி யிருக்கிறார். இந்திரா காந்தி கால கட்டதில் இலங்கை இரையாண்மைக்கு எதிராக காங்கிரசார் செயல்பட்டதை அவர் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இராசீவ் கொலை காங்கிரசு காரர்களுக்கே தொடர்பு உள்ள நிலையில் மன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி என்ற தலைப்பில் முன்னணிப் பத்திரிகைகளில் வந்த தகவல் அடிப்படையில் சில தகவல்களை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

"சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சி.ஞானசேகரன் இப்பிரச்னையை கிளப்பினார்.

இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ராஜிவ்காந்தி கொலைக்கு முன்பு ஆதரிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்பிரச்னையில் கி.மு., கி.பி., என்பதைப் போல ராஜிவ் கொலைக்கு முன்பு, ராஜிவ் கொலைக்கு பின்பு என்று தான் பார்க்க வேண்டும். "

என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டு விதவைகளாக்கப் படும் போது அதனை கண்டிக்கக் கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி நியாயமாகும்.

26 comments:

யாரோ said...

நன்றி சுகுமாரன் சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் நன்றாக இருக்கிறது.

யாரோ said...

நன்றி சுகுமாரன் சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் நன்றாக இருக்கிறது.

Mouls said...

sukumaran,

Lets first think of India and the people in India, once we get everything, such a food, equal rights etc., and then move to our brothers and sisters in rest of the world. Hope you will agree.

Anonymous said...

The Right Article for the Right time.Keep it up Sugumaran.

Mouls said...

Sukumaran, thanks for publishing my comments, My last comment, I meant Tamils in Tamil Nadu, and also the people living in India.....Hope you will publish this too.

BTW, as a continuation, I read couple of your other articles too.

sorry, that I'm new to Tamil Bloging and yet to learn on the usage of ekalappai.

Anonymous said...

சுகுமாரனின் கேள்விகள் நியாயமானவை ...இந்த நியாயத்தை முதல்வர் உணர்ந்ததால்தான் அவ்வாறு பதில் அளித்துள்ளார்.

சி.ஞானசேகரன் போன்றோர் சுகுமாரனின் கீழ்க்கண்ட வரிகளை சிந்திக்க வேண்டும்.

//என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம். ஆனால், இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டு விதவைகளாக்கப் படும் போது அதனை கண்டிக்கக் கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி நியாயமாகும்.//

சக தமிழன் என்ற அடிப்படையில் நாம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தீர்வதற்கு உதவ வேண்டும். அப்படி செய்யவில்லையெனில் உணர்வற்ற ஓர் இனமாக மானம் வெக்கம் ரோசம் எதுவும் இல்லாமல் பின்டங்களாக வாழும் அரபுகளுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.

அரபுகளாக, ஈனப்பிரவிகளாக வாழ்வதைவிட ஈழத்தமிழனாக இனப்போராட்டத்தில் சாவதே மேல். ஆக நாம் நமது உணர்வுகளை விட்டுக்கொடுக்காது ஈழத்தமிழர்களின் போராட்டங்களுக்கு உள்ளப்பூர்வ ஆதரவு வழங்கவேண்டும். அதை முதல்வர் கஐலஞர் அவர்கள் உணர்ந்தள்ளதால் தான் உடனடியாக கோவையில் பயிற்சி எடுத்து கொண்டிருந்த இலங்கை சிங்கள காவல்துறையினரை உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

சி.ஞானசேகரன் போன்றோர் எழுதிக்கொடுப்பதை சட்டசபையில் பேசுபவர்கள். அதே சமயத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களுக்கு காங்கிரஸ் எதிரானதல்ல என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

நன்றி
முகவைத்தமிழன்
www.tmpolitics.blogspot.com

Anonymous said...

right article at right time.

Anonymous said...

//Lets first think of India and the people in India,//

Fine. Then think ONLY about India and its people. Be contented as a self-nurturing govt minding its own business. Dont think about Srilanka, Trincomalee oil tanks, regional superpower status, RAW-mediated killings in foreign lands, or Nepal or Maldives. How about that?

Anonymous said...

sukumaran!
thank you. our court punished rajiv's killers. but we cant punish
all tamils in sri lanka.
we cant forget our brothers and sisters in Sri lanaka.

செல்வமணி said...

என்ன சுகுமாரன் இது? முழு பூசணிக்காயை மறைக்கப்பார்க்கீறீர்கள்..LTTE-ஐ ஏன் தடை செய்தார்கள் என்று தெரியாமலா இலங்கைப் பிரச்சனை பற்றி எழுதுகிறீர்கள்? புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்க்கான காரணத்தை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்..LTTE உள்பட...அதுவும் பொட்டுஅம்மானுக்கு நன்றாக தெரியும்.உங்களுக்கு மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்களா? ராஜீவ் கொலையில் காங்கிரஸ் பங்கு என்பது பலகீனமான வாதம்... பாலசிங்கமே ஏற்றுக் கொள்ளமாட்டார்.அவருடைய பேட்டிகளை சற்று கூர்ந்து படிக்கவும்.

ராஜீவ் கொலையை செய்த அறிவாளிகள் நம்மைத்தான் இக்கட்டில் வைத்துவிட்டார்கள்.ஈழத்தில் துன்பப்படும்
தமிழர்களுக்கு ஆதரவாக நம்மால் ஓங்கி குரல் எழுப்பமுடியாத சூழ்நிலயை யார் ஏற்படுத்தினார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.ஈழ மக்கள் பிரச்சனையையும், புலிஆதரவு பிரச்சாரத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம்.

Anonymous said...

அடக்க,அடக்க அழுத்தம் கூடி ஒருநாள்
அதிரடியாக வெடிக்கும்போது தெரியும்
அமைதியாக உள்ள தமிழ்நாட்டு தமிழின உணர்வாளர்களின் ஆத்திரம்.

இரா.சுகுமாரன் said...

சிவா, Mouls,Anonymous ஆகியோருக்கு நன்றிகள்

G.Ragavan said...

விவாதிக்கலாம் என்று சொல்லும் கருணாநிதி அந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் நடக்காது என்றே தோன்றுகிறது.

எனக்கென்னவோ இவரது இந்தப் பேச்சு அந்தப் பேரணிக்காரர்களைக் குறி வைப்பதாகத் தோன்றவில்லை.

முத்து(தமிழினி) said...

விடுதலைப்புலிகளின் மீதான தடை விவாதிக்கத்தக்கது என்று கூறியதன் மூலம் தனக்குள் இருக்கும் தமிழ் உணர்வை கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் உணர்வை கொச்சைப்படுத்த நினைக்கும் ஜென்மங்கள் ராஜீவ் சமாச்சாரத்தை பெரிதுப்படுத்தி தமிழர் உணர்வை ஒழிக்க நினைப்பது வெளிப்படை.

நல்ல கட்டுரை சுகு.

Anonymous said...

Muthu:

Do you think Rajeev's death is to be ignored?, Is he that a normal person, when groups and groups of normal people are died in Lebanon or Srilanka we feel that our brothers and sisters are dieing, but our beloved leader, young and dynamic, visionary died and was performed, you say we need to ignore or forget. Is that logical?. What is the surity that these terorists (I dont prefer to call them anymore as Liberation of Tamil Elam anymore)do all those (they have done enough by killing Rajeev, Padmanaba and few others in Tamil Soil) again?.

Are we ready to kill ourselfs and make our soil also as like of Srilanka today?. There is a say in Tamil, 1 person can be sacrified for saving a family, 1 family can be sacrified for saving a village, and one village can be sacrified for saving and protecting next few villages....In that manner, we need to keep watching rather than adding oil to the fire and turning those terorists to step into Tamil Nadu

லக்கிலுக் said...

////விடுதலைப்புலிகளின் மீதான தடை விவாதிக்கத்தக்கது என்று கூறியதன் மூலம் தனக்குள் இருக்கும் தமிழ் உணர்வை கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார்./////

வழக்கம் போல சரியான மதிப்பீடு முத்து....

முத்து(தமிழினி) said...

//What is the surity that these terorists (I dont prefer to call them anymore as Liberation of Tamil Elam anymore)//

இந்த வார்த்தைகளில் இருந்து உங்களுடைய மனம் இயங்கும் போக்கை புரிந்துக்கொள்ள முடிகிறது.

ராஜீவ் மரணத்தை வைத்துமட்டும் நாம் இலங்கை பிரச்சினையை அணுகமுடியாது என்பது என் கருத்து.

தமிழர்களுக்கு உதவி செய்வதால் தமிழகத்திற்கு பிரச்சினை வரும் என்று சொல்பவர்கள் யார் என்று தெரிந்துதான் உள்ளது.நன்றி

இரா.சுகுமாரன் said...

தமிழினிக்கு,

//ராஜீவ் மரணத்தை வைத்துமட்டும் நாம் இலங்கை பிரச்சினையை அணுகமுடியாது என்பது என் கருத்து.//

என்று நீங்கள் சொல்லியிருப்பது மிக்கச்சரியான கருத்து.

மரமண்டை said...

///தமிழர்களுக்கு உதவி செய்வதால் தமிழகத்திற்கு பிரச்சினை வரும் என்று சொல்பவர்கள் யார் என்று தெரிந்துதான் உள்ளது.////

இவர்கள் 'சோ'வுக்கு எந்த விதத்தில் உறவு?

இரா.சுகுமாரன் said...

//Do you think Rajeev's death is to be ignored?, Is he that a normal person, when groups and groups of normal people are died in Lebanon or Srilanka we feel that our brothers and sisters are dieing, but our beloved leader, young and dynamic, visionary died and was performed, you say we need to ignore or forget. Is that logical?. What is the surity that these terorists (I dont prefer to call them anymore as Liberation of Tamil Elam anymore)do all those (they have done enough by killing Rajeev, Padmanaba and few others in Tamil Soil) again?. //

ராசீவ் கொலையை பல்வேறு தரப்புகள் திட்டமிட்டு நடத்தியுள்ளன என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் பங்கு உள்ளதை யாரும் அதன் விசாரணையில் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு நடைமுறையை புரிந்து கொள்ளுங்கள் (பார்க்க: மன்மோகன் அமெரிக்க உளவாளி ) ராசீவ் கொலைக்கு முன்னதாக இந்தியா ரசிய அதரவு நிலையை எடுத்தது. நேருவின் பரம்பரையே அந்த நிலைதான் எடுத்திருந்தது. ஆனால், இராசீவ் இறந்தபின் இந்தியா அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துள்ளதை பாருங்கள் இது ஏன்? இந்த மாற்றம் ஏன்?.

ராசீவ் இருக்கும் வரை இரசிய ஆதரவு அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுப்பார். எனவே அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நினைத்த அமெரிக்காவின் பங்கையும் சேர்த்தே சிந்தியுங்கள்.

வணக்கத்துடன் said...

இராசீவ் கொலை சம்பவம் ஓர் முக்கிய அரசியல்/வரலாற்று நிகழ்வு, வர்ந்ததக்கதும் கூட. தன் தலைவரின் கொலையை வைத்து காங்கிரஸ்காரரான ஞானசேகரன் அப்படி பேசியதும் சரி தான். அதற்காக ஞானசேகரன் தமிழின உணர்வற்றவர், விரோதி என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. அவர்கள் வேறு வகையினர்.

இராசீவ் கொலை வழக்கு விசாரணை என்பது, விடுதலை புலிகள் தான் இராசீவை கொன்றனர் எனும் முன் முடிவை தீர்ப்பாக்க நடத்தப்பட்ட ஓர் நாடகமாக மட்டுமே நடந்தேறியது. அந்த தீர்ப்பு, தமிழர்களின் இன உணர்வுகளை ஒடுக்கி, ஈழ போராட்டத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் ஆதரவினை தடுக்கவும் சில சக்திகளுக்கு கருவியாயிற்று.

ஆகவே, இதை வைத்து ஈழ பிரச்சிணையையோ, ஏன் புலிகளையோ இந்திய அரசு அனுகுவது சரியாக இருக்காது.

இங்கே, இராசீவ் அனுதாபிகளுக்கும், தீவிர 'புலி தீவிரவாத' எதிர்ப்பாளர்களுக்கும் ஓர் வேண்டுகோள். நீங்கள், "இராசீவ் கொலை குறித்து மீண்டும் வழக்கு நடத்தப்பட வேண்டும், இம்முறை நேர்மையான விசாரணையுடன்," என்று போராடலாமே!

Anonymous said...

Thanks for the comments. Everyone has written about the Rajeev, but none written anything about Padmanaba, Dharmalingam, why, the recent Kadhirkamar's killing. why so?.

Do you guys still feel that US killed these guys too?.

Sukumar, Even though I read your other article about US involvement on killing Rajeev.

Also to note, the globalisation and USSR dis-integration paved a path for India to move closer to US, not becoz of LTTE or Rajeev's death.

Anonymous said...

Also, I suggested for supporting Tamil ellam in a satyagraha mode...there is no response for that from anyone....Why?.....Who ever (padmanaba, etc) was soft in their fights and still pushing the singalee govt. was killed by whom?.

In my view, if our support to LTTE is correct, then we need to support Jihadi's in Kashmir and so on.

hosuronline.com said...

கலைஞர் இப்போதெல்லாம் தமிழருக்கு எதிறாக செயல்படுகிறாறோ, என்றே அவரின் நடவடிக்கைகள் தோன்ற்ச்செய்கின்றன!

முதுகெலும்பற்ற தலைமையை தமிழகம் கொண்டுள்ளதோ என தோன்றுகிறது.

babupriya said...

i am a tamil speaking indian and LTTE is a terrorist organisation. When talking about island conflict why you people think that LTTE alone represents tamil speaking srilankans.

Is LTTE sole representative of the tamil speaking people of srilanka.

Your comments,என்று அவர் குறிப்பிட்டது சோனியா விதவை ஆகிவிட்டார் என்பது தான் இவரின் வருத்தம். நாமும் அதற்காக வருத்தப்படலாம்" is in a really very bad taste.

Rajiv Gandhi is an Indian and Prabakaran is a srilankan terrorist and it is unfortunate that we as a country and as tamil speaking people of this country supported them for some time.

செந்தழல் ரவி said...

நன்றாக உள்ளது...ஆனால் உங்கள் எழுத்துக்கள் எனக்கு சரியாக தெரியவில்லை..நிறத்தை மாற்றுங்கள்..