Friday, June 01, 2007

தேவதாசி முறையை ஆதரித்து

தேவதாசி முறையை ஆதரித்து ஒரு பதிவு வெளிவந்துள்ளது ஆனால், அந்த பதிவுக்கு நான் அளித்த பதிலை அவரால் வெளியிட முடியாது என நான் கருதுகிறேன். அதனால் அந்த தகவலை நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதால் அதனை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்த பதிவில் எழுதப்பட்டுள்ள வாசகம் பின்வருமாறு:

////இதெல்லாம் தெரியாத இராமசாமி நாயக்கன் 'உங்காத்து பெண்களை ஏன் தேவதாசி ஆக்கக்கூடாது?' என்ற குதர்க்கமான கேள்வி கேட்டு வழிவழிவந்த அந்த புனிதமான இறைவன் சேவையை நிறுத்திவிட்டார்.

அதன் விளைவு? சுத்தமில்லாத பெண்களுடன் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வேண்டாத வியாதிகளான கொனேரிய, சிலிபஸ் மற்றும் உயிர்கொல்லி நோயான எஸ்ட்ஸுக்கும் எல்லா சாதியினரும் பலியாக வேண்டி இருக்கிறது. பொதுவில் பார்த்து வந்த நிர்வாண நடனங்களை இப்பொழுது சிடி போட்டு மறைவாக பார்க்கும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.////

முழுமையாகப் படிக்க இங்கே இணைக்கப்பட்டுள்ள இந்த தளத்தை தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது படிக்கவும்.

தேவதாசி முறை மிகவும் புனிதமானது என்றும் அதனை தந்தைப் பெரியார் குதற்கம் பேசி நிறுத்திவிட்டதாக அந்த நண்பர் வருத்தப்படுகிறார். சுத்தமானவர்கள் அந்த தொழிலை தொடர்வதில் நமக்கு ஏதும் மறுப்பில்லை. இங்கே இதுபற்றிய முந்தய சம்பவம் ஒன்றை கீழே தருகிறேன்.

தேவதாசியை அகற்றும் தன்மையில் சென்னை மாகாணச் சட்ட மேலவையில் 02-02-1929 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு மசோதாவை முத்துலட்சுமி அம்மையார் கொண்டு வந்தார் இதனை பல பழமை வாதிகள் எதிர்த்தனர் காங்கிரசு சுயராச்சிய கட்சியின் சத்திய மூர்த்தி அய்யர் இதனை மிக கடுமையாக எதிர்த்தார்.

தேவதாசி முறை நம்மால் உருவாக்கப் பட்டதல்ல அது நீண்ட காலத்துக்கு முன்னர் நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது இன்றைய சமூகத்துக்கும் அது தேவைப்படுகிறது இவர்கள் கோவில்களில் தொண்டு செய்வதற்காக சாஸ்திரப்படி அமர்த்தப்பட்டவர்கள் தேவதாசி முறையை அகற்றிவிட்டால் அது கடவுளுக்கு எதிரான செயல் எனவே இந்த மசோதா முறைகேடானது என உரக்கப் பேசினார்.

பெண்ணுலகை இழிவு படுத்தும் இந்த கருத்தை எதிர்த்து முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்ற மேலவையில் பின்வருமாறு பேசினார்.
" எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கடவுள்களுக்குத் தேவதாசிகளாகத் தொண்டு செய்வதை நீண்டகாலமாக செய்து விட்டோம். அப்படிப்பட்ட புனிதமானதும் கடவுளுக்கு உரியதுமான தொண்டினை இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் வகுப்பைச் சார்ந்த பெண்கள் செய்யட்டும்" என்று பளீரென்று பேசினார்.'

அதன் பின் இனிமேல் அந்த தொழிலைப் பார்ப்பனர்கள் தொடர்ந்தால் நாங்கள் ஆட்சேபிக்க வில்லை என்று சொன்னவுடன் தான் அவர்களுக்கு புரிந்தது ஆனால், இங்கு பலருக்கு அது புரியவில்லை.

அதனால், நானும் தான் கேட்கிறேன். தேவதாசித் தொழில் செய்வதற்கு  எத்தனைப் பார்ப்பனத்திகள் தயார் என்று?.

19 comments:

Anonymous said...

அய்யா அந்த சதுர்வேதி வேறு யாரும் இல்லை, விடாது கருப்புத்தான். அதனால் அந்த பதிவை கிண்டல் / நக்கல் என்ற நோக்கில் மற்றும் எடுத்துக்கொண்டு சிரிக்கவும்.

ரத்தி said...

சுகுமாரன் ஐயா,
அங்கே போட்ட பின்னூட்டம்.. அவர் பிரசுரிக்காமல் விட்டுவிட்டால், எதற்கும் இருக்கட்டும் என்று இங்கேயும்:

------------------

சதுர்வேதி ஐயா..
நீங்க சொல்வது சரி. இவங்க எல்லாம் அனாவசியமா எதிர்க்கிறாங்க..

தேவதாசிகள், பாலியல் தொழிலாளர்கள் எல்லா நாட்டிலயும் இருக்காங்க.. உலகின் பழமையான இந்தத் தொழில், இன்னிக்கு நல்லா முன்னேறி, வெளிநாடுகளில் ஆண்களுக்கு கூட பாலியல் தொழிலில் இட ஒதுக்கீடு இருக்கு..

உங்க பாஸ்போர்ட் நம்பர், முழுப்பெயர், முகவரி எல்லாம் கொடுத்தீங்கன்னா, உலக மக்களுக்கு சேவை செய்யும் இந்த தூய்மையான பணியை உங்களுக்கும் ஏற்பாடு செஞ்சி தரேன்...

உங்க சம்மதம் தெரிஞ்ச பின்னால் என் மெயில் ஐடியோட வரேன்..

-----

இந்தத் தொழிலுக்குப் பெண்களை அனுப்பச் சொல்லி பின்னூட்டமிட்ட மற்றவர்களுக்கு:
கேவலமா ஒரு கருத்து சொல்றானாம்! அதுக்கு இவன் வீட்டுப் பொண்ணுங்களை இழுப்பது என்ன நியாயம்? இன்னிக்கும் பாலியல் தொழில்ன்னா பொண்ணுங்களைத்தான் வம்புக்கிழுப்பீங்களா!! அடச்சீ!!

Anonymous said...

அந்த பதிவை நடத்துவது பார்ப்பனர் அல்ல.
விடாதுகருப்பு என்று எழுதுபவர்தான் பார்ப்பனர் பெயரில் அப்படி எழுதிக்கொண்டிருக்கிறார்.

OSAI Chella said...

thala.. read my recent post on the same issue!

Anonymous said...

//அய்யா அந்த சதுர்வேதி வேறு யாரும் இல்லை, விடாது கருப்புத்தான்.//

appa dondu mamavoda padhivu illaya

Anonymous said...

ஓசை சொல்லாவிற்கு அவர் பதிவில் இட்ட பின்னூட்டம்.

என்னப்ப சதுர்வேதி யாருன்னு உனக்கு தெரியாதா?..

அய்யோ பாவம்.

போயி உன் பிரண்ட்டுக்கிட்ட பதிவில இருக்குற கொண்டைய மறைக்கச்சொல்லு.

இரா.சுகுமாரன் said...

//இந்தத் தொழிலுக்குப் பெண்களை அனுப்பச் சொல்லி பின்னூட்டமிட்ட மற்றவர்களுக்கு:
கேவலமா ஒரு கருத்து சொல்றானாம்! அதுக்கு இவன் வீட்டுப் பொண்ணுங்களை இழுப்பது என்ன நியாயம்? இன்னிக்கும் பாலியல் தொழில்ன்னா பொண்ணுங்களைத்தான் வம்புக்கிழுப்பீங்களா!! அடச்சீ!!//

ரத்தி அவர்களே! பெண்களை கேலி செய்வது என் நோக்கமல்ல பெண்களை மிகக் கேவலமாக நடத்த வேண்டும் என்று சொல்பவர்களின் மீதான கோபம் அப்படி வெளிப்பட்டுள்ளது, அதனால் அப்படி உள்ள தகவல்களை மாற்றி வெளியிட்டுள்ளேன்.

நன்றி

பிரபு ராஜதுரை said...

சுகுமாரன்,

நீங்கள் இவ்வளவு பெரிய அப்பாவியாக இருப்பீர்கள் என நினைக்கவில்லை:-))

Anonymous said...

//அய்யா அந்த சதுர்வேதி வேறு யாரும் இல்லை, விடாது கருப்புத்தான்.//
இதனால் தான் "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்று முன்னோர்கள்
சொல்லி உள்ளார்கள். எவ்வளவு உண்மை பார்த்தீர்களா! பார்ப்பானனாக பெயர் வைத்துக் கொண்டாலும் வக்கிரமமாக எழுதும் குணம் போகவில்லை.

இரா.சுகுமாரன் said...

//குலத்தளவே ஆகுமாம் குணம்" என்று முன்னோர்கள்
சொல்லி உள்ளார்கள். எவ்வளவு உண்மை பார்த்தீர்களா! பார்ப்பானனாக பெயர் வைத்துக் கொண்டாலும் வக்கிரமமாக எழுதும் குணம் போகவில்லை.//

ஆகா என்ன தத்துவம்?!!! பார்ப்பனர்களில் குலப்புத்தி என்ன என்று எல்லாருக்கும் தெரியும் அப்பாவிப் பெண்களை தேவதாசிகளாக்கி சுவைகாண நினைக்கும் வக்கிர புத்தியை என்னவென்று சொல்வது. உண்மையில் வக்கிரபுத்தி யாருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பெயர் வைத்தால் மட்டும் என்ன? அந்த பெயரை விடாது கருப்பு வைத்துக் கொண்டால் அவருக்குத் தான் அவமானம். அவர் அப்படி செய்ய மாட்டார்.

Anonymous said...

//குலத்தளவே ஆகுமாம் குணம்" என்று முன்னோர்கள்
சொல்லி உள்ளார்கள். எவ்வளவு உண்மை பார்த்தீர்களா! பார்ப்பானனாக பெயர் வைத்துக் கொண்டாலும் வக்கிரமமாக எழுதும் குணம் போகவில்லை.//

ஆகா என்ன தத்துவம்?!!! பார்ப்பனர்களில் குலப்புத்தி என்ன என்று எல்லாருக்கும் தெரியும் அப்பாவிப் பெண்களை தேவதாசிகளாக்கி சுவைகாண நினைக்கும் வக்கிர புத்தியை என்னவென்று சொல்வது. உண்மையில் வக்கிரபுத்தி யாருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பெயர் வைத்தால் மட்டும் என்ன? அந்த பெயரை விடாது கருப்பு வைத்துக் கொண்டால் அவருக்குத் தான் அவமானம். அவர் அப்படி செய்ய மாட்டார்.

Anonymous said...

பதில் ஏதும் சொல்ல முடியாமல் ஏதேதோ பின்னூட்டம் இட்டு குழப்புகிறார்கள் சிலர்

சதுர்வேதி said...

சுகுமாரன் அவர்களே,

தேவதாசி முறைக்கு ஒத்துக் கொண்டு எந்த பெண் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். வலியப் போய் ஆக்குவதுதான் தவறு.

தவிர தேவதாசிகளின் சந்ததிகள் வழிவழியாக தேவதாசிகளாக இருந்தார்களே அதாவது உமக்கு தெரியுமா?

வீட்டில் பெரியவா யாரும் இருந்தா கேட்டுப் பாருங்கோ.

விடாதுகருப்பு said...

//அந்த பதிவை நடத்துவது பார்ப்பனர் அல்ல. விடாதுகருப்பு என்று எழுதுபவர்தான் பார்ப்பனர் பெயரில் அப்படி எழுதிக்கொண்டிருக்கிறார்.

//

பொதுவாக அனானிகளுக்கு நான் பதில் சொல்வது இல்லை என்றாலும் என் உற்ற நண்பர் ராஜ.சுகுமாரன் அவர்களுக்காக நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நான் தற்போது தமிழ்மணத்தில் எழுதுவதில்லை. என் பதிவு அங்கே இணைக்கப்படவும் இல்லை. எனக்கு இந்த மட்டராக அரசியல் எல்லாம் தெரியாது. தெரியவும் வாய்ப்பு இல்லை.

பார்ப்பன கோர முகத்தின் உண்மை நிலையை ஊருக்கு உணர்த்த கருப்பு என்ற ஒருமுகமே போதுமானதாக இருக்கும்போது சதுர்வேதி, வாந்திபேதி, சீதக்காதி என்று பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

என் பதிவில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன குள்ள நரிகளின் பொய்யும் புரட்டும் இந்த புது உருவில் வந்திருக்கலாம்.

என் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியாத கிழட்டு ஓநாய்களின் புது குள்ளநரித் தந்திரம் இந்த பதிவுகள் எல்லாம். உங்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லை பூணூல் பார்ட்டிகளே!

வாழ்க வையகம்!

மு.மயூரன் said...

சதுர்வேதியின் பதிவு தேவதாசி முறைய ஆதரிக்கும் பதிவு அல்ல.
அது பார்ப்பனீயத்துக்கு எதிரான பதிவு.
அவரது எல்லாப்பதிவுகளும் பார்ப்பனீயத்தை எதிர்க்கும், கேவலப்படுத்தும் புதிய உத்தியை வெளிக்காட்டுகின்றன.

சார்பாகப்பேசுவதுபோல கேவலப்படுத்தும் உத்தி.
அவரது உத்தி தமிழமணத்தில் நன்றாக வேலை செய்கிறது.
உங்களைப்போன்றவர்களை பார்ப்பனீயத்துக்கு எதிராக நிறைய பேசவைக்கிறது.
சதுர்வேதி வெற்றிபெற்றுவிட்டார்!


பாராட்டுக்கள் சதுர்வேதி!!

Anonymous said...

//உங்களைப்போன்றவர்களை பார்ப்பனீயத்துக்கு எதிராக நிறைய பேசவைக்கிறது//

ஆமாம், சதுர்வேதியின் நோக்கம் என்னன்னு நம்ம சுகுமாரனுக்கு தெரியாது பாருங்க.வேணும்னு புரியாத மாதிரி கேவலமா எழுதறாரு நம்ம புதுவை அய்யா.இவருக்கா தெரியாது?அடேங்கப்பா,குண்டு வைக்கும் மதானி கும்பல் கிட்ட அடிவருடி சம்பாதிக்கும் இவரு ஓண்ணும் தெரியாத பாப்பா பாருங்க.

இரா.சுகுமாரன் said...

//புதுவை அய்யா.இவருக்கா தெரியாது?அடேங்கப்பா,குண்டு வைக்கும் மதானி கும்பல் கிட்ட அடிவருடி சம்பாதிக்கும் இவரு ஓண்ணும் தெரியாத பாப்பா பாருங்க.//

நீங்கள் இப்படி எழுதியது தவறு. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை கொச்சைப்படுத்தும் வேலை.

இருப்பினும் உங்களுக்கு விளங்கிக் கொள்ள சிறு விளக்கம்.

புதுவை இரண்டு சுகுமாரன்

நான் புதுச்சேரி இரா.சுகுமாரன்
மற்றொருவர் புதுவை கோ. சுகுமாரன்

இரா.சுகுமாரன் said...

//தேவதாசி முறைக்கு ஒத்துக் கொண்டு எந்த பெண் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். வலியப் போய் ஆக்குவதுதான் தவறு.//


விபச்சாரம் என்பது வயிற்றுப் பிழைப்புக்காக சிலரால் நடத்தப் படுகிறது. திமிரெடுத்த சில மேல் தட்டுக்களும் அத்தகைய வேலையை செய்கிறது. வலிய வருவதால் சட்டம் அதனை அனுமதிக்குமா?.

குடும்பத்தில் இருக்கும் பெண்களை வயிற்றுபிழைப்புக்காக அன்றி இத்தகைய நடவடிக்கையை அனுமதிப்பார்களா?.

எப்படியும் இது அனுமதிக்க இயலாத ஒன்று தான்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தேவதாசி முறை நம் இந்து சமூகத்தில் ஏற்று கொள்ளப்பட்ட முறைதானே? கவிஞர் கண்ணதாசனும் அர்த்தமுள்ள இந்துமதத்தில் இப்படியொரு முறை இருந்ததை சொல்லியிருக்கிறாரே?

இருந்த ஒரு முறையை எதிர்ப்பது என்பது கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்துகொள்வது போன்றது.