அடுத்தவர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கவேண்டும். எவ்வளவு பெரிய மனநோயாளித்தனம் ஆட்சி வெறியில் இருந்த போது வெறியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி அதன் விளைவுகளால் சந்தோசம் அடையும் இரக்கமற்ற, மனித தன்மையற்ற கொடூரம் செயலலிதாவிடம் காணப்படுகிறது பாருங்கள்.
படியுங்கள் கருணாநிதி அறிக்கை:
“தம்பி முரசொலி மாறனின் உடல்; கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது; இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் தெரியுமே; அடுத்த தெருவில் ஜெயலலிதா வீட்டார் பட்டாசு கொளுத்தி; அது பகல் முழுதும், இரவு முழுதும் வெடித்த சப்தத்தை அவர்கள் எல்லாம் கேட்டார்களே; அது போலத் தான்; இப்போது மழை வெள்ளப் பாதிப்பால் மக்கள், அந்த மக்களின் துயர் துடைத்திட நாம் துடித்துத் தொண்டாற்றும் போது; ஜெயலலிதா மட்டும், அன்று மாறனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடியது போல, இப்போதும் வெள்ளத் துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த அரசை, நம் உள்ளம் பதறிட வார்த்தைகளைப் பட்டாசாக வெடித்து "மக்களுக்கு நிவாரண உதவியே அரசு செய்யவில்லை'' என்று "டான்சி புகழ்'' ஜெயலலிதா, மகாமகப் புளுகு புளுகுகிறார் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.”
முழுமையான தகவலுக்கு மகாமகப் புளுகு புளுகுகிறார் ஜெயலலிதா: கருணாநிதி : நன்றி வெப்துனியா.
Sunday, November 30, 2008
செயலலிதாவை போல் ஒரு மனநோயாளி யாருமில்லை
Posted by
இரா.சுகுமாரன்
at
12:10 AM
2
comments
Labels:
அரசியல்,
ஆரியம்,
சமூகம்,
செயலலிதா,
பார்ப்பனர்

Saturday, November 22, 2008
ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா:திருமாவளவன் ஜெயலிதாவுக்கு பகிரங்க கடிதம்!
ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக திருமாவளவன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்கட்கு எழுதிய பகிரங்க கடிதம். அவர் எழுதியுள்ள கடிதத்தினை தமிழகத்திலிருந்து வரும் குமுதம் வார இதழ் வெளியிட்டுள்ள கடிதம் பின் வருமாறு:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல்.

மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான்.
எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்தான்! தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பாதுகாப்புக் கோரும்போது, நீங்கள் மட்டும் உங்களுக்குப் பாதுகாப்பு கேட்டுக் குரல் எழுப்புகிறீர்கள். எல்லோருமே இந்திய அரசையும் சிங்கள அரசையும் எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. அரசை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துகிறீர்கள்! இருபத்தைந்து ஆண்டுகளாக மின்சாரமே இல்லாமல் இருட்டில் உழலும் ஈழத்தமிழர்களுக்காக, இங்கே எல்லோரும் வெளிச்சம் கேட்டு வெகுண்டெழும்போது, நீங்கள் மட்டும், இங்கே நிலவும் சில மணி நேர மின்வெட்டுக்காக கொதித்து எழுகிறீர்கள்! அரசியல் முரண்பாடுகளையெல்லாம் மறந்து, இனமான உணர்வுடன் இணைந்து மற்ற தலைவர்களெல்லாம் மழையிலே நனைந்து மனிதச் சங்கிலியாய் கைகோர்த்து நிற்கும்போது, நீங்கள் மட்டும் தேர்தல் கூட்டணிக்காக யாரோடு கைகோர்க்கலாமென்று துடியாய்த் துடிக்கிறீர்கள்!
புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஈழத்தமிழினத்தையே அழித்தொழிக்கும் இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணியை உடைக்க, ஒட்டுமொத்த தலைவர்களும் ஒன்றுபட்டு முயற்சிக்கும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. கூட்டணியை உடைக்கவே படாதபாடு படுகிறீர்கள். சிங்கள இனவெறியர்களால் பட்டினி கிடந்து சாகும் ஈழத்தமிழர்களுக்காக, இங்குள்ள தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் தம்மால் இயன்ற நிதியைத் தாயுள்ளத்தோடு அள்ளிக் கொடுக்கும்போது, நீங்கள் மட்டும் இரக்கமே இல்லாமல் இறுக்கமாயிருக்கிறீர்கள்! கடுமையான விமர்சனங்களால் கூட்டணி உறவே முறிந்துபோன நிலையிலும், பா.ம.க.வும், இந்திய அரசோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணியிலிருந்து வெளியேறிய இடதுசாரிகளும்கூட, ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தில், முதல்வரின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை அழுத்தமாக வைத்து வலுவாகக் குரலெழுப்பினர். ஆனால், நீங்களோ அந்தக் கூட்டத்திற்கு உங்கள் கட்சியிலிருந்து யாரையுமே அனுப்பாமல் புறக்கணித்துவிட்டீர்கள்.
ஒரு பீகாரியை மும்பையிலே கொன்று விட்டார்கள் என்பதற்காக, பீகார் மாநில கட்சித் தலைவர்கள் அனைவருமே எதிர் எதிர் துருவங்களிலிருந்த நிலைமாறி, ஒன்றுபட்டு நிற்கும்போது, நீங்கள் மட்டும் ஈழத்தமிழினத்தையே அழிக்கும் இனப்படுகொலையைக் கண்டும்கூட, தி.மு.க.வுடனான முரண்பாட்டையே முன்னிறுத்தி, தமிழின ஒற்றுமையைச் சிதைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்! விடுதலைப்புலிகளால் தங்களின் உயிருக்கு ஆபத்து என்று அடிக்கடி சொல்லுகிறீர்கள்! `கருப்புப் பூனை' பாதுகாப்புக்காகவே விடுதலைப் புலிகளை எதிர்க்கிறீர்கள்!
இருந்தாலும், விடுதலைப்புலிகளைச் சாக்குவைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறீர்கள். விடுதலைப்புலிகளை தி.மு.க. ஆதரிப்பதாகப் பழி சுமத்தி, காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் சிக்கலுண்டாக்கப் பார்க்கிறீர்கள்! `திருமாவளவனைக் கைது செய்' என்று வற்புறுத்தி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடைவெளி உண்டாக்கவும் பார்க்கிறீர்கள்! ஈழத் தமிழன் பூண்டோடு அழிந்தாலும், சிங்களவனை எதிர்ப்பதைக் காட்டிலும் தி.மு.க.வை எதிர்ப்பதுதான் உங்கள் அரசியல் என்பதை நிலைநாட்டி வருகிறீர்கள்! விடுதலைப் புலிகளை எம்.ஜி.ஆர். ஆதரித்தார்! பொருளுதவிகளைச் செய்தார்!
நீங்களும் ஆதரித்தீர்கள்! இது நாடறிந்த உண்மை! ஆனால், உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! அன்றைய நாளிலிருந்து இன்றைய நாள்வரை எப்போதாவது தி.மு.க. விடுதலைப் புலி களை ஆதரித்ததுண்டா? தொடக்கத்திலிருந்து `டெலோ' இயக்கத்தையும், பெரியவர் அமிர்தலிங்கம் போன்றவர்களையும் தானே தி.மு.க. ஆதரித்து வந்தது! அன்றும் இன்றும் தி.மு.க. விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சிக்கிறது என்பதுதானே உண்மை! ஆனாலும் விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதையே இப்போதும் செய்யவேண்டுமென்பதுதானே உங்கள் ஆசை!
உங்கள் ஆசை நிறைவேற, ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா? தமிழர்களின் தயவால், தலைவராக வலம் வரும் நீங்கள், தமிழர்களின் வாக்குகளால் ஆட்சியதிகாரத்தைச் சுவைத்த நீங்கள், தமிழர்களைக்கொண்டே மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் நீங்கள், அதே தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, இளிச்சவாயர்களாக்கி, தமிழினத்துக்கெதிராகவே செயல்படும் போக்கு நியாயம்தானா? இது தமிழினத்துக்கு எதிரான துரோகமென்று ஒரு நொடிப் பொழுதாவது உங்கள் நெஞ்சு உறுத்தவில்லையா? திடீரென்றா புலிகள் ஆயுதமெடுத்தார்கள்! காலம் காலமாய் சிங்களவன் செய்துவரும் கொடுமைகளுக்கு ஒரு வரம்பு உண்டா? உலகமே அறிந்திருக்கும் இந்தக் கொடூரம் உங்களுக்குத் தெரியாதா? எந்த அடிப்படையில் சிங்களவனை ஆதரிக்கும் வகையில் உங்களால் செயல்பட முடிகிறது? `செஞ்சோலை' என்னும் பள்ளியில் குண்டு போட்டு சின்னஞ்சிறு பிஞ்சுகளைக் கொன்றழித்த கொடுமையைக் கண்ட பிறகுமா, நீங்கள் சிங்களவனின் போக்கை ஆதரிக்கிறீர்கள்?
இங்கே தலைவர்கள் எல்லாம் தாயுள்ளத்தோடு பதறும்போது, நீங்கள் மட்டும் எப்படி இப்படி?
நீங்கள் இதிலும் மாறுபட்டவர்தான்! ஆனால், மாறாதவர்!
தோழமை கலந்த வேதனையுடன்...
நன்றி - குமுதம் வார இதழ்
நன்றி தமிழ் செய்தி
Wednesday, November 19, 2008
இறையாண்மை இல்லாத இந்தியா
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரின்போது ராணுவத்தை விட்டு விட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர்கள் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1500 பேர் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் போரின்போது அவர்களுடன் மோதி உயிரை விட விரும்பாத ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமறைவாகி விட்டவர்களில் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவடைந்த 1500 பேர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
முழுமையான செய்திக்கு ராணுவத்தை விட்டு ஓடிப் போன 1500 சிங்கள வீரர்களுக்கு சிறை படிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, November 18, 2008
ஏய் இராஜபக்சே போரை நிறுத்தடா !!
ஏய் இராஜபட்சே நாயே போரை நிறுத்தடா !!
எம் தாய் தமிழ் சொந்தங்களை சுட்டுக்கொன்று குவிக்கிறாயே ! மானிதாபிமானமற்ற கொடுங்கோலா !!
உடனே போரை நிறுத்து.!
இராணுவ ரீதியாக இனப்பிரச்சனைய தீர்க்க முடியாது என்று புரிந்து கொள்ள உனக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.
நீ பூநகரியை பிடித்துவிட்டாய் !!
மாங்குளத்தையும் பிடித்துவிட்டாயாம்.
நாளை நீ கிளிநொச்சியையும் பிடிக்கலாம்.
அறிவுகெட்ட இராஜபக்சே நீ ஒன்றை புரிந்து கொள்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தன் தந்தையை இழந்த சிறுவன பல ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து தேசம் சென்று தன் தந்தையை கொன்ற கொலை வெறியன் ஜெனரல் டயரை சுட்டு கொன்றதாய் வரலாறு சொல்கிறது. இந்த வரலாற்றிலிருந்து எதையும் பிரிந்து புரிந்து கொள்ளாத ஒரு அடிமுட்டாளாக நடந்து கொள்கிறாய் நீ.
இந்த வரலாற்றிலிருந்து நீ ஒன்றை புரிந்து கொள். இன்று துப்பாக்கி முனையில் செய்கிற உன் முறையிலான அமைதிப்போரின் இறுதி வெற்றி உனக்கல்ல. இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் போல் எத்தனையோ எனது தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்களின் இதயம் எரிந்து கொண்டிருக்கிறது. இதயத்தில் எரிகிற நெறுப்பு ஒரு நாள் மீண்டும் வெடித்து சிதறும் என்பதை மட்டும் மறந்து விடாதே!
உன் துப்பாக்கி முனையிலான அமைதியின் விளைவாக நீயும் ஒருகாலத்தில் ஜெனரல் டயரின் நிலைக்கு உள்ளாவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே!.

Friday, November 14, 2008
புதுச்சேரியில் தமிழீழ ஆதரவு குரல்கள்- சுவரொட்டிகள் மற்றும் நிகழ்வுகள்
1. புதுச்சேரியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கும் கடந்த நவம்பர் 1, 2008 அன்று முருங்கப்பாக்கத்தில் தொடங்கிய இந்த ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
நாளை சனிக்கிழமை 15-11-2008 மாலை ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தெருமுனைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில், சின்னக்கடை, நேரு வீதி, ஆனந்த இன் உணவகம் அருகில், முத்தியால் பேட்டை மணிகூண்டு, லாசுப்பேட்டை, பாக்குமுடையான் பேட்டை, சாரம், பெரியார் சிலை, பழையப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடை பெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமீழீழ ஆதரவாளர்கள் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளன.
2. விடுதலைச் சிறுத்தைகளின் சுவரொட்டி இன்று பரவலாய் புதுச்சேரி முழுவதும் காணப்பட்டது.
சிங்கள இனவெறியால்
எரிகிறது ஈழத்தமிழ்த்தேசம்!
தாய்த் தமிழர்களே!
என்ன செய்வதாய் உத்தேசம்?
3. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வைகோ கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை அரசை வலியுறுத்தி தமிழீழத்தில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் இன்று புதுச்சேரி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று உண்ணா விரதப் போராட்டம் நடந்தது இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக்கழகம் நடத்தியது. இப்போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Monday, November 03, 2008
புதுச்சேரியில் இலங்கைப் பிரச்சனை ஒட்டி விடிய விடிய ஆர்பாட்டம் 400க்கும் மேற்பட்டோர் கைது
புதுச்சேரியில் சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலையை கண்டித்து முருங்கப்பாக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ் அமைப்புகள் சார்பாக பட்டினிப்போர் நடைபெற்றது,
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் பாவாணன், பெரியார் திராவிடர் கழகம் லோகு அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அழகிரி, விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், ராஷ்டிய ஜனதா தளம் சஞ்சிவி, , செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, பகுஜன் சமாஜ் கட்சி தங்க. கலைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ”சோனியாகாந்திக்கும் இராசீவ் கொலையில் தொடர்பு உள்ளது” என்று சுப்பிரமணியசாமி எழுதியதை எந்த காங்கிரசுக்காரர்களும் எதிர்க்கவில்லை எங்களைப் போன்றவர்களை எதிர்க்கிறீர்கள் என தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த இரா.அழகிரி பேசினார், மேலும் உள்ளூர் பிரச்சனை தொடர்பாக இளைஞர் காங்கிரசு பிரமுகர் ”பாண்டியனை” கண்டித்து அழகிரி பேசியதை தொடர்ந்து பாண்டியனுக்கும் உண்ணாவிரத போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதை ஒட்டி தமிழ் உணவாளர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்ததில் 150 க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடினர். எனக்கும் அழைப்பு வந்ததின் பேரில் நானும் களத்தில் நேரில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.
பாண்டியனை கண்டித்து பேசியதற்கான மன்னிப்பு கோரவேண்டும் என தரக்குறைவாக பேசி பாண்டியன் மற்றும் அவருடன் வந்த சிலர் கேட்டனர். அதை தொடர்ந்து பிரச்சனை வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தக்கூடாது என்றும் இவ்வாறு பேசியவர்களை கைது செய்யவேண்டும் கூறி சாலை மறியல் செய்தனர். இதில் புதுச்சேரி காங்கிரசு தலைவர் சுப்ரமணியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், சோனியாகாந்தி மற்றும் இராசீவ் கொலை தொடர்பாக கொச்சைப்படுத்தி பேசியதாலேயே பிரச்சனை செய்ததாக இளைஞர் காங்கிரசு பாண்டியன் பத்திரிகை தொலைகாட்சிகளில் பேட்டி கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. பிரச்சனையை திசைதிருப்பி மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் வல்சராசுக்கு இந்த பட்டினிப்போராட்டம் நடத்திய கட்சிகள் மீது ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை பயன்படுத்திக் கொண்டு பிணையில் வர இயலாத (case under Section 153 (trying to provoke with the intent of causing riot)) 186, 294, 506/2, 34 IPC, Section 14 (Pondicherry act) ஆகிய பிரிவின் கீழ் தந்தை புதுச்சேரி பெரியார் திராவிடர்க் கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு, இரா. அழகிரி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றகழகத்தை சேர்ந்த மூவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிகழ்வுக்குப்பின் அடுத்த கட்டமாக 02-11-2008 ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சாலை மறியலின் பின் இரண்டு பேருந்துகளில் 100க்கும் அதிகமானவர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் திங்கள் மாலை 6 மணியளவில் 77 பேர்மட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் இரா. அழகிரி மறுமலர்ச்சி திராவிடர்க்கழகத்தின் சந்திர சேகர் ஆகியோருக்கு இது வரை பிணை வழங்கப்படவில்லை.
இந்து பத்திரிக்கை செய்தி -
தினத்தந்தி செய்தி
ஒருபார்வைக்காக இணைத்துள்ளேன்.
புகைப்படம்: இரா.சுகுமாரன்
செய்திகள் அனைத்தும் : நேரடி தொகுப்பு
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் பாவாணன், பெரியார் திராவிடர் கழகம் லோகு அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அழகிரி, விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், ராஷ்டிய ஜனதா தளம் சஞ்சிவி, , செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, பகுஜன் சமாஜ் கட்சி தங்க. கலைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ”சோனியாகாந்திக்கும் இராசீவ் கொலையில் தொடர்பு உள்ளது” என்று சுப்பிரமணியசாமி எழுதியதை எந்த காங்கிரசுக்காரர்களும் எதிர்க்கவில்லை எங்களைப் போன்றவர்களை எதிர்க்கிறீர்கள் என தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த இரா.அழகிரி பேசினார், மேலும் உள்ளூர் பிரச்சனை தொடர்பாக இளைஞர் காங்கிரசு பிரமுகர் ”பாண்டியனை” கண்டித்து அழகிரி பேசியதை தொடர்ந்து பாண்டியனுக்கும் உண்ணாவிரத போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதை ஒட்டி தமிழ் உணவாளர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்ததில் 150 க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடினர். எனக்கும் அழைப்பு வந்ததின் பேரில் நானும் களத்தில் நேரில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.
பாண்டியனை கண்டித்து பேசியதற்கான மன்னிப்பு கோரவேண்டும் என தரக்குறைவாக பேசி பாண்டியன் மற்றும் அவருடன் வந்த சிலர் கேட்டனர். அதை தொடர்ந்து பிரச்சனை வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தக்கூடாது என்றும் இவ்வாறு பேசியவர்களை கைது செய்யவேண்டும் கூறி சாலை மறியல் செய்தனர். இதில் புதுச்சேரி காங்கிரசு தலைவர் சுப்ரமணியன் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், சோனியாகாந்தி மற்றும் இராசீவ் கொலை தொடர்பாக கொச்சைப்படுத்தி பேசியதாலேயே பிரச்சனை செய்ததாக இளைஞர் காங்கிரசு பாண்டியன் பத்திரிகை தொலைகாட்சிகளில் பேட்டி கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. பிரச்சனையை திசைதிருப்பி மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் வல்சராசுக்கு இந்த பட்டினிப்போராட்டம் நடத்திய கட்சிகள் மீது ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை பயன்படுத்திக் கொண்டு பிணையில் வர இயலாத (case under Section 153 (trying to provoke with the intent of causing riot)) 186, 294, 506/2, 34 IPC, Section 14 (Pondicherry act) ஆகிய பிரிவின் கீழ் தந்தை புதுச்சேரி பெரியார் திராவிடர்க் கழக தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு, இரா. அழகிரி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றகழகத்தை சேர்ந்த மூவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு ஒரு பொய்வழக்காகும், ஏனெனில் ஏற்கனவே துறைமுக விரிவாக்கத்திட்டதின் போது இவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி இந்த விரிவாக்கத்தை தடுத்தனர், இதனால் உள்துறை அமைச்சர் வல்சராசுக்கு வரவேண்டிய பல கோடி தொகை வர இயலாமல் போனது எனவே இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி போராட்டக்காரர்களின் மீது பொய் வழக்குப் போட்டு பழிவாங்கத்துடிக்கிறது காங்கிரசு அரசு.
கைது செய்யப்பட்ட மற்றவர்களை இரவு 8.00 மணியளவில் விடுதலை செய்வதாக காவல் துறை அறிவித்தது. ஆனால் பொய் வழக்கு போடப்பட்ட 3 பேர்களை விடுதலை செய்யாவிட்டால் தாங்களும் வெளியேற மாட்டோம் என 100 க்கும் மேற்பட்டோர் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் முழக்கமிட்டனர், ஆனால் காவல் துறை படியவில்லை, மேலிடத்து உத்தரவு படி செய்வதாக காவல் துறை சொன்னது.
இரவு நேரம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டு பட்டினிப் போராட்டம் நடத்தாமல் போனதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தி அதில் கைது செய்யப்பட்டு விடுதலையான 200 க்கும் மேற்பட்டோர் கோரிமேடு காவல் நிலைய வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், இவர்களை காவல் துறை உள்ளே அனுமதிக்கவில்லை, உள்ளே இருப்பவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தின் உள்ளேயும் காவல் நிலையத்தின் வெளியேயும் 300 முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர், பெரியார் விடுதலைக்கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிலிருந்தும் இப்போராட்டத்தை நடத்தினார். நள்ளிரவு ஒன்று முப்பது மணிவரை இந்த ஆர்பாட்டம் நடந்தது.
இரவு 12 மணி அளவில் கோரி மேடு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இரவு வெகுநேரமானதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என முடிவு செய்து 10 நிமிடங்களில் இந்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட முறை காவல் துறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த்னர். இப்பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் பாவாணன், பகுசன் சமாஜ்வாடி தங்க கலைமாறன் பெரியார் திராவிடர்க்கழகத்தின் ம.இளங்கோ, வீர.மோகன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு. தமிழ்மணி உள்ளிட்ட சிலர் காவல் துறையுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் பலர் வந்து வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தும் காவல் கண்காணிப்பாளர் ”சிவதாசன்” மட்டும் காங்கிரசார் பிரச்சனை செய்வார்கள் என்று கூறி பொய்வழக்கை உறுதி செய்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் காவல் நிலையத்தில் இடையிடையே காவல் துறையை எதிர்த்து முழக்கமிட்டனர். வழக்குப் போடுவதாக இருந்தால் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதால் கைது என்று வழக்குப் போடுங்கள் என்று காவல் துறையினரை கேட்டும் காவல் துறை அந்த பிரிவில் வழக்கு போடவில்லை, இந்த பொய் வழக்கை கண்டித்து தங்களையும் கைது செய்யுங்கள், இல்லையெனில் வெளியேறமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட்டனர், பின்னர் இறுதியாக மறுநாள் போராட்டம் நடத்த வேண்டி வரலாம் என்பதால் வெளியே இருந்து பணியாற்ற சிலக்குழுக்கள் பிரித்து அனுப்பபட்டது. மறுநாள் மறியல் போராட்டம் உள்ளிட்டவைகளை செய்வதற்காக சிலர் அந்த குழுவிலிருந்து சிலர் வெளியேறினர் இதனால் விடுதலை செய்யப்பட்ட 77 பேர்களுடன் 3 பேர்களுடன் மொத்தமாக 80 பேர் இரவு இரண்டு முப்பது மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 3 மணியளவில் கைது செய்தவர்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது ஆனால் அதிகாலை 5 மணி வரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்து பின்னர் புதுவையில் காலப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை கண்டித்து புதுவையின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிகழ்வுக்குப்பின் அடுத்த கட்டமாக 02-11-2008 ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சாலை மறியலின் பின் இரண்டு பேருந்துகளில் 100க்கும் அதிகமானவர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் திங்கள் மாலை 6 மணியளவில் 77 பேர்மட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத்தின் இரா. அழகிரி மறுமலர்ச்சி திராவிடர்க்கழகத்தின் சந்திர சேகர் ஆகியோருக்கு இது வரை பிணை வழங்கப்படவில்லை.
இந்து பத்திரிக்கை செய்தி -
தினத்தந்தி செய்தி
ஒருபார்வைக்காக இணைத்துள்ளேன்.
புகைப்படம்: இரா.சுகுமாரன்
செய்திகள் அனைத்தும் : நேரடி தொகுப்பு
Posted by
இரா.சுகுமாரன்
at
9:48 PM
3
comments
Labels:
அரசியல்,
ஈழம்,
கைது,
சமூகம்,
புதுச்சேரி,
போராட்டம்,
மறியல்

Subscribe to:
Posts (Atom)