புதுச்சேரியில் ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரை இழந்த முத்துக்குமாருக்கு அஞ்சலி நிகழ்ச்சியும் மெளன ஊர்வலமும் நடைபெற்றது.
ஊர்வலம் மாலை 5.30 மணியளவில் சிங்காரவேலர் சிலை அருகில் தொடங்கியது புதுச்சேரி பேரூந்து நிலையம், நெல்லித்தோப்பு, லெனின்வீதி, சாரம், காமராசர் சாலை, நேரு வீதி, மாதாக்கோயில் வீதி வழியாக பாரதி பூங்கா வழியாக புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள காந்தி சிலையை அடைந்தது. இந்த மெளன ஊர்வலத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் முத்துக்குமாருக்கு பிரான்சிலிருந்து வந்த வெளிநாட்டினர் உள்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலத்தின் போது முத்துக்குமார்எழுதிய இறுதி அறிக்கையை நகல் எடுத்து மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
3 comments:
Thanks for Puduvai Peoples
Well done Sukumar
and also make some fund to given Muthukmar family. all ouver Tamilnadu collect money to give their family so think and discuse your pondy blog people I hope you do your best.. plz call my cell.
Amirthalingam
chennai
//Well done Sukumar
and also make some fund to given Muthukmar family. all ouver Tamilnadu collect money to give their family so think and discuse your pondy blog people I hope you do your best.. plz call my cell.
Amirthalingam
chennai//
நன்றி திரு அமிர்தலிங்கம், உங்கள் கோரிக்கை பரிசீலிக்கலாம் வலைப்பதிவர்கள் கூட இந்த செயலை செய்யலாம் நாங்கள் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புக்கு ஆதரவாக அவர்களிடம் நிதி அளிப்பதாக முடிவு செய்துள்ளோம். தொலைபேசி எண்?
Post a Comment