Sunday, February 01, 2009

துரோகமே உருவான காங்கிரசும் தமிழினமும்


இலங்கையில் போரை நடத்துவது யார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு தெளிவாகி இருக்கும், வெள்ளைக்காரனுக்கு பிறந்த கள்ளக் குழந்தையான இந்திய தேசிய காங்கிரசு அரசுதான் அங்கே போரை நடத்தி வருகிறது என்பதை பல்வேறு செய்திகளிலிருந்து உறுதிப்படுத்தி கொள்ள முடிகிறது.

நாம் அறிந்து வகையில் திருட்டுக் கும்பலாக நாடு கடத்தப்பட்ட சிங்களர்களுக்கு இப்போது எப்படி இவ்வளவு வலிமை வந்தது என பார்க்கின்ற போது இப்போதுதான் அதன் முழு வெளிச்சம் உலகிற்கு வெளியே வரத் தொடங்கியுள்ளது, அவன பிடிப்பேன், இவன பிடிப்பேன் என கூறும் தமிழக உளவு பிரிவு கூட இதை தெரிந்து கொள்ளவில்லையா? தெரிந்தே தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்திவருகிறதா? என்றெல்லாம் பார்க்கிற போது இந்த அரசுகள் மக்கள் விரோத அரசாக மக்களை ஏமாற்றுகிற அரசாக மோசடி அரசுகளாக இருப்பதை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசு அவ்வப்போது மெளன காத்தாலும் அடிக்கடி இலங்கை அரசு தான் இந்தியா என்ன எங்களிடம் பேச வருகிறது என்பதை அறிவித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்திய அரசு வாய்திரக்கவில்லை. சிவசங்கர் மேனர் இந்தியாவிலிருந்து கிளம்பிய உடன் இந்திய பத்திர்க்கைகள் போர் நிறுத்தம் கேட்டு சிவசங்கர் மேனர் செல்கிறார் என எழுதின ஆனால், இலங்கை அரசோ அது பற்றி அவர் பேசமாட்டார் என அறிவித்தது.

இந்திய அரசு மக்களுக்கு எந்த வித அறிவிப்பையும் கொடுக்காமல் இலங்கை செல்கிறது அல்லது பொய்யான பரப்புரைகளை தமிழக அரசை விட்டு பரப்பிவிட்டு பின்னர் அங்கு வேறு ஏதோ பேசிவிட்டு வருகிறார்கள். இந்திய காங்கிரசு அரசுக்கு தமிழ்மக்களின் வாக்கு தேவையில்லை என அது உறுதி செய்து கொள்கிறது. அல்லது தமிழக அரசியல் வாதிகளின் மோசடிப் போக்கை காங்கிரசு அரசு புரிந்து கொண்டுள்ளது.

இலங்கைக்கு வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் இராணுவ தளவாடங்களை அனுப்பி இருக்க முடியும் ஆனால் தஞ்சையிலிருந்து அனுப்பி வைப்பது தமிழர்களை கேலி செய்கிற ஏளனம் செய்கிற விசயமாகவெ இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரசின் இந்த கயவாளித்தனத்திற்கு தமிழக பிற கட்சிகளின் கயவாளித்தனமான கொள்கைகளே காரணமாகும் என்பது உறுதி. இலங்கையில் தமிழினம் அழிந்தாலும் தன் நலம் பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் தான் இந்திய தேசிய காங்கிரசின் இந்த ஏளமான நடவடிக்கைக்கு காரணமாகும்.

தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் தாம் அடுத்தமுறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்து தான் இந்த கட்சி இப்படி நடந்து கொள்வதாக தெரிகிறது.


தமிழ் மக்களே சிந்தியுங்கள் !
இந்திய அரசுதான் தமிழினத்தின் முதல் எதிரி!
இந்திய காங்கிரசு கொலைவெறி அரசை தூக்கி எறிவோம்!!!
இந்திய மேலாதிக்கத்தை எதிப்போம்!!!!

4 comments:

Anonymous said...

Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamil until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV, If their business get affected, and sure they’ll change their stand.

Anonymous said...

Does she deserved to be called 'ANNAI' sonia?
it is a beautiful tamil word which encapsulates motherhood and love towards children.
Sonia is the power behind the killing of innocent babies and children in Vanni at present.
There are hundred of children dying and more are becoming disabled and injured.
she has blood in her hands.
How can she be called Annai?
Probably her tamil nadu congress slaves coined this adjective.

இரா.சுகுமாரன் said...

///Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamil until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV, If their business get affected, and sure they’ll change their stand.//

முற்றாக இந்த தொலைகாட்சிகளை புறக்கணிக்க இயலவில்லை, இருப்பினும் தங்கள் கருத்துகள் ஆராயத்தக்கதாகும்.

Anonymous said...

கலைஞர் சோரம்போன மனிதன். சோனியாவிடம் தமிழன்மானததை அடகு வைத்துவிட்டார்.
அடுத்த தலைவர் என எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின் என்றாவது வாய் திறந்தாரா?
கனிமொழி எங்கே?

இவர் எப்போது எங்களைக் காப்பாற்றப் போகின்றார்.

பதவிக்காக சோனியாவிடம் ஈழத்துக்கான வரலாற்று வாய்ப்பை விற்று பதவி பெற்று தன் முகத்தில் தானே கரி பூசி அவரது 84 ஆண்டுகால வாழ்வை அர்த்தமற்றதாக்கி ஒரு அற்ப மனிதனாக ஒதுங்கப் போகின்றார்.

" உண்டு களித்து ஈண்டு எமன் வாயிற் படுதல்
பன்றிக்கும் உண்டாம் அப்பலன்"

‍..திருமூலர்..

வேதனியில்....

ஒரு ஈழத் தமிழன்