வரலாற்றில் கருணாநிதி தமிழர்களுக்கு செய்த
துரோகத்தை மறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை அவர் மேற்கொள்வதாக தெரிகிறது. அதன்
பின்னர், நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு
அளித்தோம் என்று கருணாநிதியும் பின்னர் ஸ்டாலினும், அதன் பின்னர் கருணாநிதியின்
பேரப்பிள்ளைகளும் ஆட்சியில் இருந்து கொண்டு தாங்கள் தான் தமிழர்களுக்கு வாழ்வுரிமை
வழங்கியதாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏற்கனவே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும்
தமிழர்களுக்கு எதிராகவும் அறிக்கை அளித்த தமிழின துரோகிகளும் இப்பயணத்தில் இடம்
பெறுகிறார்கள்.
இராசபக்சே அளிக்கும் விருந்தை சாப்பிட்டு
விட்டு இங்கு வந்து தமிழர்கள் சுபீச்சமாய் வாழ்வதாக இங்கு வந்து அறிக்கை
விட்டாலும் விடுவார்கள்.
இதனை வாய்பிளந்து கேட்டுக் கொண்டே
இருக்கும் இந்த அறிவு கெட்ட தமிழர்கள் மட்டும் திருந்தப் போவதில்லை என்பது மட்டும்
உறுதியாகத் தெரிகிறது.
1 comment:
பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!
http://siruthai.wordpress.com/2009/10/09/பிரியாணி-தின்ன-தயாராகும்/
Post a Comment