போட்டோசாப்
CS6 இல் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒருங்கு குறி எழுத்துருக்கப் பயன்படுத்தும்
வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்டிசைன் CS6 மற்றும் இல்லுசுரேட்டர் CS6 ஆகியவற்றுக்கும்
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அளிக்கப்படாத
இந்த வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
 |
படம்-1 |
நான்
போட்டோசாப் CS6 (PHOTOSHOP CS6) ஐ பதிவிறக்கம் செய்தபின்பு அதில் தமிழில் தட்டச்சு
செய்த போது அதற்கான ஆதரவு இல்லை. எனவே, தமிழ் பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை என்று கருதிக்
கொண்டிருந்தேன்.
ஆனால்,
தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டதைப் பின்னர் நான்
அறிந்தேன்.
போட்டோசாப் மென்பொருளில் தமிழை எழுத்துக்கள் சரியாகத் தெரிய வேண்டுமானால் அதன் அமைப்பில்
சிறிய மாற்றம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, தமிழ் எழுத்துக்கள் அதன் சரியான
வடிவில் தெரிகிறது. இல்லையெனில் கொக்கி கொக்கி வடிவத்தில் தான் தெரிகிறது.
அமைப்பை
எப்படி மாற்றுவது
போட்டோசாப்பில்
மொழிக்கான அதன் அமைப்பை மாற்ற வேண்டுமானால் அதன் Edit பகுதிக்கு சென்று Preferences
பகுதியை தேர்வு செய்யவேண்டும் பின்னர் அங்குள்ள Type என்பதைக் கிளிக் செய்யவும். பார்க்க படம்-2
 |
படம்-2 |
பின்னர்
Type என்பதைக் கிளிக் செய்த பின் Middle Eastern என்பதைத் தேர்வு செய்து போட்டோசாப் மென்பொருளை
மீண்டும் தொடக்கவும். படம்-3 அவ்வாறு செய்தால் தமிழ் மொழியை கொக்கிகள் இல்லாமல் சரியான
வடிவத்தில் தெரிகிறது. இதில் வழக்கம் போல ஏகலப்பை மென்பொருளைப் பயன்படுத்தித் தட்டச்சு
செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உள்ளீடு செய்ய இயலுகிறது.
 |
படம் 3 |
இந்தத் தமிழ் ஒருங்கு குறி பயன்படுத்தும் வசதி பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்பதோடு நமது மொழிக்கு மொன்பொருள் தாயாரிப்பாளர்கள் தொடர்ந்து புறக்கணித்த நிலையில் தற்போது ஆதரவு வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிதாகும்.