மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோசு 8 இல் தமிழுக்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. நன்கு மேம்படுத்தப் பட்டவகையில் வெளிவந்துள்ளது.
தொடுதிரை வசதி அளிக்கப்படுள்ளது. ஆனால் அதற்கென தனி கணினித்திரை தேவையாக உள்ளதால் அதனை சோதிக்க இயலவில்லை.
"எக்சுபி" யில் லதா என்ற எழுத்துரு சேர்க்கப்பட்டது. இதுவே, பலரால் இன்று
வரை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், விண்டோசு 7 இல் விசயா என்ற எழுத்துருவும், விண்டோசு 8 செயலிக்கு நிர்மலா என்ற புதிய எழுத்துருவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள இணைப்புகள் பல இன்னும் தமிழில் தெரியவில்லை. இவை தமிழ் படுத்தப்படும் வசதி இருக்குமா என்பது தெரியவில்லை.
விண்டோசு 8இல் தொடக்கம் Start மெனு என்று இல்லை மாறாக கீழே உள்ள படத்தில் உள்ளது போல இணைய உலவி முதலில் உள்ளது. அடுத்து கணினியின் உள் செல்ல ஒரு கோப்பு உள்ளது. அதன் மூலம் தான் நாம் கணினியின் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. சாதாரணமாக விண்டோசு 7-வரை உபயோகித்தவர்கள் கூட இதனை பயன்படுத்துவது பற்றி என்று நன்றாக படித்தபின் இயக்கினால் சற்று எளிதாக இருக்கும். நுழைவது மற்றும் வெளிவருவது பற்றிய பயிற்சி இருக்கவேண்டும்.
தொடக்கம் பக்கம் வரவேண்டுமெனில் வலது பக்க மேல் பக்கமாக மவுசை வைத்தால் தொடக்கம், உள்ளிட்ட சில கருவிகள் தெரிகிறது. மீண்டும் எடுத்துவிட்டால மறைநிலைக்கு சென்று விடுகிறது.

1 comment:
sir you're not on net, firing issue is still pending we need you,,,, write as usual
Post a Comment