தமிழில் இரண்டு ஒருங்கு குறி எழுத்துருக்களை அடோபி நிறுவனம் வெளியிட்டுள்ளது. http://blogs.adobe.com/typblography/2013/09/adobe-tamil-gujarati.html இந்த தமிழ் எழுத்துக்களை வடிவமைத்தவர் Fernando Mello. Fiona Ross மற்றும் ரத்தின ராமநாதன் உதவியுடன் வடிவமைத்துள்ளனர். முன்னதாக தேவநகரி, குர்முகி யிலும் தற்போது தமிழ் மற்றும் குசராத்தி மொழியில் எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது.
அடோபி நிறுவனம் தமிழ் மொழிக்கு அவர்கள் தயாரிக்கும் மென் பொருட்களில் மிக எளிதாகவே ஒருங்குகுறி வசதியை அளித்திருக்க முடியும். ஆனால், தமிழில் அதிக சந்தை இல்லை என்பதோடு மிக அதிக அளவில் அனுமதியில்லாத மென்பொருட்களாக பயன்படுத்தப்படுவதால் தமிழுக்கான வசதியை அளிப்பதில் அந்த நிறுவனம் மிகுந்த தயக்கம் வெளியிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே தமிழ் எழுத்திற்கு ஆதரவு அளிக்கவே தயங்கிய அடோபி நிறுவனம்
வெளிநாட்டு தமிழர்களின் சிலரின் நெருக்குதலில் காரணமாகவே தமிழ் மொழிக்கான
ஒருங்கு குறி ஆதரவு வெளியிட்டிருந்தது. இப்போது தமிழ் மொழிக்கு இரண்டு
எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது.
http://store1.adobe.com/cfusion/store/html/index.cfm?store=OLS-US&event=displayFontPackage&code=1965