Thursday, April 13, 2006

வைகோ வாங்கிய 40 கோடி


கறைபாடாத கரம் அப்படி இப்படி என்று பேசப்பட்ட வைகோ இப்போது தொண்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

உண்மையாகப் பார்த்தால் அவருக்கு அதற்கான வாய்ப்பு இல்லாமையே காரணமாகும். இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என நாம் எடுத்துக் கொள்ளலாம் எனக்கருதுகிறேன்.

கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிபாடும் என்பார்கள் , செயாவின் கூட்டணிக் கட்சி அப்படி இருக்கக்கூடாதா என்ன?

வாழ்க சனநாயம்

நன்றி

(www.karuththu.com)

4 comments:

லக்கிலுக் said...

இவரைப்போய் ஒரு காலத்தில் நான் கலைஞருக்கு மாற்றாக நினைத்திருந்தேன்... இந்த அளவுக்கு கேவலமாகிப் போய் விட்டாரே என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.... இவரெல்லாம் எங்கே இருந்து உருப்பட போகிறார்... பேசாமல் கட்சியைக் கலைத்து விட்டு அதிமுகவில் ஐக்கியமாகி ஜால்ரா அடிக்கலாம்....

Anonymous said...

ஆமாம். கலைஞரோடு இருந்தால் மட்டும்தான் உருப்படுவார்கள். இல்லாவிட்டால் உருப்பட மாட்டார்கள். கட்சியைக் கலைக்க வைக்கத் தானே தாத்தாவுடன் சேர்ந்து இவ்வளவு தாண்டவமாகிறார்கள்.

கோடிகோடியா அள்ளினவனெல்லாம் இப்போ காசுகொடுத்து இன்னொருத்தனிட்ட கோடி பற்றிக் கேட்கச் சொல்றான்.

thiru said...

நண்பரே!

1980 களின் துவக்கத்தில் இந்துமத சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருந்த, இன்றைய ம.தி.மு.க கொள்கைப் பரப்பு செயலாளரை (நாஞ்சில்.பா.சம்பத்) திராவிட அரசியல் அரங்கில் அழைத்து வந்த அவரது அரசியல் ஆசான்கள் வழி, டிசம்பர் 2005ல் கேட்ட செய்தி இது. வைகோ ஜெயா கூட்டணிக்கு போய்விடுவார் 40 சட்டமன்ற இடங்களும்_______கோடி ரூபாய் பேசப்பட்டுவிட்டது என. அந்த தொகை 40 அல்ல, அதை விட பெரும் தொகை. இவை உண்மையா?இல்லையா? வரும் காலத்தில் வெளிவரும்!

இரா.சுகுமாரன் said...

நன்றி திரு(Thiru),luckylook,

கோடிகள் இல்லையேல் அரசியலில் ஏதுமில்லை, இலட்சங்கள் இப்போது கோடிகளாயிற்று. மக்கள் எப்போதும் வாக்களித்துவிட்டு பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடிகிறது.