Tuesday, July 25, 2023

வைகோ அவர்களின் கவனத்திற்கு......

நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாட்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்று செயாவுடனான பழைய தொடர்பு பற்றி வைகோ சொன்னார். ( தினமணி 02-04-2006)

வைகோ, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?.

வைகோ நீங்க, அப்படியே செயா அடித்த கொள்ளையையும் அப்படியே மேடையில அப்பப்ப பேசுங்க. அப்படி பேசினா, நீங்க உண்மையையே பேசுவதாக மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு புனிதர் பட்டங்கள் கூட நாங்க தரோம்.

வைகோ அவர்களே உங்களுக்கே தெரியும். புனிதர் பட்டத்துக்கு நீங்க தகுதியில்லன்னு. கோடி கோடியாய் கொள்ளையடித்து தங்கமாய் அலைந்த செயாவிற்கு “தங்க தாரிகை“ பட்டம் கொடுத்தாங்க இல்லியா? அது போல உங்களுக்கு “புளுகுப்புனிதர்“ என்ற புதிய பட்டம் ஒன்னும் தரோம்.

கடந்த 20 நாட்களில் அவரை 3 முறைகள் சந்தித்துள்ளேன் நான் அவரிடம் கண்ட கடல் அளவு மாற்றம் என்னை திகைப்படைய வைத்துள்ளது. அது உண்மை, அவர் படிப்பாளி, விவேகி, அதிபுத்திசாலி என்று வாங்கிய காசுக்கு குறைவில்லாமல் விசுவாசமாக சேவை ஆற்றுகிறீர் வைகோ.


இதோ சென்ற கூட்டணியில் இருந்தவர்கள் என்ன் சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

மூப்பனார் காங்கிரசு, இரண்டு பொது உடைமைக்கட்சிகள், பா.ம.க கட்சிகளை தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிந்தார். காசு விட்டு எறிந்தால் அவர்கள் காலடியில் வீழ்பவர்கள் தான் அவர்கள் என்று செயாவிற்கு தெரியும்.

தூக்கி எறியப்பட்ட போது, அவர்கள் சொன்ன வார்த்தை "செயா மிகவும் மாறிவிட்டார்" என்பதுதான்.

வைகோ அவர்களே! செயா அவர்களிடம் நீங்கள் கண்ட கடல் அளவு மாற்றம் இப்போது உங்களை திகைப்படைய வைத்துள்ளது போல் மீண்டும் நீங்கள் திகைப்படையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்படி இல்லையென்றாலும் செயா உங்கள் முகத்தில் குத்துவார் அப்போது நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.

ஒருவேளை வாங்கிய காசுக்கு நீங்கள் காலை நக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் திகைப்படைய வாய்ப்புண்டு, ஆனால் அவ்வாறு நடக்குமேயானால் வைகோ அவர்களே தயவு செய்து தமிழன், சுயமரியாதை, மானம், வெட்கம், என்று ஒருபோதும் பேசிவிடாதீர்கள்.

அப்படி நீங்கள் பேசினால் தமிழ் அகராதியில் அந்த வார்த்தைகளும் மானமிழந்து விடும். அப்படியும் பேசுவீர்களேயானால் சொரணையுள்ள தமிழர்களாகிய நாங்கள் அந்த வார்த்தைகளுக்கு அகராதியில் கீழ்க்கண்டவாறு பொருள் மாற்றுவதைத்தவிர வேறு எங்களுக்கு வ்ழியில்லை.


தமிழன் – வெக்கங்கெட்டவென்,

சுயமரியாதை - மானங்கெட்டத்தனம்,

வெட்கம் - சொரணையில்லமை,

மானம் - சூடு சொரணையில்லாம் துதி பாடல்,

மக்கள் நலம் - ஏமாற்று வேலை,

என்று மாற்றிவிடுவோம்.

சரி போகட்டும்.


கூட்டணியில் சேர்ந்த போது நீங்கள் என்ன சொன்னீர்கள், எங்கள் கட்சிக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன். நான் என்னைப்பற்றி கவலைப்பட வில்லை என்று தானே!.


கட்சிய வளர்க்க, உங்க தொண்டர்களுக்கு நல்லதுக்கு இந்த முடிவு எடுத்தீங்க இல்லியா?

இப்ப மக்கள் நலம் மக்களுக்காகத்தான் கூட்டணி சேர்ந்தேன்னு இப்ப பேசுறீங்க.


கட்சி நலன் அப்படின்னா என்ன? உங்க தொண்டர்கள் காண்ட்ராக்ட் எடுக்கணும், சொத்து சேர்க்கணும், இவ்வளவு நாள் உழைத்த தொண்டர்களுக்கு கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரனும் நல்ல முடிவு தான். நாலு கல்யாண மண்டபம், சொத்து சொகம் எல்லாம் உங்கள் தொண்டனுக் கும் கிடைக்க வேண்டாமா?.


செயலலிதாக்கிட்ட பயிற்சி எடுத்துக்குங்க. எப்படி கவர்னர வாங்கலாம், நீதிபதி வீட்டில எப்படி கரண்ட் கட்பண்றது. எல்லாமே அத்துபடியாகிவிடும்.

கருணாநிதிக் குடும்பத்துக்கு மட்டும் இத்தனை சொத்து இருக்கலாமா? அது தானே வைகோ உங்க கோபம்.


செயா சென்ற தேர்தலில் திருடத்தெரியாமல் திருடினார், மாட்டிக்கிட்டார். இந்த முறை பாருங்க யாருக்காவது தெரியுமா?


****

தமிழர் நலமே வாழ்வின் லட்சியம் அப்படி இப்படின்னு புளுகிறீங்களே வைகோ இது ஞாயாமா?


மக்கள் நலம் பற்றி கொஞ்சமாவது அக்கரை இருக்கிறதா உங்களுக்கு, இருந்தால் கொள்ளை ராணியிடம் கூட்டு சேர்வீர்களா?.


உங்க கூட்டணியில அதிகமா விமர்சிக்கப்படுவது நீங்களும் திருமாவும் தான், நீங்க தான் கொள்கை அப்படி இப்படின்னு பேசி மக்கள ஏமாத்துறீங்க, ஆனா உங்க புரட்சித்தலைவியோ உங்களுக்கு கொள்கையும் இல்ல ஒரு பொடலங்காயும் இல்ல எல்லாம் என் பொட்டிக்குள் அடக்கம்னு கொள்கைய பத்திமட்டும் பேசுவதேயில்லை.


உங்களைப்போன்றவர்கள் தான் “தாயே உன்னடி சரணம்“ என்று தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறாங்க. செயலலிதா புனிதமானவர், ஈழப்பிரச்சனையில் அக்கறையுடன் இருக்கிறார். அப்படி இப்படின்னு புளுகிறீங்க. சிங்களத்து சிறுக்கி சந்திரிகாவோடு கூட்டு சேர்ந்த போது நீங்க தானே கத்திக்கிட்டிருந்தீங்க.

கடைசியா உங்களுக்கு ஒரு ஐடியா தரேன் கேளுங்க.


பேசாம கட்சிய கலைச்சிட்டு "அம்மாவே சரணம் அப்படின்னு கால்ல விழுந்திடுங்க" ஒரு வேள உங்களுக்கு "சபாநாயகர் வேலக்கூட" கிடைக்கலாம். தேர்தல்ல நிக்க்கமலே சபாநாயகர் பதவியா?

ஆச்சரியப்பாடாதீங்க வைகோ.

"பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்."

22 comments:

Anonymous said...

//வைகோ, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?.//

செலக்டிவ் அம்னீசியாவா இருக்கும்.

Muthu said...

பயங்கர சூடாத்தான் இருக்காரு சுகுமாரன்..குறைச்சுங்கங்க..ஒரு காமெடி படம் பாக்கற மாதிரி நெனைச்சுக்குங்க...

Anonymous said...

Sugumaran Thanks for this message

Anonymous said...

VaiGo is a politician. I really dont know why you guys are so upset about him joining with AIADMK.

Please note that this is not the first time he has done it. He has done it before. At that time itself he has lost some of his credibility.

I would say it was even worse to join hands with DMK. His image was totally vanished when he joined with DMK. Do you remember the innocent folks who self-sacrified their lives when VaiGo left DMK???

So dont think too much into it. This is a normal thing

Sivabalan said...

This blog shows the love & affection which you had (like many) with Vaiko when he was away from Jayalalitha. Sorry man, Now he is with Jayalaitha, just to cater his party men.

But Vaiko has lost millions of his followers and he lost his vote bank capital in TamilNadu just because he has joined hands with Jayalalitha.

But, we need to wait & see for the Election results.

Anyway Vaiko will have tough time to regain his confidence among his followers.

We will see.

VSK said...

அவர் கொள்ளை ராஜா
இவர் கொள்ளை ராணி

யாருடன் சேர்ந்தால் நல்லது?!

இரண்டு கொள்ளைக் கூட்டத்தையும் தாங்கிக் கொண்டு தமிழகம் மாறி, மாறி குத்துகிறதே!

இந்த முறை, கேப்டன் சொல்வது போல, 'கண்ணை மூடிக்கொண்டு' அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால்......
ஒன்று, கொஞ்ச காலம் நிம்மதியாய் இருக்கலாம்... தொழில் பழகும் வரை!
அல்லது, புது மாற்றம் கண்டாலும் காணலாம்.

வைகோ ஒரு சிறு துரும்பு, இந்த இரு கொள்ளையர் ஆட்டத்தில்!

அம்பை நோகாதீர்கள்!
எய்தவனை[ளை]க் குறி வையுங்கள்!

Anonymous said...

கொள்ளை ராணியோடும் சேரக்கூடாது.
கொள்ளை ராஜாவோடும் சேரக்கூடாது.
வை.கோவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ், கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டுக்குப்போவதுதான்.

Darren said...

புஸ்வான புயல் வைகோ.

Darren said...

புஸ்வான புயல் வைகோ.

Anonymous said...

Had Mr.Karunanidhi given 23 seats what would have been the reaction of Mr.Vaiko? We will be hearing a different musical note from him. What a pity! We the people of Tamil Nadu have to put up with such people. God save the state.

Anonymous said...

//பயங்கர சூடாத்தான் இருக்காரு சுகுமாரன்..குறைச்சுங்கங்க..ஒரு காமெடி படம் பாக்கற மாதிரி நெனைச்சுக்குங்க... //

நன்றி தமிழினி,

என்ன பன்றது வைகோ சென்னை பொதுக்கூட்டத்தை போகிற வழியில பார்த்தேன். பொய்யோ பொய்.

Anonymous said...

//பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்//

அது!

நியோ / neo said...

இந்த எச்சிப்பயல் கோபால்சாமி நாயுடுவின் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

Anonymous said...

அருமை சகோதரா...கோபலசாமி துண்டைகானல, துணியகானலனு ஒடி வருவாரு சீக்கிரம்.

Anonymous said...

வைகோவுக்கு சீட்டுகள் வேனால் கூடக்குறைய கிடைக்கலாம். ஆனால் இழந்த மானத்தை அவரால் ஒருபோதும் மீட்க இயலாது.

Selvakumar said...

வைகோ ராமதாஸ் நிலைக்கு கீழே இறங்கி வந்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது.

அவருக்கு அன்பு சகோதரி

இவர் என்ன ?

கலைஞர், வைகோ, ஜெஜெ, ராமதாஸ், அடியாள் பழகிய காங்கிரஸ் போன்றவை தமிழ்கத்தின் நிரந்தர சாபக்கேடுகள்

இப்பொழுது புதிதாய் ஒருவர் வந்துள்ளார்

சினிமாவில் கரண்ட் ஷாக் அடித்தும் சாகாதவர்,

பனிக்கட்டியில் பல மணி நேரம் படுத்திருந்தாலும் சாகாதவர்

சர்க்கஸ் கலைஞனைக்கூட மிஞ்சும் சண்டை புரிபவர்

அவர் பேரை சொல்லவும் வேணுமா?

செல்வகுமார்

இரா.சுகுமாரன் said...

//This blog shows the love & affection which you had (like many) with Vaiko when he was away from Jayalalitha. Sorry man, Now he is with Jayalaitha, just to cater his party men.
But Vaiko has lost millions of his followers and he lost his vote bank capital in TamilNadu just because he has joined hands with Jayalalitha.
But, we need to wait & see for the Election results.
Anyway Vaiko will have tough time to regain his confidence among his followers.

We will see.//

நன்றி Sivabalan
தேர்தலைப்பற்றிய இரண்டாவது கருத்துக்கணிப்பில் அ.தி.மு .க கூட்டணிக்கு 0.06 சதம் வாக்கு தான் அதிகரித்துள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது . மீதமுள்ளவர்கள் அவர் மீதுள்ள அதிருப்த்தியில் கட்சிமாறியுள்ளதாக அந்த கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.

இரா.சுகுமாரன் said...

//•At Tuesday, April 04, 2006 8:48:38 PM, Anonymous said…
கொள்ளை ராணியோடும் சேரக்கூடாது.
கொள்ளை ராஜாவோடும் சேரக்கூடாது.
வை.கோவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ், கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டுக்குப்போவதுதான்.//

தங்கள் வருகைக்கு நன்றி

• //At Tuesday, April 04, 2006 9:01:37 PM, Dharan said…
புஸ்வான புயல் வைகோ.//

தங்கள் வருகைக்கு நன்றி

•//At Wednesday, April 05, 2006 7:57:08 AM, Anonymous said…
Had Mr.Karunanidhi given 23 seats what would have been the reaction of Mr.Vaiko? We will be hearing a different musical note from him. What a pity! We the people of Tamil Nadu have to put up with such people. God save the state.//

தங்கள் வருகைக்கு நன்றி

•At Wednesday, April 05, 2006 10:43:24 AM, சுதர்சன் said…
//பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்//

அது!
சுதர்சன் தங்கள் வருகைக்கு நன்றி

பிருந்தன் said...

வைகோவின் எண்ணவோட்டத்தை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது, நாம் நினைத்தோம் திமுகாவை விட்டு விலமாட்டார் என்று, நடந்தது என்ன? அதிமுகவில் சேரமாட்டார் என்று நடந்தது என்ன? தனக்குரிய மரியாதை திமுகவில் வழங்கப்படவில்லை என்று, விலகினார். ஜெயலலிதாவை விட நல்லவராக் கருணாநிதி இருந்தபோதும், அவரை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து கொண்டார், தன்னையே வெஞ்சிறையில் வாட்டி எடுத்தவருடன், இதுகவனிக்கப்படவேண்டிய விடயம், தனது வேண்டாவெறுப்புக்காக அரசியல் நடத்துபவர் அல்ல, தனது சொந்த பணத்தில் கட்சி தொடங்கியவர், 13 வருடங்கள் எந்தவித வருமானமும் வரக்கூடிய பதவிகளில், பதவி வகிக்காதவர், மற்றவர்கள் கூறியது போன்று அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை கிடைத்திருந்தால், கையில் கறை பட்டிருக்கும் என்றனர், இதில் போட்டியிட்டிருந்தால் நிட்சயம் எம் எல் லே ஆகியிருப்பார், நிறைய உழைத்திருக்கலாம், சிலவேளை அதிமுக கூட்டனி வென்றால் மந்திரியே ஆகியிருப்பார் இன்னமும் நல்லாய் உழைத்திருக்கலாம், ஏன் அந்த வாய்புகளை தானாகவே இழந்தார், அவர் பணம் உழைப்பதற்காக அரசியல் நடத்தவில்லை தனது சொந்த பணத்தை இழந்து அரசியல் நடத்துகிறார், அவர் கொள்கைக்காக அரசியல் நடத்துகிறார், இப்போது மதிமுகாவிற்கு வேண்டியது அதன் வளர்சி, பலம் உடையவனின் பேச்சுதான் சபைஏறும், தனித்து போட்டியிடுவதை விட அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதால் கணிசமான இடங்களை வெல்லமுடியும், வென்றபின்னர் அதிமுகவே இவர்களை வெளியேற்றினாலும் நட்டமில்லையே, அவர்கள் வெண்ற எம் எல் லே பதவிகள் அவர்களது கட்சிய பலப்படுத்த மேலும் உதவும், திடீரென யாரும் முதலமைச்சர் ஆகிவிடமுடியாது, படிப்படியான வளர்ச்சிதான் அவர்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும். ஸ்டாலினை முதல்வராக்க முடிவெடுத பின்னர் திமுகவில் அருக்கென்ன வேலை, தனித்து நின்றும் போட்டியிட்டு பார்த்தார், நாடந்தது தெரிந்ததுதானே, வரலாறுதான் ஒருமனிதனுக்கு நல்ல ஆசான், வைகோ வரலாற்றில் இருந்து பாடம் கற்பவர். தேர்தலில் நின்று எம் எல் லே ஆகி வைகோ என்ன செய்யபோகிறார், கட்சியின் தலவர் அவர், வேண்டும் என்றால் பணம் உழைக்க வேண்டும் எனநினைப்பர்களுக்கு எம் எல் லே, பதவி தேவையாக இருக்கலாம், கொள்கைவீரனுக்கு எதற்கு பதவி. பதவி அவனைதேடி வரும், எழுதி வைத்து கொள்ளுங்கள் சிம்மக்குரலோனை சிம்மாசனம் ஏற்றாது மானமுள்ள தமிழர் ஓயமாட்டார்.

Anonymous said...

//கொள்கைவீரனுக்கு எதற்கு பதவி. பதவி அவனைதேடி வரும்,//

இவரு கொள்கை வீரரா? ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்ப்பது தான். இப்ப கொள்கை மாறிப்போச்சோ?

பதவி தேடிவந்ததோ இல்லையோ!
பொட்டி தேடிவந்தது.
எல்லாம் ஒன்னுதான், பொட்டிதேடித்தானே
பதவிக்கு போராங்க,
பயங்கர கில்லாடி இவர்.

அம்மா மூஞ்சியில குத்துனா அண்ணன் கால்ல விழுவாரு.

ரவி said...

////////கட்சி நலன் அப்படின்னா என்ன? உங்க தொண்டர்கள் காண்ட்ராக்ட் எடுக்கணும், சொத்து சேர்க்கணும், இவ்வளவு நாள் உழைத்த தொண்டர்களுக்கு கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரனும் நல்ல முடிவு தான். நாலு கல்யாண மண்டபம், சொத்து சொகம் எல்லாம் உங்கள் தொண்டனுக் கும் கிடைக்க வேண்டாமா?. /////////


ஆமாம், ஆமாம்...பின்ன, தமிழ் நாட்டுல எவனுக்கு இப்ப வேலை கிடைக்குது...எதாவது கட்சியில சேந்தா நாலு காசு பாக்கலாமுன்னுதான் அவன் அவன் எதாவது ஒரு கட்சியில ஒட்டிக்கிட்டு இருக்கானுங்க...புதுச்சேரி இரா.சுகுமாரன் வேனா சொகுசா செட்டில் ஆகி இருக்கலாம்..

ரோட்ல போறவன பத்தி அவருக்கு என்ன தெரியும்..மொதல்ல ஓட்டு போட்டுருப்பாறா ?

Bharaniru_balraj said...

ம தி மு க வாக இருந்த போது

பொது வாழ்வில் - நேர்மை
அரசியலில் - தூய்மை
லட்சியத்தில் உறுதி


ம (கெ) தி மு க ஆன பிறகு (மதி கெட்ட தி மு க் )


பொது வாழ்வில் - புளுகுவது

அரசியலில் - பல்டியடிப்பது

லட்சியத்தில் - ??????????????(ங்கொக்கமக்க அப்படியிருக்க என்ன)

வைகோ ல்லாம் ஒரு மனுஷன்னு ..........