வாக்களப்பெருங்குடி மக்களே!
வணக்கம்,
வணக்கம்,
பட்டு வேட்டியைப் பற்றிக் கணாக்கண்டிருந்த போது!
நாங்கள் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.
இந்திய சுதந்திரம் பற்றி வைரமுத்து அவர்களின் கவிதை இது.
வைரமுத்து அவர்கள் சொல்வதைப்பார்த்தால் நமது கோவணம் சுதந்திரம் பெற்றவுடன் பறிபோனது.
1. ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கோவணம் இலவசமாக வழங்கப்படும்.
நாங்கள் கோவணத்தை இலவசமாகத் தருவோம் என்றவுடன் மகிழ்ந்து போயிருப்பீர்கள். நாங்கள் கோவணத்தை இலவசமாக வழங்கிவிட்டு உப்பு, புளி, மிளகாயில் விலை ஏற்றுவோம். அது உங்களுக்குத் தெரியாது.
’’நீங்கள் ரோஜாவை நேசிக்கத்தெரிந்த நிஜமான கலைஞன்
ஆனால் முட்களை மறந்து விட்ட முட்டாள்.’’
என்று வைரமுத்து சொன்னதைப்போல,
கோவணத்தை நினைத்து மற்றவற்றைக் கோட்டை விட்டு விடுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆகவே, ஒவ்வொரு ஆண்டின் இலவசத்துக்கெல்லாம் வரிகளை உயர்த்துவோம். விலை ஏற்றம் எங்களால் தவிர்க்க இயலாதது. எனவே,
2. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எல்லாப் பட்ஜெட்டின் போதும் இலவசமாக மொட்டை அடிக்கும் திட்டமும் அமல் செய்யப்படும்.
3. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவர்க்ளுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம்.
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் . ஏனெனில் இது தேர்தல் பிரசாரம்.
அன்னிய நாடுகளிலிருந்து மூலதனம் இந்தியாவில் குவிகிறது. அன்னிய மூலதனத்தில் தொழில் தொடங்கப்பட்டால், அதற்கான இலாபமும் அன்னிய நாட்டிற்குத்தான் செல்லும், அதனால் இந்தியாவில் தொழில் தொடங்க மூலதனம் இல்லாமல் போகும். மூலதனம் இல்லாமல் போனால் எப்படித் தொழில் தொடங்குவது?. ஏகாதிபத்திய நாய்களிடம் பிச்சை கேட்போம். அவர்கள் படிக்காதவர்களுக்கு வேலை தருவார்களா?. தரமாட்டார்கள்.
எனவே,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படிக்காதவர்களுக்குப் பன்றி மேய்க்கும் வேலையும், எம். ஏ படித்தவர்களுக்கு எறுமை மாடு மேய்க்கும் வேலையும் அளிப்போம்.
4. குஷ்புவின் நடனம் ஒவ்வொரு மாதம் முதல் வாரமும், சிம்ரனின் ஆட்டம் இரண்டாவது வாரமும் காட்டப்படும்.
5. நீங்கள் அறிவோடு சிந்தித்து வாக்களிக்கக் கூடாது என்பதற்காக அனைவருக்கும் இத்தனை கெடுபிடிக்கிடையிலும் இலவச சாராயம் அளிப்பது எங்கள் சாதனைகளில் ஒன்று.
6. நாங்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிப்பதற்கு அதிகாரம் பெற, ஏலங்களில் நாங்கள் கமிசன் பெற, உங்களுக்குப் பிச்சை காசை தூக்கி எறிவோம்.
7. நான்காவது ஆண்டு நாங்கள் கொடுத்த கோவணம் உறுவப்படும், அப்படி உருவினாலும் நீங்கள் கவலைப் படமாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஒருவேளை
“கோவணமும் இல்லை!
கையில் காசும் இல்ல!
பாட்டுவருதே என்னபுள்ள“
என்று பாடிவிட்டு அப்படியே இருந்தாலும் இருப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
8. ஆனால், ஐந்தாவது ஆண்டுத் தொடக்கத்தில் நாங்கள் உங்களுக்குப் புதிய கோவணம் வழங்குவோம். வழங்கிவிட்டு, நாங்கள் தான் உங்களுக்கு கோவணம் வழங்கினோம் என்று சொல்லி வாக்கு கேட்டால் நீங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாக்களிப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
9. பற்களே இல்லாத முதியவர்களுக்கு இலவச பல்பொடி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
10. விவசாயத்தையே நம்பி வாழும் 70 சதவிகித மக்களுக்கு ஏரிக்குளங்களை ஆழப்படுத்தித் தண்ணீர் சேமித்து வாழ்வுக்கு வழிகாட்ட திட்டமில்லை.
அப்படித் திட்டம் போட்டால் நீங்கள் சுயமாக உழைத்து முன்னேறிவிடுவீர்கள். நீங்கள் எப்போதும் பிச்சைக்காரர்களாகவே இருக்கவேண்டும்.
அப்போது தான் நாங்கள் “வள்ளல்களாக“ இருக்க முடியும்.
11. ஐந்தாவது ஆண்டு கால்களே இல்லாதவர்களுக்கு செருப்புகளும், 10 விளக்குமாறுகளும் இலவசமாக வழங்கப்படும். இவற்றை பத்திரமாக எடுத்து வையுங்கள்.
அடுத்த தேர்தலுக்கு உதவும்.
8 comments:
//அன்னிய நாடுகளிலிருந்து மூலதனம் இந்தியாவில் குவிகிறது. அன்னிய மூலதனத்தில் தொழில் தொடங்கப்பட்டால், அதற்கான இலாபமும் அன்னிய நாட்டிற்குத்தான் செல்லும், அதனால் இந்தியாவில் தொழில் தொடங்க மூலதனம் இல்லாமல் போகும். மூலதனம் இல்லாமல் போனால் எப்படி தொழில் தொடங்குவது?. ஏகாதிபத்திய நாய்களிடம் பிச்சை கேட்போம். அவர்கள் படிக்காதவர்களுக்கு வேலை தருவார்களா?. தரமாட்டார்கள்.//
"முகம்மது பின் துக்ளக்"-ல் வரும். "நான் சென்ற ஆண்டு ருஷ்யா சென்று அங்குள்ள தேர்தல் முறைகளை பார்த்து வியப்படைந்தேன். நான் ஜப்பான் சென்று அங்குள்ள தேர்தல் முறைகளை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். ஆகவே, இந்த முறை எனக்கு ஓட்டளிக்கவும்"
நடக்கும் கூத்துக்களை பார்த்து தாங்கள் வயிற்றெரிச்சலுடன் எழுதியது போல் தோன்றுகிறது.
அடியில் இழையோடும் நகைச்சுவையை ரசித்தேன்.
நன்றி
தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆவலால் இந்த வலைப்பூவை நடத்திவருகிறேன். ஆரம்பத்தில் இருந்ததை விட தமிழில் எழுத ஆரம்பித்ததும் பன்மடங்கு என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். உங்களுடைய மேலான கருத்துக்களை எனக்கு
தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
சந்தர்
http://baksa.blogspot.com
செயராமன் அவர்களுக்கு நன்றி!
எல்லாமே தேர்தல் இலாபம் தான் மக்கள் நலம் இல்லை.
குஷ்பு, சிம்ரனா..? செல்லாது செல்லாது? பெரிசுங்க ஓட்டு மட்டும் தான் வேணுமா? இளவட்டங்க ஓட்டு வேணும்னா த்ரிஷா, அசின் மாதிரி இருந்தா பார்க்கலாம்.
குஷ்பு, சிம்ரனா..? செல்லாது செல்லாது? பெரிசுங்க ஓட்டு மட்டும் தான் வேணுமா? இளவட்டங்க ஓட்டு வேணும்னா த்ரிஷா, அசின் மாதிரி இருந்தா பார்க்கலாம்.
அரிசியை கடிச்சி, டீ.வியை கடிச்சி, கேபிளை கடிச்சி, கடைசியாய் வந்தவர் பசு மாட்ட கடிசிப்புட்டாரே, கேட்க்க யாருமே இல்லையா?
anbudan: www.hosuronline.com
மாயவரத்தார் அவர்க்ளுக்கு
//குஷ்பு, சிம்ரனா..? செல்லாது செல்லாது? பெரிசுங்க ஓட்டு மட்டும் தான் வேணுமா? இளவட்டங்க ஓட்டு வேணும்னா த்ரிஷா, அசின் மாதிரி இருந்தா பார்க்கலாம்.//
அய்யா, திரிசா, அசின் மார்க்கெட்ல இருக்கிறதால கொஞ்சம் ரேட் அதிகமாக இருக்கும் அதனால தான்.
மாயவரத்தார நீங்கள் இன்னும் இளமையாத்தான இருக்கிறீங்க தேர்தல்ல வெற்றி பெற்றா உங்களின் கோரிக்கை நிறைவு செய்யப்படும்.
உங்களுக்கு பிடித்த இன்னும் இரண்டு இளசுகளோடு நீங்களும் இணைந்து ஆடவிரும்பினாலும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த சிறப்பு சலுகை மாயவரத்தாருக்கு மட்டுமே, மற்றவர் கோரிக்கைகள் எற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment