Wednesday, July 12, 2006

ஆரியர்கள் பூர்வகுடிகளா?

ஆரிய இனம் ஒன்று இல்லை. என்று சொல்லி அதற்கான ஆராச்சியில் ஈடுபட்டு புதிய குழப்பங்களை ஆதாரமாக காட்டப்படுகிறது.

இது போன்ற பொய் செய்திகளை எழுதிவிட்டு பின்னர் இதை வேறு ஒருவர் ஆதாரமாக காட்டி நிறுபணம் செய்யும் வேலையை இவர்கள் செய்வது இன்று நேற்றல்ல.

இவர்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருவதுதான்.

இங்கே பார்ப்பன இனத்தை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

"உலகில் தென் இந்தியா மிக உயர்ந்த இடத்தை( ஸ்தானத்தை) ஒரு காலத்தில் வகித்து வந்தது - அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் அது நாடோடிகளான ஆரியர்கள் வசமானது."
(பண்டிதர் நேரு - உலக சரித்திரம். - முதல் பாகம்- பக்கம் 2002-2003) 
"இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதைக் குறிப்பதாகும். " (பண்டிதர் நேரு - டிஸ்கவரி ஆப் இந்தியா - பக்கம் - 82)

"இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ- ஆரியர் காலத்தையும் இவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டு சண்டைகளையும் பற்றிக்கூறுவதாகும். இவைகளை நான் உண்மை என்று நான் நம்பவேயில்லை. பஞ்ச த்ந்திரம் அராபியன் இரவுகள் போன்று இது ஒரு கற்பனைக்கதை தான் என்பதே என்கருத்து" (பண்டிதர் நேரு - டிஸ்கவரி ஆப் இந்தியா - பக்கம் - 76-77)


ஆரியர் என்ற ஒரு இனம் இல்லை என்றால் நேரு எதைக் குறிப்பிட்டார்.
"ஆரியர் ஆதிக்கத்தினால் திராவிடர்கள் அடிமை சாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள்: ஆரியர்கள், தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததினாலும், மங்கோலியர்கள் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டுபிடிப்பதற்காகவே வந்தார்கள்". - ஏ. எல். சாண்ட்ர்ஸ்.

"ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்." -எச். ஜி. வெல்ஸ்
 
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராகவே இருக்க வேண்டும். அப்படி அவர்களை திராவிடர்கள் தாம் என்றால் ஆரியர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர்கள் நிறத்தாலும், மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும். (பெருஞ்சித்திரனார்- ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் பக்கம் -15)

இவர்மட்டுமா?
கீழே கெளுங்கள்...........
ஆடுமாடு ஓட்டிகிட்டு பொழைக்க வந்த!- அப்படியே
ஆத்தங்கரை ஓரத்தில டெண்டடிச்ச!
வேத இதிகாசமின்னு சரடு விட்ட!
எங்கள வேசிப்பய புள்ளங்கன்னு எழுதிபுட்ட!
போரதெல்லாம் போகட்டுன்னு பொருத்துகிட்டா!.........
நீதான் பூர்வ குடி இங்கிரியேடா- புளுகு மூட்ட!
போதும் நிறுத்து, போதும் நிறுத்து போதும் நிறுத்தடா!.........
உன் வேசம் இப்போ கலஞ்சிபோச்சி பேச்சை நிறுத்தடா!.............
தொடப்பம் எடு எடு..........,
செறுப்ப எடு எடு...........
ஓடடா ஓடு, .................ஓடடா ஓடு....................
( அசுர கானம் : ம.க.இ.க -வின் பாடல்).


மேலே குறிப்பிட்டுள்ளவற்றை பார்த்தால் ஆரிய இனம் என்று இருந்தது என்பதை ஆரியர் நேருவே குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறியலாம்.
இவர்கள் எப்போதும் வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
" தமிழரிடமிருந்த பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்ததைப் போலவும் வட மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது போலவும் காட்டி தமிழ் ஓலைச்சுவடிகளை அழித்தனர்.பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி (தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-33)

" இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு புல்லைத்தேடிக் கொண்டு ஊர் ஊராய் திரிந்தவர்கள்". பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி
(தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-29).


உ.வே. சாமிநாத அய்யர் தமிழுக்கு தொண்டு செய்தார். ஆனால், அவர் தன் பெயருக்கு அருகிலேயே அய்யர் என்ற சொல்லை, தன் உயர்நிலை என்று கருதும் ஒன்றை எப்போதும் தன்பெயர் அருகில் வைத்துக்கொண்டிருந்தார்.

அந்த பார்ப்பனர் எப்படியெல்லாம் திருத்தல் வேலைகளை செய்தார் என்பதை பார்ப்போம்.
புறநானூற்றில் " ஆண்முலையறுத்த" என்று தொடங்கும் பாடலின் ஒரு சொல் "அறவோர்" என்று வந்துள்ளது . இதனை யாழ்ப்பணத்து பழைய வெளியீடு ஒன்றில் சொல்லப்படுகிறது. ஆனால், உ.வே.சா அவர் பதிப்பில் அந்த சொல் "பார்ப்பனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை.
"அறவோக்குக் கொடுமை செய்தல் கூடா" - தெனும் அறம் பற்றிச் சொல்லும் அப்பாடலை "பார்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா" -தென்பதாக இவர் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு "
கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக்கொலை"
என்ற காஞ்சி புராண அடியை மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி வரலாற்றை இவர்கள் திருத்துவது இன்று நேற்றல்ல.
காலம் காலமாக செய்து வருவதுதான்.

அன்று மன்னன் அதிகாரத்தை வைத்து இவர்கள் அதிகாரம் செய்தார்கள்.
மனுநீதி எழுதி உலக நீதியை கெடுத்தார்கள்.
தமக்கு மட்டும் தனிநீதி எழுதிக் கொண்டார்கள்.
பின்னர் செய்தி ஏடுகளில் எழுதி ஊரைக் கெடுத்தார்கள்.
இன்று இணையம் உள்ளிட்ட வற்றில் எழுதி நம்மைக் கெடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஒன்றுதான் காலம் இடம் தான் வேறு படுகிறது.


*******************************
பிற விவாதங்களை நண்பர் தமிழினி பதிவில் பார்க்கலாம்.
ஒரு தமிழனின் பார்வை: வஜ்ராவின் திராவிட கூத்து

10 comments:

இரா.சுகுமாரன் said...

மேலே தமிழினியின் தளம்
சரியாக இணைக்கப் படாமல் உள்ளது.அதனால் அது இங்கே இணைக்கப்பட்டுள்ளது ஒரு தமிழனின் பார்வை( வஜ்ராவின் திராவிட கூத்து)

மேலும் விவாதங்களுக்கு,
விடாது கறுப்பு(ஆரியர்களின் அரிய கண்டுபிடிப்பு)

அவர்களின் இணைப்பையும் இங்கே அளித்துள்ளேன்

சந்திப்பு said...

சுகுமாறன் ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல என்பது உண்மைதான். அவர்கள் மேற்கு ஆசியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவை வந்தடைந்தார்கள். ஆரியர்கள் வருகைக்கு முன்பே இங்கு வளமான கலாச்சாரங்கள் நிலைத்து இருந்தது என்பதும் உண்மைதான். ஹராப்பா, மொஹஞ்சதாரோ இதனை நிரூபிக்கிறது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் ஆகழ்வாராய்ச்சிகளும் இதனை நிரூபித்து வருகின்றது. இருப்பினும் என்னுடைய கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
அதே சமயம், இன்றைக்கு நாம் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்கிறோம். அது சரியா? இந்தியாவில் இன்றைக்கு இருப்பது ஒரு கலப்பினம்தான். எனவே இந்திய மக்களை ஆரியர்கள் - திராவிடர்கள் என்று இப்போதும் பகுப்பாய்பு செய்வது விஞ்ஞானரீதியானதாக படவில்லை. மற்றபடி தாங்கள் அதிகமான தகவல்களை ஆதரத்துடன் முன்வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

விடாதுகருப்பு said...

1)ஆரியர்களைப் பற்றி தவறான தகவல்களைத் தரும் புதுச்சேரி இரா.சுகுமாரன் அவர்களை தமிழ்மணத்தில் இருந்து நீக்க வேண்டும். அவர் ஒரு பின்னவீனத்துவ வாதி, ஜல்லி அடிக்கிறார், செக்யூலரிஸ்ட்.

2)உண்மையான பூர்வகுடியினர் ஆரியர்களே. கைபர்-போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி இந்தியாவுக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் திராவிடர்களே.

3)ஆரியர் என்ற இனமே இல்லை. இதுகுறித்து சிக்மென் பிராடு அவர்கள் கட்டுரை ரெடிப் தளத்தில் எழுதி உள்ளார்.

4)ஆரியர்கள் மலம் அள்ளுகின்றனர். ரிக்சா வண்டி இழுக்கின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையில் துன்பத்தோடு இந்தியாவில் வாழ்கிறார்கள் என்று பிரான்சியே கோத்தியா என்ற பிரான்சு எழுத்தாளர் ஜெயாடிவி பார்த்து புத்தகம் எழுதினார்.

5)எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திராவிட வெறிபிடித்த கருணாநிதியின் ரசிகரான சுகுமாரனுக்கு என்ன தெரியும்?

6)ஹிந்தியை படிக்கவிடாமல் செய்து தமிழை வளர்த்த கருணாநிதி ஒரு துரோகி.

7)திருக்குறளுக்கு உரை சமஸ்கிருதத்தில் எழுதாமல் தமிழில் எழுதிய கருணாநிதி ஒரு பார்ப்பன துவேஷி.

8)காலம் காலமாக பார்ப்பனர்களை கேவலமாக சித்தரித்து எழுதுபவர்களை அடக்கவே சோ திராவிடர்களைத் திட்டியும் பழித்தும் நக்கல் செய்தும் எழுதுகிறார். எனவே எங்களைப் பொறுத்தவரை துக்ளக் நடுநிலை நாளேடு.

9)ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாங்கள் நிம்மதியாக மூச்சுவிட்டோம்.

10)வேணுகோபால் மிகச்சிறந்த மருத்துவர். அவர் தொழிலைப் பார்க்காமல் ஜாதியைப் பார்ப்பது வெட்கக் கேடான விஷயம். அவர் பார்ப்பன மாணவர்களை தூண்டிவிட்டார் என்று சொல்வது மரம்வெட்டி கும்பலின் பொய்ப் பிரச்சாரம்!

மேற்கண்டவை உங்களை அடிக்க வருபவர்களுக்கு இன்ஸ்டண்ட் பின்னூட்டங்கள்.

செந்தழல் ரவி said...

புதுவை சுகுமாரன் என்று செய்தி தாள்களில் அடீபடும் பெயர் உங்களுடையதா ???

இஸ்ரேலியன் said...

பத்தும் முத்து - கருப்பு அவர்களே..

இரா.சுகுமாரன் said...

செந்தழல் ரவி அவர்க்ளுக்கு

//புதுவை சுகுமாரன் என்று செய்தி தாள்களில் அடீபடும் பெயர் உங்களுடையதா ???//

பலருக்கு இந்த சந்தேகம் எழுகிறது. பொதுவாக நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பணிகளில் ஒன்றிணைந்து செயல்படுபவர்கள்.

அவர் மனித உரிமை தொடர்பான பணிகளை மேற்கொள்பவர் முழு நேரப்பணி நான் பகுதி நேரம் தான்.

வீரப்பனை காட்டில் சந்தித்தவர் அவர் அவரின் இணையதளத்தினை என் தளத்தின் வலது பக்கத்தில் இணைத்துள்ளேன். படித்தால் அவரைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, July 12, 2006 2:54:23

இரா.சுகுமாரன் said...

சந்திப்பு அய்யா சென்னது,

//இந்தியாவில் இன்றைக்கு இருப்பது ஒரு கலப்பினம்தான். எனவே இந்திய மக்களை ஆரியர்கள் - திராவிடர்கள் என்று இப்போதும் பகுப்பாய்பு செய்வது விஞ்ஞான ரீதியானதாக படவில்லை.//

கலப்பினம் தான் ஆனால், வரலாறு, செயல் அவர்களை எப்போதும் பிரித்தே வைத்துள்ளது.
(அ)அவர்கள் தன்னை தனியே பிரித்துக் கொள்கிறார்கள்.

நானும் அப்படியே புரிந்து கொள்கிறேன், சொல்கிறேன், பிரித்துக் கொள்கிறேன்.

நன்றி!

இரா.சுகுமாரன் said...

நன்றி கருப்பரே!

புகுந்து விளையடிவிட்டீர்கள் போங்கள்.

அசுரன் said...

test

babupriya said...

Is there any purpose to be solved by thinking about brahminism now. We cannot revisit what has happened. However, brahmins are miniroties in this country. Most of the states in this country are not ruled by brahmins.

Now, coming to tamilnadu. How many times, brahmins have ruled the dravidian land. You can count them. It was ruled by non-brahmins for most part after independence. If you say that brahminsm is the cause of the problems, why these non-brahmin chief ministers not done anything to remove untouchability in the state. Even today, the local body elections in madurai area is not free of tensions.

Live in present and don't blame brahmins for the present day caste related problems.