பொருள் மாறிக் கொண்டே வரும் திராவிடம் தேவைப்படுகிற ஆய்வு!
திராவிடம் என்பது தமிழ் என்பதே ‘திரமிள்’- திரமிட்’ என்றும், பின்னர் ‘திராவிட’ என்றும் சமஸ்கிருத ஆரியத்தினரால் கூறப்பட்டு வந்தது என்பது பாவாணரின் தெளிவுரை.
“நாகர் நிலமாய் விரிந்திருந்த நாவலந் தீவின் மக்களான நாகர்களின் மொழியான தமிழ்-திரமிள்-திரமிடம்-திராவிடம் எனத்திரிந்து வழங்கப் பெற்றது” என்று ஆய்ந்து விளக்கினார் அம்பேத்கார்.
‘பவழத்தை’ - ‘பிராவளம்’ –என்றும், ‘படி’யை –ப்ரதி- என்றும் கூறியது போல் ‘தமிழை’த் திரமிள்- திரமிட்- திராவிட் என்றனர்.
தமிழ் என்பதை உலகத்தில் அன்றைய மொழி வழக்கினர் பலர் அவ்வகையில் ஒலிப்பு மாற்றியே சொல்லிவந்தனர். தமிழை ‘தமிரிகே’ என்று ரோமானியர்கள் டாலமி- ரேவண்ணா ஆகியோரின் உலகப் படவரைவில் குறிப்பிட்டிருந்தனர்.
அதே போல சமக்கிருத இலக்கியங்களில் தமிழை ‘த்ரமிட்’ என்றே குறிப்பிட்டு வந்தனர்.
ஆக தொடக்கத்தில் தமிழ் என்பதன் ஒலிப்புச் சிதைவே திராவிடமாக குறிப்பிடப்பட்டது. எனவே தான் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்குள் பரவியிருந்த சமணத்தால் தமிழ் பாலிமொழிக் கலப்பால் –தமிழர்கள் ‘திராவிடர்’ என்பதாக ஒலிப்பு ச்சிதைக்கப் பட்டு ‘திராவிடச்சங்கம்’ என்கிற வகையிலேயே இயங்கினர்.
அதன் பின்னர் தொடர்ந்து தமிழர்கள் தமிழைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் தமிழ் என்பதாகவும், ஆரியக் கருத்தொற்றியவர்களால் எழுதப்பெற்ற இடங்களில் எல்லாம் திராவிடம் என்பதாகவும் கூறப்பட்டது.
திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. மாறாக அது சமக்கிருத சொல்..
................................
ஆரியத்தை எதிர்த்த தமிழிய இலக்கியங்கள் ஆரிய ஆதிக்க அரசுகளால் அழிக்கப் பட்டன. தமிழில் வளர்ந்து இருந்த சிறந்த வானியல், மருத்துவ, மெய்யியல் இசை மற்றும் பிற அறிவு சார்ந்த நூல்கள் சமக்கிருத மொழிமாற்றம் செய்யப்பட்டதோடு மூல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன. பிறக்காலச் சோழர்களது ஆட்சியிலும் நாயக்கர் காலத்திலும் மராட்டிய சரபோசி ஆட்சிக்கால அரசுகளும் இவற்றையே திட்டமிட்டு செய்தன.
18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த ‘கால்டுவெல்’ எனும் மொழியியல் அறிஞரால் திராவிடம் பற்றிய கருத்துக்கள் வலுப்பெற்றன.
இந்தச்சூழலில் ‘திராவிடம்’ என்கிற கருத்தும், ‘திராவிடர்’ எனும் இனக்கோட்பாடும் திராவிடம் எனும் மொழி இருந்ததாகவும் பெருமளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதே சூழலில் தமிழ் அறிஞர்கள் அதை ஒப்புக் கொள்ளவில்லை. திராவிடம் எனும் மொழியில்லை என்றும், தமிழிலிருந்து தான் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரியக் கலப்பால் உருக்கொண்டன என்பதை நிறுவினர்.
“ கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத் துதித் தெழுந்து
ஒன்றுபல வாயிடினும்”
- என்னும் கருத்துக்களில் தமிழிலிருந்து பிறமொழிகள் தோன்றின எனக்கூறியதோடு, அம்மொழிகள் இணைந்த ‘திராவிடர்’ என்பதால், திராவிடர் எழுச்சிப் போராட்டமாகவும் மாறியது.
வேதங்களும் வைதீகமும் ஆரிய வர்க்கம் என்பதை இந்தியா என்பதகவும்...... பார்ப்பன எதிப்பு பார்ப்பனர் ஆளுமைக் குரிய நாடான இந்தியாவை மறுத்து திராவிட நாட்டு அடையாளமாக அந்த நான்கு மொழிகளின் பயன்பாட்டுக்குரிய பகுதியை அடையாளப் படுத்தியது.
திராவிடத்தை உருவாக்கிய ஆரியம்
இந்திய நாட்டிற்கு எதிராக திராவிடநாடு அடையாளப் படுத்தப் பட்டது திராவிட நாட்டு எழுச்சி தமிழகத்தில் வீறுகொண்டு எழுந்தது. இதற்கிடையில் திராவிடம் என்பதை மொழிக்கூறில் உள்ள ஒற்றுமை என்கிற வகையில் மட்டுமே ஒப்புக்கொண்ட தமிழ் அல்லாத பிற மொழியினரால் திராவிட நாடு கோரிக்கையோடு ஒன்று பட இயலவில்லை.
...............................
திராவிடம் என்பது வரையறுக்கப் பட்ட தேசமோ, ஒரு சமுகமோ, ஒர் இனமோ அல்ல என்பதால்தான் அதனால் ஒரே காரணம் கொண்டு எழுச்சியுறவோ, போராடவோ போராடி ஆரியத்தி வீழ்த்தவோ முடியாது என்கிற முடிவுக்கு வரமுடிகிறது.
.......................
திராவிடம், திராவிடம் என வரலாறு அறியாமல் இல்லாத திராவிடத்தை ஒரே அணியில் திரட்டுவதில் நம்பிக்கை கொண்டு அதில் தமிழ்த் தேச எழுச்சி அமிழ்ந்து போனதால் எற்பட்ட பின்னடைவு போக,.......
இந்தியப் பார்ப்பனியத்தின் மீதும், பார்ப்பனக் கட்டமைப்பின் மீதும் ஓங்கை அறைந்து அவற்றை உடைத்தெரிகிற பேராற்றலைத் தமிழ்த் தேச உணர்ச்சிக்கு ஊட்டி வளர்க்க வேண்டிய தேவைக்குரிய சூழலாகும் இது..............................
(முக்கியப்பகுதி மட்டுமே வெளியிடப் ப்ட்டுள்ளது)
நன்றி: உழைக்கும் மக்கள் தமிழகம்
7 comments:
நான் வெளியிட்டுள்ளதை இப்போது பார்க்கும் போது ஒரு குறிப்பு மாதிரித் தெரிகிறது.
ஏனெனில் அந்த கட்டுரை ஆறு பக்கங்களைக் கொண்டது.
மிகச் சுருக்கமாக வெளியிடப் பட்டுள்ளது.
புதிய தகவல் அன்பரே!
நன்றி சுகுமாரன்
அம்பேத்காருக்கும் தேவநேய பாவானருக்கும் முன்பே திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் பிஷப்.ராபர்ட் கால்டுவெல்.
சொல்லபோனால் அம்பேத்காருக்கும், பாவானருக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்தியதே பிஷப் தான்.
பிஷ்ப் ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகத்தில் அவரே சொல்லியிருக்கிறார்.
(சென்னை பல்கலைகழகத்தில் கிடைக்கிறது....)
வழக்கம் போல திரமிள் அது இது என்று ஆதாரமில்லாத கூற்றுகளை தவிர்த்து ஆதாரபூர்வமான பிஷ்ப்.கால்டுவெல்லின் கருத்தை ஏற்றுகொண்டே ஆக வேண்டும்.
ஒரு சவாலாக "திரமிள்" "திரமிட்" என்ற வார்த்தைகளை பிஷப் புத்தகம் எழுதும் முன்பு யாராவது பயன்படுத்தியிருந்தால் காட்டலாம் அல்லவா?
(அதாவது திராவிட என்ற சொல்லை பிஷப் அறிமுகபடுத்தியதற்க்கு முன்பு)
ஏன் செய்ய முடியவில்லை?
எனது நிலைபாட்டை நான் மாற்றிக்கொள்ள தயார்.
பிஷப் வெகு தெளிவாக இந்த நூற்றாண்டை சேர்ந்த இந்த கவிஞரின் இந்த நூலில் இருந்து இந்த வார்த்தையை கண்டுபிடித்தேன் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள முடியும்.
மற்றபடி அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எந்த ஆதாரமும் எதையும் மேற்கோள் காட்டாமலும் சொல்வதையெல்லாம் எதன் அடிப்படையில் ஏற்றுகொள்வது?
திராவிடர்கள் - அதாவது தென் இந்தியர்கள், எல்லோரும் பிஷ்புக்கு நன்றியுடன் இருக்க வேண்டுமே ஒழிய சில்லறை அரசியல் சித்துவிளையாட்டுகளுக்காக அவரின் கண்டுபிடிப்புகளை ஆதாரமில்லாமல் தூக்கி எறிய கூடாது.
ஒரு பெயர் வேறு மொழியில் இருந்து வந்த ஒரே காரனத்தால் அதை ஏற்றுகொள்ள மறுத்து கதைகளை புனையும் மக்களுக்கு பன்முக தன்மையை பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
திராவிடம் திராவிடம் என்று தினமும் பேசுபவர்கள் எத்தனை பேர் பிஷ்ப்பை பற்றி முழுசும் படித்துவிட்டு பேசுகிறார்கள்? /(விஜயகாந்த உட்பட.)
கருனாநிதியும், வைகோவும் படித்து இருப்பார்கள்.அவர்களின் தமிழ் வலைபூ ஜிங்குசாக்கள் படித்துள்ளார்களா?
//அம்பேத்காருக்கும் தேவநேய பாவானருக்கும் முன்பே திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் பிஷப்.ராபர்ட் கால்டுவெல்.
சொல்லபோனால் அம்பேத்காருக்கும், பாவானருக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்தியதே பிஷப் தான்.
பிஷ்ப் ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகத்தில் அவரே சொல்லியிருக்கிறார்.
(சென்னை பல்கலைகழகத்தில் கிடைக்கிறது....)
வழக்கம் போல திரமிள் அது இது என்று ஆதாரமில்லாத கூற்றுகளை தவிர்த்து ஆதாரபூர்வமான பிஷ்ப்.கால்டுவெல்லின் கருத்தை ஏற்றுகொண்டே ஆக வேண்டும்.//
நான் எங்கேயும் திரு கால்டுவெல் தொடர்பாக தவறாக குறிப்பிடவில்லை. அவர் ஒரு மொழி அறிஞராக இருந்தார். அவரின் ஆய்வின் போது பல்வேறு தகவல்களை மொழி தொடர்பாக தந்துள்ளார்.
இவரை நான் தமிழர்களின் எதிரி என்றோ, திராவிடர்களின் எதிரி என்றோ நான் எங்கும் குறிப்பிடவில்லை. கருதவில்லை. நான் கீழே உள்ளவாறு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
///18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த ‘கால்டுவெல்’ எனும் மொழியியல் அறிஞரால் திராவிடம் பற்றிய கருத்துக்கள் வலுப்பெற்றன.///
நான் அவரின் நூலைப் படிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. ஆனால், விரைவில் அந்த வாய்ப்பை பெற முயற்சிப்பேன்.
சுகுமாரன்,
நல்ல பதிவு. வித்தியாசமான பார்வை.
சிங்கள மொழியும் தமிழ் மற்றும் பாளி மொழிகளிலிருந்து பிறந்ததெனச் சொல்கிறார்கள்.
கட்டுரை மிக அருமை. தமிழ் மேல் பற்று கோண்டோர்க்கு இது சிந்திக்கத் தூண்டும் கருத்து.
Post a Comment