Wednesday, December 27, 2006

தூக்கிலேற்ற வேண்டியவன் ஜார்ஜ் புஷ்

“சதாமின் தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது”


1945, ஆகஸ்டு 6, இரோசிமா, 1945 ஆகஸ்டு 9, நாகசாகி என்று ஜப்பானின் இரண்டு நகரகளில் குண்டு வீசி ஒரே நேரத்தில் 4 - இலடசத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்று குவித்த கொடூரமான மனித நேயமற்ற அரசு அமெரிக்கா.

ஈரான் ஈராக் போர் உள்பட அமெரிக்கா இதுவரை அங்கு 6 1/2 இலட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. தற்போது நடந்த தாக்குதலில் மட்டும் அதிகாரப் பூர்வமாக 65 ஆயிரம் போரை கொன்றொழித்துள்ள அமெரிக்க வெறி நாய் அரசு சதாம் 142 பேரை கொன்றதாக கூறி சதாமுக்கு தூக்குத்தண்டனை அளித்துள்ளது.

எண்ணை வெறி பிடித்து அலையும் அமெரிக்கா மனிதகுலத்தின் எதிரியாகவும் வளர்ந்துள்ளது ஏகாதிபத்திய வெறிநாயாக அலைந்து திரியும் அது தன் கட்டுப்பாட்டிற்கு வாராத நாடுகளை கடித்து குதறிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக எண்ணை வளமிக்க நாடுகளை அது குறிவைத்து தாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல், ஈரான் ஈராக் போர் தூண்டல் பாலஸ்தீனத்தில் தம் எடுபிடிகளை வைத்து தொந்தரவு செய்தல் என எத்தனையோ கொடுமைகள் நிகழ்த்தும் அமெரிக்கா ஈராக்கில் அமர்ந்து கொண்டு அங்கு நீதி வழங்குவது மிகவும் கேலிக் கூத்தானது.
உண்மையில் உலகின் கொலை வெறியன் புஷ் தூக்குத்தண்டனை பெற வேண்டியவன். உலக நாடுகளை தன் போர் வெறியால் சூறையாடும் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்போம். ஆயுத வியாபாரி புஷ் கொலை வெறியை எதிர்ப்போம்.

17 comments:

Anonymous said...

பதிவுக்கு நன்றி!

விரிவாக எழுதியிருக்கலாம்.

We The People said...

ஐயோ பாவம் புஸ், தூக்கு தண்டனை யாருக்கும் கூடுக்கக்கூடாதுன்னு வாதட கூட்டம் நீங்க, நீங்களே ஒரு ஆளுக்கு தூக்கு தண்டனை குடுக்கலாம???

தூக்கு தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை அதனால் அவரை ஒன்னு செய்யாதிங்க ப்ளீஸ்.

chinnathambi said...

thookil 'etra'-vendiyavan bush???
thookil 'etra-ppada"-vendiyavan??chinnathambi
brisbane

Pot"tea" kadai said...

"Heroes of war - 1991"என்று முந்தைய, அப்பன்காரனான புஷ்ஷின் இராக் போரின் ஆவணப்படம் ஒன்று பார்த்தேன். கோபமும் எரிச்சலும் தான் வந்தது. பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என தெருவில் இருக்கும் அனைவரையும் குருவியைப் போல் சுட்டுக்கொண்டிருந்தனர் அமெரிக்கப் பன்(னாடை)னாட்டு படைகள். இவர்கள் Heroes of War ம்...

சதாம் தூக்கிலேற்றப்பட வேண்டும். அப்படியொரு நிகழ்வு உலகலாவிய அளவில் அமெரிக்கர்கள் மீதான வெறுப்புணர்வையும், முசுலிம்களின் தீவிரப் போரும் அதிகப்படுத்தும். அமெரிக்கர்கள் உயிர் பயத்திலேயே செத்து மடிய வேண்டும்.

Anonymous said...

Hi,

Whatever you said is right, but still you need to remember that, sadam is not an innocent.

Killing 142 is never less for a capital punishment.

America, thinks like they are the "Nattamai" for the rest of the world.

Amar said...

Hi,

Whatever you said is right, but still you need to remember that, sadam is not an innocent.

Killing 142 is never less for a capital punishment.

America, thinks like they are the "Nattamai" for the rest of the world.

Amar said...

Hi,

Whatever you said is right, but still you need to remember that, sadam is not an innocent.

Killing 142 is never less for a capital punishment.

America, thinks like they are the "Nattamai" for the rest of the world.

நாடோடி said...

இங்க ஒரு மாதிரி பேசுரீங்க.

இந்த பதிவுல ஒரு மாதிரி பேசுரீங்க.

முதல்ல ஒரு தெளிவான நிலைக்கு வாங்க.

இரா.சுகுமாரன் said...

chinnathambi said...

thookil 'etra'-vendiyavan bush???
thookil 'etra-ppada"-vendiyavan??

அய்யா, நீங்கள் சொல்வது போல் தூக்கிலேற்றப்பட வேண்டியவன் என்றால் மிகத்தெளிவாக உள்ளது தான் ஆனால், இது பொருள் மாறவில்லை என்று நான் கருதுகிறேன்.

வருகைக்கு நன்றி!

இரா.சுகுமாரன் said...

Pot"tea" kadai அவர்களுக்கு நன்றி

நண்பர் அமர் அவர்கள் சொல்வது போல சதாம் அப்பாவி அல்ல ஆனால், இந்த போர் அமெரிக்காவின் எண்ணை வெறியினால் தொடுக்கப் பட்டது. மேலும் அமெரிக்கா ஒரு அன்னிய நாட்டில் புகுந்து ஒரு கைக்கூலி அரசை நிறுவி அதன் மூலம் ஒரு தீர்ப்பு வழங்கியது ஒரு அப்பட்டமான சனநாய படுகொலை சதாம் நல்லவாரா? கெட்டவரா? அதுவல்ல,அதைவிட அமெரிக்கா இந்த வழக்கை எப்படி நடத்தியது. அதற்கு அதற்கான அதிகாரம் உண்டா? என்பதுதான் முக்கிய கேள்வி இன்று அமெரிக்கா தன் சொந்த நாட்டில் எண்ணையை எடுப்பது போல் சுதந்தரமாக எண்ணை வளத்தை கொள்ளையிடுகிறது. அமெரிக்காவின் அயோக்கிய தனம் அதன எல்லா செயல்களிலும் வெளிப்படுகிறது. இது பற்றிய விரிவான கட்டுரைக்கு பின்னர் ஒரு தொடுப்பு கொடுக்கிறேன். படியுங்கள். நன்றி!

அசுரன் said...

//உண்மையில் உலகின் கொலை வெறியன் புஷ் தூக்குத்தண்டனை பெற வேண்டியவன். உலக நாடுகளை தன் போர் வெறியால் சூறையாடும் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்போம். ஆயுத வியாபாரி புஷ் கொலை வெறியை எதிர்ப்போம்.//

கொஞசம் விரிவாக எழுதியிருக்கலாம்....
சதாமை தூக்கில் போடுவதற்க்கும் அவரை விசாரனை செய்வதற்க்கும் அந்த மக்களுக்குதான் உரிமை உள்ளது... நேற்று கூட ஈராக் போலிஸ் ஸ்டேசன் ஒன்றை பிரிட்டன வீரர்கள் தாக்கி நொறுக்கினர். ஏனேனில் அங்கு சிறைபிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கவாம்...

அது சரி அங்கு யாருடைய ஆட்சி நடக்கிறது?

ஈராக் ம்க்களுடையதா அல்லது பிரிட்டிஸ் அமெரிக்க நேச நாட்டு எண்ணைய வெறியர்களின் ஆட்சியா?

இந்த பன்றிகளுக்கு என்ன அருகதை உள்ளது சாதமை விசாரிக்கவும், தூக்கிலிடவும்

தலைப்பு 'ஏற்றப்பட வேண்டிய' என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசுரன்

அசுரன் said...

அப்சல் விவாதத்தின் நீட்சியை இங்கு நுழைக்கும் We The People, அவர்களே.... சதாம் உசைன் தூக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

அதை சொல்லாமலேயே போகிறீர்களே?

அசுரன்

ENNAR said...

//1945, ஆகஸ்டு 6, இரோசிமா, 1945 ஆகஸ்டு 9, நாகசாகி என்று ஜப்பானின் இரண்டு நகரகளில் குண்டு வீசி ஒரே நேரத்தில் 4 - இலடசத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்று குவித்த கொடூரமான மனித நேயமற்ற அரசு அமெரிக்கா.//
இதில் எனக்கு உடன்பாடு கிடையாது

அமெரிக்க வசம் இருந்த "பெர்ல் ஹார்பர்" மீது ஜப்பான் நடத்தியவிமானத் தாக்குதல் 1941-ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி. அன்றுதான், உலகப் போரில் எதிர் பாராத திருப்பம் ஏற்பட்டு, வரலாறே மாறியது. அதுவரை உலகப் போரில் அமெரிக்கா கலந்து கொள்ளாமல், மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் உள்ள "பெர்ல்" துறைமுகத்தை தாக்கியது. (பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஹவாய் தீவு) அந்தத் பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பான் விமானத்தாக்குதலில் அழிந்தன. 3 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்காபோரில் குதித்தது.
அமெரிக்காவே சண்டியர் மாவீரன் அந்த சும்மா இருந்தவனை வம்புக்கு இழுத்தது ஜப்பான் இந்த இடத்தைப் பொருத்தவரை அமெரிக்காமீது எந்த குற்றமும் கிடையாது மற்றவற்றைப் பற்றி நான் விவாதிக்க வரவில்லை.

அசுரன் said...

இரண்டாம் உலகப் போர் வரலாறு பிண்ணனி குறித்து பாடப் புத்தகம் அமெரிக்க ஹாலிவுட் பிரச்சாரத்தை கடந்து பல விசய்க்ங்கள் உள்ளது என்பது பாவம் என்னாருக்கு தெரிய நியாயமில்லை... தேவர் குரு பூசையின் நினைப்பில் மயங்கி கிடப்பதற்க்கே நேரம் சரியாக இரூக்குதில்ல... அதான்....

ஹிட்லருக்கு ஆயுதம் ச்ப்ளை செய்தது முதல் தென் கிழக்காசியாவில் பரவி வந்த ஜப்பானுனின் வியாபார ஆதிக்கம் அமெரிகாவுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது வரை இரண்டாம் உலக் யுத்தத்தில் அமெரிக்காவின் மறைமுக பங்களிப்பு மிக மிக முக்கியமானது....

இந்திய சுதந்திரத்தின் காரணமும் இந்த அரசியலில் புதைந்துள்ளது. இன்னும் சொன்னால் ஜனநாயகத்தை அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யும் விசயம் இன்றைய தந்திரமல்ல. சான, பேத தான தண்ட வழிமுறைகளை கொண்டு இதை நீண்ட நாட்களாகவே அமெரிக்கா செய்து வந்துள்ளது. அதனால் அமெரிக்காவின் நல்லவன் மோசடியை நிலை நிறுத்தும் முயற்சி வீண்,...

மேலும்,... ஜப்பான் அமெரிக்க ராணுவத்தைத்தானே தாக்கியது? இன்றுவரை யுத்த களத்தில் மக்காள் மீது யுத்தம் நடத்தி வந்துள்ள ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே? ஜப்பான் அனுகுண்டில் ஆரம்பித்து, வியட்நாம், கௌதனாமோ, சிரியா, ஈராக் இன்னும் இன்னும் பெரிய லிஸ்டே உள்ளது.....

என்ரான்... சாரி என்னார் நீங்கள் எந்த நாட்டு குடிமகன்...? :-))

அசுரன்

ENNAR said...

//தேவர் குரு பூசையின் நினைப்பில் மயங்கி கிடப்பதற்க்கே நேரம் சரியாக இரூக்குதில்ல... அதான்....//
வரலாற்று உண்மையைச் சொன்னால் ஏன் எங்கெங்கோ செல்கிறீர்கள் எதையாக இருந்தாலும் நல்ல வார்த்தைகளால் விவாதிக்க வேண்டியது தானே நான் படித்த கேள்விப் பட்டதைத்தான் சொன்னேன். அது தவறு என்றால் அது தவறு என்று சொல்லவேண்டியது தானே. தேவையின்றி ஏன் ...

அசுரன் said...

//ஐயோ பாவம் புஸ், தூக்கு தண்டனை யாருக்கும் கூடுக்கக்கூடாதுன்னு வாதட கூட்டம் நீங்க, நீங்களே ஒரு ஆளுக்கு தூக்கு தண்டனை குடுக்கலாம???

தூக்கு தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை அதனால் அவரை ஒன்னு செய்யாதிங்க ப்ளீஸ்.//

Okay Mr Great 'We The People' Why didn't you answer my questions on Afsal Issue so for?

And Continue making fun out of every Execution request mails?

Asuran

Anonymous said...

அருமை உங்கள் கருத்துக்கள் சூப்பர்