Tuesday, February 06, 2007

கடலூர் மாவட்ட நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்

பண்ருட்டி வழக்கறிஞர்கள் சங்கசெயற்குழு உறுப்பினர் திரு. இரா. வைத்தீஸ்வரன், மற்றும் கடலூர் வழக்கறிஞர் ம. இரவி ஆகியோர் அளித்த கூட்டறிக்கை.


கடலூர் மாவட்ட நீதிபதி திரு கே. பாஸ்கரன் அவர்கள் தனது B.R. No. 78/2007 நாள் 08-01-2007 அன்றைய உத்தரவின் மூலம் பண்ருட்டி சார்பு நீதிபதி நீதிமன்றம் மற்றும் பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிபதி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு INVERTOR மற்றும் UPS ஆகிய கருவிகளை பண்ருட்டி வழக்கறிஞர் திரு.சீனு. ஜெயராமன் அவர்கள் தனது சொந்த பணத்தில் நிறுவுவதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவின் பேரில் மேற்படி சீனு.செயராமன் இரு நீதிமன்றங்களுக்கும், மேற்படி மின்சாதனங்களை சுமார் ரூ. 25, 000/- செலவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிறுவியுள்ளார்.
  1. உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல், கடலூர் மாவட்ட நீதிபதி இத்தகைய அனுமதி வழங்கியது தவறு.
  2. தனிப்பட்ட ஒருவரின் நிதி கொண்டு நீதிமன்றத்திற்கு வசதி ஏற்படுத்தி தறுவது தவறான முன்னுதாரணம், அதிலும் அந்த தனிப்பட்ட நபர் ஒரு வழக்கறிஞராக இருக்கும் போது நீதிமன்றத்தின் நடுநிலை கேள்விக்குள்ளாகிறது.

  3. நீதிமன்றம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் செயல்பாடுகளும் பொதுமக்கக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். தேவையற்ற சந்தேகங்கள் எழ இடம் அளிக்கக்கூடாது.


எனவே, நாங்கள் கடலூர் மாவட்ட நீதிபதியின் உயர்நீதிமன்ற அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அவர் மேற்கொண்ட செயலை வன்மையாக ஆட்சேபிக்கின்றோம் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

No comments: