குறைகள்
என்பார்வையில் குறைகளை அதிகம் காணப்படவில்லை என்பதால், நான் குறைகளை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.
பதிவர் பட்டறை நிறைவில் மூன்று குறைகள் சுட்டிக்காட்டினார் விக்கி அவர்கள் அவை இல்லாம ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார்.
அவை:
1. இடம் போதவில்லை என்பது.
2. இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்தது.
3. மதிய உணவு இடைவேளை 1.45 மணிக்கு அனுமதிக்கப்பட்ட்து ( 3வதாக சொன்னது இது தானா? என உறுதியாகத் தெரியவில்லை)
1. இடம் போதவில்லை என்பது.
முதலில் சுமார் 100 முதல் 150 பேர் வருவார்கள் என்று திட்ட மிடப்பட்டது. ஆனால் திட்டமிடலுக்கு அதிகமானவர்கள் வந்தமையால் இடம் போதாமல் போனது தவிர்க்க இயலாதது எனவே அந்த குறையை என்னால் ஏற்க இயலவில்லை.. அந்த இடம் இலவசமாக கிடைந்தது அவை இல்லாமல் சென்னைப் பல்கலைக்கழகம் அனைவரும் அறிந்த இடம் பரிச்சையமான இடம் அதிகம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம் ( கொஞ்சம் தான் தேட வேண்டியிருந்தது) என்பதால் இடம் தேர்வு சரியான ஒன்றுதான். இடம் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென 300 பேர் வந்தால் யார் என்ன செய்ய இயலும்.
2. இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைவாக இருந்தது.
Sify இணைப்பைத் தான் கேட்க வேண்டும் ஏனெனில் இவ்விணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலைமை களை கணக்கிட்டு இலவச இணைப்பை பெற்றதால் அவர்களை கேள்வி கேட்க இயலாது. எனவே இதுவும் மிகப்பெரிய குறை என்று நான் எடுத்துக் கொள்ளவில்லை.
3. நான் குறிப்பிட விருக்கும் குறை
பதிவர் சந்திப்பு என்பது வழக்கமாக குறைவான எண்ணிக்கையுடன் இருப்பது வழக்கம் மேலும், புதியவர்கள் யாரும் அழைக்கப்படுவதில்லை. ஆனால், இப்பதிவர்கள் சந்திப்பில் புதியவர்கள் அழைக்கப்பட்ட்தால் ஏற்கனவே, பதிவர்களாக இருப்பவர்கள் யாரையும் தெரிந்து கொள்ள இயலவில்லை. என்னைப் போன்றவர்கள் உங்கள் பெயர் என்ன என்று ஒவ்வொருவாராக சென்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருந்த்து.
பங்கேற்பாளர் அட்டையில் திரு. தருமி அவர்கள் பெயர் எழுதியிருத்தமையால் எளிதில் அடையாளம் கண்டேன்.. காலையிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பென்ஸ் அவர்களை மாலையில் அவர் பெயரை கேட்டு அறிந்து கொண்டேன். லுக்கி லுக், செந்தழல் ரவி, பால பாரதி, உள்ளிட்டோர் பெயர்களை தனித்தனியாக கேட்டு அறிந்து கொள்ள நேர்ந்த்து இந்த பதிவர் சந்திப்பு என்பது என்னை போன்றவர்கள் வந்த்து அதிகமான வலைப்பதிவர்களை ஒரே இட்த்தில் சந்திக்கலாம் என்று வந்தோம் ஆனால், ஒரே இட்த்தில் கூடியும் யார் யார் என்று தெரியாமலே திரும்ப வேண்டியிருந்தது.
இதனை தவிர்க்க ஏற்கனவே பதிவாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் தானாக வந்து அல்லது யேரேனும் அறிமுகம் செய்திருக்கலாம். இப்படி செய்யாமல் போனதால் என்னைப் போன்றவர்கள் வந்த்தன் நோக்கம் நிறைவேறவில்லை.
4.ஏதேனும் தீர்மானம் இயற்றி இருக்கலாம்
இவ்வளவு பேரை ஒரே இட்த்தில் கூட்டி பின்னர் கலைந்து சென்றார்கள் புதிதாக சிலருக்கு பதிவர்களாக சொல்லித்தரப் பட்ட்து என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. “Un conferencing” என்று அறிவித்தமையால் எவ்வித பயனும் இல்லை.
எனவே, புதிதாக கீழ்க் கண்ட கோரிக்கைகளை வைத்து இருக்கலாம்.
1. இந்தியாவில் மிக அதிகமாக தமிழில் பிளாகர் உள்ளதால் தமிழில் உடனடியாக பிளாகர் வெளியிட கூகுல் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருக்கலாம்.
2.கூகில் மின்னஞ்சல் முழுமையாக தமிழில் மொழி பொயர்க்கப்பட்டுள்ளதாக கூகில் தெரிவித்துள்ளமையால் உடனடியாக கூகிலில் மின்ன்ஞ்சலை தமிழில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம்.
3.Windows நிறுவப்படும் போது இந்தியா தேர்வு செய்தவுடன் இந்திய மொழிகளுக்கான ஆதரவு கூடவே செயல்படுத்த வேண்டும் என்று திரு பத்ரி அவர்கள் கூறிய கருத்தை கோரிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வைத்திருக்கலாம்.
தமிழகத்திலுள்ள பத்திரிக்கைகள் தங்களது இணையப் பக்கங்களை ஒருங்குறி எழுத்து வடிவத்தில் வெளியிட வேண்டும். என்று அங்கு விவாதித விசயத்தையும் அங்கு கோரிக்கையாக வைத்திருக்கலாம்.
மற்றபடி நன்றாக திட்டமிட்டிருந்தார்கள்.
ஓசை செல்வா தனது குரல் பதிவில் நன்றாக “சொதப்பி விட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
13 comments:
கணநேரமே என்றாலும் உங்களை பார்க்க(மட்டுமே!) முடிந்ததில் மகிழ்ச்சி. :)
அப்புறம் தல.., இது சந்திப்பு அல்ல! பட்டறை!
அதனால் பதிவர்களிலும் பலர் நுட்பம் பற்றியே அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார்கள் என்றே எண்ணுகிறேன்.
மேலும், பங்கேற்பாளர் அட்டை கொடுக்கும் போதே.. ஒவ்வொருவரையும் தங்கள் வலைப்பதியும் பெயரை ஏழுதிவிடும்ம்படி அறிவுறுத்தப்பட்டனர் என்ற நினைவு இருக்கிறது. அதன் படி பலர் செய்யவில்லையோ என்னவோ..
அடுத்த முறை பதிவர்களின் அறிமுகத்திற்கான அவகாசத்தையும் சேர்த்தே திட்டமிட்டுக்கொள்ளுவோம். ! :))
//சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.//
அருமை!!
நன்றி!!
//ஓசை செல்வா தனது குரல் பதிவில் நன்றாக “சொதப்பி விட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.//
ஒத்துக்கறேன்னேன்!
மிக்க நன்றி
என்னடா இது யாருக்கும் திருஷ்டி படாம இருக்கேன்னு நினைச்சேன். பட்ருச்சு.. நன்றி சுகுமாரன் ஸார்..
என்னடா இது யாருக்கும் திருஷ்டி படாம இருக்கேன்னு நினைச்சேன். பட்ருச்சு.. நன்றி சுகுமாரன் ஸார்
கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லுங்கள் அய்யா நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது உங்களையும் நான் அங்கு பார்த்தேன். ஆனால் பெயர் குறிப்பிடல அதனால இங்கு தெரிவித்திருக்கிறேன்
சுகு
கூகுள், ப்ளாகர், மைக்ரோசாஃப்ட் இவற்றுக்கு இது போன்ற ஒன்று கூடல்களில் தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்றில்லை. தனித்தனியாக ஆளாளுக்கு மடல் எழுதித் தாக்கினாலும் செவி சாய்க்க வாய்ப்பு உண்டு. எனவே, இணையத்திலேயே கூட இதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். ஜிமெயில் தமிழாக்கம் முடிந்தாலும் அதை வெளியிடுவதில் தேவையில்லாத தாமதம் இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏதேனும் internal procedure இருக்கலாம். ஒவ்வொரு நிறுவனமாக தமிழாக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு பதில் wordpress போன்ற திறவூற்றுச் சேவைகளைத் தமிழாக்கும் வேலையில் நாமே இறங்கலாம். wordpress தமிழாக்கத்துக்கான குழு இங்கே.
சுகுமாரன் ,
உங்கள் கூற்று சரியே ,குறை எனசுட்டப்பட்ட எதுவுமே ஒரு குறையாக சொல்ல கூடியவை அல்ல. ஆனாலும் அனைவரும் அறிமுகப்படுத்தபடவில்லை என்பதையும் ஒரு குறையாக எடுத்துக்கொள்ளகூடாது, தாங்களாகவே முன்வந்து காண்போரிடம் எல்லாம் அறிமுகப்படுத்திக்கொண்டு, பேசிப்பார்த்து இருக்கலாம் தானே!
உங்கள் கோரிக்கைகள் கூட சிந்திக்க வைக்கிறது, ஆனாலும் இது தான் முதல்பயணம் போகபோக அது போலவும் திட்டமிடுவார்கள் என நினைக்கிறேன். தமிழ் இணைய எழுத்தாளர்கள் அல்லது ,வலைப்பதிவு எழுத்தாளர்கள் என ஒரு வடிவம் கொடுக்க கூட முயலலாம். அதற்கென ஒரு அமைப்பும் ஏற்படுத்தி!
சுகுமாறன்,
நன்றி :)
150 -200 (300 !!) பேர் பங்கேற்கும் நிகழ்வில் அறிமுகப்படலமே நிறைய காலத்தை எடுத்துக்கொள்ளும் என்பதாலேயே நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை. பல நண்பர்கள் பங்கேற்பாளர் அட்டையில் பேர் எழுதாமல் போனதை அடுத்த முறை சரி செய்துவிடலாம்
தீர்மானங்களை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து. தீர்மானம் போடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நிறைய இடம் இருக்கிறது. தீர்மானம் என்று வரும்போது அதோடு நம் வேலை முடிந்ததாக நினைப்பு வந்துவிடுகிறது. நாமாவது அவ்வாறு இல்லாமல் முயற்சிகளில் ஈடுபடலாமே என்று முடிவு செய்திருந்தோம். பட்டறையின் அடுத்த கட்டம் என்று ஆரோக்கியமாக விவாதம் நடப்பதை பார்த்தால் ....
((நன்றி பால பாரதி,
இது சந்திப்பு அல்ல பட்டறை...
அப்படியானல் தரைத் தளத்தில் அரங்கு நிறைய பலபேரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்?.
காலை 11 மணிவரை அனைவரும் கீழ்த்தளத்தில் தான் இருந்தார்கள். 11 மணிக்கு மேல்தான் மேலே பதிவர்களுக்கான பயிற்சி நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது அதன் பின்னர் தான் பலர் மேலே சென்றனர்.
புதியவர்களுக்கு மட்டும் தான் என்றால் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் பழையவர்கள் என்பதால், இவர்களையும் ஏன் வருவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
புதியவர்களை மட்டும் வரும்படி சொல்லி அவர்களுக்கு பயிற்சி அளிக்க சிலரை மட்டுமே வரவழைத்திருக்கலாம்.
அவ்வாறு செய்திருந்தால் நோக்கம் திட்டம் எல்லாம் சரியானதாக இருந்திருக்கும் என்பது தான் என் கருத்து. )) சும்மா கூட்டத்தை காட்ட வேண்டும் என்னமும் இருந்ததாகவும் நான் உணர்கிறேன்.
பழைய பதிவர்கள் பலரை வரவழைத்து அவர்களுக்கும், பதிவு நடத்துகிறவர்களுக்கு வீண் செலவு தான்?
(நான் என்ன நோக்கத்திற்காக பதிவு போட்டேனோ அதுவும் அதற்கானதாக இல்லாமல் வேறு திசையில் செல்கிறது)
///லக்கிலுக் said...
//சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.//
அருமை!!
நன்றி!! ///
வருகைக்கு நன்றி லுக்கிலுக் அவர்களே!
7. //ரவிசங்கர் said...
கூகுள், ப்ளாகர், மைக்ரோசாஃப்ட் இவற்றுக்கு இது போன்ற ஒன்று கூடல்களில் தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்றில்லை. தனித்தனியாக ஆளாளுக்கு மடல் எழுதித் தாக்கினாலும் செவி சாய்க்க வாய்ப்பு உண்டு. எனவே, இணையத்திலேயே கூட இதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். ///
நன்றி ரவிசங்கர் அவர்களே!,
இநத பதிவிலே நான் யாரையும் குறை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் பதியவில்லை எனவே, இதனை குறை சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் பதியப்பட்ட்து என்று கருதவேண்டாம்.
இதை ஏன் ஆலோசனையாக அல்லது என் தரப்பு கருத்தாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் தனித்தனியாக ஆளாளுக்கு மடல் எழுதித் தாக்கினாலும் செவி சாய்க்க வாய்ப்பு இருப்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால், நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறதென்றால், பதிவில் மேலே நான் குறிப்பிட்டிருந்தேன் பழைய பதிவர்களை யாரும் அறிமுகம் செய்யவில்லை என்று.
இதற்கு நீங்கள் பதில் சொல்லியிருந்தால்........! அதலானென்ன அவர்களவர்களது முகவரியை கேட்டு அவர்கள் வீட்டில் சந்திக்கலாமே என்று சொல்வது போல் உள்ளது. அப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது.
சரி ரவிசங்கர். விவாதங்களை தொடரவேண்டாம்.
நீங்கள் இந்த பணியை முன்னெடுங்கள் www.tamilbloggers.org தளத்தில் இதற்கான கோரிக்கையை வைப்போம். எல்லோரும் அதில் இயன்றவரை கருத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்வோம். ஆங்கிலத்தில் விவாதங்கள் பதிவு செய்யவில்லை எனில் கீழே அதன் ஆங்கில மொழியாக்கம் அளிக்கலாம். அந்த இணைப்பை கூகுல் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியோருக்கு இந்த விவாதங்களின் இணைப்பை கொடுக்கலாம் என்று நான் கருதுகிறேன். அப்போதுதான் நாம் அமைப்பு ரீதியாக இருக்கிறோம் இவ்வளவு போருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க இயலும். இது தொடர்பாக உங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன்.
///ஜிமெயில் தமிழாக்கம் முடிந்தாலும் அதை வெளியிடுவதில் தேவையில்லாத தாமதம் இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏதேனும் internal procedure இருக்கலாம். ஒவ்வொரு நிறுவனமாக தமிழாக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு பதில் wordpress போன்ற திறவூற்றுச் சேவைகளைத் தமிழாக்கும் வேலையில் நாமே இறங்கலாம். wordpress தமிழாக்கத்துக்கான குழு இங்கே.
நன்றி ரவிசங்கர்,///
பெரும்பாலான பதிவர்கள் பிளாகர் ஐ பயன்படுத்துவதால் நான் அதனை மொழிபெயர்க்க கூகில் இடம் கேட்கலாம் என்று கூறினேன். ஆனால் நீங்கள் அது செய்யவேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்லாமல் wordpress மொழி பெயர்க்கலாம் என்று கூறி இருக்கிறீர்கள்.
பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டப்பாக்குக்கு விலை சொல்வது போல் உள்ளது.
எனவே, மேலே உள்ள கோரிக்கை சரியா இல்லையா? என்பதைப் பற்றி விவாதிக்கலாம். தொடர்புடையவற்றை மட்டும் சிந்திக்கலாம் என்று கருதுகிறேன்.
நீங்கள் சொல்வது போல் wordpress ஐயும் மொழி பெயர்க்கலாம் என்பதும் சரியானது தான், அதனையும் செய்யலாம். இவை போன்ற செயலுக்கு உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்பதையும் நான் அறிவேன்.
சுகுமாரன், நீங்கள் குறை சொன்னதாக நினைக்கவில்லை. நிச்சயம், உங்கள் எதிர்ப்பார்ப்புகள் / ஆலோசனைகளையே தெரிவித்து இருக்கிறீர்கள்.
ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைக்க நேரம் இல்லை என்பது தவிர வேறு ஒரு காரணமும் இல்லை.
நன்கொடை வாங்கி இழுத்துப் பிடித்துக் கணக்குப் போட்டுச் செய்த ஒரு நிகழ்வில் கூட்டம் கூட்டுவதற்கான அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் தளத்தில் வருகையாளர்கள் பதிவு செய்வதைக் கூட நிறுத்தலாமா என்று யோசித்தோம். ஆனால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள எவரையும் நாம் தடுப்பது போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இட நெருக்கடிக்கு இடையிலும் அனைவரையும் வரவேற்றோம்.
பழைய பதிவர்கள் பலர் உரையாடல் தலைப்புகளிலேயே ஆர்வம் காட்டியதால், பயிற்சித் தலைப்புகள் புதியவர்களுக்கு மட்டுமோ என்று ஒரு தோற்றம் இருக்கிறது. உண்மையில், html, flash, google reader, wordpress, tamil99 அறிமுகம் என்று பல தலைப்புகளும் பழைய பதிவர்களும் கற்றுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் வைத்தது தான். நிகழ்ச்சி நிரல்கள் அமர்வு அரங்கத்திலும் தளத்திலுமே வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் உங்களுக்குச் சரியாக சேர்க்கப்படாதது குறையே. அடுத்த முறை கவனித்துக் கொள்வார்கள்.
ப்ளாகரைத் தாராளமாக தமிழாக்கலாம். தமிழாக்கச் சொல்லிக் கூகுளைக் கேட்கலாம். ஆனால், அது என்று ஆகும், எப்படி ஆகும் என்பது நம் கையில் இல்லை. கோரிக்கையை மட்டும் வைத்து விட்டு எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட தமிழாக்கத்துக்கான சுதந்திரத்தை நம் கையில் தந்திருக்கும் wordpress போன்ற திறவூற்று மென்பொருள்களை ஆதரிக்கலாமே என்று தான் நான் சொல்ல வந்தது.
கணினி, இணையத்தில் தமிழ் சார்ந்த பல விசயங்களுக்கு lobbying, activism தேவைப்படுகிறது. அதில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் அடங்கும். அதற்கு tamilbloggers.org தளத்தையும் ஒரு களமாகப் பயன்படுத்தலாம். செய்வோம்.
Post a Comment