புதுச்சேரி, ஏப். 5: நேபாள நாட்டில் நடக்கும் தேர்தலையொட்டி சர்வதேச தேர்தல் பார்வையாளராக புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்ட மைப்பின் செயலர் கோ.சுகுமாரன் அங்கு செல்கிறார்.
அரசியல் நிர்ணய சபைக் கான தேர்தல் நேபாளத்தில் இம் மாதம் 10-ம் தேதி நடக் கிறது. இதையொட்டி நேபாளத்தைச் சேர்ந்த 148 அரசுசாரா அமைப்புகள் சார்பில் 92 ஆயிரத்து 245 பேரும், உலக அளவில் 500- க்கும் மேற்பட்டவர்களும் தேர்தல் பார்வையாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள 9,801 தேர்தல் மையங்களையும், 20 ஆயிரம் தேர்தல் பூத்துகளையும் பார்வையிடுகின்றனர். கடந்த 1999-ல் நடந்த பொதுத் தேர்லின்போது நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களை விட இது 30 மடங்கு அதிகம்.
அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளர் கள் அமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் சுகுமா ரன் நேபாளம் செல்கிறார். வரும் ஏப்ரல் 7 முதல் 14- ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து தேர்தல் பணிக ளைப் பார்வையிடுகிறார். பின்னர் திரும்புகிறார்.
தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர தேர்தல் நடக் கும் எந்தப் பகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
4 comments:
மரியாதைக்குரிய கோ. சுகுமாரன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!
அப்படியே ஒரு நடை திபெத்துக்கும் போயிட்டு வாரது?
ஒரு தமிழனுக்கு உலகலவில் கிடைக்கும் அங்கீகரமாகவே இதை கருத வேண்டும். பணி தொடர வாழ்த்துக்கள்.
புதுச்ச்சேரி இரா.சுகுமாரன் அய்யா,
அடேங்கப்பா, இப்பேற்பட்ட சாதனையெல்லாம் அலட்சியமாக பண்ணும் கோ.சுகுமாரனுக்கு இன்னொரு சுகுமாரன் ஜல்லி அடிப்பது ந்ல்ல காமெடி.
பாலா
Post a Comment