என்ன தான் தமிழகமக்கள் அல்லது அரசு கேட்டுக் கொண்டாலும் இந்திய அரசின் எருமைத்தோலில் ஏறவே இல்லை என்பதுதான் கடந்தகாலம் நமக்கு சொல்லும் உண்மை.
சிவசங்கர் மேனன் இலங்கை சென்றபோது போர் நிறுத்தம் பற்றி பேசுவார் என இந்திய பத்திரிக்கைகள் எழுதின, ஆனால் இலங்கை அரசு சொன்னது அவர் போர் நிறுத்தம் குறித்து பேசப்போவதில்லை என்று எனவே, இந்திய வெளியுறவுத்துறை உண்மையில் இந்தியாவில் இல்லை அது இலங்கையில் உள்ளது என்பதைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சிவசங்கர் மேனன் என்ன போசப்போகிறார் என அவர் அறிவிக்கவில்லை, இந்திய அரசு அறிவிக்கவில்லை மாறாக இலங்கை அரசு அறிவிக்கிறது.
அன்பு தமிழர்களே நமது இனம் அழிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் நாம் இந்திய அரசை எதிர்த்து தான் முதலில் போராடவேண்டியிருகிறது. இந்தியா இன்னும் பார்ப்பனிய தேசமாகவே இருக்கிறது. பார்ப்பன அதிகாரிகள் எப்போதும் தமிழ் விரோதிகளாகவே என்று இருக்கிறார்கள்.
தமிழக அரசியல் வாதிகளிடம் அரசியல் இலபத்திற்காக இங்கே கீழே உள்ள படத்தைப் பாருங்கள் அந்த படத்தில் உள்ளது போல நடந்து கொள்வதால் தான் இந்திய அரசு இப்படி எருமைபோல் நடந்து கொள்கிறது.
தமிழர்களே ஒன்று சேருங்கள், அம்பலப்பட்டு இருக்கும் இந்திய அரசை ”காங்கிரசு தமிழ் விரோதிகளை” புரிந்துகொள்வோம், பார்ப்பனிய இந்திய அரசை புரிந்து கொள்வோம். காங்கிரசு அரசை தூக்கி எறிவோம். வரும் தேர்தல் அவரகளுக்கு பாடம் புகட்டுவதாக இருக்க வேண்டும்.
...................................................................................தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசின் நிலை மாறவே மாறாது: சிறிலங்கா
நன்றி புதினம்
[வியாழக்கிழமை, 22 சனவரி 2009, 10:14 பி.ப ஈழம்] [ப.தயாளினி]
இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடக்கில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன் முதற் கட்டமாக இராமநாதன் சுதந்திரபுரம், அருணாசலம் வெற்றிபுரம், கதிர்காமர் எழுச்சிநகர் போன்ற பெயர்களில் மூன்று விடுதலைக் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன. தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் சிறிலங்கா மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு சார்பாகவே உள்ளது.
வடக்கில் போர் நடைபெறும் பிரதேசங்களுக்கான அரசாங்கத்தின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது என்றார் அவர்.
5 comments:
100% Sariyana pathivu.
//தமிழர்களே ஒன்று சேருங்கள், அம்பலப்பட்டு இருக்கும் இந்திய அரசை ”காங்கிரசு தமிழ் விரோதிகளை” புரிந்துகொள்வோம், பார்ப்பனிய இந்திய அரசை புரிந்து கொள்வோம். காங்கிரசு அரசை தூக்கி எறிவோம். வரும் தேர்தல் அவரகளுக்கு பாடம் புகட்டுவதாக இருக்க வேண்டும்.
////
உடனிருப்பது திமுக.
முன்பு ஊடகம் மட்டும் இருந்தது.
சமீப கால போக்கு பணம் கொடுத்து வாக்கு எடுப்பதில் முன்மாதிரியான அதிமுக - வை விஞ்சிவிட்டது.
ஆக ஜெயிக்கபோவது யாரு!
***// நமது இனம் அழிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் நாம் இந்திய அரசை எதிர்த்து தான் முதலில் போராடவேண்டியிருகிறது. இந்தியா இன்னும் பார்ப்பனிய தேசமாகவே இருக்கிறது. பார்ப்பன அதிகாரிகள் எப்போதும் தமிழ் விரோதிகளாகவே என்றும் இருக்கிறார்கள்.//***
சரியான கணிப்பு!
இந்திய வல்லாண்மையும் ஆரியப் பார்ப்பனீயமுமே தமிழினத்தின் முதன்மைப் பகையாக உள்ளனர்.
தமிழர் விழிப்போடு செயற்பட, தக்க எச்சரிக்கை செய்திருக்கிறீர்கள்.
சுய உணர்வைக் கெடுத்த தமிழக சினிமா தான் தமிழனுக்கு சிந்தனை வளர்த்து விடவேண்டும்.
தமிழக அறிஞர்களால் வளர்க்க முடியாமற்போன தமிழ் உணர்வை சிலவேளை நமிதாவும், திரிஷாவும் தான் உருவாக்க வேண்டுமோ?
தமிழா விழித்தெழு! இல்லையேல் அழித்துவிடுவார்கள்.
புள்ளிராஜா
உங்களுடைய உள்ளூர் இந்திய அரசு
விரோத அரசியலுக்கு எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவீர்கள்.
காங்கிரஸ் தனியாட்சி நடத்தவில்லை.
கூட்டணியாட்சியில் திமுக,பாமக இருக்கின்றன. இவை சென்னையில் ஒன்று, தில்லியில் ஒன்று என்று
பேசுகின்றன.போதிய அழுத்தம் தருவதில்லை, இலங்கைத் தமிழருக்காக இதை செய்ய வேண்டும்
இல்லையேல் ஆதரவு விலக்கம் என்று
செய்வதில்லை.அப்படி செய்திருந்தால் அரசின் நிலைப்பாடு மாறியிருக்கும்.
ஆனால் உங்களுக்கு இதை எழுதுவதை விட இந்திய அரசு எதிர்ப்பு அரசியல்தான்
முக்கியம்.ஆகவேதான் பார்பனிய தேசம் என்ற பொய்களை தொடர்ந்து
எழுதுகிறீர்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்களைப் போன்ற ஈனர்கள் குளிர் காய்வீர்கள், உங்களுடைய அரசியலுக்கு அதை
பயன்படுத்திக் கொள்வீர்கள்.
அங்கு அப்பாவி தமிழர்தானே அல்லல்
படுகிறார்கள், நீங்களா ஷெல்களை சந்திக்கிறீர்கள்.
Post a Comment