Monday, April 06, 2009

பித்தம் தலைக்கேறி உளரும் கருணாநிதி

செய்தி : நன்றி தினமலர்:(06-04-2009 பக்கம்: 5)

ஈழவிடுதலைப்போரில் தமிழகம் உள்ளிட்ட பகுதியுடன் மொத்தமாக இதுவரை 16 பேர் தீக்குளித்து உயிர் துறந்து இருக்கிறார்கள். உலகநாடுகள் ஈழப்போரின் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்தபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தனது ஓயாத போராட்டத்தின் விளைவாக ஈழப்படுகொலையை உலகின் பாரவைக்கு அல்லது உலகம் இந்த படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள்.

அவர்களின் அயராத உழைப்பின் பின் தான் உலக நாடுகள் கொஞ்சம் திருப்பி பார்த்தது.

ஆனால் கருணாநிதியை பாருங்கள்

"எங்களுடைய குரலை மதித்து வெளிநாடுகளில் உள்ள அரசுகள், அய்.நா சபை உள்ளிட்டவை தூதர்கள் மூலமாக சொல்லிவருகிறார்கள்"

என பச்சை புளுகை சொல்லி ஏமாற்றும்

கருணாநிதிக்கு பித்தம் தலைக்கேறி உளரிக்கொட்டுகிறார் என்பதாகவே நாம் புரிந்துகொள்ள முடியும்.

14 comments:

Anonymous said...

சார்! அவர் ஒரு பழுத்த அரசியல்வாதிங்கறத பல முறை சொல்லிட்டாறு நீங்க தான் புரிஞ்சிக்காம என்னமோ அவரு செய்வாரு இவரு செய்வாருன்னு நம்பறீங்க, எதுக்குங்க உங்களுக்கு ஓட்டுன்னு ஒன்று இருக்கு காமிங்க அதுல உங்க கோவத்த

இரா.சுகுமாரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா!

//சார்! அவர் ஒரு பழுத்த அரசியல்வாதிங்கறத பல முறை சொல்லிட்டாறு நீங்க தான் புரிஞ்சிக்காம என்னமோ அவரு செய்வாரு இவரு செய்வாருன்னு நம்பறீங்க, எதுக்குங்க உங்களுக்கு ஓட்டுன்னு ஒன்று இருக்கு காமிங்க அதுல உங்க கோவத்த//

அதை தமிழக மக்கள் செய்வார்கள் என நம்புகிறோம் ஆனால், எவ்வளவு பெரிய பொய்யர் என்பதை நாம் உலகுக்கு உணர்த்த வேண்டாமா? அதனால் தான் இதை எழுத வேண்டியுள்ளது.

Anonymous said...

அதெல்லாம் முடியாது. நாங்க யோசிக்கவே மாட்டோம்.
-
உடன்பிறப்பு

அழுகிரி said...

எங்க அப்பாவையா உளருறாருன்னு சொல்லுற.. மதுர பக்கம் வருவ இல்ல... அப்ப இருக்குடி ஒனக்கு.

Anonymous said...

சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் மொத்தம் 72 லட்சம் கோடிகளாம் இதில் கொலைஞரின் பங்கு எவ்வளோன்னு தெரிஞ்ச உடனே அதை எடுத்து செலவு செய்வாறு ஆனா பாவம் அவருக்கு அதுல எவ்ளோன்னு அவருக்கே தெரியாது

இரா.சுகுமாரன் said...

ஒரு சேதி தெரியுமா உங்களுக்கு?

இந்த முறை தேர்தலில் போட்டியிட மனு செய்தவர்களிடம் ரூ10000/- முன்பணமாக கருணாநிதி வாங்கினார் ஆனால் இந்த தடவை தேர்தலில் சீட்டு இல்லாதவர்களுக்கு திருப்பி கொடுக்கப் போகிறார்களாம்.

இந்த முறை இது புதிதாம் கையிருப்பு அதிகம் இருக்கு போல என கழகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் சொன்னார்.

ஒருவேளை இராசா அடித்த கோடியாக இருக்குமோ? தெரியல!!

திரு said...

சுகுமாரன்,

கருணாநிதி இப்போது மட்டுமா இப்படி புளுகுமூட்டைகளை அவிழ்க்கிறார்? அடுத்தவன் உழைப்பை தனக்கு புகழ் சேர்க்க பயன்படுத்துவது இவருக்கு ஒன்றும் புதியது அல்லவே. இப்போது குவிந்துள்ள கோடிகள் கருணாநிதியை எதையும், பேசவும் செய்யவும் வைக்கும்.

கருணாநிதி மட்டுமா இப்படி? விடுதலைச் சிறுத்தைகளுக்கும், காங்கிரசுக்கும் இலங்கைப் பிரச்சனையில் கொள்கை வேறுபாடில்லை என்று தங்கபாலு சொல்லியிருக்கு. 'அண்ணன்' திருமா இதற்கு என்ன பதில் சொல்வார்? விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக சொல்லும் 'அண்ணன்' திருமாவும், அழித்தே தீருவோமென்று நிற்கிற காங்கிரசுக்கும் தேர்தல் உடன்பாடு வந்தபிறகு கொள்கை ஒன்றாகியதா? திருமா தான் விளக்கவேண்டும்.

ஜெயா, வைகோ, ராமதாஸ் சந்தர்ப்பவாத கூட்டணியும், முரண்பாடுகளும் வாக்காளர்களை மடையர்களாக்கும் கேலிக்கூத்து. நமது அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்திற்கு போட்டியே நடத்தலாம். இவர்களது சந்தர்ப்பவாதமும், கருணாநிதியின் துரோகமும் சேர்ந்து ஈழத்தமிழர்களை கொல்கிறது. பணநாயகமும், வாரிசு அரசியலுமாக நாறிப்போன தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்க புதிய இயக்கங்கள் உருவாக வேண்டும்.

திரு

பிளாட்டினம் said...

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

http://paruththiyan.blogspot.com/2009/04/blog-post_06.html

மஞ்சூர் ராசா said...

இலங்கையில் தமிழன் அழிந்துக்கொண்டிருக்கிறான். ஆனால் அதை வைத்து ஒரு கூட்டம் தமிழ்நாட்டை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

மஞ்சூர் ராசா said...

பிளாட்டினம் எழுதியுள்ள கடிதம் உண்மையிலேயே மிகவும் மனவருத்தத்தை தருகிறது. ஈழத்தமிழர்களின் நிலை மிக மிக மோசமான ஒரு கட்டத்தை அடைந்துள்ளது. இதை இந்த உலகில் எந்த நாடுமே கண்டுக்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை.

ஜோதிபாரதி said...

திரு சுகுமாரன் ஐயா!

அண்டர் லைன் பண்ணுன வரிகள் கொதிப்பை ஏற்படுத்துகின்றன.
வேதனைப்படத்தான் முடிகிறது!!

Anonymous said...

ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மீண்டும் எழுங்கள் தமிழ் சொந்தங்களே!!

ttpian said...

வாழ்நாளில் இப்படி ஒரு ஈனப்பிறவியை நான் பார்த்ததில்லை...
மக்கள் கொதினிலை...அதிகமாகி,இவனை சுந்நாம்பு காலவயில் போடவேண்டும்!

Anonymous said...

what this spineless man will do, even our indian governemnt not capable of saving lives of hundreds of our own fishermen, how can they help sl tamils. Government have terribly fearing from sl sinhalese men. if our goverment take any action against them, then they will not keep quiet and attack and kill our fishermen with their mighty navy within our territory. our navy cannot able to save them, becasue they need political permission. politicians always fight with themselves and some will suggest we should not take retaliatory action, better telephone to all world leaders to condemn the killings of our fishermen and will send proof of srilankan navy killings of our fishermen to sl goernemnt.

Daringly sl will not accept the proof and due to international presure, they will arrest some innoscent sl tamils and project to the world that they arrested the culprits. But late some media in sl reports that, the arrested sl tamils even dont know how to operate even a boat and dont know anything about weapons used to kill our fishermen and the indian fishermen are killed ny sl navy only. but once the news published in newspapers, immediately the sl goverment arrest the editor and reporter and while taking them to prison they will be shot dead by sl police. this news will not come out. so truth will be buried underground. all over whorld including tamil nadu tamils dont know who killed the fishermen.

India still under confusion blames intelligence agencies for failure to inform government of sl navy attack on fisermen.

unlucky fishermen what to do except crying helpessly and losing life in the hands of sl navy.

shame india, shame, better start begging sl government not to kill atleast indian fishermen.