Monday, February 21, 2011

விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி


புதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் விக்கிப்பீடியா அறிமுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி ரவிசங்கர் பேசியது.
விக்கிப்பீடியா என்பது ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும், இதில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறச் செய்யவேண்டும்.
விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது.
விக்கிப்பீடியாவை  யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழை தட்டச்சு செய்ய தமிழ் 99 என்ற முறை எளிமையானது. அதை அனைவரும் பயன்படுத்த முயலவேண்டும் என்றார்.
பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்திகளைப் பதிவது குறித்தும், தமிழ் 99 விசைப் பலகையை எளிமையாக பயன்படுத்துவது குறித்தும் மடிகணினி கொண்டு விளக்கினார்.
வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: