Wednesday, March 08, 2006

வைகோ அன்றும் இன்றும்

வைகோ அன்று

“பாசிச செயலலிதா அரசை மக்கள் சக்தியைக்கொண்டு தூக்கியெறியும் வரையில் ஓயமாட்டான் இந்த வைகோ..“ (தாம் கைது செய்யப்பட்ட போது 11-07-2002)

வைகோ இன்று

“செயலலிதாவை ஆட்சியில் அமர்த்துவது தான் இன்றைய கொள்கை“ பெரும்பான்மை இல்லை என்றாலும், இவர் ஆட்சியில் பங்கு கேட்கமாட்டார். தமிழகத்தை முற்றாக செயலலிதா மட்டுமே மக்களை மொட்டை அடிக்க வேண்டும், இது தான் இவரது இன்றைய கொள்கை.

வைகோ அன்று

“தர்மபுரியில் பேருந்துகள் அ. தி.மு.க வினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு மூன்று கல்லூரி மாணவிகள் துள்ளத்துடிக்க இறந்து போனார்கள். அப்படிப்பட்ட வன்முறைகளில் ம.தி.மு.க தொண்டர்கள் ஈடுபடமாட்டார்கள் அமைதியான முறையில் செயலலிதா அரசுக்கு எதிர்த்து போராடுவார்கள்“. (தாம் கைது செய்யப்பட்ட போது 11-07-2002)

வைகோ இன்று

அந்த செய்தி மறந்து போச்சி! தீயிட்டுக் கொளுத்தப்பட்டு மூன்று கல்லூரி மாணவிகள் துள்ளத்துடிக்க இறந்து போனதைப்பற்றி இப்போது பேசமாட்டார். (தேர்தல் முடிந்த பின் செயலலிதா அவமானப்படுத்திய பின் பேசுவாரோ என்ன்வோ!)

வைகோ அன்று

“எத்தனைக் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வழங்க முடியாத விளம்பரத்தை தம் கட்சிக்கு செயலலிதா வழங்கியிருப்பதாக அன்று ஆனந்தபட்டார்கள்“ இந்த ஆனந்தம் எல்லாம் தாம் பா.ஜ.க கூட்டணியில் உள்ளதால் அவர்கள் நிச்சயம் காப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையால் தான். ஆனால் அது இயலாமல் போனது, அப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள்.பொடாவை ஆதரித்தது தவறு என்று.

வைகோ இன்று

ஆனால் பின்னர் தாம் பொடாவை ஆதரிக்கவில்லை, என்று பேசிவருகிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2002 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்ட பின்
மதுரையிலிருந்து அழைத்துவரப்பட்ட வைகோ பகல் 2-55 மணிக்கு வேலூர் மத்திய சிறை வாசலில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், “பொடாவையும் ஆதரிக்கிறேன்......“ “விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் சிறைக்கு சென்றார். இதை ஜீனியர் விகடன் பதிவு செய்துள்ளது. (ஜீனியர் விகடன் 17-07-2002 பக்கம் 34)

செயலலிதா அன்று

தேவைப்பட்டால் ம.தி.மு.க-வையே தடை செய்வோம். அந்தக் கட்சியின் இரண்டு மத்திய அமைச்சர்களையும் கூட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யத் தயங்கமாட்டோம்.“ என்றார்.

செயலலிதா இன்று

“அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை.பழைய விசயங்களை திரும்பிபார்த்து அதையே நினைத்துக் கொண்டிருப்பதில் நம்பிக்கை இல்லை“.

செயலலிதா இப்படி நினைத்துத்தான் இதனை சொல்லியிருப்பார். பழைய விசயங்களை நினைவு படுத்தினால் கூட்டணியிலிருந்து போய்விடுவார் என்று நம்பிக்கை இல்லை.எனெனில் நாங்கள் கவனிக்க வேண்டியவர்களுக்கு முறையாக கவனித்து விட்டோம்.

7 comments:

Anonymous said...

சரியாகச்சொன்னீர்கள்

krishjapan said...

anna ennaganna, ungalukkum selective amnesia varakkoodatha? athan tamil makkalukku niraya varume. Appuram enna kavalai?

இரா.சுகுமாரன் said...

Krishna, ஏன்? எப்படி? எதற்கு? ஆகியோருக்கு நன்றி!
சுயநலமின்னா இந்த நோய் தான் எல்லோருக்கும் சாதாரணமா வருது மக்களுக்கு மட்டுமில்ல!

இரா.சுகுமாரன்

Anonymous said...

ஜெயலலிதா - ஸ்ராலின் - வைகோ என்ற மூன்று துருவ போட்டியை உருவாக்குவதே வைகோவின் திட்டம்
மக்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன்'. இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

` தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்' இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வானில் வந்து போன போது வைகோ பேசியது.

` தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அ.தி.மு.க.வின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்' போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு நடுவே `பொடா நாயகன்' வைகோ பேசியது.

எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.

தி.மு.க.வில் இருந்தபோதும் சரி, ம.தி.மு.க.வைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.

ஆனால், அவர் கூட்டணி விடயத்தில் வெற்றி கண்டு ( 35 சீட்களை அள்ளி) நின்ற போது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.

வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.

அவரது கட்சியின் கொள்கை வரிகளான இலட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.

கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து ( கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அ.தி.மு.க.வுடன் கை கோர்த்துள்ளார்.

ஸ்ராலினின் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தார் என்பதற்காக வைகோவை கட்டம் கட்டி வெளியேற்றியது தி.மு.க.

தி.மு.க. கண்ட மிகப் பெரிய பிளவுகளில் ஒன்று எம்.ஜி.ஆர். திட்டம்போட்டு வெளியேறியது. இரண்டாவது வைகோவை வெளியேற்றியது.

ஆனால், எம்.ஜி.ஆர். மடமடவென உச்சாணிக் கொம்புக்குப் போனது போல வைகோவால் போக முடியவில்லை.

1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி பிறந்தது வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகி வைகோவுடன் இணைந்தனர்.

கட்சி ஆரம்பித்து 12 ஆண்டுகளைக் கடந்து விட்டபோதிலும் சற்றும் கட்டுக் குலையாமல், கட்டுக் கோப்புடன், வைகோ சொல்வதே வேதம் என்று இராணுவ மிடுக்குடன் நடைபோட்டுக் கொண்டிருந்தது ம.தி.மு.க.

12 ஆண்டு கால ம.தி.மு.க. வரலாற்றில் 2 முறை சட்டசபை இடைத் தேர்தல், ஒரு சட்டசபை பொதுத் தேர்தல், 3 பாராளுமன்ற பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது.

இதில் 1996 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து ம.தி.மு.க. போட்டியிட்டது. அத்தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

1997 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்ந்தது ம.தி.மு.க. அத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. ம.தி.மு.க. வுக்கு முதன்முதலாக எம்.பி.க்கள் கிடைத்தனர்.

பின்னர் 1999,2004 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார் வைகோ.

2 முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது ம.தி.மு.க.

2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் வைகோவின் பொடா சிறை வாசமும், அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் அவர் செய்த பிரசாரமும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு பெருமளவில் உதவியது.

ஆனாலும் அந்த வெற்றிக்குப் பின் தி.மு.க.விடம் இருந்து விலக ஆரம்பித்தார் வைகோ. அல்லது வைகோவை விட்டு தி.மு.க. விலகியது.

கூட்டணியில் இருக்கும் தலைவர் என்றாலும் கூட அவருக்கு ராமதாஸுக்கு இணையான மரியாதையை தி.மு.க. தரவில்லை.

மேலும் வைகோவுடன் இருக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கும் தி.மு.க.விடம் உரிய மரியாதை கிடைக்கவில்லை.

இங்கு தான் புகுந்தது அ.தி.மு.க. சசிகலாவின் உறவினரான எல்.கணேசன் மூலமாக வைகோவை மெதுவாக வளைக்க ஆரம்பித்தனர்.

மேலும், இந்திரா காந்திக்கு பயந்து கருணாநிதிக்காக காரோட்ட யாரும் முன்வராதபோது தைரியமாய் முன்வந்து ரிஸ்க் எடுத்த அந்தக் காலத்தின் தி.மு.க முன்னோடியான `காரோட்டி' கண்ணப்பனை ( ம.தி.மு.க. பொருளாளர்) உளவுத்துறை பொடி போட்டு வளைத்தது.

இருவரும் சேர்ந்து வைகோவை ஒரு பக்கம் பிரைன் வோஷ் செய்து கொண்டிருக்க, தி.மு.க.வின் நடவடிக்கைகளும் வைகோவை யோசிக்க வைத்தன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 17 தர, 21 இடங்களைக் கேட்டு 4 தொகுதிகளுக்காக கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. இந்த முறையும் தி.மு.க. 22 தர, 25 கேட்டு வெளியேறியுள்ளார் வைகோ.

ஆனால், கடந்தமுறைக்கும் இந்த முறைக்கும் நிறையவே வித்தியாசம். கடந்த முறை அ.தி.மு.க வுடன் சேராமல் தனித்துப் போட்டியிட்டார் வைகோ. காரணம், கொள்கையிலே உறுதி என்பதால் உறுதியாக இருந்தார்.

இந்த முறை `தொகுதியிலே உறுதி' என்ற அளவுக்கு அரசியலில் `பக்குவம்' அடைந்துவிட்டார் வைகோ. தொகுதி தான் முக்கியம் கொள்கை எல்லாம் சும்மா என்று ஆவரேஜ் அரசியல்வாதிகள் மாதிரி வைகோவும் பேசியதைப் பார்த்து அவரை உளப்பூர்வமாக ஆதரிக்கும் தொண்டர்கள் கூட மிரண்டு தான் போயிருப்பார்கள்.

கடந்த தேர்தலில் குட்டிக் கட்சிகளை திரட்டிக் கொண்டு தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க. பிரித்த வாக்குகளால் தான் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. தோல்வி கண்டது. அந்தப் படிப்பினையை தி.மு.க. இவ்வளவு வேகத்தில் மறந்துவிட்டது கொடுமை தான்.

ஆனால், இப்போது அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்துள்ள வைகோவிடம் நீண்ட கால பிளான்கள் இருப்பது தெரிகிறது. அ.தி.மு.க. ஜெயித்து ஆட்சியமைத்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கூட்டணியில் வைகோ நீண்டகாலம் நீடிக்கமாட்டார்.

இத்தனை ஆண்டுகள் கட்சி நடத்தியும் சட்டசபையில் ஒரு ம.தி.மு.க. கூட இல்லை. முதலில் அந்தக் குறையைப் போக்க யாருடனாவது கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய நிலை வைகோவுக்கு.

தனித்து நின்றால் மீண்டும் அது அ.தி.மு.க.வுக்கே உதவும். ஆனால், ம.தி.மு.க.வுக்கு அதனால் ஒரு பலனும் இல்லை.

முதலில் சட்டமன்றத்தில் புக வேண்டும். அதுவும் அதிக எண்ணிக்கையில்.

அடுத்ததாக வைகோ எதிர்பார்ப்பது, மிக விரைவில் ஸ்ராலினுக்கு தி.மு.க. பட்டாபிஷேகம் சூட்டப் போகிறது. தி.மு.க. வென்றால் கருணாநிதி பேருக்கு சில மாதங்கள் முதல்வராக இருந்துவிட்டு ஸ்ராலினை அந்தப் பதவியில் அமர்த்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்க முடியாது. ஸ்ராலினை எதிர்த்து அரசியல் களத்தில் நிற்க வேண்டும்.

`வைகோ நம்ம கூட இருந்தா அவருக்கு நல்லது. அ.தி.மு.க. வுக்கு போய்ட்டா நமக்கு நல்லது' என்றாராம் கருணாநிதி சமீபத்தில் தனது கட்சியின் நிர்வாகிகளிடம்.

இதன் மூலம் ஸ்ராலினுக்கு எதிரான ஒரு தலைவரை கூட்டணியில் வைத்திருக்க தி.மு.க. விரும்பவில்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும் ஆட்சியைப் பிடிக்க ம.தி.மு.க. வின் ஆதரவு வேண்டும் என்பதால் வேண்டா வெறுப்பாக இடம் தந்தது தி.மு.க.

கருணாநிதி விலகிக் கொண்டு ஸ்ராலினை முதல்வராக்கினால் ஜெயலலிதா ஸ்ராலின் என்று அடுத்தகட்ட பைட்டுக்கு தமிழகம் தயாராகும் என்பதை கணக்கிட்டார் வைகோ. அப்போதும் தூர நின்று கொண்டு இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் சரி வராது என்பதால் அந்த பைட் ஸ்ராலின்- ஜெயலலிதா- வைகோ என்ற மும்முனைப் போட்டியாக வேண்டும் என்று கருதுகிறார் வைகோ.

அதற்கு முதல் கட்டமாக சட்டசபையில் பெரிய எண்ணிக்கையில் நுழைய வேண்டும். தங்களது ` பிரசன்ஸை' தமிழகத்தில் அழுத்தமாக உணர்த்த வேண்டும்.

அடுத்து அ.தி.மு.க., தி.மு.க. என எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக வேண்டும். ஜெயலலிதா- ஸ்ராலின்- வைகோ என்ற மூன்று துருவ போட்டியை உருவாக்க வேண்டும் என்பதே வைகோவின் திட்டம்.

அதற்கு முதலில் தி.மு.க.விடம் இருந்து விலகுவது, அ.தி.மு.க.விடம் அதிகமான சீட்களை பெறுவது, முடிந்த வரை தொகுதிகளில் வென்று சட்டசபைக்குள் நுழைவது, அடுத்து யாரிடமும் இல்லாமல் பிரிவது.

தேர்தல் முடிந்த கையோடு வைகோவும் பிரிந்து போய்விடுவார் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியில் விழுந்துள்ள ஓட்டை மிகப் பெரியது என்பதை உளவுத்துறையின் பல சர்வேக்கள் தெளிவாக்கிவிட்டதால் , தி.மு.க. தவிர எல்லா கட்சிகளுக்கும் வலை வீசி வருகிறார் ஜெயலலிதா.

அ.தி.மு.க. இழந்த ஓட்டுகளை பிற கட்சிகளை உள்ளே கொண்டு வந்து தான் ஈடு செய்ய முடியும். அதற்காக ஜெயலலிதா கதவைத் திறந்து காத்திருக்க, தனது எதிர்கால பிளானுக்கும் இந்தத் திட்டம் பொருத்தமாகவே இருப்பதை உணர்ந்த வைகோ, போயஸ் கார்டனுக்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.

மேலும், எல்.ஜி. உட்பட பலர் வைகோவை அ.தி.மு.க கெஞ்சிய இருக்கிறதே அது கொஞ்ச நஞ்ச கெஞ்சல் அல்ல. ` வேணா அழுதுருவேன்' என்று வடிவேலு ரேஞ்சுக்கான அ.தி.மு.க. வின் சரண்டர் அது.

இதனால் தான் 27 சீட் தருகிறோம் என்று சொன்ன ஜெயலலிதாவை 35 சீட்டுக்கு ஒப்புக் கொள்ள வைக்க வைகோவால் முடிந்தது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கே கூட்டணியில் சொற்ப சீட்களைத் தந்ததோடு, அக் கட்சியின் கேண்டிடேட்ஸையும் முடிவு செய்தவராயிற்றே ஜெயலலிதா. அதுவும் அடுத்து வாஜ்பாய் தான் பிரதமர் என்று நாட்டின் எல்லாப் பத்திரிகைகளும் சைரன் அடித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை அது.

அப்படிப்பட்ட ஜெயலலிதாவிடமே 45 சீட்களை கேட்டு பேரம் பேசி, கொஞ்சம் விட்டுத் தந்து, நிறையே பிடிவாதம் பிடித்து 35 இடங்களை வாங்கிவிட்டார் வைகோ.

இதனால் தனது கட்சியில் இதுவரை எந்தப் பதவியையும் ருசித்திராத மாவட்டச் செயலாளர்களுக்கும் முன்னணித் தலைவர்களுக்கும் சீட் தந்துவிட வைகோவால் முடியும்.

மேலும், அ.தி.மு.க. கூட்டணி இருப்பதால் ம.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பெரிய நிதிப் பிரச்சினையும் எழாது. அதையெல்லாம் அ.தி.மு.க. பார்த்துக் கொள்ளும்.

இப்படியாக தட்டில் பழம் வைத்து வைகோவிடம் தந்திருக்கிறது அ.தி.மு.க. ஆனால், தன்னை சிறையில் அடைத்து `அழகு பார்த்த' ஜெயலலிதாவுடன் வைகோ பிரசாரத்திற்குப் போக வேண்டும், ஒரே மேடை ஏற வேண்டும், சனியன்று போயஸ் தோட்டத்தில் சிரித்தாரே அதே செயற்கையான சிரிப்போடு...

தி.மு.க.வின் ` அய்யோ போயிட்டாரே' கூட்டணி, அ.தி.மு.க.வின் ` விடாதே பிடி' கூட்டணி... இதையெல்லாம் பார்த்து பொது ஜனங்களும் சிரிக்கிறார்கள். ஆனால், அது `ஒரிஜினல் ' சிரிப்பு.

மக்கள் ` சிரித்தால் ' என்னவாகும் என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன?

- தற்ஸ் தமிழ் இணையத்தளத்திலிருந்து

வரவனையான் said...

இவர் வெறும் காலி பெருங்காய டப்பா !

Anonymous said...

Ramadoss Andru : Yengaludaia Kovanatthayum urivi viduvar Karunanidhi.

Ramadoss Indru : DMK aatchi amaikka PMK padupadum..

Ramadoss Andru : Karunanidhi yengal PMK vai udaikka parthar..

Ramadoss Indru : Thoguthi pangeedu yengalukku thrupti...

Selvakumar said...

நீங்கள் எல்லோரும் ஒன்றை மறந்து விட்டீர்கள்

வைகோவும் ஒரு அரசியல்வாதி என்பதை மறந்து விட்டு வீணாக அலசுகிறோம்.

செல்வகுமார்