Monday, March 06, 2006

வைகோ வேட்டி இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்

04-03-2006
அன்று காலையில் அண்ணாவிற்கு மாலை அணிவித்து விட்டு செயலலிதாவை பார்க்க சென்றார் வைகோ.

பதவி எங்களுக்கு துண்டுபோல – அது

பறந்து போனாலும் கவலையில்ல,

கொள்கை எங்களுக்கு வேட்டிப்போல - அது

போனால் எங்கள் மானம் போல!


என்று அண்ணா சொன்னார். அண்ணா சொன்னபடிப் பார்த்தால் தம்பி இன்று வேட்டி இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார். மேடைகள் தோரும் அண்ணா வழிவந்தவன் என்று பேசும் வைகோ."மானம்" "சுயமரியாதை" இவைதாம் தம் கொள்கைகள் என பொதுக் கூட்டங்களில் முழங்கினார். ஆனால் அவற்றை மொத்த விலைக்கு இப்போது விற்றிருக்கிறார்.

தமிழக அரசியல் வாதிகள், தமிழ் மக்களைப் போன்றே "சூடு சொரணை யற்றவர்கள்" "எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலைக் குழைத்து வரும் நாய்களைப் போன்றவர்கள்" இவர்கள் என்பதை அறிந்தே தான் செயலலிதா எவ்வளவு கேவலமாக இவர்கள் அனைவரையும் நடத்தினாலும் கடைசி நேரத்தில் பெட்டிக்குள் அடக்கிவிடுகிறார். தன்னுடைய புலி ஆதரவு கொள்கைக்காகத் தான் வைகோ சிறையிலடைக்கப்பட்டார்.

தாம் கைது செய்யப்பட்டபோது "செயலலிதா ஆட்சி ஒழிக" "கொடுங்கோலாட்சி" என்றெல்லாம் விமர்சித்தார். ஆனால் எதிரியுடன் கூட்டணி சேர்ந்தது ஏன் எனக்கேள்வி எழுகிறது. கூட்டணியில் கொள்கை இல்லை அதனால் தான் இந்த சீட்டுக் கம்பெனியில் சேர்ந்தேன் எனபது போல் வைகோ அறிவித்துள்ளார். இனிமேல் தன்மானம் சுயமரியாதை எல்லாம் வீண்பேச்சுக்கள் தான் என்பதை அனைவரும் உணரவேண்டும்.


அதனால் தான் "அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. பழைய விசயங்களை திரும்பிபார்த்து அதையே நினைத்துக் கொண்டிருப்பதில் நம்பிக்கை இல்லை" என்று செயலலிதா கூறி இருக்கிறார்.

பதிலுக்கு "பொடா சட்டத்தை கொண்டுவந்தது பா.ஜ.க. தலைமையிலான தேசிய சனநாயக கட்சி அரசு, அதை செயலலிதா நடைமுறை மட்டுமே செய்தார்".என்று செயலலிதா தம்மை கைது செய்ததற்கு சமாதானம் சொல்கிறார் வைகோ.

தி.மு.க. பொதுக்குழுவில் ம.தி.மு.க வை மரியாதைக் குறைவாக பேசியது தொண்டர்கள் மனதைக் காயப்படுத்திவிட்டது. விலகியதற்கு அதுவும் ஒரு காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார். அப்படி “மானம்" “மரியாதை"ப் பற்றிப் பேசும் வைகோ தம்மைக் கைது செய்த அ.தி.மு.க உடன் மானம் இழந்த முறையில் தான் தஞ்சமடைந்துள்ளார். 25 சீட்டுக்கள் கொடுக்காததால் தான் நான் கூட்டணியை விட்டு விலக நேர்ந்தது என விளக்கம் அளித்தாலும் ம.தி.மு.க வின் பிற தலைவர்களுக்கு முறையாக சேரவேண்டியவை சேர்ந்துள்ளதாகவே கூறப்படுகிது. அதனால் தான் அவர்கள் இத்தனை கொள்கைப் பிடிப்புடன் இருந்துள்ளார்கள்.

எப்போதும் மிகப்பெரிய கொள்கை வித்தியாசம் உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு மானம் மரியாதை என்பது எதுவுமே எங்களுக்கு இல்லை, அவ்வப்போது எதையாவது பேசுவது தான் எங்களுக்கு கொள்கை மக்களே விழித்துக் கொள்ளுங்கள் என்பதைதான் இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகிறது.

4 comments:

dondu(#4800161) said...

தேவலையே. தலைப்பின் நீளத்தைக் குறைத்ததும் பின்னூட்டமிடும் பக்கமும் திறக்க முடிகிறதே.

இனிமேல் என்ன? தலைப்பு நீண்ட பழைய பதிவைத் தூக்கி விடுங்கள்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை மேலே கூறிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

இரா.சுகுமாரன் said...

NANRI AYYA

SUGUMARAN

பாலசுந்தரம் said...

//அண்ணா சொன்னபடிப் பார்த்தால் தம்பி இன்று வேட்டி இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார்.//

செயலலிதாக்கூட எப்ப சேர்ந்தாரோ அப்போதே வேட்டியும் இல்ல,
மானமும் இல்ல. அவர் அண்ணாவை அவர் மறந்து போய் ரொம்ப நாளாச்சி சும்மா ஒட்டு வேணுமில்ல, அதனால் தான் அண்ணா அப்படி இப்படின்னு பேசிகிறார்.

பாலசுந்தரம்

தமிழன் said...

//தமிழக அரசியல் வாதிகள், தமிழ் மக்களைப் போன்றே "சூடு சொரணை யற்றவர்கள்" "எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலைக் குழைத்து வரும் நாய்களைப் போன்றவர்கள்"//

சரியான வாசகம்.

நன்றி