Friday, March 17, 2006

வலைப்பதிவினர் அடிதடி!

எனது வலைப்பதிவில் தேர்தலைப் புறக்கணிப்போம் (பகுதி-1) என்ற எனது தலைப்பிலான செய்தியில் பின்வருமாறு ஒரு பின்னூட்டம் இருந்தது.

புதுச்சேரி இரா.சுகுமாறன் அவர்களே,

(மாறன் என்பதே சரி) உங்களின் எண்ணமும் வெளிப்படையான அலசலும் உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது இந்த பேருலகில் என் ஜாதி மட்டுமே ஜாதி மீதி எல்லாம் பேதி என்று குதிக்கும் அந்த .......................... டோண்டு வலைப்பதிவில் பின்னூட்டியதால் என் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறீர்கள். இது முதல்முறை என்பதால் உங்களுக்கு எனது எச்சரிக்கை. இன்னொருமுறை அவனுக்கு பின்னூட்டினால் என்ன செய்வேன் என்பதை எனது வலைப்பதிவுக்கு வந்து என்பெயரிலான கமெண்டுகளை படித்துப் பார்க்கவும்.

இது உண்மையான போலிடோண்டுதான் பின்னூட்டினான் என்பதற்காக எனது வலைப்பதிவிலும் சேமிக்கிறேன்.

என்றவாறு என்வலைப்பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார்கள்.

ஒரு இணைய முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.


“இது என்ன முன் சண்டை என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. இருப்பினும் என்னை வைத்து இந்த சண்டை மீண்டும் தொடந்திருப்பதால் நான் பதில் சொல்லலாம் என நினைத்தால், அதன் தன்மை பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதை என்னால் உணரமுடிந்தது.


இருப்பினும் நான் பதில் சொல்ல நினைத்த விசயம் தொடர்பாக சில சிறு குறிப்பை மட்டும் பதிவு செய்துவிட்டு செல்லலாம் என்றே நான் கருதுகிறேன்.

இணையத்தில் பிராமிணர், பிராமிணர் அல்லாதவர் சண்டை கருத்துப்பூர்வமானதாக இருக்க வேண்டும். வெறும் திட்டுதல் போன்றவற்றால் அதை சாதிக்கமுடியும் என்று நான் கருதவில்லை. எதிர்ப்பது பார்ப்பனர்களையா? பார்ப்பனியத்தையா? என்ற கேள்வி எழுகிறது. பிராமிணர்களாக இல்லாமலே பார்ப்பனியர்களாக (அக்கருத்தை நடைமுறை செய்பவர்களாக) பிற சாதி இந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி அந்த கருத்துக்கள் பதிந்துள்ளன.

எனவே, விவாதம் என்பது கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் இலக்கை அடையாமல் வேறு வழியில் திசை திருப்பவே பயன்படும்.

2 comments:

வெங்காயம் said...

இணையத்தில் பார்ப்பன ஜாதியை வளர்க்க நினைக்கும் டோண்டுராகவன், மாயவரத்தான், முகமூடி, பிகேசிவக்குமார், திருமலைராஜன், சீமாச்சு, கிச்சு, எஸ்கே, ஸ்ரீகாந்த், திருமலைராஜன், அல்வாசிட்டிவிஜய், அருண்வைத்யநாதன், நேசகுமார், விஸ்வாமித்ரா, நாட்டாமை, அன்புடன்பாலா, பாரா, ஹரிகிருஷ்ணன், ஹரன்பிரசன்னா, ஜெயஸ்ரீ, சாணக்யன், இராமுருகன், வெங்கடேஷ், பாரா போன்றவர்களையும் அவர்களுக்கு ஆதர்வு அளித்து பின்னின்று கோள்மூட்டி ஜாதி சார்பாக எழுதத் தூண்டுபவர்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அவர்களால்தான் இந்த சூழ்நிலை உருவானது என்று நான் நினைக்கிறேன்.

dondu(#4800161) said...

உங்களுடைய இந்தப் பதிவு என்னுடைய பழைய பதிவு ஒன்றை மீள்பதிவு செய்யும் உடனடி தூண்டுகோலாக அமைந்தது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை உணர்த்தும் வண்ணம் அதன் நகலை நான் மேலே சுட்டிய பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்