Saturday, June 03, 2006

மதங்களும் வன்முறையும்

இந்து மதம் வன்முறையானது என்பதற்கு இந்த படம் ஒரு ஆதாரம்.

இந்த படத்தில் ஒரு பெண்ணின் குடலை உறுவி திண்பது போல ஒரு தோற்றம். காலில் ஒரு உடலைப்போட்டு மிதித்துக் கொண்டு சூலத்தால் குத்திக் கொண்டிருக்கிறது.

அதே போல ஆயுதம் இல்லாத கடவுள் இந்து மதத்தில் இல்லை. ஒன்றிரண்டு இருக்கலாம்.

அதே போல இரண்டு மனைவிகள் போன்ற சீரழிவுகள் இந்த கடவுள்களிடம் உள்ளது.

உலகளாவிய முஸ்லீம் மதவாதம் பேசப்படுவது போல் இந்த இந்துமத ஆயுதக் கலாச்சாரம் அதிகம் பேசப்படுவதில்லை.

கிருத்துவின் நம்பிக்கையாளரான புஷ் உலகம் முழுதும் உள்ள மக்களை தம் நாட்டின் ஆயுத பலத்தால் கொன்று குவிக்கிறார். இந்த பயங்கரவாதம் கண்டிக்கத் தக்கது. அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற மதம் அன்பை மட்டும் போதிக்கும். ஆனால், புஷ்ஷை கண்டிக்காது.

காந்தியை என் கொன்றாய் என்று "கேட்சே"யை கேட்ட போது இந்து மதம் ஆயுதம் ஏந்தியது ஆனால், காந்தி கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று சொல்லி இந்துக்களை கோழையாக்கி விட்டார். எனவே இவரை நீண்ட நாள் விட்டால் இந்துக்களை கோழையாக்கி முஸ்லீம்களின் ஆதிக்கம் பெற்ற நாடாக மாற்றிவிடுவார் எனவே தான் அவரை கொல்ல நேர்ந்தது என்று குறிப்பிட்டார்.

இந்து மதம் ஆயுத கலாச்சாரத்தை ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

காந்தியை கொன்ற ஆர். எஸ், எஸ் காரர்களின் ஆயுதமும், சூலம் தான்.

30 comments:

Anonymous said...

திராவிடத் தமிழர்கள் பிற திராவிட தமிழர்களை அரசியல் காரணங்களுக்காக கொல்கிறார்கள். எனவே திராவிட தமிழர்கள் அனைவரும் கொலை வெறி பிடித்தவர்களா.திராவிட கலாச்சாரமே கொலை வெறிக்கலாச்சாரமா

இரா.சுகுமாரன் said...

//திராவிட கலாச்சாரமே கொலை வெறிக்கலாச்சாரமா//

பெயர் போட்டு எழுதுங்கள்.

திராவிட கலாச்சாரம் அப்படி அல்ல.

Vajra said...

சுகுமாரன்,

//
உலகளாவிய முஸ்லீம் மதவாதம் பேசப்படுவது போல் இந்த இந்துமத ஆயுதக் கலாச்சாரம் அதிகம் பேசப்படுவதில்லை.
//

எல்லாம் சரி, அந்தப் படத்தில் இருப்பது உண்மையில் நடந்ததா? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

5 இஞ்சுக்கும் குறைவாக இருக்கும் திரிசூலத்தால் சரைகக் கூட முடியாது. அதைத் தான் RSS கொடுக்கிறது. அதைக் கொடுத்து யாரையும் கொல்லச் சொல்வதில்லை.

ஸ்டாலின், லெனின், மாவோ, உண்மையாகவே தம் மக்களை கொன்று குவித்தனர் என்பதற்கு சரித்திர ஆதாரமிருக்கிறது. அதைப் பற்றியும் அவர்கள் நம்பிய கம்யூனிசம் என்கிற "நம்பிக்கை" (Faith) பற்றியும் உங்கள் கருத்து என்ன?

சாந்த ஸ்வரூபியான கம்யூனிஸம் என்கிறீர்களா?

காந்தி உயிருடன் இருக்கும் போது கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி படித்துத் தெரிந்துகொள்ளுங்கள், சிறப்பாக இருக்கும்.

//
காந்தியை கொன்ற ஆர். எஸ், எஸ் காரர்களின் ஆயுதமும், சூலம் தான்.
//

அதே போல், எல்லா கோர்டிலும் காந்தியடிகளைக் கொன்றவன் கோட்சே தான். RSS அல்ல என்பது தீர்பாகிவிட்ட நிலையில் RSS மேல் உங்கள் வெறுப்பைக் காட்டுவதைத் தவிர வேறு எதையும் நிரூபிப்பதாக இல்லை இந்த வாக்கியம். ஆயிரம் முறை சொன்னாலும் பொய் பொய் தான், உண்மையாகாது. (Truth by repeated assertion! may be applicable in Utopian communist society, not in real world)

கதிரவன் said...

அடா அடா அடா.....

இதைப் படத்தில் தான் பார்த்தீர்க்ளா...
குஜராத்தில் நிசமாலுமே கருக்குழந்தைகளை
தீயில் சுட்டார்களாமே (சாப்பிடிருப்பார்களோ...).

இதற்க்கு ஒரு தியாகக் கும்பலே அலைந்ததாமே தெரியாதா உங்களுக்கு...

கதிரவன்

பரஞ்சோதி said...

ஹா ஹா! உங்க பதிவை பார்த்து உண்மையில் விழுந்து விழுந்து சிரித்தேனுங்க.

இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதம் இருப்பது உண்மை தான், ஆனால் அந்த ஆயுதமானது கொடியவர்களையும்,கொடுமை செய்பவர்களையும் தான் அழிக்குமே தவிர நல்லவர்களை ஒன்றும் செய்யாது என்றே புராணங்களில் படித்திருக்கிறேன், பெரியவங்க சொல்ல கேட்டிருக்கிறேன்.

பழைய காலத்தில் இயற்கைக்கு பயந்த மக்களுக்கு பலவகையில் நம்பிக்கையூட்டவே இவ்வாறான தெய்வங்களின் உருவங்களை உருவாக்கினார்கள்.

என்ன இந்த நூற்றாண்டிலும் நாம் இவற்றை கும்பிடுகிறோம், எல்லாம் ஒரு நம்பிக்கை தான். மற்றப்படி தெய்வங்களின் உருவங்களையும் அவற்றின் கையில் இருக்கும் ஆயுதங்களையும் யாருமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

கோட்சே ஆகட்டும், குஜராத்தில் வன்முறை ஆடிய கொடிய மிருகங்கள் ஆகட்டும், அவர்களை வைத்து இந்துக்கள் அனைவரும் இப்படி தான், இந்து மதம் போதிப்பதும் இது தான் என்று சொல்வது சரியல்ல.

பரஞ்சோதி said...

ஹா ஹா! உங்க பதிவை பார்த்து உண்மையில் விழுந்து விழுந்து சிரித்தேனுங்க.

இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதம் இருப்பது உண்மை தான், ஆனால் அந்த ஆயுதமானது கொடியவர்களையும்,கொடுமை செய்பவர்களையும் தான் அழிக்குமே தவிர நல்லவர்களை ஒன்றும் செய்யாது என்றே புராணங்களில் படித்திருக்கிறேன், பெரியவங்க சொல்ல கேட்டிருக்கிறேன்.

பழைய காலத்தில் இயற்கைக்கு பயந்த மக்களுக்கு பலவகையில் நம்பிக்கையூட்டவே இவ்வாறான தெய்வங்களின் உருவங்களை உருவாக்கினார்கள்.

என்ன இந்த நூற்றாண்டிலும் நாம் இவற்றை கும்பிடுகிறோம், எல்லாம் ஒரு நம்பிக்கை தான். மற்றப்படி தெய்வங்களின் உருவங்களையும் அவற்றின் கையில் இருக்கும் ஆயுதங்களையும் யாருமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

கோட்சே ஆகட்டும், குஜராத்தில் வன்முறை ஆடிய கொடிய மிருகங்கள் ஆகட்டும், அவர்களை வைத்து இந்துக்கள் அனைவரும் இப்படி தான், இந்து மதம் போதிப்பதும் இது தான் என்று சொல்வது சரியல்ல.

நிலவு நண்பன் said...

இப்படியாக பயத்துடன் கலந்த அந்தப்பேய்ப்பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.

இந்தப்புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்து மதம் முழுவதும் வன்முறை மதம் என்பது சரியில்லை நண்பரே..

குஜராத்தில் ஏதோ ஒரு இந்து வெறியர்கள் செய்த காரியத்திற்காக ஒட்டு மொத்த இந்துச்சமுதாயத்தை குறை கூறிட முடியாது. குஜராத்தில் இந்த மத வெறியர்கள் முஸ்லிம்களை தாக்க வரும்பொழுது காப்பாற்றிய இந்துச் சகோதரர்களும் இருக்கின்றார்கள். அந்த சிசுக்கொலைச்சம்வத்தை வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர்களும் இந்துச் சகோதரர்கள்தான்..

ஆனால் அதற்காக அந்த சிசுக்கொலை சம்பவத்தை நியாயப்படுத்தமுடியாது. அதனைச்செய்தவர்கள் மட்டுமல்ல..அந்த வெறியர்களை அடையாளம் காட்டிக்கொடுக்காமல்..அவர்களுக்கு ஆதரவ தெரிவிக்கின்ற அனைவருமே வெறியர்கள்தான்..

முகம்மத் said...

இந்து மதம் புண்ணியமானது. இந்து மத புனித நூல்களான யஜுர் வேதம் போன்றவற்றில் முகம்மது நபி பற்றிய குறிப்பு உள்ளதாக இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்காலங்களில் இந்து மதத்தின் பெயரால் சில RSS போன்ற கொடுந்திவீரவாதிகளால் அந்த மதத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுத்தியிருக்கிறது.

- முகம்மத்

G.Ragavan said...

பரஞ்சோதி. தேவையற்ற விளக்கம். பேச்சுவார்த்தைக்கு முடிவெடுக்க வருகின்றவர்களிடம் பேசிப் பயனுண்டு. முடிவெடுத்து விட்டு வருகின்றவர்களிடம் பேசிப் பயனில்லை. கண்டுகொள்ளாமல் இரு.

இரா.சுகுமாரன் said...

ஷங்கர் (வஜ்ரா),கதிரவன், பரஞ்சோதி ,நிலவு நண்பன்,முகம்மத்,
G.Ragavan
ஆகியோருக்கு நன்றிகள்.

உடனடியாக வெளியிட முடியவில்லை. பின்னர் பதில் எழுதுகிறேன்.

நன்றி

இரா.சுகுமாரன் said...

//எல்லாம் சரி, அந்தப் படத்தில் இருப்பது உண்மையில் நடந்ததா? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.//

இந்த படம் காட்டுவது என்ன?. இது இந்து மதக் கருத்தியலின் சாரம் அவ்வளவுதான். காந்தியை கொன்றதன் அடிப்படை தான். நவீன ஆயுதங்கள் கிடைத்ததால் காந்தியை துப்பாக்கியால் கோட்சே சுட்டார்.

//அதே போல், எல்லா கோர்டிலும் காந்தியடிகளைக் கொன்றவன் கோட்சே தான். RSS அல்ல என்பது தீர்பாகிவிட்ட நிலையில் RSS மேல் உங்கள் வெறுப்பைக் காட்டுவதைத் தவிர வேறு எதையும் நிரூபிப்பதாக இல்லை இந்த வாக்கியம். ஆயிரம் முறை சொன்னாலும் பொய் பொய் தான், உண்மையாகாது.//

நீதிமன்றமும் நேர்மையாக தீர்ப்பு சொல்லவில்லை என்பது நீங்கள் சொல்லி எனக்கு தெரிகிறது.

இரா.சுகுமாரன் said...

//இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதம் இருப்பது உண்மை தான், ஆனால் அந்த ஆயுதமானது கொடியவர்களையும்,கொடுமை செய்பவர்களையும் தான் அழிக்குமே தவிர நல்லவர்களை ஒன்றும் செய்யாது என்றே புராணங்களில் படித்திருக்கிறேன், பெரியவங்க சொல்ல கேட்டிருக்கிறேன்.//

யாருக்கு யார் கொடியவர்கள் என்பது தான் கேள்வி.

உண்மைகள் கூட கொடியவையாக தீயவர்களுக்கு தெரிகிறது.

உங்கள் கூற்று கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அப்படி நடந்தால் சரி.

வரலாறு நமக்கு அப்படி நமக்கு உணர்த்தவில்லை.

Anonymous said...

When you hate Hinduism it is vain to expect that you will think logically and rationally.You will
be really useful to DK, the psudeo-secular brigade,christian missionaires and mercenaries and
islamic fundamentalists.Instead
of having a blog you can start a
PR firm to serve them.

H.Selva said...

இந்தத் தெய்வங்களோட குறியீட்டு விளக்கத்தை விடுங்கள். முதலில் இந்த பேச்சி அம்மன் நாட்டார் தெய்வமா இந்துக் கடவுளா? ஓஹோ, தாக்கப் பயன்படும்போது இந்து என்ற பெயர் உகப்பாய் அகப்படுகிறது இல்லையா? நீங்களும் உங்க ஆராய்ச்சியும். வெட்கக்கேடு. ராகவன் அவர்கள் சொல்வதுதான் சரி. இந்துச்சகோதரர் யாரும் இதற்கு மெனக்கெட்டு விளக்கம் எல்லாம் அளிக்க வேண்டாம்.

அப்பாவி said...

//எல்லா கோர்டிலும் காந்தியடிகளைக் கொன்றவன் கோட்சே தான். RSS அல்ல என்பது தீர்பாகிவிட்ட நிலையில்..//

யார் சொன்னது? காந்தியை கொன்னது துப்பாக்கி குண்டுதான். கோட்ஸே அல்ல என்பதை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரே சொல்லியிருக்காராம், அது தெரியாதா உங்களுக்கு?

செந்தில் குமரன் said...

மதங்களால் மனிதனுக்கு ஒரு நன்மையும் இல்லை. மதங்கள் உருவான நோக்கம் சிறப்பானதாக இருந்தாலும் மனிதன் மதத்தை தன்னுடைய சொந்த நலனுக்காக ஜாதி, தீவிரவாதம் என்று உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறான். மதம் இறைவனை அடைய சரியான மார்க்கம் இல்லை என்பதை மனிதன் என்றுணரப் போகிறானோ?

நல்லடியார் said...

//கோட்சே ஆகட்டும், குஜராத்தில் வன்முறை ஆடிய கொடிய மிருகங்கள் ஆகட்டும், அவர்களை வைத்து இந்துக்கள் அனைவரும் இப்படி தான், இந்து மதம் போதிப்பதும் இது தான் என்று சொல்வது சரியல்ல.//

மிகச்சரியாகச் சொன்னீர்கள் பரஞ்சோதி! இப்படித்தான் ஒருசில முஸ்லிம்கள் தீவிரவாதச் செயலில் ஈடுபடும்போது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறைசொல்லி சிலர் எழுதி வருகின்றனர். அதுவும் சரியல்ல!

இரா.சுகுமாரன் said...

நிலவு நண்பன் அவர்களுக்கு,

//இந்து வெறியர்கள் செய்த காரியத்திற்காக ஒட்டு மொத்த இந்துச்சமுதாயத்தை குறை கூறிட முடியாது.//

நான் ஒரு போதும், இந்து மக்களை வன்முறையாளர்கள் என்று சொல்லவில்லை. இந்து மதம் அப்படி உள்ளது என்று தான் சொல்கிறேன்.

//இந்தப்புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்து மதம் முழுவதும் வன்முறை மதம் என்பது சரியில்லை நண்பரே..//

ஒரு பகுதி அல்லது பெரும்பகுதி வன்முறையானது என்று வைத்துக் கொள்ளலாமா?.

இரா.சுகுமாரன் said...

//முகம்மத் க்கு
இந்து மதம் புண்ணியமானது. இந்து மத புனித நூல்களான யஜுர் வேதம் போன்றவற்றில் முகம்மது நபி பற்றிய குறிப்பு உள்ளதாக இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.//

அது மட்டுமா? ஐன்ஸ்டீனின் ஈருறுப்பு கோவை கூட அந்த வேதத்தில் இருக்கிறது என்று புளுகுகிறார்கள்.

இரா.சுகுமாரன் said...

அப்பாவி,குமரன் எண்ணம் ஆகியோருக்கு நன்றி!

இரா.சுகுமாரன் said...

//மிகச்சரியாகச் சொன்னீர்கள் பரஞ்சோதி! இப்படித்தான் ஒருசில முஸ்லிம்கள் தீவிரவாதச் செயலில் ஈடுபடும்போது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறைசொல்லி சிலர் எழுதி வருகின்றனர். அதுவும் சரியல்ல!//

நான் பதிவில் இந்துக்களை அப்படி சொல்லவில்லை. தனிமனிதர்களை குறிப்பிடவில்லை. மதங்களை மட்டுமே சொல்கிறேன். பார்க்கவும்.

இரா.சுகுமாரன் said...

பரஞ்சோதி அவர்களுக்கு

//கோட்சே ஆகட்டும், குஜராத்தில் வன்முறை ஆடிய கொடிய மிருகங்கள் ஆகட்டும், அவர்களை வைத்து இந்துக்கள் அனைவரும் இப்படி தான், இந்து மதம் போதிப்பதும் இது தான் என்று சொல்வது சரியல்ல.//

அந்தப்படம் என்ன சொல்கிறது என்பதை பாருங்கள். அதில் குஜராத் பற்றி எதுவும் சொல்ல வில்லை.

அது வன்முறையின் சின்னமாக உள்ளது. அடையாளமாக உள்ளது என்பது தான் .

அல்லது அந்த படம் என்ன தான் சொல்கிறது என்பதைத்தான் சொல்லுங்களேன்.

இரா.சுகுமாரன் said...

பரஞ்சோதி அவர்களுக்கு

//கோட்சே ஆகட்டும், குஜராத்தில் வன்முறை ஆடிய கொடிய மிருகங்கள் ஆகட்டும், அவர்களை வைத்து இந்துக்கள் அனைவரும் இப்படி தான், இந்து மதம் போதிப்பதும் இது தான் என்று சொல்வது சரியல்ல.//

அந்தப்படம் என்ன சொல்கிறது என்பதை பாருங்கள். அதில் குஜராத் பற்றி எதுவும் சொல்ல வில்லை.

அது வன்முறையின் சின்னமாக உள்ளது. அடையாளமாக உள்ளது என்பது தான் .

அல்லது அந்த படம் என்ன தான் சொல்கிறது என்பதைத்தான் சொல்லுங்களேன்.

செல்வன் said...

அந்த படத்தில் தீயோரை அம்மன் அழிப்பாள் என்ற கருத்து சொல்லப்படுகிறது.கீழே கிடப்பவன் அரக்கன்.போலிஸ்காரன் துப்பாக்கியோடு இருப்பது மக்களை காக்கத்தான்.அம்மன் சூலத்தோடு இருப்பதும் மக்களை காக்கத்தான்.

போலிஸ்காரன் கையில் உள்ள துபாக்கியை கண்டு திருடன் தான் பயப்படுவான்.அம்மன் கோயிலுக்கு பச்சை குழந்தைகள் கூட பயப்படாமல் போகும்.

இதுதான் அந்த படத்தின் கருத்து.

இரா.சுகுமாரன் said...

செல்வம் அவர்களே!

வரலாற்று ரீதியாக அரக்கன் என்று சொல்லப்படுபவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

//அந்த படத்தில் தீயோரை அம்மன் அழிப்பாள் என்ற கருத்து சொல்லப் படுகிறது//

யாரால் சொல்லப்படுகிறது. யார் யாருக்கு தீயவர்கள் என்பதைப் பற்றி சொல்லப்படுகிறதா?. சொல்லப்படுகிறது என்றால் உறுதியாக ஏன் சொல்ல முடியவில்லை?.

செல்வன் said...

//வரலாற்று ரீதியாக அரக்கன் என்று சொல்லப்படுபவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?//

சுகுமாறன் ஐயா

இந்த பதிவை நீங்கள் போட்டது இந்த கடவுள் படத்தை பார்த்தால் பயம் வரவில்லையா என்ற கருப்பொருளில்.அதற்கு பதில் சொன்னால் ஆரிய- திராவிட விவாதத்துக்கு என்னை இழுத்து செல்கிறீர்கள்.

ஆரிய திராவிட விவாதம் நடத்தும் அளவு ஞானமும் அத்துறை பற்றிய அறிவும் என்னிடம் இல்லை.உங்கள் கட்டுரையின் கருப்பொருளை விவாதிக்க நான் தயார்.ஆரிய திராவிட விவாதத்துக்கு அல்ல.

//யாரால் சொல்லப்படுகிறது. யார் யாருக்கு தீயவர்கள் என்பதைப் பற்றி சொல்லப்படுகிறதா?. சொல்லப்படுகிறது என்றால் உறுதியாக ஏன் சொல்ல முடியவில்லை?//

நான் படித்த இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.ஆயுதம் தாங்கி சாமி காட்சியளிப்பது நம்மை காக்கவே என உபன்யாசங்களில் கேட்டுள்ளேன்.யார் யாருக்கு தீயவர்கள் என்றால் அசுரர்கள் மக்களின் விரோதிகள்.அவர்களை அழித்து மக்களை காக்கும் அம்மன் நம் தாய் என அர்த்தம்.

அசுரன் என்றால் நம்மிடம் இருக்கும் அசுர குணங்களையும் சேர்த்து தான் சொல்லப்படுகிறது.(யாரால் என்று கேட்டால் இந்து மதநூல்களால்).அசுரன் என்றால் யார் என ஆரிய - திராவிட விளக்கம் செய்ய நான் தயாரில்லை.உங்கள் பதிவின் நோக்கம் அம்மாதிரி விவாதமே என்றால் அது பற்றி அறிந்த நிறைய பேர் தமிழ்மணத்தில் உண்டு.எனக்கு அந்தளவு ஞானம் போதாது.

அன்புடன்
செல்வன்

இரா.சுகுமாரன் said...

//ஆரிய- திராவிட விவாதத்துக்கு என்னை இழுத்து செல்கிறீர்கள்.//

//அசுரன் என்றால் யார் என ஆரிய - திராவிட விளக்கம் செய்ய நான் தயாரில்லை.//

நான் அழைக்கவில்லை என்ன என்று விளக்குங்கள் என்றேன்.

உணமை என்று வருமானால் அதை சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் பதிலிலிருந்து தான் என் கேள்வி பிறந்தது நான் அந்த திசை நோக்கி அழைத்து செல்லவில்லை.

babupriya said...

Friend - hinduism as a religion does not propogate violence. The photo what you have given is just a symbol of how evil will be destroyed.

Evil here does not mean humans or animals, but the evil conscience in them. For eg.Kamam, Krotham, Madham & Macharyam has to be destroyed to attain the conscious of parabrahmam.

Anonymous said...

அர்ச்சுனா, எதிரில் இருப்பது யார், உன் ஆசிரியனா, இல்லை.
உன்னை வளர்த்த தாத்தாவா, இல்லை. தயங்காமல் கொல்.
இதைச் சொன்னது நாட்டார் தெய்வமில்லை.

தம்பிதானே உன் சொத்தை அனுபவிக்கிறான். போகட்டும் விட்டுக்கொடு
என்று சொன்னாரா?

ஆப்பு said...

ஆப்பு இந்த வாரம்...

படித்து விட்டீர்களா?

வலைப்பதிவில் முதன்முறையாக...

யார் அந்த முகமூடி!!!!

முற்றிலும் புதிய தகவல்களுடன்...