Thursday, May 25, 2006

தேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக

தேசிய இன விடுதலை பிரிவினை வாதமல்ல

இந்தியாவிற்கு ஒரே பிரதமர், ஒரே தேசியக் கொடி, ஒரே தேசியகீதம், ஆனால், எங்கள் தமிழ்ப்படத்தை 7 வாரம் கழித்துத் தான் கர்நாடகாவில் ரீலீஸ் செய்யமுடியும். ஆனால் கோக், பெப்சி கம்பெனிகள் தங்கள் சரக்குகளை அங்கே விற்று பணத்தை அள்ளிச் செல்ல முடியும். இதற்குப் பெயர் தான் தேசிய ஒருமைப்பாடு?.

திரைப்பட இயக்குனர் சீமான் (மே-10-06 இந்தியா டுடே தமிழ் பக்கம்- 5).

திரைப்பட இயக்குனர் தெரிவிக்கும் தகவல் என்ன?. மொழி வாரியான தேசிய இன எழுச்சி தலை தூக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரே நாட்டில் காவிரி நதி நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படாமல் இருப்பது ஏன்? ஆனால் இரண்டு வேறு பட்ட நாடுகள் இடையே கூட நதிநீர்ப் பிரச்சனைகள் எளிமையான முறையில் தீர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது.

கர்நாடகத்தில் காவிரியும், ஆந்திராவில் பாலாறும், கேரளாவில் பெரியாறு அணையும் தமிழர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரே இந்தியா என்ற உணர்வு இவர்களுக்கு இல்லையா? தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன்?. அதே போல காங்கிரசு, பா.ச.க ஆகிய கட்சிகள் அந்த மாநிலத்தில் ஒரு மாதிரியும் தமிழகத்தில் வேறு மாதிரியான நிலையையும் எடுக்கிறது.

தைரியமாக காவிரி நீரை விடவேண்டும் என்றோ, அல்லது விடவேண்டாம் என்றோ அந்த கட்சிகள் அறிவிக்க தயாரா?. அறிவிக்க மாட்டார்கள்.

அதாவது மொழி அடிப்படியிலான, இன அடிப்படையிலான உளவியல் மாற்றம் எல்லா மாநில அரசுகளிடமும், மக்களிடமும் காணப்படுவது உண்மை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.

“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்றொரு பேரரசு இருந்ததில்லை. எனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.

இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனம தன் அடையாளத்தை இழக்கிறது. அது அழிந்து போகிறது என்று பொருள்.

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமக்கிருதம் யாருமே பேசாத மொழியாக உள்ளது. ஆனால் தமிழ் உலகம் முழுதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது. ஆனால் அந்த மொழிக்கு சமக்கிருததிற்கு இணையான தகுதி வழங்கப்படவில்லை. எனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.

திராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் 56 நவம்பரிலிருந்து கவனித்தால் அவர் எந்த இடத்திலும் அவர் திராவிடத் தேசியத்தை வலியுறுத்த வில்லை என்பது விளங்கும். 56 க்குப்பின் இந்திய வரைபடத்தை எரிக்கப்போகிறேன் என்று பெரியார் சொன்னபோது தமிழ்நாடு நீங்கலாக என்று சொன்னாரே தவிர திராவிடநாடு தவிர என்று சொல்லவில்லை.

இப்படி சிறிய தேசிய இனங்களாக இருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளால் வல்லரசு ஆத்திக்கம் இருக்கும் என்கிறார்கள் சிலர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடாக இருக்கிற இந்தியா மீது அமெரிக்க ஆதிக்கம் இல்லையா?. இன்று உலகத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளும் ரஷ்யா உள்பட அமெரிக்காவைப் பார்த்து அஞ்சுகின்றன.

அமெரிக்காவைப் பார்த்து அஞ்சாமல் இருக்கிற சின்னஞ்சிறிய நாடு கியூபா என்பதை மறந்து விடவேண்டாம்.

பாரதீய சனதாகட்சியின் அத்வானி சிந்தி இனத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர். எனவே பாகிஸ்தானின் சிந்தி இன உரிமைப் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தருகிறார். காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.

பாகிஸ்தானில் வங்க மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்தது. எனவே இந்தியாவில் தேசிய இனங்கள் விடுதலை அடையக்கூடாது. அன்னிய நாடுகளில் விடுதலை அடையாலாம் என்பது இந்திய அரசின் கொள்கை மட்டுமல்ல பல கட்சிகளின் நிலையாகவும் உள்ளது.

தேசிய இனம் தொடர்பாக பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளரான சந்திப்பு அவர்கள் இனவாத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார்.

//இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்!//

என்று அவர் தன் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ஆதரிக்கும் கட்சி தேசிய இனம் தொடர்பாக என்ன சொல்கிறது என்பதை கீழேக் காண்போம்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்த போது கீழ்ககண்டவாறு முடிவெடுத்தது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பலதேசிய இனங்கள் அடங்கிய பெருநாடே இந்தியா என்பதை ஏற்றுக்கொண்ட அத்தீர்மானம் மேலும் அது பற்றி பின்வறுமாறு விளக்கமளித்துள்ளது.

“இத்தீர்மானத்தின் 3(ஏ) பகுதியில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டு பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுமொழி, பொதுவான பண்பாடு, பொதுவான மனவியல் பண்பாடுகள், பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியனவற்றைக் கொண்ட ஒவ்வொரு மொழிவழி மக்களும் தனித்தேசிய இனமாகக் கொண்டக் கருதப்பட வேண்டும்.

விடுதலை பெற்ற இந்தியாவில் சுயாதிக்க அரசாக (Autonomous state) விளங்ககூடிய உரிமையும் விரும்பினால் அந்தத் தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லக்கூடிய உரிமையும் இருக்க வேண்டும். ........................ .இவ்வாறு பிரிந்து அமைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களின் சுயாதிக்க அரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் ”.

இந்தத் தீர்மானத்தின் ஐந்தாம் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஆனால் இந்த விதத்தில் பிரிந்து போகும் உரிமையை அங்கிகாரிப்பதன் மூலம் உண்மையில் மாநிலங்கள் பிரிந்து விடும் என்று கருதத் தேவையில்லை. தேசிய இனங்களுக் கிடையிலான பரஸ்பர சந்தேகங்களைப் போக்குவதன் மூலமும், செயற்பாட்டை ஒருமையைக் கொண்டு வருவதன் மூலமும் சுதந்திர இந்தியாவில் மகத்தான ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இத்தகைய தேசிய ஒற்றுமையே எல்ல தேசிய இனங்களுக்கும் ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தேவையை அவற்றுக்கு உணர்த்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கும். அத்தகைய சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இன அரசும் சுதந்திரமாகவும், சம மதிப்புக்கொண்ட உறுப்பாகவும் பிரிந்து செல்லும் உரிமை கொண்டதாகவும் இருக்கும். நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி இதுவாகும்.”

பொதுவுடைமைக் கட்சியின் இத்தீர்மானம் மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் தேசிய இனங்களின் தன்னுரிமையை வலியுறுத்துகிறது.

இந்தியா ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் தன்னுரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா திகழ்வதன் மூலமே உண்மையான ஒற்றுமை நிலவும் என்பதையும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

1946ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் சார்பில் வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் தனது கருத்துக்களை பொதுவுடைமைக்கட்சி சமர்ப்பித்திருந்தது. அப்போதைய பொதுச்செயலாராக இருந்த பி.சி.ஜோஷி இக்குழுவிற்கு அளித்த அறிக்கையில் “தேசிய இனங்களுக்குத் தங்கு தடையற்ற சுயநிர்ணய உரிமை” (Unfiltered Self-determination) வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.

1947ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுத்தீர்மானதில் பின்வறுமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

“தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் வாயிலாக காங்கிரசு கட்சி அதே குற்றத்தை இன்று செய்து வருகிறது. மேலாண்மை செலுத்துகிற முதலாளிவர்க்கத்தின் நலன் கருதி காங்கிரசு இவ்வாறு செய்கிறது. காங்கிரசின் இந்தப்போக்கு தேசிய இனங்களுக்கிடையே பகை உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும். எனவே இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைமை தந்தால் ஒழிய இந்த அபாயத்தைப் போக்க இயலாது”. என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே பொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்

ஐ.நா சபை கூட உலகெங்கும் உள்ள தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை உண்டு என்பதை அங்கிகரித்துள்ளது. அதைதான் நாம் வலியுறுத்துகிறோம்.

தன்னுரிமை (Ritht to self detiermination.) ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை ஆகும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

*************
உதவிய நூல்கள்:
1. தன்னுரிமையா? மாநில சுயாச்சியா?- (தமிழர் தேசிய இயக்கம்).
2.பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்- (தமிழர் தேசிய இயக்கம்.)
3. அன்னம் சிற்றேடு ஏடு 7, 1994
4. தமிழ் உரிமை மிட்போம், (தமிழ் உரிமைக்கூட்டமைப்பு திண்டிவனம்.)
5. தன்னுரிமைத் தமிழ்தேச எழுச்சி முரசு – (மார்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி)

66 comments:

Anonymous said...

மிக நல்ல, மிகவும் தேவைப்படும் ஒரு பதிவு இது. முன்னைய யூகோஸ்லோவிலிருந்து மோண்டி நீக்ரோ மக்கள் பிரிந்து தனிநாடாவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ள சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டால் பிரிவினை என்பது அப்படி ஒன்றும் கெட்ட சொல் அல்ல என்பதும், ஒரே மொழி பேசும் மக்கள் தனி நாடாகத் திகழ்வதே இயல்பானது என்பதும் தெளிவாகும்.

தமிழைக் கைவிடும் செயலைப் பரந்த மனப்பான்மைக்கு அடையாளமாக முன்வைக்கும் இந்திய வாதிகள், செயற்கையான `இந்தியா` என்னும் அமைப்பைக் கைவிடுவதன் வழித் தங்கள் பரந்த மனதை இன்னும் பெரிதாக்கிக்கொள்ளலாமே!

சந்திப்பு said...


தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன்?.

முதல் கோணலே முற்றிலும் கோணலாகும் என்பார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் சுகுமாறனின் மேற்கண்ட கூற்று. கோயபல்சின் பொய்யை விட இது அதிகமானது. ஏனென்றால் சமகாலத்தில் நிகழக்கூடிய நிகழ்வில் கூட இப்படி பொய்ச் சொல்ல முடியும் என்றால் இதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.
சி.பி.எம். கட்சியின் நிலை அகில இந்திய அளவில் ஒரே நிலைதான். அது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பதுதான். மாநிலத்திற்கு, மாநிலம் ஒருதலைபட்சமான நிலைஎடுக்கும் கட்சியல்ல இது! சுகுமாறனின் மார்க்சிய பார்வை இவ்வளவு பலவீனமாக இருப்பதற்கு வருந்துகிறேன்.


காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒருக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.

இது அதைவிட அபத்தமான கூற்று. தனி நாடாக பிரிந்து போனால் எப்படி தண்ணீர் கிடைக்கும். உலகில் பல நாடுகளில் இதுபோன்ற தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்காமல் 50, 60 வருடகாலமாக போராடி வருகிறார்கள். ஐ.நா. சபை தீர்மானத்தை இன்றைக்கு எந்த நாடு மதிக்கிறது என்று சுகுமாறன்தான் விளக்க வேண்டும். ஈராக் மீது போர் தொடுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் மதித்ததா? எனவே உங்களுடைய கூற்று மிக அப்பாவித்தனமாகத்தான் இருக்கிறது. காவிரி குறித்து தனியாகவே விவாதிக்கலாம். பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று யோசிப்பதுதான் மார்க்சியமே தவிர, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது அல்ல. இரண்டு மாநில மக்களின் தேவை, தண்ணீர் இருப்பு, எதிர்கால திட்டங்கள் போன்று பல விஷயங்கள் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே இதனை மத்திய அரசும் - நான்கு மாநில அரசுகளும் வெளிப்படையாக பேசித்தீர்க்க வேண்டிய விஷயம். மாறாக இதனை இனவாதமாக (இனம் என நான் ஏற்கவில்லை), மாநில வெறியாக மாற்றுவதில் திராவிட கட்சிகளும், கர்நாடக கட்சிகளும் சளைத்ததல்ல.

அடுத்து சென்னை நகர மக்கள் குடி தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் இருக்கும் வீராணம் ஏரிப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்த்தார்களே இதனை என்னவென்று சொல்லப்போகிறீர்கள்! சென்னையை பிரித்து விடலாம் என்றா? அல்லது ஐ.நா. சபை மூலம் தீர்க்கலாம் என்றா?
எனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.

இங்கே சுகுமாறனின் வாதப்படி பார்த்தால் நாடு என்று இருந்தாலே அது இனம் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதுபோல் தெரிகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு வரலாற்று காரணிகளால், மக்களின் வாழ்ககையோடு பிண்ணிப் பிணைந்து உருவாகியுள்ளதே தவிர அனைத்து நாடுகளும் இனம் அடிப்படையில் இல்லை.இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதில் கூட சுகுமாறனின் சொந்த கருத்து அல்லது கொள்கை ரீதியான கருத்து என்ன என்று தெளிவில்லாமல் --சொல்லப்படுகிறது--- என்று பொத்தாம் பொதுவாக கூறி வைப்பது நகைப்பிற்குரியது. இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை. இது சுதந்திரப்போராட்டத்தின் வழியில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான ஒற்றுமையில் உருவான மதச்சார்பற்ற - ஜனநாயக நாடு.


எனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.

இன ஒடுக்குதல் என்றால் அந்த வாதம் எங்கே அடிபட்டுப் போய்விடுமோ என்று பயந்து ஓடி, ஒளிந்துக் கொண்டு மொழி ஒடுக்கும் அரசு என்று கூறுவது மிக வேடிக்கையான கூற்று. இப்போது மத்திய அரசில் யார் இருக்கிறார்கள். தமிழகத்தை சார்ந்த 13 மந்திரிகள் இருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இந்தி மட்டுமே வேண்டும் என்று கூறக்கூடியவர்களா? இங்கே யார் யாரை ஒடுக்குகிறார்கள். சுகுமாறன் நீங்கள் குழம்பிப் போய் உள்ளதோடு, மற்றவரையும் தயவு செய்து குழப்பாதீர்கள். ஏற்கனவே இணையத்தில் குழப்புவதற்கு பலர் வருவது வருத்தப்படவேண்டிய, திசை திருப்பல் விஷயம்.திராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.

முதலில் எது திராவிடம் என்பது குறித்தும் இது அரசியல் சொல்லாடலா, கலாச்சார சொல்லாடலா என்பதை திராவிட தமிழர்கள்தான் நிரூபிக்க வேண்டும். முதலில் இதில் ஏதாவது ஒரு கருத்தொற்றுமைக்கு வந்து கொள்கை விளக்கம் கொடுத்தால் நல்லது.1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
பொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்

“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

1942ஆம் ஆண்டு தீர்மானம் என்றும் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி தீர்மானம் என்றும் இரண்டு தீர்மானங்களை கூறுகிறார். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுவோம். பொதுவுடைமை கட்சிக்கு சி.பி.ஐ.க்கு முதன் முதலில் கட்சி திட்டம் உருவானதே 1964இல்தான். அதற்கு முன்னால் 1951இல் ஒரு கொள்கை அறிக்கைதான் இருந்தது. மேலும் நீங்கள் சுட்டிக்காட்டுவது எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு பொருந்திய வாதங்கள். சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், பாகிசுதான், பங்களாதேஷ் பிரிவினை போன்று பல அனுபவங்களை இந்தியா சந்தித்துள்ளது. பிரிந்து போன அந்த நாட்டு மக்களின் வாழ்ககைத்தரம் எல்லாம் மிக மோசமாக இருப்பது போன்ற பல வரலாற்று உண்மைகளை உணராமல் பொத்தம் பொதுவாக வாதிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
அது சரி! தற்போது பொதுவுடைமை கட்சி என்று யாரைச் சொல்கிறீர்கள்? இன்றைக்கு இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகள் இயங்குகின்றன. முதலில் எது என்ன கொள்கையைப் பின்பற்றுகிறது என்று படித்துவிட்டு எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிரிவினைவாதி said...

//சி.பி.எம். கட்சியின் நிலை அகில இந்திய அளவில் ஒரே நிலைதான். அது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும் கர்நாடகம் //

இது என்ன வார்த்தை விளையாட்டா? கர்நாடக கம்யூனிஸ்ட் தலைவர் என்ன சொல்கிறார்? அதை சொல்லுங்கள்.

//தனி நாடாக பிரிந்து போனால் எப்படி தண்ணீர் கிடைக்கும். //


இரண்டாவது புள்ளியில் நீங்கள் கூறுவதும் தவறு அய்யா. இந்தியாவும் பங்களாதேசும் தண்ணீரை பிரச்சினை இல்லாமல் பிரித்துகொள்வதாக தகவல்கள் உள்ளன.எந்த நாடுகள் தண்ணீர் பிரச்சினையி்ல் அடித்துகொள்கின்றன என்று கூறலாமே...

//மக்களின் வாழ்ககையோடு பிண்ணிப் பிணைந்து உருவாகியுள்ளதே தவிர அனைத்து நாடுகளும் இனம் அடிப்படையில் இல்லை.//

இன அடிப்படையில் அமைவது குற்றமா என்பதுதான் கேள்வி

//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை.//

ஹிஹி..சந்திப்பு..நீங்களும் நடுநிலைவாதிதானா? உங்களுடைய இந்த கருத்துக்காகவே லாட்ஜ் போட்டு ஒரு வாரம் சிரிக்கவேண்டும்....

//மொழி ஒடுக்கும் அரசு என்று கூறுவது மிக வேடிக்கையான கூற்று. இப்போது மத்திய அரசில் யார் இருக்கிறார்கள். தமிழகத்தை சார்ந்த 13 மந்திரிகள் இருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இந்தி மட்டுமே வேண்டும் என்று கூறக்கூடியவர்களா? //

பதிமூன்று பேர் இருந்தாலும் சந்திப்பு..ஒரு நாளில் ஒருசிலவற்றை மாற்றமுடியாது. மொழிஅடிப்படை என்றால் காம்ரேட்கள் முதற் கொண்டு எல்லாரும் மிஸ்டர் கிளீன் ஆகும்போது இது எப்படி ஒரு கூட்டணி ஆட்சியினால் உடனடியாக செய்யமுடியும்? இங்கு இந்தி திணிக்கப்படவில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் நான் லாட்ஜில் இன்னொரு வாரம் சேர்த்து ரூம் போட்டு சிரிக்கவேண்டும்.

//முதலில் எது திராவிடம் என்பது குறித்தும் இது அரசியல் சொல்லாடலா, கலாச்சார சொல்லாடலா என்பதை திராவிட தமிழர்கள்தான் நிரூபிக்க வேண்டும்//

அடையாள சொல் என்று அவர் கூறினார். சில கட்டுரை சுட்டிகளும் தரப்பட்டுள்ளன.தேவையானது நிஜமான ஆர்வம் மட்டுமே...

//தற்போது பொதுவுடைமை கட்சி என்று யாரைச் சொல்கிறீர்கள்? இன்றைக்கு இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகள் இயங்குகின்றன. முதலில் எது என்ன கொள்கையைப் பின்பற்றுகிறது//

எந்த பொதுவுடைமைகட்சியாக இரு்நதால் என்ன? இன கருத்தாக்கத்தை அது முதலில் அங்கீகரிக்கிறதா என்று கூறுங்கள் முதலில்.பிறகு இனவிடுதலையை பற்றி பேசலாம் சந்திப்பு.

சந்திப்பு said...


CPI(M) Karnataka State Committee Stand on Cauvery Issue:Karnataka CPI(M) On Cauvery Dispute


THE Communist Party of India (Marxist) Karnataka state secretariat has opined that the Karnataka government's refusal to obey Supreme Court's direction to release the water is a dangerous stand, keeping in view the long term interest of the state as well as the interests of the farmers of the Cauvery basin. At the same time, it felt that the Tamilnadu government was acting with selfish political motive by blaming and demanding the dismissal of the Karnataka government. This dangerous course would only enhance the chauvinistic atmosphere in both the states, affecting the federal polity and unity of the country, felt the CPI(M).

Referring to the Padayatra undertaken by the state chief minister alongwith the PCC chief, the CPI(M) state secretariat said that this only shows that the Cauvery dispute is being used for political gains and that this would lead to the opposition parties competing with the Congress, further affecting the already charged atmosphere in the state.

"Cauvery Tribunal's final order is expected within few months. In such a situation, the rigid stand taken by the Karnataka Govt. for its immediate political gains, has created an impression throughout the country that Karnataka is not obeying the direction of Supreme Court, Tribunal or CRA and this may lead to adverse affect on the final order. CPI(M) cautions that, for several decades in the future the farmers of Hasan, Mysore and Mandya have to face adverse situation" cautioned the CPI(M).

Pointing out that the Karnataka government had requested for establishment of Tribunal in respect of Krishna River water distribution also, the Party warned that the present stand of the government may affect the state in that matter also.

The CPI(M) state committee had been advocating since August this year that the state government should not take a unilateral stand. Instead, it should place before the Cauvery River Authority the problems being faced by the Karnataka people. The Karnataka government has not paid heed to this suggestion.

The CPI(M) has termed it regrettable that film artists, producers and others have entered the scene of agitation making provocative demands. It appealed to the people of Karnataka and the farmers of Cauvery basin, not to fall prey to the forces of linguistic jingoism and chauvinism, in the long term interest of farmers and the unity of the country.

Anonymous said...

இந்தியாவில் இன, மொழி ஒடுக்குமுறை இல்லை என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

பிரிந்து போகலாம் என்று வெளிப்படையாகப் பேசினால் எண்கவுண்டர் கொலையில் முடியும் அளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே சந்திப்புக்குத் தெரியாது போல இருக்கு.

வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் பொதுக்கருத்தெடுப்பு நடத்திப் பார்க்கட்டும் (மோண்டி நீக்ரோவில் நடந்தது போல). விருப்பத்தோடு அந்த மாநிலங்கள் இருக்கின்றனவா அல்லது பயங்கரவாத இந்தி ராணுவத்தின் இரும்புப் பிடி இறுகப்படித்துக்கொண்டிருப்பதால் அவை இந்தியோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றனவா என்பது அப்போது தெரியும்.

இரா.சுகுமாரன் said...

santhippu sir we will meet you on tomorrow morning.

பி.வா said...

kaveri தகவலுக்கு நன்றி.(கர்நாடகாவில் எத்தனை எம்எல்ஏ சீட் கம்யூனிஸ்ட்டுகளிடம் உள்ளது?)

அப்படியே கேரளா (முல்லைபெரியார்) மற்றும் ஆந்திரா தகவலையும் கொடுங்கள்.

முத்து(தமிழினி) said...

சந்திப்பு,

இந்தியாவில் ஒடுக்குதல் இல்லை என்றும் மொழி எதுவும் திணிக்கப்படுவதில்லை என்றும் நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் மெய்மறந்து நிற்கிறேன்.

Samudra said...

அனானிமஸ்,

வடகிழக்கு மாநிலங்களில் தேர்தலின் போது 90% வாக்குபதிவு நடக்கிறது தெரியுமா?

இந்தியாவின் 'இந்தி' இரானுவத்தின் தான் நாகாலாந்தை சேர்ந்த நாகாகளுக்கு என்று தனி ரெஜிமென்ட் அசாமியர்களுக்கு தனி ரெஜிமென்ட் கொடுத்து உள்ளார்கள்.

அசாமில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவது அசாம் ரைப்பிள்ஸ் - மத்திய அரசின் உள்துறை அமைச்சகதின் கிழ் இயங்கும் படைபிரிவு.இதில் அசாம் இளைஞர்களுக்கு தான் இடம்.

கொஞ்சமாவது தைரியமாக பெயரை போட்டு எழுதவும்.

Samudra said...

சந்திப்பு,

கை கொடுங்க.

திராவிட பேரினவாததை எதிர்த்து நீங்கள் குரல் கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களை போன்றோர் இருக்கும் வரை எப்படியும் இந்த திராவிட இனவெறி ஹிட்லரின் நாஜி வெறி அளவுக்கு போகாமல் தடுத்துவிடலாம்.

முத்துகுமரன் said...

//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை//

வந்தே மாதரம்! வந்தே மாதரம்....

அப்புறம் எதுக்கய்யா வர்க்கப்போராட்டம்????????.

இரா.சுகுமாரன் said...

//சி.பி.எம். கட்சியின் நிலை அகில இந்திய அளவில் ஒரே நிலைதான். அது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பதுதான். மாநிலத்திற்கு, மாநிலம் ஒருதலைபட்சமான நிலைஎடுக்கும் கட்சியல்ல இது!//


கர்நாடகத்தில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் நீங்கள் ஏன் கேரளாவில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்கிறீர்கள். தமிழனுக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதை உங்கள் கட்சியின் அச்சுதானந்தம் பலமுறை கூறியுள்ளார்.

இப்போது உங்கள் கட்சியும் தான் உடனிருந்து தமிழனுக்கு தண்ணீர் கொடுக்ககூடாது என தீர்மானம் இயற்றி தடுத்துள்ளனர். மாநிலத்திற்கு, மாநிலம் ஒருதலை பட்சமான நிலைஎடுக்கும் கட்சியல்ல இது! என்கிறீர்கள் கர்நாடகத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என்பது போல கேரளாவில் ஏற்க வேண்டியது தானே ஒரே நிலைப்பாடு எடுக்க வேண்டியது தானே!

உங்ளின் பதிலை திருப்பி உங்களுக்கு சொல்லலாமா?

கோயபல்சின் பொய்யை விட இது அதிகமானது. ஏனென்றால் சமகாலத்தில் நிகழக்கூடிய நிகழ்வில் கூட இப்படி பொய்ச் சொல்ல முடியும் என்றால் இதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.

இரா.சுகுமாரன் said...

//இது அதைவிட அபத்தமான கூற்று. தனி நாடாக பிரிந்து போனால் எப்படி தண்ணீர் கிடைக்கும். //

சர்வதேச நதிநீர் சட்டங்களை படித்தால் உங்களுக்கு தெரியும் . எப்படி வெவ்வேறு நாடுகளிடையே நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன என்று.
உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமெனில் Inter state disputes in india, Orient longman 160 Anna salai Chennnai யில் கிடைக்கும் நூலைப் படியுங்கள் ஆங்கிலத்தில் அந்த நூல் ரூ100/-தமிழில் ரூ35/- மட்டுமே, அதில் சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது. காவிரிப்பிரச்சனையில் கர்நாடகம் எப்படித்தவறு செய்கிறது என்பது உங்களுக்கு விளங்கும்.

அந்த நூலைப் படியுங்கள் எப்படி சர்வதேசப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன என்பதும் விளங்கும்.

சர்வதேச நதி நீர் சட்டமானது. ஒரு அணைக் கட்டவேண்டுமானால் அதை வரலாற்று ரீதியாக பயன்படுத் தியவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த அணையும் யாரும் கட்டக்கூடாது என்கிறது சட்டம். அதன்படி பார்த்தால் கர்நாடகம் அணைகளை கட்டி நீரை தடுத்தது சர்வதேச சட்டப்படி தவறு. எனவே, சர்வதேச சட்டப்படி தீர்வுகாணும் படி “’ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கழகம்”’ சொல்கிறது.

இரா.சுகுமாரன் said...

//நாடு என்று இருந்தாலே அது இனம் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதுபோல் தெரிகிறது.//

ஒரு நாடு இனம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இனங்கள் விடுதலை அடைந்த சுதந்திரமானவையாக இருக்க வேண்டும் என்பதே. சுதந்திரமான தன்னாட்சியான சுயநிர்ணய உரிமை பெற்ற தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பதே! நான் குறிப்பிடுவது.

சந்திப்பு said...


//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை//

வந்தே மாதரம்! வந்தே மாதரம்....

அப்புறம் எதுக்கய்யா வர்க்கப்போராட்டம்????????.


முத்துக்குமரன் எப்போதும் தெளிவாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி விட்டீர்கள். நாம் இங்கே விவாதிக்கக்கூடிய விஷயம் ‘இனம்’ குறித்து. இந்தியாவில் எந்த இனமும், மற்றொரு இனத்தை ஒடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

அதேபோல் ‘மொழி ஒடுக்குதல்’ என புதிய விஷயத்தை நண்பர் சுகுமாறன் கூறியுள்ளார். இதையும் அவர் விரிவாக விளக்கியிருந்தால் நல்லது. போகிற போக்கில் இதை அவர் கூறுகிறார். இன்றைக்கு எந்த மொழியைச் சார்ந்தவர்கள் எந்த மொழியை ஒடுக்குகிறார்கள்? நீங்கள்தான் விளக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் 1967 முதல் திராவிட ஆட்சிதான் நடைபெறுகிறது. குறைந்தபட்சம் தமிழை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயபாடமாக்கக்கூடா இவர்களால் முடியவில்லை. இதுதான் இவர்கள் தமிழ்மேல் வைத்திருக்கும் பாசம். (அடுத்து வருடம் நிறைவேற்றுவதாக கலைஞர் தற்போது வாக்குறுதி அளித்திருக்கிறார் - வரவேற்வோம்). தமிழை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இவ்வளவு நாளாக இதனை அமலாக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு மத்திய அரசு தடையாக இருந்ததா? அல்லது வேறு மொழி பேசுபவர்கள் தடையாக இருந்ததா? எனத் தெரியவில்லை!


அடுத்து மொழி விஷயத்தில் இந்தியாவில் 19 மாநில மொழிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருக்கிறது. ஆட்சி மொழியாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கிறது. தற்போது இந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஏன் பா.ஜ.க. ஆட்சியிலும், தற்போது காங்கிரசு ஆட்சியிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்துபவர்கள் திராவிட மந்திரிகளே இவர்களால் ஏன் இதனை சாதிக்க முடியவில்லை. அதற்காக இவர்கள் எடுத்த முயற்சி என்ன? ஆனால் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


மேலும் இந்தி குறித்து பேசும் போது, இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் குறைந்தபட்சம் 45 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டிருப்பதை அலட்சியப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு நான் பதில் கூற முடியாது. மேலும் இன்றைக்கு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்தி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இவைகள் தொடர்புக்காகத்தானேயொழிய அந்த மாநில மொழிகளை ஒழிப்பதற்காக அல்ல. 9 கோடி மக்கள் வங்காளி மொழியை பேசுகிறார்கள், 6 கோடி பேர் மராட்டியம் பேசுகிறார்கள், 5 கோடி பேர் தெலுங்கு பேசுகிறார்கள், 4 கோடி பேர் மலையாளம் பேசுகிறார்கள், ராஜ°தானி என இப்படி பல கோடி பேர் பல மொழிகளை பேசுகிறார்கள். இவர்களெல்லாம் இந்தியை எதிரி மொழியாகவோ, தங்களை ஏய்க்கும் மொழியாகவோ கருதிட வில்லை. ஆனால் திராவிட என்ற பெயரால் இந்தியை எதிர்ப்பு மொழியாக்கியோதோடு, தமிழையும் பாழாய்ப்போன மொழியாக தமிழகத்தில் மாற்றிவிட்டனர் திராவிட கருத்தாக்கவாதிகள். இலங்கையுலும், மலேசியாவிலும் உயர் கல்விகள் தமிழில் கற்க முடியும் போது, தமிழகத்தில் இந்த நிலையுண்டா? எனவே தங்களின் வாதம் உணர்ச்சிவயப்பட்டதாக இருக்கிறதே தவிர, பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இல்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


இறுதியாக உலகம் முழுவதும் எந்த மூலையில் எந்த இனத்தின் ஆட்சியே நடைபெற்றாலும் அங்கே வர்க்கப்போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கும். ஒரு இனத்திற்குள்ளேயே முதலாளி வர்க்கமும் - தொழிலாளி வர்க்கமும் இரண்டு கூர்முனைகளாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இங்கே நீங்கள் திராவிடம் என்ற பெயரால் நீங்கள் இரண்டு வர்க்கத்தையும் ஒரே தட்டில் வைத்து சுரண்டும் வர்க்கத்திற்கு தோள் தூக்குவதும், காவடி தூக்குவதும்தான் நடைபெறுகிறது.


நன்றி முத்துக்குமரன்.

இரா.சுகுமாரன் said...

//இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதில் கூட சுகுமாறனின் சொந்த கருத்து அல்லது கொள்கை ரீதியான கருத்து என்ன என்று தெளிவில்லாமல் --சொல்லப்படுகிறது--- என்று பொத்தாம் பொதுவாக கூறி வைப்பது நகைப்பிற்குரியது. //

//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை. இது சுதந்திரப் போராட்டத்தின் வழியில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான ஒற்றுமையில் உருவான மதச்சார்பற்ற - ஜனநாயக நாடு.//

எந்த தேசிய இனமும் எந்த தேசிய இனத்தையும் ஒடுக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் இது பார்ப்பனிய – பனியாக்களின் ஆதிக்கம் பெற்ற தேசமாக உள்ளது.

மதசார்பற்ற நாடு என்றவுடன் எனக்கு சிரிப்பு வருகிறது. மதசார்பற்ற தன்மையையும் இந்த நாட்டின் சட்டத்தைப் பற்றியும் அம்பேத்கார் சொன்னதை கேளுங்கள்:

நான் சட்டத்தை எழுத பேனா மட்டுமே என்கையில் இருந்தது ஆனால், அவர்கள் என்கையைப் பிடித்து எழுதினார்கள். நான் அறிவேன் இந்த சட்டம் பெரும்பான்மை மக்களுக்கு பயன் படாது என்று. எனவே இந்த சட்டத்தை கொளுத்த வேண்டுமானால் அதை செய்வதில் முதல் ஆள் நானக இருப்பேன். அதற்கு நான் ஆயத்தமாகவே உள்ளேன் என்றார் அவர்.

சனநாயகத்திற்கு சட்டம் எழுதிய அம்பேத்காருக்கே அங்கே சனநாயகம் இல்லை.

ஜனநாயகம் தான். அது யாருக்கான சனநாயகம் என்பது தான் கேள்வி.

இரா.சுகுமாரன் said...

//இன ஒடுக்குதல் என்றால் அந்த வாதம் எங்கே அடிபட்டுப் போய்விடுமோ என்று பயந்து ஓடி, ஒளிந்துக் கொண்டு மொழி ஒடுக்கும் அரசு என்று கூறுவது மிக வேடிக்கையான கூற்று. இப்போது மத்திய அரசில் யார் இருக்கிறார்கள்.//

தமிழகத்தை சார்ந்த 13 மந்திரிகள் இருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இந்தி மட்டுமே வேண்டும் என்று கூறக்கூடியவர்களா? இங்கே யார் யாரை ஒடுக்குகிறார்கள். சுகுமாறன் நீங்கள் குழம்பிப் போய் உள்ளதோடு, மற்றவரையும் தயவு செய்து குழப்பாதீர்கள். ஏற்கனவே இணையத்தில் குழப்புவதற்கு பலர் வருவது வருத்தப்படவேண்டிய, திசை திருப்பல் விஷயம்.//

நான் குழம்பவில்லை. சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் அன்புமணியின் சுகாதாரத்துறையில் அனைவரும் இந்தியில் கையொப்பம் இடவேண்டும் என்ற சுற்றிக்கை வந்தது.

மத்திய அமைச்சர் அன்பு மணியை கேட்டபோது அந்த உத்தரவை நான் அளிக்கவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் அனுப்பியுள்ளனர். என்ற பதிலை அவர் அளித்தார்.

மத்தியில் தமிழ் அமைச்சர்கள் 13 பேர் இருந்தால் இந்தி திணிப்பு இல்லையா?
இந்த செய்தியை “தென்செய்தி” சிலநாட்களுக்கு முன் சுட்டிக்காடியுள்ளது.

இரா.சுகுமாரன் said...

பார்க்க வலைத்தளம்:

http://www.thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Feb16-06&newsCount=5

தமிழ் அமைச்சர்கள் தோளில் இந்தி சவாரி

தனியார் நறுவனங்களிலும் இந்தியைத் திணிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்திய நிõட்டு நறுவனங்களாக இருந்தாலும் சரி, பன்னாட்டு நறுவனங்களாக இருந்தாலும் சரி, அவைகள் மத்திய அரசுடன் மேற்கொள்ளும் கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நறுவனங்களுடன் மத்திய அரசும் இந்தியில்தான் தொடர்பு கொள்ளும் இதற்கான ஆணையினை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்க உள்ளது என்னும் செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த சுமார் 70 ஆண்டு காலமாக தமிழர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
இந்த நீண்ட öநிடிய போராட்டத்தில் எண்ணிறந்த உயிர்களைப் பலிகொடுத்தோம்.

ஆயிரக்கணக்கானவர்கள் ள்மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நனைக்கும் சிறைச்சாலைற என வழங்கியவாறே சிறை புகுந்தனர்.
இந்தித் திணிப்பு ஒருபோதும் இல்லை, இந்தி பேசாத மக்கள் விரும்பும் காலம் வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியை வெற்றிப் பட்டயமாக ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
இரயில்வே நலையங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் பெயர்ப் பலகைகளில் மின்னிய இந்திய எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டது அந்தக் காலம்.
இன்று தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள கற்களில் இந்தி கம்பீரமாகக் காட்சித் தந்து, நிம்மை எள்ளி நிகையாடுவது இந்தக் காலம்.

தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே நலையங்களிலும், விமான நலையங்களிலும் இந்தி அறிவிப்புகள் அன்றாட நகழ்ச்சிகளாகிவிட்டன. வெளிநாடுகளைச் சேர்ந்த விமான நறுவனங்கள் கூட தமிழில் அறிவிப்புகள் செய்கிறார்கள். ஆனால் இந்திய அரசின் விமானங்களில் இந்தியில் மட்டுமே அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.
இந்திய அரசின் படிவங்கள், அஞ்சல் அலுவலக படிவங்கள் போன்ற எல்லாவற்றிலும் இந்தி குடியேறி வெகுகாலம் ஆகிவிட்டது.
இப்போது தனியார் நறுவனங்களும் இந்தியைப் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகின்றன. அப்படியானால் இனி தனியார் நறுவனங்களில் இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது நிõளுக்கு நிõள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நலையில் தனியார் நறுவனங்களிலும் தமிழ்ப் படித்தோருக்கு கதவுகள் அடைக்கப்படுகின்றன.
இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று மகுடம் சூட்டியுள்ளது எனப் பேசி நமக்குநாமே மகிழ்ந்து போகிறோம்.
ஆனால் இந்திப் படிக்காத தமிழர்கள் நெற்றியில் செந்நற நாமத்தை இந்திய அரசு போடுகிறது என்பதை நாம் உணரவில்லை.
ஈரத்துணியைச் சுற்றிக் கழுத்தை அறுப்பது என்பது இதுதான்.
தமிழர் தயவில் மத்திய அரசு இயங்குகிறது. வேட்டிக் கட்டிய தமிழர்கள் நாட்டை ஆளுகிறார்கள் என தமிழ்நாட்டு மேடைகளில் கூச்சல் போடுவது குறையவில்லை.
13 தமிழர்கள் தில்லியில் அமைச்சர்களாக அரசோச்சுகிறார்கள். ஆனாலும் அவர்களின் தோள்களில் ஏறி இந்தி ஒய்யாரமாக தமிழ்நிõட்டில் நுழைகிறது. அதைப்பற்றிய கவலை அவர்களுக்கும் இல்லை. அவர்களை தில்லிக்கு அனுப்பிய தமிழ் மக்களுக்கும் இல்லை.

இரா.சுகுமாரன் said...

சந்திப்பு அவர்களே

//‘மொழி ஒடுக்குதல்’ என புதிய விஷயத்தை நண்பர் சுகுமாறன் கூறியுள்ளார். இதையும் அவர் விரிவாக விளக்கியிருந்தால் நல்லது. போகிற போக்கில் இதை அவர் கூறுகிறார். இன்றைக்கு எந்த மொழியைச் சார்ந்தவர்கள் எந்த மொழியை ஒடுக்குகிறார்கள்? நீங்கள்தான் விளக்க வேண்டும்.//

தென்செய்தி தகவலில் அது விளக்கப் பட்டுள்ளது.

Anonymous said...

சமுத்ரா அவர்களுக்கு

ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை அடிமையாக அடக்கிச் சுரண்டிக்கொழுக்க அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த படையில் பெரிய எண்ணிக்கையில் இருந்த வீரர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம் நம் மக்களே தான்.

ஆங்கிலேயப்படையில் அதிக இந்தியர்கள் இருந்தனர் என்பதால் இந்தியா வெள்ளையர்களுக்கு அடிமையாக இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்களா? மாட்டீர்கள்.

இதே நிலைதான் அசாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நடக்கிறது. ஒரு இனத்து மக்களைக் கொண்டே அந்த இனத்து மக்களை அடிமைப்படுத்துவது ஆக்கிரமப்பாளர்களின் நீண்ட கால உத்தி. (ஈராக்கிலும் இதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது)

எனவே படைகளைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்.

90% வாக்குப் பதிவாகும் இடத்தில் ஏன் மக்கள் நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள்?

என் பெயரைத் தைரியமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சிறந்த நாட்டில் நான் வாழவில்லை. அதோடு பெயர் அவ்வளவு முக்கியமா என்ன?

realtamil said...

பிற்பட்ட ஜாதிகள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறிக்கிறீர்கள். ஒரே மொழி பேசினால், தாய் மொழியாக இருந்தாலும் கூட முற்பட்ட வகுப்பினர் என்று கூறி அவர்களுக்கு சம வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்
மிக அதிகம், இந்தியாவில் மிக அதிகமானவர்களால் பேசப்படுவதும் அதுவே. எனவே அவர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள். நீங்கள் பிறருக்குச் செய்வதை அவர்கள் உங்களுக்கு செய்கிறார்கள்.
நீங்கள் ஜாதி ரீதியாக பிரிக்கிறீர்கள், அவர்கள் மொழி ரீதியாக பிரிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு உங்களுடன் குரல் கொடுக்கும் லல்லு யாதவ்,முலாயம் சிங்,அர்ஜீன் சிங் மொழி என்று வரும் போது இந்தியைத் தான் திணிப்பார்கள். தென்செய்திக்கு இது புரியாதென்றால் எல்லோருக்குமா. நீங்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்வது நியாயம் என்றால் அவர்கள் செய்வதை எப்படி குறை சொல்ல முடியும்.

ஆகவே இதுக்குப் போயி அலட்டிக்கலாமா,

realtamil said...

பிற்பட்ட ஜாதிகள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறிக்கிறீர்கள். ஒரே மொழி பேசினால், தாய் மொழியாக இருந்தாலும் கூட முற்பட்ட வகுப்பினர் என்று கூறி அவர்களுக்கு சம வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்
மிக அதிகம், இந்தியாவில் மிக அதிகமானவர்களால் பேசப்படுவதும் அதுவே. எனவே அவர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள். நீங்கள் பிறருக்குச் செய்வதை அவர்கள் உங்களுக்கு செய்கிறார்கள்.
நீங்கள் ஜாதி ரீதியாக பிரிக்கிறீர்கள், அவர்கள் மொழி ரீதியாக பிரிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு உங்களுடன் குரல் கொடுக்கும் லல்லு யாதவ்,முலாயம் சிங்,அர்ஜீன் சிங் மொழி என்று வரும் போது இந்தியைத் தான் திணிப்பார்கள். தென்செய்திக்கு இது புரியாதென்றால் எல்லோருக்குமா. நீங்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்வது நியாயம் என்றால் அவர்கள் செய்வதை எப்படி குறை சொல்ல முடியும்.

ஆகவே இதுக்குப் போயி அலட்டிக்கலாமா,

இரா.சுகுமாரன் said...

realtamil said...

//மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.//

மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்து கொண்டு பெரும்பான்மையினரின் உரிமையை பரிக்கிறீர்கள்.

என்றுதான் பலர் பேசுகிறார்கள்

Anonymous said...

நான் சொல்ல வந்தது இதுதான் : உங்கள் பார்வையில் இட ஒதுக்கீடு நியாயம், அவர்கள் பார்வையில் இந்தியைத் திணிப்பது நியாயம். எனக்கு இட ஒதுக்கீட்டால் பயன் இல்லை, இழப்புதான். தமிழ் நாட்டில் நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்களோ அவர்கள் உங்களை அது போல நடத்துகிறார்கள். இந்தியை எதிர்த்து அன்புமணியும், தயாநிதியும் பதவியாக விலகப் போகிறார்கள்.So இந்தியை நான் ஏன் எதிர்க்க வேண்டும். அதைக் கற்றுக்கொண்டால் எனக்கு நல்லது.

Anonymous said...

ஆனால் இந்திப் படிக்காத தமிழர்கள் நெற்றியில் செந்நற நாமத்தை இந்திய அரசு போடுகிறது என்பதை நாம் உணரவில்லை.
Thats bad.They should have black on both sides and a red line in between :)

Samudra said...

அனானிமஸ்,

பெயரை போட்டு எழுத முடியாத உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.

சரி, பெயர் எதற்க்கு உங்கள் கருத்துக்கு வருவோம்.

1.வட-கிழக்கு மாநிலங்களில் ஏன் 90%க்கும் அதிகமான வாக்குபதிவு நடக்கிறது?

2.பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியர்களால சட்டத்தை மாற்ற முடியாது.இப்போது அந்த அந்த மாநில மக்கள் நினைத்தால் முடியும்.

//90% வாக்குப் பதிவாகும் இடத்தில் ஏன் மக்கள் நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள்?//

காசு கொடுத்தால் கையில் பிடித்து இருக்கும் பேனரில் என்ன எழுதியிருக்கிறது என்று கூட தெரியாமல் அதை தாங்கி பிடித்து கொண்டு போராட்டம் செய்ய இந்தியாவில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நிற்க.இந்த பதிவுக்கு இது தேவையில்லாத விவாதமாக தோன்றுகிறது.விருப்பம் இருந்தால் பதிலை தனிமடலில் தெரிவிக்கவும் இல்லை இந்த பதிவில் தான் பதில் சொல்ல வேண்டும் என்றாலும் பரவாயில்லை.

செல்வன் said...

தனிதமிழ்நாடு கேட்போரை லாரியில் ஏற்றினால் ஒரு லாரிக்கு நாலு பேர் குறைவார்கள்(நன்றி வெங்காயம்)

மக்களே இதில் எல்லாம் ஆர்வம் இழந்துவிட்டார்கள்.படித்தோமா,வேலைக்கு போனோமா,நாலு காசு சேர்த்தோமா என்பதில் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.தனித்தமிழ்நாட்டை யாரும் கேட்பதில்லை.முந்திரிக்காடுகளில் பதுங்கி இருக்கும் பைக் திருடும் நக்சலைட் கும்பலும், வீரப்பன் கும்பலும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.அவர்களுக்கும்ஆப்பு அடிக்கப்பட்ட பின் இப்போது அதை கேட்க ஆளே இல்லை.

யாருமில்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது யாருக்காக?

தமிழ்நாட்டை ஆண்ட திராவிட அரசுகள் கையாலாகாத்தனமாக செயல்பட்டதுதான் காவிரி நீர் கிடைகாமல் இருக்க காரனம்.இரண்டு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்திருந்தால்,வற்புறுத்தியுருந்தால் எப்போதோ காவிரி நீர் வந்திருக்கும்.40 எம்பிக்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய இவர்களுக்கு துப்பில்லை.கர்நாடகாகாரன் ஊர்கூடி தேரிழுக்கிரான்.பலனை அனுபவிக்கிறான்.நம் திராவிட கட்சிகளுக்கு சட்டசபையில் அடித்துக்கொள்லவே நேரம் போதவில்லை.நம் இயலாமைக்கு இந்திய அரசை குறை கூறுவது ஏன்?

இந்த அவலட்சணங்களை தனித்தமிழ்நாட்டின் பிரதமர்களாக ஆக்கினால் சந்தி சிரிப்பது தான் மிச்சம்.தனித்தமிழ்நாட்டின் ஆட்சிக்கு அ.தி.மு.க ஒருமுரை வந்தால் போதும்.அதன்பின் அதை ஆட்சியை விட்டு இறக்கவே முடியாது.எதிர்கட்சிகள் எல்லாம் அந்தமான் தீவுக்கு போய் துறவறம் தான் நடத்த வேண்டும்.

இரா.சுகுமாரன் said...

செல்வம் சொன்னது

//மக்களே இதில் எல்லாம் ஆர்வம் இழந்துவிட்டார்கள்.படித்தோமா,வேலைக்கு போனோமா,நாலு காசு சேர்த்தோமா என்பதில் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். தனித் தமிழ்நாட்டை யாரும் கேட்பதில்லை//

நன்றி செல்வம்,
நீங்கள் சொல்வது உண்மைதான் "யாரும் கேட்பதில்லை என்பதைத் தவிர". மற்றவை வாழ்க்கை எனும் எந்திரம் மனிதனை அரைத்து பணமாக்கிக் கொண்டிருக்கிறது. என்று மாவோ சொன்னதை நினைவு படுத்திய மாதிரி உள்ளது.

செல்வன் said...

ஐயன் சொன்னதுபோல் பொறுளிலார்க்கு இவ்வுலகமில்லை சுகுமாரன்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே.

Samudra said...

//மற்றவை வாழ்க்கை எனும் எந்திரம் மனிதனை அரைத்து பணமாக்கிக் கொண்டிருக்கிறது. என்று மாவோ சொன்னதை நினைவு படுத்திய மாதிரி உள்ளது.
//

மாவோ?
சுகுமாறன், அந்த கொலைகாரனின் வார்த்தைகளை அய்யன் வள்ளுவன் வார்த்தைகள் பயன்படுத்தபடும் இடத்தில் சொல்ல வேண்டாம்.

ஆகஸ்ட் 1966ஆம் ஆண்டு மாவோ தொடங்கிய 'கலாச்சார' புரட்சி எத்தனை லட்சம் அப்பாவி சீனர்களை கொன்றது!

Anonymous said...

\\2.பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியர்களால சட்டத்தை மாற்ற முடியாது.இப்போது அந்த அந்த மாநில மக்கள் நினைத்தால் முடியும்.
\\

இது உண்மையில்லை. தனி நாடு என்னும் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் எந்தக் கட்சியும் போட்டியிட இயலாது. இந்திய இறையாண்மை என்னும் ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கத்தை ஏற்காத கட்சிகளுக்கு முதலில் அங்கீகாரமமே கிடைக்காது.

ஜனநாயக வழியில், அகிம்சை வழியில் வழியில் கூட தனி நாடு என்று சுதந்திர இந்தியாவில் யாரும் வாய்திறக்க இயலாது.

வெள்ளைக்காரன் ஆண்ட போது இருந்த கருத்துச்சுதந்திரம் கூட நம்மவர்கள் ஆளும்போது இல்லையென்பதுதான் உண்மை.

மோண்டி நீக்ரோவில் நடந்ததுபோல ஒரு கருத்துக்கணிப்பை இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது நடத்த இயலுமா?

***
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியதற்கான காரணம் உங்ககளுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இல்லையென்றால் அவர்களது போராட்டத்தை இவ்வளவு கொச்சைப்படுத்தியிருக்க மாட்டீர்கள்.

இரா.சுகுமாரன் said...

Samudra said...
//சுகுமாறன், அந்த கொலைகாரனின் வார்த்தைகளை அய்யன் வள்ளுவன் வார்த்தைகள் பயன்படுத்தபடும் இடத்தில் சொல்ல வேண்டாம்

ஆகஸ்ட் 1966ஆம் ஆண்டு மாவோ தொடங்கிய 'கலாச்சார' புரட்சி எத்தனை லட்சம் அப்பாவி சீனர்களை கொன்றது! //

நன்றி சமுத்ரா

மரம் ஒய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிப் பதில்லை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்கிறார் அவர்.

காந்தி விடுதலைக்கு போராடிய போது பலர் இறந்தனர். அப்படியானால் அவரை எப்படி அழைப்பீர்கள்?கொலைகாரன் என்றா?

Anonymous said...

இது உண்மையில்லை. தனி நாடு என்னும் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் எந்தக் கட்சியும் போட்டியிட இயலாது. இந்திய இறையாண்மை என்னும் ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கத்தை ஏற்காத கட்சிகளுக்கு முதலில் அங்கீகாரமமே கிடைக்காது.

Do the Tamils in Tamil Nadu want
a separate country.
When we are facing the threat of islamic terrorism any call for a
separate country on the basis of
language or ethnicity will be
viewed with suspcion.Your outdated
notions of nationality and
ethnicity need to be junked.
Otherwise you will continue to
suffer from grand delusions.

செல்வன் said...

இந்திய இறையாண்மை என்னும் ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கத்தை ஏற்காத கட்சிகளுக்கு முதலில் அங்கீகாரமமே கிடைக்காது. //

மிக சரியான நடவடிக்கை.Good.

//ஜனநாயக வழியில், அகிம்சை வழியில் வழியில் கூட தனி நாடு என்று சுதந்திர இந்தியாவில் யாரும் வாய்திறக்க இயலாது.//

அமெரிக்காவிலும் தான் தனி நாடு என்று யாரும் வாய்திறக்க இயலாது.உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் அப்படித்தான் சட்டங்கள் உள்ளன


//வெள்ளைக்காரன் ஆண்ட போது இருந்த கருத்துச்சுதந்திரம் கூட நம்மவர்கள் ஆளும்போது இல்லையென்பதுதான் உண்மை.//

மிகைபடுத்தப்பட்ட கூற்று


//மோண்டி நீக்ரோவில் நடந்ததுபோல ஒரு கருத்துக்கணிப்பை இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது நடத்த இயலுமா?//

தேசவிரோத கருத்துகணிப்புக்கள் தேவைஇல்லை.அமெரிகாவிலும் தான் அப்படி நடத்த முடியாது.

Anonymous said...

செல்வன்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மைதான். எனவே இந்தியாவைச் சீனாவோடு இணைத்துக் கூடி ஒன்றாக வளர்ச்சி காணலாமே. இதற்குச் சம்மதிப்பீர்களா?

நாடுகள் என்னும் பிரிவினையும் தேவையில்லையே.

செல்வன் said...

சீனா என்ன?உலகம் முழுவதையும் இனைத்து ஒரு நாடாக ஆக்கினால் மிகவும் மகிழ்வேன்.எல்லைகள் இல்லாத புதிய உலகை படைப்பதே இன்றைய தேவை.

நிச்சயம் நாடுகள் எனும் பிரிவே தேவை இல்லை.எப்போது உலகம் முழுவதும் பிரிவினை இன்றி ஒன்றாகும்?ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

செல்வன்

மோண்டி நீக்ரோவில் இப்போதுதான் ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. அப்படியானால் அது ஜனநாயக நாடு இல்லையா?

அமெரிக்காவில் எதைப்பற்றிப் பேசுவதற்கும் முழுச்சுதந்திரம் உண்டு.

வெள்ளைக்காரன் காலத்தில் அதிகச் சுதந்திரம் இருந்தது என்று சொன்னால் அதைத் தவறு என்கிறீர்கள். அதே நேரத்தில் இந்தியாவில் கட்சிகளுக்குத் தடை விதிப்பது சரியான நடவடிக்கை என்கிறீர்கள். நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்?
***

இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டும் கேட்டபோது ஆங்கிலேயர்கள் அதைப் பகற்கனவு என்றுதான் கேலி செய்தார்கள்.
***

மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது என் பிரச்சினை இல்லை. அப்படித் தனிநாடு என்பதை ஏற்கவோ, தள்ளவோ மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தும் அளவுக்கு இந்தியா ஒரு நல்ல நாடா என்பதுதான் என் கேள்வி.

மக்கள் விருப்பப்படவில்லையென்றால் தனிநாடு கேட்கும் கட்சிகள் தோல்வியடைந்து போகட்டும்.
**

தனிநாடு என்று பேசுவதே தவறு ஏன் கருதப்படுகிறது?

இந்தத் தடை என் தனிமனித உரிமையைப் பாதிக்கிறதே!.

பிரியக்கூடாது என்று சொல்லும் மனிதர்களுக்குரிய அதே உரிமை, பிரிய வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எப்போது ஏற்படும்?

இரா.சுகுமாரன் said...

செல்வன் சொன்னது
//சீனா என்ன?உலகம் முழுவதையும் இனைத்து ஒரு நாடாக ஆக்கினால் மிகவும் மகிழ்வேன்.எல்லைகள் இல்லாத புதிய உலகை படைப்பதே இன்றைய தேவை.

நிச்சயம் நாடுகள் எனும் பிரிவே தேவை இல்லை.எப்போது உலகம் முழுவதும் பிரிவினை இன்றி ஒன்றாகும்?ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

நன்றி செல்வம் அமெரிக்கா அப்படித்தான் முயற்சி செய்கிறது உலகம் முழுவதும் அவர்களின் சுரண்டலுக்கு கீழ் வரவேண்டும் என்று அதனால் தான் நம்முடைய சுதந்தரம் இறையாண்மை பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ளது. நீங்கள் சொல்வது போல சுதந்திரமான மக்கள் நலத்தை அடிப்படையாக கொண்ட உலகமயமாக்கத்தை தான் நாம் ஒத்துக்கொள்ள முடியும். உலகமயமாக்கப் பட்ட சுரண்டலை நாம் ஆதரிக்க இயலாது.

Anonymous said...

செல்வன்

இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றாதீர்கள்.

இந்தியாவே தேவையில்லை என்று இப்போது சொல்லும் நீங்கள். தனிநாடு கேட்பதைத் தேசவிரோத கருத்து என்று ஏன் முன்பு கூறினீர்கள். தேசமே தேவையில்லை என்றான பிறகு தேசவிரோதக் கருத்துகள் எங்கிருந்து வருகின்றன?

இரா.சுகுமாரன் said...
This comment has been removed by a blog administrator.
செல்வன் said...

நன்றி செல்வம் அமெரிக்கா அப்படித்தான் முயற்சி செய்கிறது உலகம் முழுவதும் அவர்களின் சுரண்டலுக்கு கீழ் வரவேண்டும் என்று அதனால் தான் நம்முடைய சுதந்தரம் இறையாண்மை பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ளது. நீங்கள் சொல்வது போல சுதந்திரமான மக்கள் நலத்தை அடிப்படையாக கொண்ட உலகமயமாக்கத்தை தான் நாம் ஒத்துக்கொள்ள முடியும். உலகமயமாக்கப் பட்ட சுரண்டலை நாம் ஆதரிக்க இயலாது.///

உலகமயமாக்கலுக்கும் தனித்தமிழ் நாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்?

சீனாவோடு இணைவீர்களான்னு கேட்டார்.சரின்னு சொன்னேன்.நடுவில் உலகமயமாக்கலையும் அமெரிக்காவையும் கொண்டுவந்தால் விவாதம் வேறு திசையில் அல்லவா போகும்?

சீனாவை நாம் ஒன்றும் வந்து நம்மோடு இணைய சொல்லவில்லை.இந்தியாவையும் பிரிக்க வேண்டியதில்லை.இப்போது இருப்பதுபோலவே ஒற்றுமையாக இந்தியா இருந்தால் போதும்.

இரா.சுகுமாரன் said...

//உலகமயமாக்கலுக்கும் தனித்தமிழ் நாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்?//

என்ன செல்வம் நீங்களே இப்படிக் கேட்டால்!

உலகமயமாக்கல் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கு பொருந்தும் இல்லையா? தமிழ்நாட்டை தவிர்த்து பேச முடியுமா?.

ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும், அனைவருக்கு உரிமை வழங்கி ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும் வித்தியாசம் கொஞ்சம் தான். நீங்கள் சொல்வது நிபந்தனையற்ற ஒற்றுமை, நான் சொல்வது நிபந்தனையான ஒற்றுமை.

சந்திப்பு said...

இனத்தில் ஆரம்பித்தது உலகமயமாக்கலில் நிற்கிறது.
சுகுமாறனுக்கு ஒரு விஷயத்தில் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியாவில் எந்த இனமும் மற்ற இனத்தை ஒடுக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டதற்காக.
மேலும் முத்துவின் கைங்கர்யத்தால் இணையத்தில் நடப்பது என்ன திராவிட இனம் என்று அவர் ஆரம்பித்து வைக்க, அதுவும் திராவிட தமிழர்கள் என்று கூறப்போய், விவாதம் இந்த அளவிற்கு வந்துள்ளது. எனவே சுகுமாறனின் முடிவுப்படி எந்த இனமும் யாரையும் ஒடுக்காத சூழ்நிலையில் திராவிடம் குறித்து பேசுவது என்ன அவசியமா? இந்திய மக்களும், தமிழக மக்களும் வாழ்க்கைக்காக ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மக்களை மீட்பதற்கு நாம் உதவலாமே தவிர இனம், மொழி அடிப்படையில் தமிழகத்தையும், இந்திய மக்களையும் கூறுபோடுவது சரியானதல்ல.
சுகுமாறனின் கூற்றுப்படி உலகமயமாதலால் உலக மக்களுக்கு துன்பமே தவிர, இன்பம் அல்ல; எனவே எப்படி இந்த உலகமயமாக்கலுக்கு எதிராக போராடலாம் என இணையத்தில் விவாதிக்கலாம். ஆனால், அதற்கு மாறாக இந்த விவாதம் திசை திரும்பி உணர்ச்சி அடிப்படையில் தெளிவற்ற குழப்பமான திராவிட தமிழர்கள் கருத்தாக்கத்தை முன்வைப்பது உழைக்கும் மக்களது வாழ்க்கையை மேம்படுத்திட உதவிடாது.
அறிவியல் பூர்வமாக சிந்தித்தால் ‘இனம்’ என்பதே கிடையாது. அறிவியல் இனத்தை ஒத்துக் கொள்ளவில்லை. இங்கு இருப்பது மனித இனம் மட்டுமே மனிதர்களின் எம்.டி.என்.ஏ.க்கள் அனைத்தும் ஒரேபோல்தான் உள்ளது. ஆரியர், திராவிடர், நீக்ரோ, வெள்யைன் என மாறி, மாறி இருக்கவில்லை. எனவே நமது மரபு - ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஒட்டுமொத்த மனித இனமும் ஒரே இனக்குழுக்களின் வெவ்வேறு வடிவங்களே.
ஏன் தமிழை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் நன்பர்களை நான் கேட்க விரும்புவது. திருவள்ளுவர் காலத்து தமிழை இப்போது உபயோகிக்க முடியுமா? அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் என்ன நிலையில் இருந்தது தற்போது என்ன நிலையில் இருக்கிறது? அடிப்படையான மாற்றங்கள் மனிதர்களின் வாழ்வியலோடு இணைக்கப்பட்டது. எனவே திராவிட கலாச்சாரம், ஆரிய கலாச்சாரம் என்று பிரித்து திசை திருப்பிடுவது சமூக முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமாக அமையாது.
நன்றி சுகுமாறன்.

செல்வன் said...

என்ன செல்வம் நீங்களே இப்படிக் கேட்டால்!

உலகமயமாக்கல் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கு பொருந்தும் இல்லையா? தமிழ்நாட்டை தவிர்த்து பேச முடியுமா?./////

ஐயா

இப்போது நாம் விவாதிக்கும் தலைப்பு தனிதமிழ்நாடா,உலகமயமாக்கலா?

///ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும், அனைவருக்கு உரிமை வழங்கி ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும் வித்தியாசம் கொஞ்சம் தான். நீங்கள் சொல்வது நிபந்தனையற்ற ஒற்றுமை, நான் சொல்வது நிபந்தனையான ஒற்றுமை.///

நிபந்தனையுடன் "ஒற்றுமை" என்று சொன்னீர்களென்றால் மிகவும் மகிழ்கிறேன்.

செல்வன் said...

நண்பர் சந்திப்பின் கருத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்.

மிகத்தெளிவான சிந்தனைகளை முன்வைத்துள்ளார்.

ஆந்திரா,கர்நாடகா என இந்தியா முழுக்க உழைக்கும் மக்கள் பிரச்சனை ஒரே மாதிரி தான் உள்ளது.இதில் நடுவே தனித்தமிழ்நாடு கேட்டு கோஷம் போடுதல் எப்பயயனையும் தராது.பிரச்சனையை திசை திருப்பவே உதவும்.

வாழ்த்துக்கள் நண்பர் சந்திப்பு.உழைக்கும் மக்களை உயர்த்துவதே இன்ரைய தேவை.அவர்களை பிரிப்பது அல்ல.

இரா.சுகுமாரன் said...

சந்திப்பு அய்யா சொன்னது

//உலகமயமாதலால் உலக மக்களுக்கு துன்பமே தவிர, இன்பம் அல்ல; எனவே எப்படி இந்த உலக மயமாக்கலுக்கு எதிராக போராடலாம் என இணையத்தில் விவாதிக்கலாம்.//

உலகமயமாக்கலை நீங்கள் விவாதித்தால் நானும் உங்களுடன் விவாதிக்கிறேன். உங்களை நான் ஆதரிக்கிறேன்.

//ஆனால், அதற்கு மாறாக இந்த விவாதம் திசை திரும்பி உணர்ச்சி அடிப்படையில் தெளிவற்ற குழப்பமான திராவிட தமிழர்கள் கருத்தாக்கத்தை முன்வைப்பது உழைக்கும் மக்களது வாழ்க்கையை மேம்படுத்திட உதவிடாது.//

உணர்ச்சிகளை அடிப்படியில் திசைத்திருப்பும் முயற்சி அல்ல இது.
என்னுடைய வலைத்தளத்தில் மிகச்சிறிய கருத்துகளையே பத்துள்ளேன். வரலாறு பெரியது. குழப்பமான கருத்தாக்கமும் இல்லை.

இரா.சுகுமாரன் said...

செல்வம் சொன்னது....
//ஆந்திரா,கர்நாடகா என இந்தியா முழுக்க உழைக்கும் மக்கள் பிரச்சனை ஒரே மாதிரி தான் உள்ளது. இதில் நடுவே தனித்தமிழ்நாடு கேட்டு கோஷம் போடுதல் எப்பயயனையும் தராது.பிரச்சனையை திசை திருப்பவே உதவும்.//

இந்த பிரச்சனை உலகம் முழுதும் கூட உள்ளது. மக்களை உலகம் முழுதும் திரட்டுவதில் உள்ள சிக்கலால் தான் தனித்தனியாக ஒரு வழிகாட்டலாக இப்பிரச்சனை முன் வைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பிரச்சனைக்கு இங்கிருந்து நாம் போராட முடியுமா?. அவர் அவர் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அவர் அவர்களுக்கு உள்ளது.

செல்வன் said...

இந்த பிரச்சனை உலகம் முழுதும் கூட உள்ளது. மக்களை உலகம் முழுதும் திரட்டுவதில் உள்ள சிக்கலால் தான் தனித்தனியாக ஒரு வழிகாட்டலாக இப்பிரச்சனை முன் வைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பிரச்சனைக்கு இங்கிருந்து நாம் போராட முடியுமா?. அவர் அவர் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அவர் அவர்களுக்கு உள்ளது./////

கியூபாவில் பிரச்சனை என்றால் கடலூரில் கொடிபிடிக்கிறோமல்லவா?அதே போல் பிரச்சனையின் முக்கியத்துவத்தை பொறுத்து அதை எந்த அளவில் எதிர்ப்பது (உள்ளூர் அளவிலா,மாநில அளவிலா,தேசிய அளவிலா,சர்வதேச அளவிலா)என முடிவு செய்து கொள்லலாம்.

இரா.சுகுமாரன் said...

//கியூபாவில் பிரச்சனை என்றால் கடலூரில் கொடிபிடிக்கிறோமல்லவா?அதே போல் பிரச்சனையின் முக்கியத்துவத்தை பொறுத்து அதை எந்த அளவில் எதிர்ப்பது//

அவ்வளவுதான்! இது அவர்களுக்காக போராடுவதல்ல.

ஆதரவு தெரிவிப்பது அவ்வளவு தான். இலங்கையில் சண்டை நடந்தால் அதை இங்கு இங்கிருந்து ஆதரிக்க முடியும். போராட முடியாது.

செல்வன் said...

அவ்வளவுதான்! இது அவர்களுக்காக போராடுவதல்ல.

ஆதரவு தெரிவிப்பது அவ்வளவு தான். இலங்கையில் சண்டை நடந்தால் அதை இங்கு இங்கிருந்து ஆதரிக்க முடியும். போராட முடியாது. //


தமிழ்நாடு தனிநாடானால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் தமிழனுக்கு ஏதாவது நடந்தால் போராட முடியாது, குரல் மட்டுமே கொடுக்க முடியும்.அதனால் தான் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்பது.

Anonymous said...

செல்வனுக்கு,

போகிற போக்கில் தனிநாடு கேட்கிறார்கள் என்று விமர்சனம் வீசி செல்வது உங்களிடம் எதிர்பார்க்ககூடியது அல்ல.

நீங்கள் நல்ல சிந்தனையாளர்.நன்றாக ஆழ்ந்து படித்து எழுதவேண்டும்.

ஜெய்ஹி்ந்த் எங்களாலும் சத்தமாக போடமுடியும்.ஒடுக்கப்பட்டவர்களை ஓங்கி கத்தி அமுக்காதீர்கள் தயவு செய்து.

முத்து(தமிழினி) said...

சுகுமாரனுக்கு,

அந்த நிபந்தனையோடு கூடிய ஒற்றுமை பாயிண்ட்டை அழுத்தி சொல்லுங்கள்.

கடைசியில் அதை ஒத்துக்கொண்டு வரவேற்கும் செல்வன் முதலில் இருந்தே அதைத்தான் நாம் கூறிவருகிறோம் என்பதையும்
நமது இயக்கத்தின் நோக்கமும் அதுதான் என்பதையும் புரிந்துகொள்ளமுடியாமல் போனதை துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

செல்வனை இந்த இயக்கத்திற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறென்.

சந்திப்பு,
யாரும் யாரையும் ஒடுக்கவில்லை என்று சுகுமாரன் எங்கு கூறினார் என்றும் எந்த அடிப்படையில் கூறினார் என்று அறியதரவும்.நன்றி.

செல்வன் said...

//போகிற போக்கில் தனிநாடு கேட்கிறார்கள் என்று விமர்சனம் வீசி செல்வது உங்களிடம் எதிர்பார்க்ககூடியது அல்ல.//

ஐயா,
இந்த பதிவிலேயே தனிநாடு குறித்து குரல் எழுப்பப்படுகிறது.

//எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒருக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.

“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.
//

இதெல்லாம் இந்த பதிவிலேயே உள்ளதுதான்.நான் ஒன்றும் இட்டுக்கட்டவில்லை.

செல்வன் said...

//கடைசியில் அதை ஒத்துக்கொண்டு வரவேற்கும் செல்வன் முதலில் இருந்தே அதைத்தான் நாம் கூறிவருகிறோம் என்பதையும்
நமது இயக்கத்தின் நோக்கமும் அதுதான் என்பதையும் புரிந்துகொள்ளமுடியாமல் போனதை துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.//

இந்த பதிவில் உள்ள பல பின்னூட்டங்கள் பிரிவினையை வலியுறுத்துவதாகவே உள்ளன.அதை கண்டித்து தான் நான் எழுத துவங்கினேன்.இந்த கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் சொல்லபடும் பிரிவினைவாத கருத்துக்களை பாருங்கள்.


//பிரிவினை என்பது அப்படி ஒன்றும் கெட்ட சொல் அல்ல என்பதும், ஒரே மொழி பேசும் மக்கள் தனி நாடாகத் திகழ்வதே இயல்பானது என்பதும் தெளிவாகும்.

தமிழைக் கைவிடும் செயலைப் பரந்த மனப்பான்மைக்கு அடையாளமாக முன்வைக்கும் இந்திய வாதிகள், செயற்கையான `இந்தியா` என்னும் அமைப்பைக் கைவிடுவதன் வழித் தங்கள் பரந்த மனதை இன்னும் பெரிதாக்கிக்கொள்ளலாமே! //

//பிரிந்து போகலாம் என்று வெளிப்படையாகப் பேசினால் எண்கவுண்டர் கொலையில் முடியும் அளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே சந்திப்புக்குத் தெரியாது போல இருக்கு.//

பின்னூட்டங்கள் கட்டுரையாளரின் கருத்தோ அல்லது உங்கள் இயக்கத்தின் கருத்தொ அல்ல என நான் அறிவேன்.

நான் எழுத துவங்கியது இங்கு இடப்பட்ட பிரிவினைவாத பின்னூட்டங்களை எதிர்த்தே.ஆனால் சுகுமாறன் அந்த பின்னூட்டம் இட்டவர்களை ஒன்றும் சொல்லாமல் எனக்கு பதில் தரத்துவங்கியது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.சரி அது அவர் விருப்பம் என்று விட்டு விட்டேன்.

செல்வன் said...

//செல்வனை இந்த இயக்கத்திற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறென்.//

மிக்க நன்றி நண்பரே.திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்பு,தமிழ் செம்மொழி போன்ற பல கொள்கைகளில் எனக்கு உடன்பாடு உண்டு.ஆனால் கடந்த சில தினங்களாக இரு கூறுகளாக தமிழ்மணம் பிரிந்து விட்டதுபோல் தோன்றுகிறது.இரு தரப்பிலும் நண்பர்கள் உண்டு.ஒரு தரப்பு இயக்கத்தில் சேர்ந்தால் மற்ற தரப்பினர் மனம் புண்படும்.அதனால் அ.கு.மு கவை தொடர்ந்து நடத்தி அண்ணன் குமரன் வழியிலேயே செல்வது என தற்போதைக்கு முடிவெடுத்திருக்கிறேன்.

உங்கள் இயக்கத்தை பொறுத்தவரை நல்ல கொள்கைகளோடு செல்கிறது.என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரா.சுகுமாரன் said...

செல்வம் அவர்களுக்கு,

/////காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும். என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.//

இது கட்டுரையாளரின் கருத்து எனச் சொல்லவில்லை "ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பின் கருத்து என குறிக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

/////“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” –என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன. ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.
//

இதெல்லாம் இந்த பதிவிலேயே உள்ளதுதான்.நான் ஒன்றும் இட்டுக்கட்டவில்லை./////

மற்ற நாடுகளில் தேசிய இன விடுதலைக்கு ஆதரவளிக்கும் அவர்கள் இந்தியாவில் இனவிடுதலைப் பற்றி பேசினால் பிரிவினைவாதம் என்கிறார்கள் என்பதையே இங்கு குறிக்கிறோம்.

கட்டுரையின் இறுதியில் பாருங்கள்

//தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.//

என உள்ளது அது இந்த கட்டுரையில் முடிவாக கொள்ளலாம்.

இரா.சுகுமாரன் said...

செல்வம் சொன்னது...

//தமிழ்நாடு தனிநாடானால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் தமிழனுக்கு ஏதாவது நடந்தால் போராட முடியாது, குரல் மட்டுமே கொடுக்க முடியும்.அதனால் தான் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்பது.//

இந்திய ஒன்றியத்தில் தமிழன் ஒன்றாய் இருந்தால் மட்டும் என்ன இலங்கையில் தமிழினம் அழியும்போது என்ன செய்ய முடிகிறது.

Anonymous said...

அருமை.

விவாதத்தின் போக்கில் வரும் வார்த்தைகளை தவறாக அர்த்தம் காட்டி பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தும் போக்கை முதலிலேயே கண்டித்த மற்றும் சரியாக விளக்கம் கொடுத்த உங்களுக்கு தமிழக,இந்திய சிந்தனையாளர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்.

செல்வன் said...

என் இரண்டு பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாததன் காரனத்தை அறியலாமா ஐயா?

அன்புடன்
செல்வன்

இரா.சுகுமாரன் said...

//என் இரண்டு பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாததன் காரனத்தை அறியலாமா ஐயா?

அன்புடன்
செல்வன் //

நன்றி செல்வம்,

நான் உங்களின் பின்னூட்டங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்டேன், ஆனால், சில நேரங்களில் இணையத்தின் வேகம் குறைவாக இருப்பதால் அப்படி சில நேரங்களில் ஏற்பட்டுப் போகிறது. நீங்கள் எனக்கு இத்தகவலை தெரிவிக்கவில்லையெனில் அதனை உடனடியாக நான் கவனித்திருக்க இயலாது.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
நான் திட்டமிட்டு எதையும் வெளியிடாமல் இல்லை. காலதாமதத்திற்கு வருந்துகிறேன்.

இரா.சுகுமாரன் said...

Samudra 25/5/2006
realtamil 26/5/2006
Anonymous 27/5/2006 -2 தகவல்கள் அதே அடிப்படையில், நான் வெளியிட்ட போதும் இணையத்தின் வேகம் காரணமாக அது முழுமையாக வெளியிடாமல் இருந்ததை காண முடிந்தது.

சமுத்ரா, ரியல்டைம், அனாநி ஆகியோருக்கு காலதாமதமாக வெளியிட்டமைக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுட்டிக்காட்டிய செல்வத்திற்கு நன்றிகள் பல.

செல்வன் said...

சுகுமாறன் ஐயா

பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றி நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்.

தனிநாடு கேட்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.உங்கள் பதிவில் சில அனானி நண்பர்கள் அந்த கோரிக்கையை எழுப்பவே தான் நான் அவர்களுக்கு பதில் அளித்தேன்.அது எப்படியோ நம்மிடையே விவாதமாக மாறிவிட்டது.

தனிநாடு கோரிக்கையை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று பதிவிலேயே சொல்லிவிட்டதால் உங்களுடனான வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி
அன்புடன்
செல்வன்

Anonymous said...

சந்திப்பு

பாடுபட்டால் இந்தியா முழுவதும் உள்ள சுரண்டப்படுவோர் அனைவருக்கும்தான் பாடுபடுவோம், தமிழ்நாட்டில் உள்ள சுரண்டப்படுவோருக்காகப் பாடுபட மாட்டோம்னு சொல்றது என்னய்யா நீதி?
தமிழ்பேசும் மக்கள் தனியா பிரிந்த பிறகு இங்குள்ள சுரண்டப்படுவோருக்கப் பாடுபட்டா யார் வேண்டாம் என்கிறார்கள்?

இந்தியா முழுவதும் உள்ள சுரண்டப்படுவோருக்கு மட்டும் பாடுபடுவானேன். உலக நாடுகள் எல்லாவற்றையும் இணைத்துப் பிறகு அதில் உள்ள அனைவருக்கும் பாடுபடுங்களேன்.

சுரண்டலுக்கு ஆளாவோரைப் பாதுகாப்பது உங்கள் முக்கிய நோக்கமானால் இந்தியா ஒன்றாக இருப்பதோ பிரிவதோ ஏன் உங்களுக்கு முக்கியமாகப் படுகிறது? முக்கியமாகப் பட்டால் இந்தியா என்னும் கருத்தாக்கத்தின் மீது உங்களுக்குள்ள உணர்ச்சியே உங்கள் விவாதத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறலாமா?

உண்மையில் உணர்ச்சியின் அடிப்படையில் விவாதத்தைக் கொண்டுபோவது யார் என்பதைப் பரிசீலனை செய்யுங்கள்.

வவ்வால் said...

வணக்கம் சுகுமாரன்!

இந்தியா முரண்பாடுகளின் தொகுப்பு என்பதை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்,பின்னூட்டங்களை இன்னும் முழுதும் படிக்கவில்லை சரியாக படித்து உள்வாங்கி கொண்டு இன்னும் விளக்கமாக நானும் கொஞ்சம் குட்டையை குழப்ப வருகிறேன்:-))

இரா.சுகுமாரன் said...

வவ்வால் said...

நன்றி வவ்வால் அவர்களே

வருக விவாதிப்போம்.

babupriya said...

This article is really good compilation. But, i cannot accept your contention that india was not a united country and you have quoted history as testimony to it. India may have been ruled by different rulers, but they are united not by language but by religion. For close to 5000 years the people of sub-continent have been following hinduism as a religion and this unites the people.

Second, is that you have quoted that by seperating from india, we can go to international tribunal and get cauvery waters which is absurd. A state which is denying water to another state, can however dilute this case in international tribunal. Reasons are, that tamilnadu gets water from north-east monsoon and again water flows into cauvery from bhavani river which is a very big tributary of cauvery. So, by going separately we cannot think that this issue will be resolved. Instead the issue can be resolved by talks and thru.tribunal and the supreme court and the constitution of india.

Releasing of tamil films in karnataka cannot be linked to FMCG goods. It is the protectionist attitude of the local film chamber of karnataka. Even we have resisted hindi for so long and even now our own ramadass are fighting against implementing hindi as a curriculum in schools whereas their children are studying in delhi.

We have accepted india as a nation and whatever we do it should be within the framework of the constitution and to remind you that in the constituent assembly many tamilians were members.