காவிரி நடுவர் மன்றத்திற்கு மீண்டும் ஆறுமாதம் நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு ஜீன்-25ல் இடைக்கால தீர்ப்பாக 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
அதன் பின் என்னத்தை செய்தார்கள் என்று தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள். மக்கள் பிரச்சனைகள் மீது கொஞ்சமும் அக்கரை இல்லாத போக்கினால் தான் இந்த தீர்ப்பு வழங்க 16 ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொள்கின்றனர். ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கிய பாடில்லை. மேலும் ஆறு மாதம் வேண்டும் என்று கோரி மத்திய அரசிடம் கேட்டு பெற்றுள்ளனர்.
அப்படி என்ன பெரிய வேலை இந்த நடுவர் மன்றத்தில் என்றால் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இழுத்தடிக்கும் போக்கின் ஒரு வடிவம் தான் இத்தகைய நீதி மன்றங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக காவிரி நீர் இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களின் மெத்தனப் போக்கால் தமிழக மக்கள் என்ன பதினாறு ஆண்டுகள் பாதி சோறு சாப்பிட்டுவிட்டு (அ) பட்டினிக்கிடந்தா சாகமுடியும்.
இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருப்பது இவர்களின் சமூக அக்கரையற்ற தன்மையாக தெரிகிறது.
இத்தனைக்கும் காவிரி நதிநீர்த் தொடர்பாக இந்த மாநில அரசுகள் பல்வேறு புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நெடும் வரலாறு கொண்டதால் இதுபற்றிய தகவல்கள் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆதாரங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றுதான் பெரிய அளவில் தேடி அலைய வேண்டியதில்லை.
இத்தகைய ஆதராம் கண்ணெதிரே கிடந்தாலும் விசாரணைக் கமிசன் என்றால் எப்படி பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கலாம் என்பதற்கு காவிரி நடுவர் மன்றம் ஒரு சிறந்த உதாரணம்.
16 ஆண்டுகளாக இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள் என்றுதான் தெரியவில்லை.
ஆனால், சர்வதேச நதிநீர்ச் சட்டப்படி பல நாடுகளிடையேயான நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், காவிரி நதிநீர் பிரச்சனை ஏன் தீர்க்கப் படாமல் இருக்கிறது எனத்தெரியவில்லை.
சர்வதேச நதிநீர் சட்டம் இந்த பிரச்சனை தொடர்பாக மிகத் தெளிவான வரையறையைக் கொண்டுள்ளது.
அதாவது, இயற்கையாக வரும் நதிநீரை வரலாற்று ரீதியாக ஒரு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தால் அந்த நதி நீரை வரலாற்று ரீதியாக பயன்படுத்தும் மக்களுக்கு பதிப்பில்லாத வகையில் அந்த நதியில் மேல் நிலையில் உள்ளவர்கள் நதி நீரைப் பயன் படுத்திக்கொள்ளலாம்.
அந்த நதியின் கீழ் நிலையில் உள்ளவர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையில் பாதிக்கின்றவகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது என்று சர்வதேச நதிநீர்ச் சட்டம் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
பல நாடுகளிடையே நதிநீர்ப் பிரச்சனை தீர்க்கப்படும் போது மாநிலங்களிடையேயான நதிநீரை சர்வதேச சட்டத்தின் கீழ் மிக எளிதாக தீர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் இப்படி இழுத்தடிக்கப்படுகிறது என்றால் தமிழன் தான் எல்லோருக்கும் எமாளி என்பது இவர்களுக்கும் தெரிந்து உள்ளதால் தான் இப்படி நடந்திருக்குமோ என்று தான் கருத வேண்டியுள்ளது.
6 comments:
நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சனை இந்த நீட்டிப்பு செய்த ஆறு மாதத்திலாவது முடிப்பார்களா? தெரியவில்லை.அரசு தீர்ப்பை வெளியிட வலியுறுத்திய போதும் நீட்டிப்பு பெற்றுள்ளது இவர்கள் செயலை சந்தேகத்துக்கு உள்ளாக்குவது சரியே
ஆளும் வர்க்கங்களின் நாடகம்தான் இவையெல்லாம். நீதிமன்றங்கள் புனிதமானவை என்ற பிம்பம் சமீபகாலமாக தகர்ந்து வருகிறது. அது தொழிலாளர்களுக்கு எதிரானது என்பதை ஜெயாகாலத்து அரசு ஊழியர் அடக்குமுறையின் போது கண்டோம். எனவே அதன் தீர்ப்புகளையெல்லாம் மாநில அரசு மதிக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது! அது சரி தமிழன் ஏமாளியா?...
//தீர்ப்புகளையெல்லாம் மாநில அரசு மதிக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது!//
காவிரி தீர்ப்பில் அப்படி இருப்பதற்கு என்ன காரணம்.
சட்டத்தின் மீது அதனை இயற்றுவர்களுக்கு உள்ள மதிப்பை காட்டுகிறது.
நீதீபதிகளின் ஒழுங்கா இருந்தத் தானே சட்டத்தின் மீது மற்றவர்களுக்கு மதிப்பு வரும்.
//அது சரி தமிழன் ஏமாளியா?... //
தமிழன் ஏமாளிதானையா!
வரலாறு அப்படித்தான் சொல்கிறது.
சொல்வாய்வறிஞர் அருளி சொல்வது போல் சொன்னால், " நம்முடைய சூடு இன்மையாலும் சுரனை இன்மையாலும் நமது வரலாற்றை, தமிழனின் பல்வேறு உடைமகளை இழந்தோம். என பலவற்றை குறிப்பிடுவார்".
கேட்கவும் : "தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி"
தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி
இணையதளம் http://www.tamilcircle.net/unicode/CASTE/
caste.mainu.htm
I think it is not "ERRumai" instead "Erumai". Mellina "ra".
- MK
மேட்டூர் அணை வந்த காரணம் இதை படித்துப் பாருங்கள்
http://merkondar.blogspot.com/2005/06/blog-post_24.html
இந்த ஜன நாயகம் போலி,
இந்த அரசோ ஒரு மாமா அரசு...
இவர்கள் தங்களது ஓட்டு அரசியலுக்காகவாவது இந்த காவிரிப் பிரச்சனையை உயிருடன் வைத்திருப்பார்கள்.
பெங்களூர் போன்ற நகரங்களில் உள்ள mnc க்களுக்கு வழங்கப்படும் விலை குறைந்த அல்லது இலவச தண்ணீரை பறித்து, விவசாயிகளுக்கு தண்ணீர் மீதான உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
மற்றபடி இந்த அமைப்பில் காவிரி பிரச்சனைக்கு விடிவே கிடையாது.
நல்ல கட்டுரை
நன்றி,
அசுரன்
Post a Comment