Saturday, October 10, 2009

இராசபக்சேவின் இந்திய பிரதிநிதிகள் இன்று இலங்கை பயணம்

இலங்கையில் தமிழர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? என்று பார்ப்பதற்காக இன்று தமிழக எம்.பிக்கள் இன்று இலங்கை புறப்படுகிறார்கள். ஒருவேளை அவர்கள் இன்னும் சாகாமல் உயிருடன் இருந்தால் அவர்களை தங்கள் சொந்த வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்வதற்காகவும் அவர்கள் செல்வதாக செல்கிறார்களாம்.
வரலாற்றில் கருணாநிதி தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை அவர் மேற்கொள்வதாக தெரிகிறது. அதன் பின்னர், நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தோம் என்று கருணாநிதியும் பின்னர் ஸ்டாலினும், அதன் பின்னர் கருணாநிதியின் பேரப்பிள்ளைகளும் ஆட்சியில் இருந்து கொண்டு தாங்கள் தான் தமிழர்களுக்கு வாழ்வுரிமை வழங்கியதாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏற்கனவே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் அறிக்கை அளித்த தமிழின துரோகிகளும் இப்பயணத்தில் இடம் பெறுகிறார்கள்.
இராசபக்சே அளிக்கும் விருந்தை சாப்பிட்டு விட்டு இங்கு வந்து தமிழர்கள் சுபீச்சமாய் வாழ்வதாக இங்கு வந்து அறிக்கை விட்டாலும் விடுவார்கள்.
இதனை வாய்பிளந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இந்த அறிவு கெட்ட தமிழர்கள் மட்டும் திருந்தப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Wednesday, September 30, 2009

இந்திய கடற்படையை கலைத்து விடலாம்

கீழே உள்ள செய்தி தினமலர் செய்தி ஏட்டில் வெளிவந்துள்ள செய்தியாகும். இத்தனை முறை தமிழர்கள் தாக்கப்பட்டும் கேட்க இயலாத, பாதுகாக்க இயலாத கையாலாத தமிழகத்தின் அருகிலுள்ள கடலோர காவல்படை இருந்து ஒரு பயனும் இல்லை. எனவே அவற்றை கலைத்துவிடலாம். மக்களின் பணமாவது மிச்சமாகும். இலங்கை கடற்படையையே தட்டிக்கேட்காத இந்திய படை சீனாவையா கேட்கப்போகிறது.

தமிழர்களை எப்படி தாக்கினாலும் கருணாநிதி கடிதம் எழுதுவார். அந்த தமிழின துரோகி ஒரு போதும் எதுவும் செய்யப்போவதில்லை.

தமிழர்களாகிய நாம் தான் ஏதேனும் செய்தால் உண்டு.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
.......................
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
 .........................
கீழ்வெண்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொளுத்திய போது கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்ட பாடல் இது..........

இப்போது தமிழ் மக்களாகிய நாங்கள் இந்திய கடற்படையை நோக்கி கேட்கிறோம்.

இலங்கைகாரன் தமிழர்களை அடிச்சி கொல்லுறான்!
தமிழ் நாட்டுக்காரன் தினம்தினமும் செத்து மடியிறான்!!

அவன் அடிக்கும் போது! எவன் மசுர புடுங்க போரீங்க!!

என்று தான் எழுத தோன்றுகிறது.

நாகப்பட்டினம் : இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து, தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி, மீனவர்களை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தும் தொடர் செயல், கடலோர மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதிகளில் இருந்து 19 படகுகளில் 114 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில், சேது சமுத்திர அகழாய்வுப் பணிகள் நடக்கும் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, மூன்று கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்தனர். மீனவர்களின் படகுகளில் துப்பாக்கி சகிதமாக இறங்கிய இலங்கை கடற்படையினர், படகுகளில் இருந்த திசை காட்டும் கருவி, மொபைல்களை பறித்துக் கொண்டு, இறால், மீன்கள், மீன்பிடி சாதனங்களை தங்களின் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு, மீனவர்களின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினர். படகில் இருந்த ஐஸ் கட்டிகளை கடலில் வீசி, நிர்வாண கோலத்தில் நின்ற மீனவர்களை, ரப்பர் தடியால் கொடூரமாகக் தாக்கி அனுப்பினர். ஐஸ் கட்டிகள் வைத்திருந்த சாக்குகளால் உடலை மறைத்துக் கொண்டு நேற்று காலை மீனவர்கள் நாகைக்கு வந்தனர்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 150 பேர், கடந்த 25ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். கோடியக்கரை அருகில் சென்ற போது திடீரென்று வந்த இலங்கை கடற்படையினர், ஐந்து விசைப் படகுகளை துப்பாக்கி முனையில் மடக்கி, படகில் அத்து மீறி நுழைந்து வலைகளை அறுத்து கடலில் வீசினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து நேற்று ஒரு நாள், காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த மூன்று மாதங்களாக தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், படகுகளை சேதப்படுத்துவது தொடர்கதையான பின்னரும் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காப்பது, மத்திய அரசின் திரைமறைவு ஆதரவால் தான் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடர்வதாக, மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

Saturday, May 16, 2009

தமிழகத் தேர்தலில் சீனா, இலங்கை அமோக வெற்றி

பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில்  "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.

திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.

இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.

Saturday, May 09, 2009

புதுச்சேரியில் திரையுலகினரின் பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் திரையுலகினரின் பொதுக்கூட்டம்: சீமான்

புதுச்சேரியில் தமிழ்த்திரைப்படத்துறை சார்ந்த இயக்குநர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இன்று பகல் 2 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சீமான், வ.கௌதமன், திரைப்பா ஆசிரியர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.புதுச்சேரி சிங்காரவேலர் சிலை அருகில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்தப் பேச்சைக் கேட்கின்றனர். இந்த நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பப்பபடுகிறது.

மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க அணிக்கு ஆதரவாகவும் திரப்படத்துறையினர் வாக்கு சேகரிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக சாகடிக்கப்படுவதை கண்டித்து அனைவரும் பேசுகின்றனர். பா.ம.க, அ.தி.மு.க,பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க உள்ளிட்ட அரசியில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tuesday, May 05, 2009

காங்கிரசு மத்திய அமைச்சர் சட்டை கிழிப்பு, மாநில அமைச்சர் ஒரு கி.மீ துரத்தி அடிப்பு.........

புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருக்கிறார், இவர் புதுவையில் 18 ஆண்டுகாலம் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். நீண்ட காலமாக இவர் இப்பொறுப்பில் இருந்தாலும் இவர் மீது மக்கள் மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர்.

எனினும், 18 ஆண்டுகளாக தேர்தலில் நிற்காத இவரை தேர்தலில் நிற்க காங்கிரசு உத்தரவிட்டது. இதுவரை தேர்தலை சந்திக்காத இவர் இப்போது தனது எதிரிகளை எல்லாம் விலைக்கொடுத்து வாங்கினார்.

 புதுச்சேரி மக்கள் காங்கிரசு கண்ணனுக்கு 10 கோடி, இதில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ மூவருக்கு தலா 1.25 கோடி என 3.75 கோடி. மீதியை கண்ணன் கைவசம் என புதுவையில் மக்கள் மத்தியில் பேச்சு உள்ளது. மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சிக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்), மீனவ இனத்தை சேர்ந்த பா.ம.க வேட்பாளரை எதிர்த்து அச்சாதியை சேர்ந்த கட்சி விலை போனதை அடுத்து அந்த கட்சி மீது அந்த சாதிக்காரர்கள் மிக அதிருப்தியில் உள்ளனர். விடுதலை சிறுத்தைகளுக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்) மற்றும் தேனி செயக்குமார் உள்ளிட்ட பலருக்கு கோடிகோடியாக பணம் கை மாறியுள்ள நிலையில் முன்னால் முதல்வர் ரெங்கசாமியை இவரால் ஒன்று செய்ய முடியவில்லை.

நேற்று மத்திய அமைச்சர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது முன்னால் முதல்வர் ரெங்கசாமியை சிலர் விமர்சித்ததாக தெரிகிறது அதன் அடிப்படையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனையில் மத்திய அமைச்சரின் சட்டையை பிடித்து கிழ்த்துவிட்டனர். அதே நேரத்தில் மற்றொரு மாநில அமைச்சரான நமச்சிவாயத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிவந்துள்ளனர். இதனால் வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அமைச்சர் தப்பியோடியுள்ளார்.

இதை புதுவை பத்திரிக்கையாளர்கள் விலை போனதை ஒட்டி இந்த செய்தி பத்திரிக்கைகளின் வெளிவராது என எதிர்பார்க்கபடுகிறது. எதிர்கட்சி என்பதால் தமிழோசை மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நன்றி: தமிழோசை

Monday, April 27, 2009

கருணாநிதிக்கு இராசபக்சே செருப்படி: போர் நிறுத்தம் என்பது பொய் பிரச்சாரம்

இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துள்ளதாக வரும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டவை, உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை ராணுவம் இன்று மாலை பல்டி அடித்துள்ளது.

இதனால் இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் கூறியதைக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி கூறியதும் கேள்விக்குறியதாகியுள்ளது.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் பிடியில் சிக்கியுள்ள 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களையும் மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபடும். இவர்களை மீட்கும் முயற்சியில் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். அப்பாவிகள் தரப்பில் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில மீடியாக்களில் இலங்கை அரசும், ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக தவறான, அவதூறான, விஷமனத்தனமான செய்தி வெளியாகியுள்ளது. இது முறையல்ல. இந்த செய்தி குப்பையில் போட தகுதியானதாகும். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு வளைந்து கொடுக்க விரும்புபவர்கள் பரப்பியுள்ள பொய்ச் செய்தியாகும் இது.

அரசு அறிவித்துள்ள முடிவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மீதமுள்ள 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் ராணுவம் செல்லும்போது அங்கு அப்பாவி மக்கள் யாரும் பலியாகி விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. முல்லைத் தீவு வீழ்ந்தது முதலே பாதுகாப்புப் படைகள் மிகுந்த கவனத்துடன்தான் முன்னேறி வருகின்றன.

ஆயிரக்கணக்கான அப்பாவிகளை விடுதலைப் புலிகள் பிணையாளிகளாக பிடித்து வைத்துள்ளனர். தற்போது பாதுகாப்புப் படைகள் வெற்றியை அடைந்து வருகின்றன. தாக்குதல் லட்சியம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் நிம்மதியாக சுவாசிக்க முடியாத அளவுக்கு நிலைமையை ஏற்படுத்தி விட்டோம்.

எனவே கன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதுதான் அரசு அறிவிப்பின் உண்மையான அர்த்தம். எந்தவித வெளிநாட்டு நிர்ப்பந்தம் காரணமாகவும் இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. உலகின் மிகப் பெரிய பிணையாளிகள் மீட்பு நடவடிக்கை வெற்றியை நெருங்கியதைத் தொடர்ந்தே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்.

நன்றி: தட்ஸ்தமிழ் http://thatstamil.oneindia.in/news/2009/04/27/lanka-sl-army-says-no-ceasefire-offered.html

Thursday, April 23, 2009

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது உண்மை அறியும் குழு அறிக்கை

அதிரடிப்படையால் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கடந்த 4 மாதங்களாக கர்நாடக மாநில மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் நோக்கத்துடன் கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் வருமாறு:
1)       அ.மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
2)       மு.சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
3)       கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
4)       பேராசிரியர் சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), தமிழ்நாடு.
5)       ஜி.சி.ஜெகதீஷ், சோஷலிசத்திற்கான புதிய மாற்று, பெங்களூரூ.
6)       டாக்டர் லக்ஷ்மிநாராயணா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), பெங்களுரூ.
7)       மரிதண்டியா (எ) புத்தா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), மைசூரூ.
8)       ஆர்.மனோகரன், சிக்ரம், கர்நாடகா.
9)       பிரசன்னா, மாவட்ட மனித உரிமை ஒருங்கிணைப்பாளர், மைசூரூ.
     இக்குழு, நேற்று (22.4.2009) மாலை மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை சந்தித்தது. மேட்டுரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சென்ற டிசம்பர் 25 நள்ளிரவில் கர்நாடக போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. சாம்ராஜ் நகர் முதன்மை அமர்வு நீதிபதி அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் அவரையும் மேலும் நால்வரையும் (சீனிவாசன், பொன்னுசாமி, பசுவா மற்றும் டைலர் மணி) போலீஸ் அடுத்தடுத்து கைது செய்தது.
     அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத மற்றும் வெடிமருந்துச் சட்டம் மற்றும் தடா சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த 4 வழக்குகளும் வனத் துறை அதிகாரி சீனிவாசன் கொலை வழக்கு (1991), ஷகீல் அகமது கொலை வழக்கு (1992), போலீஸ் எஸ்.பி. கோபால் ஒசூர் மீது தாக்குதல் வழக்கு (1993), பாலாறு வெடிகுண்டு வழக்கு (1993) என அழைக்கப்படுகின்றன.
     முத்துலட்சுமியுடன் பேசிய அடிப்படையில் இந்த கைதுகள் குறித்த எங்கள் பார்வைகள் வருமாறு:
1)       இந்த 4 வ்ழக்குகளிலும் தொடர்புடைய சம்பவங்கள் 1991-க்கும் 1993-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் 8 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் கைது செய்யப்பட்டனர். தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்ட இவ்வழக்குகளின் இறுதியில் 109 பேர் குற்றமற்றவர்கள் என 9 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர். வெறும் 8 பேர் மட்டுமெ தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை பின்னர் உச்சநீதிமன்றத்தில் மரண தணடனையாக மாற்றபட்டது. இந்த நால்வரும் இன்றளவும் சிறையில் வாடுகின்றனர். இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.
2)       இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதே அன்று தேடப்பட்டுக் கொண்டிருந்த வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமியை பிடித்துச் சென்ற அதிரடிப்படையினர் அவரை 2 ஆண்டுக் காலம் தமது பண்ணாரி முகாமில் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். பின்னர் அவர் இம்முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், அவர் கணவர் கொல்லபடும் வரை கடும் கண்காணிப்பின்கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். நீதிபதி சதாசிவா விசாரணை ஆணையத்தின் முன்னும் அவர் தனது பாதிப்புகளைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை.
3)       கடந்த 18 ஆண்டுகளாக அவர் மீது வாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதாக அதிரடிப்படையினர் சொல்லி வந்த போதும், இந்த வழக்குகள் தொடங்கி முடியும் வரை அவரை இவற்றில் வழக்குகளில் தொடர்புபடுத்தி விசாரிக்கவில்லை. 18 ஆண்டுகள் ஆனபின் இப்போது திடீரென அவரும் மற்ற நால்வரும் தற்போது நடைமுறையில் இல்லாத தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4)       இவ்வழக்குகள் நான்கும் 2001-ம் ஆண்டிலேயே விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டன. இவ்வழக்குகளில் முக்கிய குற்றவாளியான வீரப்பன் 2004-ம் ஆண்டில் கொல்லப்பட்டும் விட்டார். ஒரு வழக்கு இவ்வாறு தன் தர்க்கபூர்வமான முடிவை எட்டிய பின்னர் மீண்டும் அதை தோண்டியெடுத்து புதுப்பித்துள்ளதை திட்டமிட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக எமது குழு கருதுகிறது.
5)       வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவியான முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை ஒன்றுதிரட்டி அதிரடிப்படையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடியுள்ளார். ஆண்டு தோறும் அவர் கணவர் கொல்லபட்ட தினத்தில் நட்த்தப்பட்ட மாநாடுகள் குறைந்தபட்சம் மூன்று. மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலரும் அதில் கலந்துக் கொண்டுள்ளனர். இம்மாநாடுகளில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
அ) அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அத்துணை பேருக்கும் இழப்பீடு வ்ழங்குவது.
ஆ) மனித உரிமை மீறலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைத் தண்டிப்பது.
6)       நீதிபதி சதாசிவா ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்பு தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 83 பேருக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இன்றைய தேதியில் 80 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் இதற்கென 2.8 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இன்னும் மூவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
7)       இங்கொன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. பொறுப்பு மிக்க மனித உரிமை அமைப்புகளின் கணக்கீட்டின்படி கூட்டு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100; வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்கள் 60; முடமாக்கப்பட்டோர் 300. எனவே, இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.
8)       இந்நிலையில், முத்துலட்சுமி இவ்வாறு பதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பியது முற்றிலும் நியாயமானதே. இது மிகவும் அடிப்படையான மனித உரிமைக் கோரிக்கையே.
9)       முத்துலட்சுமி மற்றும் நால்வரையும் இவ்வாறு சிறையில் அடைத்திருப்பதையும் வழக்கை விரைவாக நடத்தாமல் வேண்டுமென்றே தாமதிப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பருவமடைந்த இரண்டு பெண்களுக்குத் தாயான இந்த ஏழை விதவைக்குப் பிணை அளிக்க்க் கூடாது என கர்நாடக போலீஸ் மறுப்புத் தெரிவிப்பதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
10)   மனித உரிமை அமைப்புகளாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கடுமையாக கண்டிக்கபட்டு, இன்று நீக்கப்பட்டுள்ள கறுப்புச் சட்டமான தடாவை கர்நாடக அரசு ஒரு ஏழை அபலைக்கு எதிராக பயன்படுத்தி இருப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
11)   முத்துலட்சுமியும், மற்றவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
12)   கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது நடந்த பேச்சுவார்த்தைகளில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இரு மாநில அரசுகளும் ஒத்துக் கொண்டன. ஒவ்வொரு மாநில அரசும் இதற்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கின. இந்நிதி இதுவரையில் பயன்படுத்தப்படவில்லை. அதிரடிப்படையால் பாதிக்கபட்டுள்ள எஞ்சியுள்ள பலருக்கும் இறந்துப் போனவர்களின் வாரிசுகளுக்கும் இத்தொகை பிரித்தளிக்கப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது.
13)   பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தயக்கம் காட்டும் இந்த அரசுகள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பல போலீஸ் அத்காரிகளுக்கு பல கோடி ரூபாய் வீரப்பரிசுகளும், பதவி உயர்வுகளும் வழங்கியுள்ளதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அதிரடிப்படையினர் சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூப்பிக்கப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
14)   வழக்கு விசாரணை வேகமாக நடத்தப்பட வேண்டும். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பும் இல்லாமல் படித்துக் கொண்டிருக்கும் இரு பெண்களை மனதில் கொண்டு முத்துலட்சுமியை உடனடியாக பிணையில் விடுவதற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்க கூடாது என இக்குழு கோருகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ் தொடுத்துள்ள வழக்கில் கைது செய்யாமல், சம்மன் அளித்து அழைத்த போது ஆஜராகி வழக்கு விசாரணையில் முத்துலட்சுமி ஒத்துழைத்து உள்ளதைக் இக்குழு சுட்டிக்காட்டுகிறது.
மைசூரூ
23.04.2009.

தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-600 020. செல்: 9444120582, 9894054640.

Wednesday, April 08, 2009

சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு : வீடியோகாட்சி

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் வீடியோ காட்சி:

டெல்லி: எதிர்ப்பைக் காட்ட தலைவர்கள் முகத்தை நோக்கி செருப்பை வீசுவது இப்போது வழக்கமாக விட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தைனிக் ஜாக்ரன் பத்திரிகையின் மூத்த சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் இன்று ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற பிரபல இந்தி நாளிதழ் தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.

ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, ‘போதும்…போதும் நிறுத்துங்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்’ என்றார் சிதம்பரம்.

ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.

இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், ‘யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம்’ என்றார் வழக்கமான தனது புன்னகையுடன்.

மேலும் ‘ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர்தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். அதை இத்தோடு விடலாம்’ என்றார்.

ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம், ‘ஜர்னைல் சிங்கை ‘ஜென்டிலாக’ நடத்துங்கள்… இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம்’ என்றார்.

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.

வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், ‘நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அனுகுமுறை தவறாக ‌இருந்திருக்கலாம். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’ என்றார்.

ஜர்னைல் சிங் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை எழுதும் நிருபராகவும் பணியாற்றியவர்.

நன்றி : என்வழி தளம் http://www.envazhi.com/?p=6179

இனி தீக்குளிப்பு வேண்டாம் செருப்படி கொடுங்கள்

ஈழத்தமிழர்களுக்காக என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கடலூரை சேர்ந்த ஆனந்தராசு கூறி தீக்குளித்துக்கொண்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக தீக்குளித்து தற்கொலை  கொண்டவர்கள் மொத்தமாக இன்றுவரை 17 பேர்கள். இப்படி செத்து மடிவதைவிட செருப்பால் அடித்து வாழ்வதே சிறந்ததாகும்.

தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்ததும் அதனை தொடர்ந்து பலர் தீக்குளித்துள்ளார்கள்,

அதே போல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பின்னர் இப்போது சிதம்பரத்துக்கு செருப்பு வீச்சு நடந்துள்ளது.  

தமிழின விரோதிகளுக்கெல்லாம் இந்த செருப்படி விரைவில் விழும் என்று எதிர்பார்க்கலாம்.

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் பார்க்க காட்சிப்பட இணைப்பு:
  
செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!

சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?

Monday, April 06, 2009

பித்தம் தலைக்கேறி உளரும் கருணாநிதி

செய்தி : நன்றி தினமலர்:(06-04-2009 பக்கம்: 5)

ஈழவிடுதலைப்போரில் தமிழகம் உள்ளிட்ட பகுதியுடன் மொத்தமாக இதுவரை 16 பேர் தீக்குளித்து உயிர் துறந்து இருக்கிறார்கள். உலகநாடுகள் ஈழப்போரின் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்தபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தனது ஓயாத போராட்டத்தின் விளைவாக ஈழப்படுகொலையை உலகின் பாரவைக்கு அல்லது உலகம் இந்த படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள்.

அவர்களின் அயராத உழைப்பின் பின் தான் உலக நாடுகள் கொஞ்சம் திருப்பி பார்த்தது.

ஆனால் கருணாநிதியை பாருங்கள்

"எங்களுடைய குரலை மதித்து வெளிநாடுகளில் உள்ள அரசுகள், அய்.நா சபை உள்ளிட்டவை தூதர்கள் மூலமாக சொல்லிவருகிறார்கள்"

என பச்சை புளுகை சொல்லி ஏமாற்றும்

கருணாநிதிக்கு பித்தம் தலைக்கேறி உளரிக்கொட்டுகிறார் என்பதாகவே நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்

செய்தி: தமிழ்விண்

விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.

இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்

எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்

நன்றி: தமிழ்விண்

Wednesday, March 25, 2009

ஈழத்திலிருந்து ஒரு குரல்

வீசும் காற்றே தூது செல்லு.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!
வீசும் காற்றே தூது செல்லு.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!!!

ஈழத்தில் நாம்படும் வேதனைகள்..............................!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்.................................!!

இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு.............................!!!

வீசும் காற்றே தூது செல்லு..........................................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு........................!!

எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!
எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!

தங்கைகளின் பெரும் மங்களம் போனது!..........................!
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது..............!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!

இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
உங்களின் இராணுவம் செய்து முடிக்குது...............!!!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!
கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!

எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எங்களின் சோதரர் தூக்கல்லோ?..........................!!!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................!
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................

தாங்க முடியலை வேதனைகள் .......ள்ள்ள்........................!
தாங்க முடியலை வேதனைகள் ..........................................!
இதை தாயக பூமியில் காதில் சொல்லு...................!!

வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!

ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!!

இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!

..........................

இந்த பாடல் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனது.

இருப்பினும் இன்னும் புதிதாக சூழல் மாறாமல் இன்றைக்கும் பொருத்தமான பாடல் இந்திய படை அப்போது தமீழீழம் சென்ற போது ஒலித்த பாடல் இப்போதும் அதே நிலை அதே குரல்
ஒரு வேதனையான புகழ் பெற்ற பாடல் இது.