Wednesday, March 25, 2009
ஈழத்திலிருந்து ஒரு குரல்
வீசும் காற்றே தூது செல்லு.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!
வீசும் காற்றே தூது செல்லு.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!!!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்..............................!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்.................................!!
இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு.............................!!!
வீசும் காற்றே தூது செல்லு..........................................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு........................!!
எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!
எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!
தங்கைகளின் பெரும் மங்களம் போனது!..........................!
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது..............!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!
இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
உங்களின் இராணுவம் செய்து முடிக்குது...............!!!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!
கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!
எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எங்களின் சோதரர் தூக்கல்லோ?..........................!!!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................!
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................
தாங்க முடியலை வேதனைகள் .......ள்ள்ள்........................!
தாங்க முடியலை வேதனைகள் ..........................................!
இதை தாயக பூமியில் காதில் சொல்லு...................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!!
இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
..........................
இந்த பாடல் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனது.
இருப்பினும் இன்னும் புதிதாக சூழல் மாறாமல் இன்றைக்கும் பொருத்தமான பாடல் இந்திய படை அப்போது தமீழீழம் சென்ற போது ஒலித்த பாடல் இப்போதும் அதே நிலை அதே குரல்
ஒரு வேதனையான புகழ் பெற்ற பாடல் இது.
Sunday, March 22, 2009
இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் கைதை கண்டித்து போராட்டம்

இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் கைதை கண்டித்து போராட்டம்

Sunday, March 15, 2009
புதுச்சேரியில் நாளை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டம் டாக்டர் ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் த.பாண்டியன் நெடுமாறன் பங்கேற்பு
உலக நாடுகள் இலங்கையில் நடைபெறும் இனவெறி போரை நிறுத்த தலையிடவேண்டும் என்று இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் முன்னின்று தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள்திரள் பேரணி என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
டாக்டர் ராமதாஸ்-வைகோ
இதன் தொடர்ச்சியாக புதுவையில் நாளை (திங்கட் கிழமை) மாலை 5-மணிக்கு பெரியார் திடல் சிங்காரவேலர் சிலையருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர்கள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க.வின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, மா.நடராசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் அழிந்துவரும் நமது தமிழினத்தை காப்பாற்ற உரிமை குரல் எழுப்ப உள்ளார்கள்.
மேலும் புதுச்சேரியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். எனவே புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் அனைவரும் சாதி, மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து தமிழினமாய், தமிழினம் காக்கும் பொதுக்கூட்டத்திற்கு திரண்டு வந்து பொதுக்கூட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் பாவாணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tuesday, March 03, 2009
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் போட்டியிடுவார் - இயக்குநர் தங்கர்பச்சான்
காலை 11 மணி முதல் இயக்குநர் சீமானைப் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக் கொண்ட சிறைத்துறையினர் எந்தவித பதிலையும் கூறவில்லை.
இதனால் சுமார் ஒரு மணிநேரம் பொறுத்துப் பார்த்த தங்கர்பச்சான், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச் செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் நண்பகல் 12 மணிக்கு சிறையின் வாயிலில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த காலாப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. கே.வரதராஜன் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 'அனுமதி உண்டா இல்லையா என்று சொல்லாமல் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்' என்று கேட்டார். பின்னர் அவர் அனைவரையும் சிறைக்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர் இயக்குநர் தங்கர்பச்சன் உட்பட அனைவரும் சீமானை சந்தித்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சீமானைச் சந்தித்து விட்டு வந்த திரைப்பட இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் பத்திரிகையாளர்களிடம் கூறியது:
தமிழர்களின் உரிமைகள், உணர்வுகளைக் காணாமல் போகச்செய்தவர்கள் அரசியல்வாதிகள். காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஏற்க மறுக்கின்றனர். இது தொடர்பாக 27 முறை பேசியும் முறையான தண்ணீர் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. கச்சத்தீவைப் பறி கொடுத்ததால் தமிழக மீனவர்கள் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.
தமிழனுக்காகவும், தமிழினத்திற்காகவும் அரசியல்வாதிகள் குரல் எழுப்பவில்லை. குரல் கொடுத்திருந்தால் மத்திய அரசு செவிமடுத்திருக்கும். தமிழன்தான் குரல் எழுப்புகிறான். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழக தலைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் ஒன்று கூடி பேசியிருந்தால் போதும். மத்திய அரசு பணிந்திருக்கும். ஆனால், அதை யாரும் செய்யவில்லை.
தற்போது தமிழர்களுக்காகவும், தமிழினத்திற்காகவும் குரல் கொடுக்கும்காலம் வந்துவிட்டது.
மற்றவர்கள் போல் திரைப்படம் உண்டு தன் சம்பாத்தியம் உண்டு என்று இல்லாமல் சீமான் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். சீமான் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நாயாளுமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிட உள்ளார். சீமானிடம் ஓட்டு வங்கி உள்ளதால் அவரை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். தமிழக இளாஞர்கள், மாணவர்கள் அவரை வெற்றிப் பெற செய்வார்கள். தமிழ் மக்கள் சீமானுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவரை நான் உட்பட பலரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
சிறையில் இருந்தபடி தமிழ் இனம், மொழிக்காக சீமான் குரல் கொடுத்து வருகிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச்செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.